Sunday, August 03, 2008

தோஸ்த்... படா தோஸ்த்...!



அன்பு தமிழர்களுக்கும், கன்னடர்களுக்கும், மலையாளிகளுக்கும், தெலுங்கர்களுக்கும், பிற இந்தியர்களுக்கும், பாகிஸ்தானியர்களுக்கும், இலங்கையர்களுக்கும், பர்மியர்களுக்கும், சீனர்களுக்கும், தாலிபான்களுக்கும், ஆஃப்கானிஸ்தானியர்களுக்கும், ஈராக்கியர்களுக்கும், ஈரானியர்களுக்கும், ஆசியர்களுக்கும், ஆப்பிரிக்கர்களுக்கும், அமெரிக்கர்களுக்கும், ஆஸ்திரேலியர்களுக்கும், அண்டார்டிக்கர்களுக்கும், ஐரோப்பியர்களுக்கும், ரஜினி ரசிகர்களுக்கும், ரஜினி வெறியர்களுக்கும், கமல் பைத்தியங்களுக்கும், கமல் கடுப்பர்களுக்கும், அனானி அண்ணாச்சிகளுக்கும், போலி காலிகளுக்கும், கிரிக்கெட் கிளர்ச்சியாளர்களுக்கும், புரட்சிக்காரர்களுக்கும், கமர்ஷியல் ரைட்டர்களுக்கும், இலக்கிய எழுத்தாளர்களுக்கும், ஜெயமோகன்களுக்கும், சாரு நிவேதிதாக்களுக்கும், பின்லேடன்களுக்கும், புஷ்களுக்கும், கம்யூனிஸிகளுக்கும், சோஷியலிஸிகளுக்கும், ப்ரோக்ரமர்களுக்கும், டெஸ்டர்களுக்கும், மானேஜர்களுக்கும், கஸ்டமர்களுக்கும், ப்ளேயர்களுக்கும், அம்பயர்களுக்கும், ரெஃப்ரிகளுக்கும், மாணவர்களுக்கும், வாத்தியார்களுக்கும், போலீஸ்களுக்கும், திருடர்களுக்கும், நயன் தாராக்களுக்கும், சிம்புகளுக்கும், செந்தழல் ரவிகளுக்கும், சுப்பையா சார்களுக்கும், விகடன்களுக்கும், குமுதங்களுக்கும், இட்லி வடைகளுக்கும், சாம்பார் வடைகளுக்கும், மைக்ரோசாஃப்டுகளுக்கும், ஓபன் சோர்ஸ்களுக்கும், பெரியாரிஸ்டகளுக்கும், ஹரியாரிஸ்டுகளுக்கும்,

இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்.....!


Get Your Own Hindi Songs Player at Music Plugin

படம் உதவி நன்றி :: http://www.wondercliparts.com/holidays/friendship_day/graphics/friendship_day_graphics_01.gif

Saturday, August 02, 2008

ஷா - இன் - ஷா என்ன சொன்னார்?

ரஜினி மன்னிப்பு கேட்டுள்ளார். எதற்கு? தன் படத் தயாரிப்பாளர்கள் தன்னால், தன் பேச்சால் கஷ்டப்பட்டு விடக் கூடாது; தன் படம் வாங்கிய வினியோகஸ்தர்கள் தன் பேச்சால் நஷ்டப்பட்டு விடக்கூடாது என்பதற்காக.

ஒகேனக்கல் திட்டத்தை எதிர்த்து குரல் கொடுத்த கன்னட அமைப்புகளையும், அரசியல் கட்சிகளையும் தான் அவர் குற்றம் சாட்டினார். பொது மக்களுக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை.

'உதைக்க வேண்டாமா?' என்று கேட்டது எல்லை மீறி வந்து பிரச்னை செய்தவர்களையும், திட்டத்தை எதிர்த்தவர்களையுமே! பொது மக்களை அல்ல!

அவர் மன்னிப்பு கேட்டவுடனே இங்கே சில பேருக்கு பொத்துக் கொண்டு விட்டது.

* ஒருவருக்கு பெரிய தலைவர் படத்தில் நடித்தவுடனே, தானே அதே போல் பெரிய தலைவர் ஆகி விட்ட நினைப்பு! தனக்கு இது போல் ஒரு நிலை வந்தால் சம்பளத்தை குறைத்துக் கொள்வாராம்.

பாபா படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை, விநியோகஸ்தர்கள் நஷ்டப்பட்டு இருக்கிறார்கள் என்ற நிலை வந்தவுடன் அவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுத்தார் ரஜினி.

இவர் இப்போது சம்பளம் குறைப்பேன் என்று சவுண்டு விடுகிறாரே...? எத்தனை படங்களுக்கு இந்த மாதிரி செய்திருக்கிறார்? அது போல் செய்தால் திவாலாக வேண்டியது தான் இவரெல்லாம்!

* சங்கத் தலைவர் அறிக்கை விடுகிறார். பாவம். அவருக்கு கட்சியை எப்படியாவது பிரபலப்படுத்த வேண்டுமே என்ற கவலை!

* மீடியாக்களுக்கு ஒரு பரபரப்பு செய்தி! அஞ்சு நிமிஷத்துக்கு மேல் பார்க்க அவகாசம் இல்லாமல் தகவல்கள் கொட்டி நம் நேரத்தை களவாடிச் செல்லும் யுகத்தில் தங்கள் சேனலையும், பத்திரிக்கையையும் தொடர்ந்து பரபரப்பாக்கியே வைத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் Reading between lines போதாமல், Reading between Void Spaces எல்லாம் செய்து தாங்களாகவே அர்த்தம் செய்து கொண்டு விற்று பார்க்கிறார்கள்.

* இன்ஃபர்மேஷன் தியரியில் , தகவல் என்றால் என்ன? என்று க்ளாஸ் எடுத்தார் கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் எபிநேசர் சார்! அன்று செப்டம்பர் 10, 2001.

அடுத்த நாள் வகுப்பில் சொன்னார்.

'இது தான் இன்ஃப்ர்மேஷன். அமெரிக்காவின் மீதே யாராவது தாக்குதல் நடத்துவார்களா? என்று நம்பிக் கொண்டிருந்தோம். அது நடந்து விட்டது. நடக்கவே நடக்க வாய்ப்பே இல்லாத, நிகழ்தகவு ஸீரோவாக உள்ள நிகழ்ச்சி நடந்தால் அது தான் இன்ஃப்ர்மேஷன். இன்று சூரியன் கிழக்குத் திசையில் உதித்தது என்று ஒருநாளும் தினத்தந்தியில் முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் வராது.' என்றார்.

நாளாக நாளாக தாக்குதல் நிகழ்ச்சி இரண்டாம் பக்கம், மூன்றாம் பக்கம் என்று தள்ளப்பட்டு காணாமல் போகும்.

அது போல்,

இங்கே கொஞ்சம் பேர் இருக்கிறார்கள். எப்படியாவது தாங்களும் கொஞ்ச நிமிஷங்களுக்கு பிரபலமாகி இருக்க வேண்டும் என்ற ஆவல். எதிர்க்கருத்து சொன்னால் நானும் புரட்சிக்காரன் தான் என்று பிறர் ஏற்றுக் கொள்வார்கள் என்ற கணிப்பில்!

ரஜினி ஏதோ சொல்லி இருக்கிறாராமே? எழுது! நன்றாக கலாய்த்து எழுது! உன்னைத் தேடி ஆட்டோவோ, 'ஆபீஸ் ரூமுக்கு' கூட்டிப் போகவோ ரஜினி ஆள் அனுப்பப் போவதில்லை! எனவே எழுது!

'ஊருக்கு இளைத்தவன் அவன் தானே'! நன்றாக காய்ச்சி எழுது!

பரபரப்பாகும்! நாற்பது பேர் வரை ஜால்ரா அடிப்பார்கள். கொஞ்சம் தெரிந்த ஆள் ஆகலாம்.

'ஹப்பாடா சந்தோஷம்!' Group Power.

நேற்று *** பேர் வந்து பார்த்தார்களா? திருப்தி!

அடுத்து என்ன..? கமல் மர்மயோகி எடுக்கிறாரா? கதை ஏழாம் நூற்றாண்டாமே!

ஹை..! தலைப்பு ரெடி! 'கரும' யோகி!

டிராஃப்டில் போட்டு வைத்துக் கொள்ளலாம். கமல் என்ன செய்தாலும் இந்த தலைப்பை போட்டு கொஞ்சம் கன்னா பின்னா என்று எழுதி சூடான இடத்திற்கு வந்து விடலாம்.

* ஒகேனக்கல் பிரச்னையில் அத்தனை பேரும் கோபமாய் பதிவுகள் போட்டோம் (நானும்!). ரஜினி சொன்னதை விட காரமாகவும், கோரமாகவும் சில பேர் சாரமாகவும் எழுதினோம்.

அடுத்த நாளே அந்த நெருப்பின் மேல் வராத காவேரி நீரை ஊற்றி தமிழக அரசு அணைத்ததா இல்லையா?

உண்ணாவிரதம் இருந்த அத்தனை பேர் முகத்திலும் அண்டா அண்டாவாக கரியை அள்ளி பூசியதா இல்லையா?

புது ஆட்சி வரட்டும். பேசிப் பார்ப்போம் என்று சொன்னது மாநில அரசு!

வந்து எவ்வளவு நாள் ஆகின்றது? ஏதாவது ஸ்டெப் எடுத்தீர்களா என்று ஒரு பதிவு கூட நான் பார்க்கவில்லையே? எங்கே ஐயா போயிற்று உங்கள் வீரமெல்லாம்?

நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா அன்று பேசியதெல்லாம் தவறு தான் என்று?

அவர் ஒத்துக் கொண்டார். அரசின் மேல் நம்பிக்கை வைத்து ஸ்டெப் எடுக்கும் என்று நம்பி உணர்ச்சி வசப்பட்டு பேசியதற்கெல்லாம் அரசின் கைவிடுப்பு தான் பதில் என்று புரிந்ததால் அவர் கேட்டார் மன்னிப்பு கர்நாடக மக்களிடம்! Goondasகளிடம் இல்லை! இந்த அரசியல் கட்சிகளை நம்பி ஏதும் சொல்லக் கூடாது என்பதை லேட்டாக புரிந்து கொண்டதற்கு கேட்டார் மன்னிப்பு!

உங்களுக்கு அது இருக்கின்றதா?

பேச வந்து விட்டார்கள்!

முகம் காட்டா வெளியில் புதைந்து கொண்டு எதுவும் சொல்லலாம், கேட்க ஆளில்லை என்று நினைத்துக் கொண்டு கைக்கு வந்தபடியெல்லாம் எழுதக் கூடாது. அது சரி அல்ல.

http://www.rajinifans.com/detailview.php?title=695

http://www.rajinifans.com/detailview.php?title=696


மகாபாரதத்தில் கர்ணணை நேருக்கு நேர் நின்று வெற்றி கொள்ள முடியாத அவருடைய எதிரிகள் அவரை இழிவு படுத்துவதாக எண்ணி ஒவ்வொரு முறையும் கர்ணணை தேரோட்டி மகன் என்று சொல்லியும், அவருடைய ஜாதியை சொல்லியும் அவருடைய மனதை புண் படுத்தி வெற்றி கொள்ள நினைத்தனர் ஆனால் ஒன்றும் நடக்கவில்லை கடைசியில் கர்ணன் விட்டு கொடுத்ததால் மட்டுமே அவர் தோற்றார்.. இங்கே ரஜினி ஒரு கர்நாடகன் என்ற‌ செய்தி ஒவ்வொரு முறை வரும்போதும் இது கர்ணனை வெற்றிகொள்ள அவருடைய எதிரிகள் செய்த சூழ்ச்சியை போலவே உள்ளது... இன்று மிகச்சரியாக ரஜினி அவர்கள் தெளிவு படுத்தி விட்டார் "ஒக்கேனக்கல் திட்டத்தை நிறைவேற்றாமல் தடுக்க முயலும் புல்லுறுவிகளை உதைக்க வேண்டாமா என்றுதான் சொன்னேன்.." என்று.. இதை அவர் சொல்லாவிட்டாலும் ஆறறிவு கொண்ட அனைவருக்கும் புரியும்.. கமல் அவர்களும் இப்படியெல்லாம் பின் நாளில் ஏதாவது பிரச்சினை வரும் என்றுதான் அன்றே அதே மேடையில் "இங்கிருந்து செய்திகளை சேகரிக்க வந்திருக்கும் உளவாளிகள் தயவு அங்கே சென்று செய்திகளை திரித்து சொல்லாதீர்கள்" என்று கேட்டுக்கொண்டார்.. ஆனாலும் புல்லுறுவிகள் செய்திகளை திரித்து சொல்வதே வேலையாக கொண்டிருக்கிறார்கள்.. 17 பிரிண்ட்டுகள் ஓட வேண்டும் என்பதற்க்காக மன்னிப்பு கேட்க ரஜினி என்ன முட்டாளா..? வீரத்திற்க்கு ஏது ஜாதி..? கலைக்கு ஏது மொழி..? சிந்திப்பீர்..


நன்றி :: ரஜினி ரசிகர்கள் தளம்.

Friday, August 01, 2008

சக்கரக்கட்டி!

இன்று மதியம் டெக்னோபார்க்கின் எதிரில் இருக்கும் ஹோட்டல் சென்னையில் சாப்பிட்டு விட்டு கோவளம் டு கொல்லம் நெடுஞ்சாலையைக் கடக்கையில் கண்ட இரு சம்பவங்கள் அவற்றின் மீதான சிந்தனையை ஊற்றின.

1. கையில் சர்ட்டிபிகேட்ஸ் ஃபைல் வைத்து ஒருவர் கோவளம் போகும் திசையில் செல்லும் வாகங்களுக்கு முன் தம்ஸ் அப் காட்டி பிஃப்ட் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த தடத்தில் பேருந்து சர்வீஸ் அவ்வளவாக இல்லை. பைக், கார், ஸ்கூட்டர், சைக்கிள் என்று வரிசையாக கடந்து கொண்டிருந்தனர், நிற்காமல்! இவரும் சளைக்காமல் கை நீட்டிக் கொண்டிருந்தார்.

'சடக்' என்று கையை தொங்கப் போட்டு விட்டு ப்ளாட்பாரத்தில் ஏறிக் கொண்டார். இப்போது வந்த வாகனத்தை அவர் நிறுத்த முயற்சிக்கவில்லை. அப்படி ஒரு வாகனம் வருவதை பார்த்ததாக கூட அவர் காட்டிக் கொள்ளவில்லை.

எது தெரியுமா?

போலீஸ் ஜீப்.

2. ஓர் ஆட்டோ ட்ராஃபிக் சிக்னல் காவலரின் மறுப்பு கை அடையாளத்தினால் ப்ரேக் போட்டு நிறுத்தியது, டெக்னோபார்க்கின் வாசலில்! என்ன நடந்தது. உள்ளே மூன்று இளைஞிகள். பேச்சு சுவாரஸ்யத்தில் ஆட்டோ வாசற்புறம் இருந்த இளம்பச்சை சுடிதாரின் துப்பட்டா இவ்வளவு நேரமும் வேளியே காற்றாடிக் கொண்டு வந்து, ஆட்டோ நிற்கும் போது வகையாக சக்கரத்தின் கீழ் சென்று மாட்டிக் கொண்டது.

துப்பட்டாவை ஸ்டைலாக எடுத்துப் போட முயற்சிக்கும் போது தான் அபாயம் புரிந்தது அவருக்கு. ஆட்டோ கிளம்பப் போகின்றது. முன்னோக்கி ஓடினால், இன்னும் சிக்கலாகி சிக்கிக் கொள்ளும். நல்லவேளை ஆட்டோ ட்ரைவர் பார்த்து ஒரு ரிவர்ஸ் அடித்து காப்பாற்றினார்.

படித்த பெண்கள்!

உண்டு முடித்து விட்டு சில்லறை இல்லாததால் எதிரில் இருக்கும் ஒரு ஃபேன்ஸி ஸ்டோர்க்கு சென்று மாற்றி வரப் போன போது கிட்காட் இருக்கிறதா என்று கேட்டேன். தீர்ந்து போயிருந்தது. வேறு என்ன இருக்கின்றது என்று பார்த்தால், நெடுங்கால சினேகிதன் Parle Poppins 'என்னப்பா என்னை எல்லாம் மறந்து விட்டாயா?' என்று கேட்டது.

இரண்டு பாக்கெட்டுகள் வாங்கிக் கொண்டேன். 4 ரூபாய் தான்.

கிட்காட் எல்லாம் 5ரூக்கு வாங்கி வாயில் போட்ட மூன்றரை செகண்டுகளில் கரைந்து பல் இடுக்குகளில் மட்டும் கொஞ்சம் அடையாளம் வைத்து விட்டு காணாமல் போய் விடுகின்றது. லைபாய் சோப் தான் நினைவுக்கு வருகினறது. இரண்டுமே கரையவே மாட்டேன் என்கிறது. 2ரூ பாக்கெட்டில் 12 மிட்டாய்கள், வித வித ஃப்ளேவர்களில்!

சீட்டுக்கு வந்து பார்லே வெப் சைட்டுக்கு போனேன்.

அடிக்கின்ற கலர்களில் வெப் சைட்.

நீங்களும் போய்த் தான் பாருங்களேன்.

இன்று தான் சக்கரக்கட்டி பாடல்கள் கேட்டேன்.

காதலர் தினம் வந்த போது நான் கல்லூரியில் முதலாண்டு. அப்போது என்ன விதமான குளிர் உணர்வுகளை தட்டி எழுப்பியதோ (ரோஜா..! ரோஜா..!), அதே மாதிரி மீண்டும் கேட்பது போல் புத்துணர்வோடு மறுபடியும் இரகுமானின் அட்டகாசமான துள்ளல், மெலோடிகளுடன் பட்டையைக் கிளப்பி இருக்கின்றது

இங்கே இறக்கிக் கொள்ளலாம்.

சாம்பிள் ::

மருதாணி விழியில் ஏன்? ::


Get Your Own Hindi Songs Player at Music Plugin

நான் எப்போது பெண்ணானேன்? ::


Get Your Own Hindi Songs Player at Music Plugin

இன்று இரவு முழுதும் ஓடிக் கொண்டே இருக்கும் என்று தோன்றுகின்றது.

உண்மையில் சக்கரக்கட்டி ரஹ்மானின் பாடல்கள் தான்...!

Thursday, July 31, 2008

நன்றி..! நன்றி..!

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போட்டியைச் சாக்கிட்டு ஆஃபீஸுக்கு லேட்டாகப் போய், அங்கும் டவுன்லோட் செய்து படித்து, துளித் துளியாய் சம்பவங்களைக் கோர்த்து, அவசர அவசரமாக ஸ்ரீகார்யம் திரும்பி, "சேட்டா! பதினொரு மணிக்கு சாத்திக்கோ!" என்று ப்ரெளசிங் சென்டரில் கெஞ்சி, அப்லோட் செய்து, இதற்காகவே புது லேப்டாப் வாங்கி, அவசரமாக கனெக்ஷன் கொடுத்து, ("சார்! இன்னும் கனெஷன் வரலை!" "இருப்பா, இப்ப தான பணம் பே பண்ணி இருக்க. அஞ்சு நாள் ஆகும்" "அஞ்சு நாளா?")...

பிடித்தமான இயற்பியலில் கதை சொல்ல போட்டி நடத்திய நண்பர் சிறில் அலெக்ஸிற்கு நன்றிகள் உரித்தாகுக...!

சிந்தித்து சிந்தித்தே தம் வாழ்நாள் முழுதும் பிரபஞ்சத்தின் ஈடில்லா பிரம்மாண்ட இரகசியங்களைக் கண்டறிவதிலேயே இன்புற்று அதன் குளிர்மைக் கணங்களை கணிதமாக வகுத்துச் சென்ற பெருமக்களுக்கு சிரம் குனிந்து, பாதம் விழுந்து தண்டனிடுகிறேன்.



தங்கத் தலைவர் ஐன்ஸ்டைனின் படங்களை இணைக்கிறேன்.

தலைவரின் புகைப்படங்கள் ::



தலைவரின் மேற்கோள்கள் ::



தமிழ் அறிவியல் புனை கதை முன்னோடி வாத்தியாருக்கும் நன்றிகள். ::



A Beautiful Mind என்ற அற்புதமான வாழ்க்கைக் காவியத்தின் Kaleidoscope of Mathematics உடன் இப்பதிவினை முடிக்கிறேன்.

Kaleidoscope Of Mathematics - Soundtrack

***

இனி நாம் நமது வழக்கமான மொக்கைப் பதிவுகளுக்குத் திரும்பலாம்.

ஐ, ஐ, ஸ் மற்றும் I !

"கடைசியில் உருவாக்கி விட்டீர்கள் போலிருக்கின்றதே?" முகம் கொள்ளா சிரிப்புடன் கை கொடுத்தார் ஐன்ஸ்டைன்.

"ஆமா சார்!" கைகள் கொடுத்து தூக்கி கலத்துக்குள் அவரை கூட்டி வந்தேன். பஞ்சு இருக்கையில் அமர்ந்தார். அருகில் ஸ்டீபன் ஹாக்கிங்.

"சார்! இவர் தான் ஸ்டீபன் ஹாக்கிங். நீங்கள் தொட்டு, விட்டு போன Theory of Everything-ஐ டீல் செய்கின்றவர்களில் ஒருவர். சார்! உங்களைப் பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு! நான் இதுவரைக்கும் சந்தித்த பெரிய மனிதர்களிலேயே உங்களைச் சந்தித்தது தான் பெருமையாக நினைக்கிறேன்!" என்றேன்.

"நம்பாதீர்கள்! என்னிடமும் இதையே தான் சொன்னான்!" என்று திருவாய் மலர்ந்தருளினார் ஹாக்கிங். அடப்பாவி மனுஷா! இப்படி போட்டுக் கொடுத்திட்டாரே!

"நீங்கள் ப்ளாக் ஹோல் பற்றி, பாரலல் யூனிவர்ஸ் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"

"சார்! நான் சொல்றேன்.! A Black Hole is..." என்று இடைபுகுந்து ஆரம்பித்தேன்.

"தம்பி! உனக்கு ஃபிஸிக்ஸில் மிக்க அறிமுகம் உண்டா?" என்று கேட்டார் ஹாக்கிங்.

"உண்டு சார்!" என்றேன் பெருமிதமாய்.

"சர்! நான் பேஸிக்கா ஒரு கேள்வி கேக்கறேன். ஏ ப்ளஸ் பி ஹோல் ஸ்கொயர் சொல்லு!"

"சார்! இதெல்லாம் ஜுஜுபி! ஏ ஸ்கொயர் ப்ளஸ் டூ ஏ பி ப்ளஸ் பி ஸ்கொயர்! எப்பிடி?"

"முட்டாள்! நான் உன்னை ஏ ப்ளஸ் பி ஹோல் ஸ்கொயர் சொல்லச் சொன்னேன். அந்த ஈக்வேஷனையா கேட்டேன். போ! அந்த மூலையில் போய் உட்கார்!" என்றார் ஹாக்கிங்.

"அவ்வ்வ்வ்வ்வ்...!" என்று கமெண்ட் கொடுத்து விட்டு, காக்பிட்டுக்குள் நுழைந்தேன்.

"உனக்கு தேவை தான்! வா! வந்து உட்கார்! ஏழுக்கு அப்புறம் என்ன நம்பர் சொல்லு!" என்றது XFA9C.

அதை முறைத்து விட்டு, கண்ணாடித் தடுப்புக்கு பின்னால் இருவரும் மிக ஆர்வமாக டிஸ்கஷன் செய்வது தெரிந்தது.

"அடுத்து எங்கே செல்வது?" கேட்டது.

"A.D.1686-க்குப் போ!" என்றேன் 'பாரீஸுக்குப் போ' என்ற தொனியில்.

இந்த கலம் என்னை தேடி வந்தடைந்தது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு.

மான்சூன் துவங்கி விட்ட பின் திருவனந்தபுரத்தில் விட்டு விட்டு, தூறலாய், சாரலாய், பெருமழையாய் என்று மழை பெய்து கொண்டே இருந்தது.

ஒரு செவ்வாய்க்கிழமை காலை. குளிக்கப் போகும் முன் வாயில் பேஸ்ட் ப்ரெஷ் நுரையுடன், மாடியில் காயப் போட்டிருந்த , காற்றில் படபடத்துக் கொண்டிருந்த 'ப்ரொபஷனல்' ஷர்ட்டை எடுக்கப் போகையில், இந்த கலம் தரை... இல்லை, மாடி இறங்கியது.

ஈ.டி. போல் ஏதேனும் வினோத பிராணி இறங்கும் என எதிர்பார்த்திருக்க இயந்திரம் இறங்கியது. "லேசா குளிர்கிறது!" என்று சொல்லி விட்டு, மாடியின் கைப்பிடிச் சுவரில் உரசிக் கொள்ள, அதன் உடலில் சூடு ஏறியது போலும். "என்ன தான் அட்வான்ஸ்டு டெக்னாலஜியில் நான் டிசைன் செய்யப்பட்டிருந்தாலும் ஆதிகால சிக்கிமுக்கிக்கல் டெக்னிக் தான் ஹேண்ட்ஃபுல் ஹெல்ப்! பை தி வே, நான் இன்றிலிருந்து 3067 ஆண்டுகள் பின்னால் இருந்து வருகிறேன். உங்களுக்குப் புரியும் வகையில் கி.பி.5075. இதைப் படித்துப் பாருங்கள்! உங்களை ஹூஸூர் என்று கூப்பிட வேண்டுமா?" என்று ஒரு பிங்க் ஷீட்டை நீட்டியது.

சிங்குலாரிட்டி கணத்தை கண்டறிய காலக் கலனுடன் அனுப்பப்பட்டுள்ள XFA9C-ஐ துணை கொள்ளவும். பெரு வெடிப்பில் இருந்து காலம் துவங்குவதை உறுதி செய்து கொண்டு (ஃபோட்டொ, வீடியோ, மெமரி கேப்ஸ்யூல்) அவற்றை XFA9Cயிடம் கொடுத்து அனுப்பவும். உங்கள் பெயர் வருங்கால வரலாற்றில் நிலை பெறும்!

சத்யமேவ ஜெயதே!
Department of Astronomical Forces.
Government of Indian Sub Continent.

அசோக சக்கரம் சீல் குத்தி இருந்தது.

எனக்கு சந்தோஷத்துடன், என்னை ஏன் செலக்ட் செய்தார்கள் என்று தெரியவில்லை.

"ழீ! எழுக்கு வழ்ழிருக்கனு எழக்கு தெழில்லு போழ்ழு! லீழ போய் ழூம்ல உக்காழு! ழான் குழில்லிட்டு வழேன்!"

"ஆச்சரியம்! உங்களுக்கு எங்கள் பாஷை தெரிந்திருக்கிறது! XFA9C ப்ரோக்ராமிங் மொழி இது தான்!"

துப்பி விட்டு,

"நீ எதுக்கு வந்திருக்கேனு எனக்கு தெரிஞ்சு போச்சு! கீழ போய் ரூம்ல உக்காரு! நான் குளிச்சிட்டு வரேன்!" என்று ழமிழில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்தேன்.

பக்கெட் துணிகளை அள்ளிப் போட்டு, பாத்ரூமுக்குள் போய் கதவைத் தாளிட,

"பேஷா வா!
குளிச்சிட்டு
ஃப்ரெஷ்ஷா வா!" என்றது.

குறுங்கவிதை சொல்லும் ஒரு குழப்பமான இயந்திரத்துடன் காலத்தின் ஆரம்பப் புள்ளியை நோக்கி ஒரு பயணம். ஆச்சர்யம்! நான் மட்டும் தனியாகப் போய், புரியவில்லை என்று சொல்லி இந்த இயந்திரம் கோபமாகி ஷாக் கொடுத்து விட்டதென்றால்..! எல்லாம் தெரிந்த மேதைகளையும் கூட்டிச் செல்லலாம் என்ற முடிவுக்கு வந்தேன். கால இயந்திரம் தான் இருக்கின்றதே!

அறைக்குச் சென்று துணி மாற்றும் போது,

"ஆமா! நான் இன்னிக்கு ஆஃபீஸுக்கு போகணுமே! ஒரு இங்க்லீஷ் சாங்க் டெஸ்டிங்ல 38-வது ஹார்மோனிக்ஸ்ல நாய்ஸ் வருதே! அதை சால்வ் பண்ணனும்!"

"ஏதேனும் காரணம் சொல்லி லீவ் போடு!"

"எத்தனை நாட்களுக்கு?"

"யார் காலத்தில்?" திருப்பிக் கேட்டது.

ஆமாம் யார் காலத்தில்? சரி, நமது நிகழ் காலத்திலேயே லீவ் சொல்லுவோம்.

"ஹலோ! சார். நான் தான் பேசறேன். எங்க பாட்டி திடீர்னு இறந்துட்டாங்க. போகணும். ஒரு வாரம் லீவ் போட்டிருங்க சார்!"

ஆஃப் செய்யும் முன், "டேய்! உனக்கு எத்தனை பாட்டிகள்?" குரல் தேய்ந்து மறைந்தது.

"கமான்! லெட்ஸ் கோ!"

திட்டப்படி ஹாக்கிங் மற்றும் ஐன்ஸ்டைனை இருவரையும் அழைத்துக் கொண்டு இப்போது 1686 நோக்கி காலத்தின் அச்சில் நெகட்டிவ் திசையில் பயணம்.

சர் ஐசக் நியூட்டன் தனது அறையில் Philosophiæ Naturalis Principia Mathematica எழுதிக் கொண்டிருந்தார். நாங்கள் போய் இறங்கினோம்.

"யார் இவர்?"

"இவர் தான் இவங்களுக்கெல்லாம் தாத்தா. இவரெல்லாம் இல்லாட்டி நீயே கிடையாது. இவர் உனக்கு கடவுள் மாதிரி!"

"ஓ!"

"யார்... யார் நீங்கள்?" என்று கேட்டார்.

"சார்! நாங்கள் எல்லாம் உங்களுக்கு பிற்காலங்களில் இருந்து வருகிறோம். காலத்தின் ஆரம்பப் புள்ளியை நோக்கி போய்க் கொண்டிருக்கிறோம். நீங்களும் வர வேண்டும் என்பது எங்களின் ஆசை! வாருங்கள் போகலாம்!" என்றேன்.

கிட்டத்தட்ட அவரை இழுத்துக் கொண்டே வந்து விட்டோம்.

நியூட்டன் இன்னும் திகைப்பாய் பார்த்துக் கொண்டிருக்க, கலம் மேலும் வேகமாகப் போகத் தொடங்கியது.

"சார்! நான் உங்களைப் பார்த்தவுடனே ஒரு கேள்வி கேக்கணும்னு வெச்சிருக்கேன்! கேக்கலாமா?" உற்சாகமாக கேட்டேன்.

என் ஆர்வத்தைப் பார்த்து மகிழ்ந்தார் நியூட்டன்.

"கேளுப்பா! எதில் கேக்கப் போற? மெக்கனிக்ஸ், ஆப்டிக்ஸ், ஸ்பீட் ஆஃப் சவுண்ட், மேதமேடிக்ஸ்...?"

"சார்! அதைப் பற்றி எல்லாம் ஒரு ஃபுல் புக் நீங்களே எழுதிட்டீங்க! அதை எல்லாம் அனலைஸ் பண்ணியும் பல புக்ஸ் இருக்கு சார்! நான் கேக்கப் போறது வேற ஒண்ணு! உங்க தலை மேல ஒரு ஆப்பிள் விழுந்துச்சு இல்லையா? அதை அப்புறமா என்ன பண்ணீங்க? அப்படியே சாப்பிட்டுடீங்களா இல்லை ஜூஸா அடிச்சிட்டீங்களா? இந்த இன்பர்மேஷன் தான் எந்த புக்லயும் இல்லை சார்! நீங்களே சொன்னாத் தான் உண்டு!"

'இது எதிர்பார்த்தது தான்!' என்பது போல் ஐன்ஸ்டைனும், ஹாக்கிங்கும் உதட்டைப் பிதுக்கி, தத்தம் ஆறுதல்களைப் பரிமாறிக் கொள்ள, நியூட்டன் அதிர்ச்சியாகிப் பார்க்க, 'ணங்! ணங்!' என்று யாரோ தலையில் அடித்துக் கொண்ட சத்தம் கேட்டது.

சூழலை உணர்ந்து நைஸாக அங்கிருந்து நழுவினேன். காக்பிட்டுக்குள் நுழையும் போது,

"திரும்பி வந்திடாத!" என்ற குரல் பின்னால் கேட்டது. யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை.

மூவரும் வெகுவாக டிஸ்கஸ் செய்து கொண்டிருப்பதும், மறுப்பதும், விவாதிப்பதும் இங்கிருந்து பார்க்க சந்தோஷமாக இருந்தது.

"எனக்கு எவ்ளோ மகிழ்ச்சியா இருக்கு தெரியுமா, இது போன்ற மேதைகளுடன் கூட சேர்ந்து பயணம் செய்வதற்கு!" என்று சொன்னேன் XFA9Cயிடம்.

"ஹூம்! எனக்கு தான் அந்த கொடுப்பினை இல்லை! உன்னுடன் அல்லவா பயணம் செய்ய வேண்டி இருக்கின்றது!" என்று பெரு மூச்சு விட்டது.

கலத்தின் கால முள் ஸீரோவை நோக்கி வெகு வேகமாக நகர்ந்து, தொட்டது.

அனைவரும் ஆர்வமாக வெளியே வெளியைப் பார்த்தோம்.

அங்கு இருந்தது எப்படிப்பட்ட அனுபவம் என்றே என்னால் சொல்ல இயலவில்லை. நாங்கள் எங்கு இருந்தோம் என்பதை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை.

பெருவெடிப்பு.

இதைப் பற்றி கூற அனைவரிலும் சீனியரான நியூட்டன் அவர்களால் தான் முடியும் என்று எல்லோரும் ஆர்வமாக அவர் முகத்தைப் பார்த்தோம். XFA9Cயும் கலத்தை நிறுத்தி விட்டு க்றீச் என்று தன் குரலில் சீட்டி அடித்தது.

"6accdae13eff7i3l9n4o4qrr4s8t12ux." என்றார் சர் ஐசக் நியூட்டன்.

(தேன் சிறில் அலெக்ஸ் அறிவியல் சிறுகதை போட்டிக்காக.)