Thursday, May 08, 2008

Theme Musics....!



"மாயாண்டி...!" , "எஸ் பாஸ்...!", என்று குரலில் கடுமையும், முகத்தில் ரெட் லைட்டும் அடித்து பயங்கரமும் காட்டிக் கொண்டிருந்த நம்ம ஊர் வில்லன்களை விட, உலகளாவிய வில்லன்களைத் தேடி அழிக்கின்ற ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களின் தீம் இசை அத்தனை பிரபலமானது.

'பிறந்தால் பாண்டாய் பிறக்க வேண்டும்'...!

படத்திற்குப் படம் கலர் கலராய் குட்டிகள். ஒரு கையால் அணைத்துக் கொண்டு, சர்வதேச வில்லன்களை சுட்டி விட்டு, துப்பாக்கி முனையில் பரவுகின்ற வெண் புகையை மென்மையாய் ஊதி விட்டு '007' என்கிறாரே அந்த அலட்சியத்திற்கு என்ன விலை தரலாம்?

இதோ தீம் ம்யூசிக் கலெக்ஷன்.



கால மாற்றத்திற்கேற்ப இசை வடிவத்திலும், ஆடைகளிலும் வேறுபாடுகள் இருந்தாலும் அந்த பேஸிக் இசை மாறவே இல்லை தானே...?

என்பார்கள். ஒருதிட்டவட்டமான கருத்தைப் பதியவைத்து விடல். தீம் ம்யூஸிக்ஸ் அத்தகைய பணியைத் தான் கர்மசிரத்தையாகச் செய்து வருகின்றன. நம்ம ஊரில் இதைக் கொஞ்சம் லேட்டாகத் தான் ஆரம்பித்துள்ளார்கள். முக்கியமாக ரகுமான் வந்த பிறகு!

சில இசைத் துணுக்குகள்...!

MI:2 ::


Terminator ::


இதை அநியாயத்திற்கு பாட்ஷாவில் பயன்படுத்தி இருப்பார் நம்ம தேவா அண்ணாத்தை!

The Matrix ::


ஜீன்ஸ் ::



(யோவ்! பாட்டை மட்டும் கேளுங்கய்யா! பெருமூச்செல்லாம் விடக் கூடாது என்ன..?)

7G ரெயின்போ காலனி ::



இது நம்ம ஏரியா காமெடி தீம் ::



(லேட்டானா ஃபிகர் நல்ல ஃபிகராத் தான் இருக்கும்...)

புன்னகை மன்னன் ::



மெளன ராகம் ::


இது தான் Ultimate ....!

Wednesday, May 07, 2008

ச்சும்மா...!

"டம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கு முபாய மறிந்தேன்
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே"

இது திருமூலச் சித்தர் வாக்கு. இதை முழுதும் சொல்லாமல் பலரும் கடைசி வரியை மட்டும் கதையின் கடைசியில் வரும் மெஸேஜ் போல் எடுத்துக் கொண்டு நன்றாக வெளுத்துக் கட்டுகிறார்கள்.

இதனை அடுத்து திருமூலர் கூறி இருப்பதை கூலாக விட்டு விடுகிறோம்.

"இருக்குமிடந்தேடி யென்பசிக்கே யன்னம்
உருக்கமுடன் கொண்டு வந்தாலுண்பேன் - பெருக்க
அழைத்தாலும் போகேன் அரனே எந்தேகம்
இளைத்தாலும் போகேன் இனி!"

என்கிறார்.

***

ள்ளியில், கல்லூரியில் படிக்கும் போது பரீட்சைக் காலங்களில் வருகின்ற பிரச்னைகள் பலவிதம். அவற்றிற்கு பல காரணங்கள் இருக்கும். அதிலும் பெயர்க் காரணங்களால் வருகின்ற பிரச்னைகள் ஒரு விதம்.

நான் எப்போதும் கடைசி வரிசைகளில் தான் அமர வைக்கப்படுவேன். ஆங்கில அகர வரிசை.

தேர்வு துவக்க மணி அடித்தவௌடன் என்ன நடக்கும். கண்காணிப்பாளர் வரிசையாக பேப்பரைக் கொடுத்துக் கொண்டே வருகிறார். தேர்வு நடக்கின்றது. பிரச்னை எங்கு வருகிறது என்றால், தேர்வு முடிந்தது என்பதற்கான மணி ஒலித்ததும் தான். அப்போது ஒவ்வொரு கண்காணிப்பாளரும் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்து நான் அவர்களை மதிப்பிடுகிறேன்.

*சில கறார் பேர்வழிகள் 'அப்படியே எல்லோரும் பேப்பரை வைத்து விட்டு ஓடிப் போயிருங்க' என்பார்கள். எத்தகைய அநியாயம் இது! முதல் வரிசையை விட , நடுவில் இருக்கும் மாணவர்கள் எண்ணிக்கையைப் பொறுத்து, கடைசி வரிசைக்கும், முதல் வரிசைக்கும் சில நிமிட இடைவெளிகள் கிடைக்கின்றன. பின் வரிசை மாணவர்கள் அத்தனை நிமிடங்கள் பின் தள்ளப்படுகிறோம். ஆனால் முடிக்கும் போது மட்டும் எல்லோரும் ஒரே நேரத்தில் முடிக்க வேண்டும் என்பது எத்தகைய அநியாயம்!

*சிலர் எல்லோர்க்கும் மணி அடிப்பதற்கு முன்பே பேப்பர் கொடுத்து விட்டு, மணி அடித்தவுடன் எல்லோரும் சரியாக எழுந்து விட வேன்டும் என்பர். சரி.

*சிலர் பேப்பர் கொடுத்த வரிசையிலேயே கலெக்ட் செய்து வருவார்கள். இதுவும் சரியானதே!

*சிலர் இருக்கிறார்கள். முடிவு மணி அடிக்கும் போது எந்த இடத்தில் நிற்கிறார்களோ அந்த இடத்தில் இருந்தே பேப்பரை பிடுங்க ஆரம்பித்து விடுவார்கள். இந்த randomnessக்கு விதியைத் தவிர வேறு எதையும் காரணமாகச் சொல்ல முடியாது.


Get Your Own Hindi Songs Player at Music Plugin

Tuesday, May 06, 2008

வாத்தியாரின் பிரிவு.



வேறொண்ணும் சொல்ல விரும்பல... நக்கீரனார்க்கு நன்றி, பதிப்பித்த எழில்மாறனுக்கும்!!!

Sunday, May 04, 2008

வந்த பசி வாரிச் சுருட்டி ஓட...!

ஞாயிற்றுக் கிழமை லேட்டாக எழுந்து விட்டோம் என்று வருத்தப்படுகிறீர்களா? 11 மணிக்கு எழுந்து பார்த்து இப்போது சாப்பிடப் போவது டிஃபனா அல்லது லஞ்சா என்ற மென் குழப்பத்தில் ஆழ்கிறீர்களா? இன்னும் ஒரு மணி நேரம் ஓட்ட வேண்டுமே மதிய உணவிற்கு என்ற நிலையில் உணவு எதுவும் செல்லாமல் ,'எதுவும் ஓட மாட்டேங்குது' என்ற நிலையில் இருக்கிறீர்களா?

துயர் சிறிதும் வேண்டாம்.

நம் தாத்தா சொன்னதை கேட்டு அதன் வழி நடந்தால், பசி பறந்து போகாதோ?

செவிக்கு உணவு இல்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.















இன்னிக்கு இது போதுங்க...! எப்படியும் ரீப்ளே பண்ணிக் கேட்பீங்க. டைம் சரியாயிடும். சாப்பாடு ரெடி ஆகி இருக்கும். போய்ச் சாப்பிடுங்க.