Tuesday, May 26, 2009

Pink Floyd - High Hopes.



ற்புதமான கிடார் சோலோவும் டிவைன் பெல்லும் கலக்கியெடுக்கும் பாடல் இது. பிங்க் ஃப்ளாய்ட் க்ரூப்பின் படைப்பு.



Beyond the horizon of the place we lived when we were young
In a world of magnets and miracles
Our thoughts strayed constantly and without boundary
The ringing of the division bell had begun
Along the long road and on down to the causeway
Do they still LIVE there by the cut
There was a ragged band that followed in our footsteps
Running before time took our dreams away
Leaving the myriad small creatures trying to tie us to the ground
To a life consumed by slow decay

The grass was greener
The light was brighter
With friends surrounded
The nights of wonder

Looking beyond the embers of bridges glowing behind us
To a glimpse of how green it was on the other side
Steps taken forwards but sleepwalking back again
Dragged by the force of some inner tide
At a higher altitude with flag unfurled
We reached the dizzy heights of that dreamed up world

Encumbered forever by desire and ambition
There's a hunger still unsatisfied
Our weary eyes still stray to the horizon
Though down this road we've been so many times

The grass was greener
The light was brighter
The taste was sweeter
The nights of wonder
With friends surrounded
The dawn mist glowing
The water flowing
The endless river

The grass was greener
The light was brighter
The taste was sweeter
The nights of wonder
With friends surrounded
The dawn mist glowing
The water flowing
The endless river

Forever and ever

Sunday, May 24, 2009

நாஸ்டால்ஜிக் ரசிப்பு.2.


கொஸப்பேட்டை குப்ஸாமி.

ந்த தொடரில் எழுதுவதற்காக கொஸப்பேட்டையாரின் தளத்திற்குச் சென்று பார்த்தேன். ஆச்சரியம். தளமே வடிவமைப்பில் மாறியிருந்தது. நீலத்திரை பின்புலத்தில் குட்டி குட்டி எழுத்துக்கள்.

ஆனால் சென்னைச் செந்தமிழுக்கு இந்த தூக்க நிறம் சரியான மேட்ச் என்று எனக்குத் தோன்றவில்லை.

பாரீஸ் தாண்டி வடசென்னையின் தெருக்களில் சுற்றியதில்லை நான், பத்து வருடங்களாக தலைநகர் வாசம் பிடித்திருந்தாலும்! ஆனாலும் சில கதைகள் எழுத முடிந்தது. இந்த கானாவுக்கும் நெம்புகோலாய் சென்னை368 தான் இருந்திருக்கின்றது. எப்படி இந்த வார்த்தைகள் தெரிந்திருக்கும் என்று சிந்தித்துப் பார்க்கும் போது, இரண்டே இரண்டே காரணங்கள் தான் கிடைத்தன.

முதல் : மயிலை எம்.எல்.ஏ. அண்ணன் எஸ்.வி.சேகர்.

சேகரின் நாடகங்களில் முதலில் கேட்டது 1000 உதை வாங்கிய அபூர்வ சிகாமணி. இரண்டாம் பாதியில் ஆள் மாறாட்டம் செய்து எம்.எல்.ஏ.வாகி சென்னைத் தமிழில் அமர்க்களம் செய்வார். மற்றும் சில நாடகங்களிலும் இயல்பாக அவருக்கு வார்த்தைகள் வந்து விழும். வளர்பருவத்தில் சேகர் நாடகங்கள் ஊற்றியது ஒரு முக்கியமான காரணம். ஆனால் அப்போது கவிதைகள் மட்டும் கிறுக்கிக் கொண்டிருந்ததால் சென்னை வெளியே வரவில்லை.

இரண்டாவது இவர். 2006-ல் பெங்களூரில் இருந்த போது, வலைக்கு அறிமுகம் கிடைத்து படித்துக் கொண்டிருந்த போது, கொஸப்பேட்டையாரின் வலைப்பூ மீண்டும் சென்னை அணுக்களைக் கடத்திக் கொண்டு வந்திருந்தது. பெரும்பாலும் அரசியல் பதிவுகள். காரணம் கேட்டால், தினமணி மதி போல் ,'வேறு எதைப்பற்றியும் கார்ட்டூன் போடலாம் தான். ஆனால் இந்த அரசியல்வாதிகள் தான் தினமும் ஏதேனும் செய்து விடுகிறார்களே!' என்று சிரிக்கவும் கூடும்.

முழுக்க முழுக்க செ.செந்தமிழில் எழுதுவது எனக்குத் தெரிந்து இவர் ஒருவர் தான் என்று நினைக்கிறேன். படித்துப் பாருங்கள். சென்னை உங்கள் செல்களிலும் ஊறும்.

படம் நன்றி :: http://www.hindu.com/2008/06/16/images/2008061654820601.jpg

http://kosappettai.blogspot.com/2004/03/blog-post_27.html

http://kosappettai.blogspot.com/2004/04/blog-post_27.html

http://kosappettai.blogspot.com/2004/04/blog-post_21.html

http://kosappettai.blogspot.com/2004/04/blog-post_11.html

இன்னும் நிறைய இருக்கின்றன.

Saturday, May 23, 2009

நாஸ்டால்ஜிக் ரசிப்பு.1.

மூர்ஸ் விதியை மீறி மூர்க்கமாக தமிழ்ப் பதிவர்களின் எண்ணிக்கை எகிறிக் கொண்டிருக்கின்றது. இன்று எழுதும் பதிவுகள் அறுபது நொடிகளுக்குள் கவனத்தில் இருந்து, காணாமல் போய் விடுகின்றன. நடப்பு நிகழ்ச்சிகளை ஒட்டி எழுதப்படும் பதிவுகள் சம்பவச் சூடு அடங்கும் போது தாமும் அமுங்கி கரைந்து விடுகின்றன. தினச் செயல்பாடுகளைப் பதித்து வைப்பதற்காக எழுதினாலும், ஒரு நிரந்தரத் தன்மையை அதற்கு அளிப்பதன் மூலம் பதிவு தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் என்று நினைக்கிறேன்.

எழுத வந்த புதிதில் என்னை ஈர்த்த சில பதிவுகள் இன்னும் நெஞ்சுக்குள் ஒட்டிக் கொண்டிருப்பது, படித்தவர்களை விட, அவற்றின் கருத்து நினைவில் இருப்பது, எழுதியவருக்கு மகிழ்ச்சியைத் தரும்.

புதிதாக எழுத வந்துள்ளவர்களுக்கு என்னைக் கவர்ந்த சில அந்த நிலாக்காலப் பதிவுகளைச் சுட்டிக் காட்டுவது, இன்னும் செழுமையாக எழுத வைக்கும் என்பது தீரா நம்பிக்கை. இது முழுக்க முழுக்க என் கவனங்களுக்கு வந்தவையும், என் ரசனைக்குப் பிடித்தவையும் மட்டுமே!

சிலர் இப்போது, பதிவுலகில் முன்பிருந்த ஏக்டிவ்வில் இல்லை என்பது எனக்கு அவ்வப்போது திகிலூட்டுகின்றது. இந்த வரிசையைச் சாக்கிட்டு பழைய பதிவுகளைப் படிக்கும் இன்பம் பெற விழைகிறேன். இணையத்தின் சாஸ்வதத் தன்மையை ஷார்ட் டெர்மில் உணர முடிகின்றது.

மீனாக்ஸ்.

மீனாக்ஸ் பொறியியல் மற்றும் மேலாண்மை படித்தவர். 2007-ல் சென்னைப் பல்கலைக்கழக மண்டபத்தில் நடந்த 'The Grand Tamil Bloggers Meet'-ல் இவரைச் சந்தித்தேன். 'இப்போதெல்லாம் ஏன் எழுதுவதில்லை?' என்று கேட்டேன். 'எழுத வேண்டும்' என்று சிம்பிளாகச் சொல்லிச் சென்றார். இவர் பதிவுகளில் எனக்குப் பிடித்தன :

http://thavam.blogspot.com/2005_02_01_archive.html

http://thavam.blogspot.com/2006/08/anecdote.html

http://thavam.blogspot.com/2006/11/blog-post_21.html

உச்சமான அருமை :: வருங்கால மனைவியை சந்திக்கப் போதல் - சில குறிப்புகள்

http://thavam.blogspot.com/2006/04/blog-post_21.html

http://thavam.blogspot.com/2005_06_01_archive.html

http://thavam.blogspot.com/2006/04/cognitive-seduction.html

Friday, May 22, 2009

மொக்ஸ் - 23.MAY.2K9.






னந்தபுரத்தில் இது என்ன வானிலை என்றே புரியவில்லை.

மே மாதம் உச்ச வெயில் இருக்கும் நேரங்களில் மழை கொட்டுகிறது. ஹனிமூன் படுக்கைகளில் போர்வைகள் போல் எப்போதும் மேகங்கள் கலைந்தே இருக்கின்றன. ஆளுயர வாழை இலைகள் எப்போதும் ஜில் பச்சையாக அசைகின்றன. நான்காவது கையாக குடையும் உடலோடு ஒட்டியிருக்கின்றது. குறுக்கும் முறுக்குமான கேபிள் வயர்களிலும், புணர்கின்ற சாரைப் பாம்புகளாய், ஆடையற்ற மின் லைன்களிலும் துளித்துளியாக ஓடிக் கொண்டேயிருக்கின்றது சாரல்கள். இருள் களையாத ஐந்து மணிக்கே மூட்டப்படும் ச்சாயாக் கடைகளில் கூட்டம் எப்போதும் இருக்கின்றது. மொட்டை மாடியில் சென்று பார்த்தால் தூரத்து மலைகளில் புகை சுழன்று சுழன்று எழுகின்றது. சாலைக் குழிகளையெல்லம் சமனப்படுத்தி பழுப்பு நீர் சேகரமாகிறது. ஜன்னல்களை இறுக்க மூடும் கே.எஸ்.ஆர்.டி.ஸி. பஸ்களில் கூரைகளின் பொத்தல்கள் வழி நீர்க்கோடுகள் உள் பாய்கின்றன. அவ்வப்போதைய மின்னல் இசைகளுக்கு வைப்பர்கள் ஓயாது தலையாட்டிக் கொண்டேயிருக்கின்றன. ரெயின் கோட்க்ளைப் பற்றி சிந்திக்க வேண்டியிருக்கின்றது. பூ போட்ட குடைகளின் கீழ் யூனிஃபார்ம் போடாத பூக்கள், ஜூன் அதற்குள் வந்து விட்டதை நினைத்து 'உச்' கொட்டுகிறார்கள். காற்றில் ஈர வாசம் அடிக்கின்றது. விடியற்காலையிலேயே மின் காற்றாடிகள் நிறுத்தப்படுகின்றன. கொஞ்சம் விட்டதும் 'இன்று புதிதாய் பிறந்தோம்' என்று ரீங்காரமிட்டு, பொட்டுப் பூச்சிகள் அறைக்குள் விர்ரடிக்கின்றன. யாரும் பறிக்காத மரங்களில் மாங்காய்கள் மேல் மழைத்துளி சறுக்குகிறது. வானை அளக்கும் பறவைகளின் கீச்கீச்சுவென்ற சிங்கிள் சைன் ஓசைகள் குட்டி ஹார்மானிக்ஸ்களுடன் எழும்புகின்றன. நாட்களில் லேசான சோம்பல் மிதக்கின்றது. மஞ்சள் கொன்றை பூக்கள் விஷுவோடு பொலிவிழந்து, இயல்புக்கு திரும்ப, பலாப் பழங்கள் உடலெங்கும் ஈரமாய் சரிந்திருக்கின்றன. வளைந்து வளைந்து மேலேறும் சாலைகளின் பக்கவாட்டுச் சரிவு வீடுகளின் சிம்னிகளிலிருந்து மெதுவாக புகை வந்து கொண்டிருக்கின்றது. ஏர்போர்ட் அருகே சின்னதாய் ஏதோ முஸ்லீம்கள் பிரச்னை என்று சடாரென இந்த செவ்வாய் ஹர்த்தால் நடத்தினார்கள். அது வேறு பேட்டை என, இந்தப்பக்கம் ஹாரனடித்து பஸ்கள் ஓட, கடைகள் மட்டும் அடைந்திருந்தன. ஈரக் கூந்தல் பறபறக்கும் மங்கைகள் பளிச்சென்றிருக்கிறார்கள். எது பேசினாலும் வாய் பொத்தி சிரிக்கும் பெண்கள் கண்களில் இயல்பாக ஒரு மை தேய்ந்திருக்கின்றது. வேகச் சக்கரங்கள் தெறிக்கும் சகதிக்கு ஒதுங்கிப் பாவாடை கொஞ்சம் தூக்கும் அந்த குட்டிப் பெண்ணின் பாதங்களில் கொலுசின் கீழ் பிங்க் செருப்பில் மிக்கி முகம் சிரித்திருக்கின்றது.

மழையில் நனைகின்ற எந்த ஊரும், எந்தப் பெண்ணும் அழகாய்த் தான் இருக்கிறார்கள்.

நேற்று ஒரு மாற்றமாக டெக்னோமாலில் இருக்கும் அம்ப்ரோஸியா சென்றேன், இன்னும் மூன்று நண்பர்களுடன். சர்வீஸ் செக்டார் இந்த நேரத்தில் செமத்தியாக அடிவாங்கியிருப்பது தெரிந்தது. பாஸ்கின் ராபின்ஸ் காலியாக இருந்தது. மேல் மாடி மாடர்ன் சலூனில் துணி போர்த்தியிருந்தார்கள். எப்போதும் கொஞ்சம் கூட்டம் தளும்பும் அம்ப்ரோஸியாவில் சிக்கன் வறுத்த மணம் மட்டுமே விரவியிருந்தது. கூல் டீ, ஃபிங்கர் சிப்ஸ், ஃப்ரெஞ்ச் சிக்கன் டிக்கி காம்போ 65 ரூவிலிருந்து சரேலென சரிந்து 40க்கு வந்திருந்தது. இருப்பதிலேயே விலை குறைவானது எது என்று பார்த்தால் ஃப்ரைட் எக், 10 என்றிருந்தது. கொஞ்சமாவது சாப்பிடுவோம் என்று பார்த்து 35க்கு சிக்கன் அண்ட் பட்டர் என்று ஆர்டர் செய்ய, 'கங்க்ராட்ஸ் சார்! நீங்கள் தான் இதை முதன் முதலில் ஆர்டர் செய்திருக்கிறீர்கள்' என்று திகிலூட்டினார்கள். 'செய்யத் தெரியும்ல?'. 'அதெல்லாம் கவலை நோ. கலக்கிரலாம்'.

ஏழரைக்கு மேல் கொத்துக் கொத்தாய் கேர்ள்ஸ் மட்டும் டேபிள்களை ஆக்ரமித்தனர். நாங்கள் மட்டும் தான் பசங்க! என்னென்னவோ ஆர்டர் செய்தார்கள். பர்கர் கடிக்கையில் சீஸ் துளிர்த்த உதட்டுக்காரி தனியாக வந்திருந்தாள். ப்ளூ ஜீன்ஸ், வொய்ட் டாப்ஸ் இளள், அநியாயத்திற்கு ஒல்லிக்குச்சியாக இருந்தாள். துப்பட்டா மறந்திருந்த குள்ளமான ஒருத்தி சிக்கிய ஒருவனிடம் சிரித்துப் பேசியே பிட்ஸா மேல் சாஸ் பிழிய, பர்ஸ் வேகமாக கரைவதை உணராத அவன், அவ்வப்போது எட்டிப் பார்த்து வியந்து கொண்டிருந்தான். ஐஸ்க்ரீம்கள் குப்பிகளை அவசர அவசரமாக காலியாக்கினார்கள். தங்களுக்குள் மெல்லிய குரலில் கிசுகிசுத்துக் கொண்டு பெரிய குரல்களில் வெவ்வேறு ஃப்ரீக்வன்ஸிகளில் சிரித்தார்கள். காதுகள் விடைத்த கைப்பைகளை பக்கத்து சேர்களில் கிடத்தியிருந்தார்கள். ஆர்.ஜி.பி. காம்பினேஷனே சொல்ல முடியாத வர்ணத்தில் வைத்திருந்த கர்ச்சீப்பில் வட்டமாய்க் கண்ணாடிகள் காட்டினார்கள். கேக், க்ரீம், சிக்கன் வகையறாக்களின் போட்டோக்கள் ஒட்டிய சுவர்களில் இருந்து கசியும் பீட் துடிக்கும் இசையின் வால்யூம் மட்டும் வழக்கத்தை விட குறைவாய் இருந்தது.

ரிஸஷன் காரணமோ..?

ட்டியே இருக்கும் டி.ஸி.புக்ஸ் சென்று ஏதாவது புது வரவாக இருக்கின்றதா என்று ஒரு நோட்டம் விட்டதில், சில பட்டன. ஆனால் விலை தான் 295 ரேஞ்சில் இருந்தன. அதெப்படி 295 என்று ஃபிக்ஸ் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. 100 ரூபாய்க்கு மிகாமல் ஏதாவது கிடைக்குமா என்று சுற்றிச் சுற்றித் தேடியதில், ஏற்கனவே வாங்கித் தீர்த்து விட்ட சேட்டன் நூல்கள் மட்டும் இருந்தன. இன்சார்ஜ் வந்து, 'சார்.. கடையைக் கல்லா கட்டணும்' என்று சொன்னார். பட்ஜெட்டை விட அதிகமாக வேண்டாம் என்று முடிவு செய்து, ஒரே ஒரு புத்தகம் வாங்கி விட்டு படித்துக் கொண்டே கழக்குட்டம் வந்து பஸ் ஏறி, எதிர்பாரா மழை விசிட்டில் நனைந்து, வீடு வந்து சேர்ந்தேன்.

வேர்ட்ஸ்வொர்த் எடிஷன்ஸ்காரர்கள் 'வேர்ட்ஸ்வொர்த் க்ளாஸிக்ஸ்' வரிசையில் அருமையான, படிக்க வேண்டிய புத்தகங்களை குறைந்த விலையில் வெளியிடுகிறார்கள். நான் பார்த்த போது கடையில் இருந்தன, டி.எஸ்.எலியட், ஜாய்ஸ், டிக்கின்ஸ், ஷேக்ஸ்பியர் (கம்ப்ளீட் வொர்க்ஸ்). 105 ரூபாய் போட்டிருந்தார்கள். எடுத்துக் கொண்டேன். ஜேம்ஸ் ஜாய்ஸின் 'டுப்ளினர்ஸ்'.

எழுதும் எல்லோர்க்கும் சொந்த ஊரைப் பற்றி எழுத வேண்டும் என்ற ஆசை எப்போதும் இருந்திருக்கின்றது. ஒன்றுமே பதியாத பளிச் ஸ்லேட் மனதில், வளரும் போது சந்திக்கின்ற முதல் ஆச்சரியங்கள், ஏமாற்றங்கள், அதிர்ச்சிகள், துக்கங்கள், மயக்கங்கள், தயக்கங்கள், பிம்பங்கள், அனுபவங்கள் சொந்த ஊரில் தான் படிகின்றன. கடைசி வரை அவை மறந்து போவதில்லை. மீண்டும் மீண்டும் வாழ்வில் இவைகளையே சந்திக்க நேரும் போதும், முத்தம் முதல் அனுபவ உணர்வுகளைத் தான் மறுபடியும் எழுப்பிக் கொள்கிறோம். பழகிப் போகத் துவங்குகின்றன. வாத்தியாரின் 'ஸ்ரீரங்கத்து தேவதைகளும்', ஆர்.கே.நாராயணனின் மால்குடி மனிதர்களும் அதைத் தானே சொல்கிறார்கள்! ஜாய்ஸின் 'டுப்ளினர்ஸும்' அவரது டுப்ளின் மக்களைப் பற்றிய கதைகளாக இருக்கின்றன என்பது சின்ன இண்ட்ரொடக்ஷனில் புரிந்தது. நேற்றிரவு தூறிய மழைக்கிடையில் 'தி சிஸ்டர்ஸ்' என்ற ஒரே ஒரு கதை தான் படித்தேன். முழுதும் படித்து விட்டு பிறகு எழுதுகிறேன். 'டுப்ளினர்ஸும்', ஏறத்தாழ சுயசரிதமான 'A Portrait of the Artist as a Young Man ' படித்து வைத்துக் கொண்டு தயாராவது, ஜாய்ஸின் மேக்னம் ஓபஸான 'உலிஸஸை' எதிர் கொள்கையில் கொஞ்சமேனும் உதவும் என்பதை சிலர் ஒத்துக் கொள்கிறார்கள்.

கரம் அமுதாவின் வெண்பா பதிவில் இட்ட ஒரு வெண்பாவை இங்கே ஒரு பதிவுக்காக எழுதி வைத்துக் கொள்கிறேன். 'உய்வதும் வாழ்வா உணர்.' என்று முடியுமாறு வெண்பா கேட்டிருந்தார்.

ரோட்டோரம் தண்ணிபோட்டு போனாரு முன்சாமி
'ஊட்டுலசொல் லிக்கினியா?' பஸ்காரர் - கேட்டாரு.
மெய்மறந்து நிற்கின்ற முன்சாமி, இப்படி
உய்வதும் வாழ்வா உணர்.

ணில்மாமா, கண்ணன், எழிலோவியம், அல்வா, கங்கணம், சித்திரக்குள்ளன், சோலைவனம், நங்கை, பேரொலி, லண்டன் முரசு, புள்ளி துளிப்பாவிதழ், டமாரம், சிவாஜி போன்ற சென்ற நூற்றாண்டின் ஆரம்பத் தமிழ்ப் பத்திரிக்கைகளைப் படிக்க வேண்டுமா..? பொள்ளாச்சி நசன் 'தமிழம்.நெட்' தளத்தில் இவற்றோடு இன்னும் பல பழைய நூல்களை மின்னூல் வடிவில் சேகரித்து வைக்கிறார்.

தமிழம் வலையில் நாள் ஒரு நூல் பகுதியில் வைக்கப்படுபவை அனைத்துமே இலவசமாக நம் மக்கள் வலை இறக்கிப் படிக்கவும், பயனபடுத்தவும் தான்.

தமிழில் வெளி வந்த அனைத்து நூல்களையும், இதழ்களையும் பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு இலவசமாக, எளிமையாகக், கிடைக்கும் வகையில் கொடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

இந்த வகையில் உதவும் அனைவரையும் நான் அன்போடு வணங்குகிறேன்.


என்கிறார். இவரை நான் மரியாதையோடு வணங்குகிறேன்.

நாள்-ஒரு-நூல்.

ரொம்ப நாளாகத் தேடித் தேடி ஒரு நல்ல தளம் கண்டுபிடித்தேன். பார்க்கின்ற, யதேச்சையாக கேட்கின்ற ஆங்கிலப் பாடல்களை இலவசமாக இறக்கிக் கொள்ள! எங்கெங்கோ தேடியும் கிடைக்காத 'சினிமா பாரடைஸோ' தீம் இசை இங்கு தான் கிடைத்தது.

Akon - Lonely ::

- - akon - lonely
Found at bee mp3 search engine


இங்கே :: தேனீ கேட்கும் இசை.

ங்கள் அலுவலகம் இருக்கும் பில்டிங் வாசலில் ஒரு பெண் இப்படி நின்று கொண்டிருந்தால், எழுத்துக்கள் ஏன் இவ்வளவு கிளுகிளுப்பாய் வராது...?

சிறுகதைப் போட்டியாளர்களுக்கு ஓர் உதவி!

சிவராமன் என்ற புனைபெயர் வைத்திருக்கும் பைத்தியக்காரன், அதிகாரத்தின் உரையாடலைத் தகர்க்கும் உத்தேசத்துடன் தொடங்கியிருக்கும் 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' என்ற மையமற்ற தொகுப்பு, கைக்காசைப் போட்டு ஒரு சிறுகதைப் போட்டி நடத்துகின்றது. 20 கதைகளுக்கு 30K தருகிறார்.

கோதாவில் குதித்து எழுதத் துவங்கும் முன்பாக, சிறுகதை பற்றியும், அதை எழுதுவது பற்றி அனுபவசாலிகள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றும் கொஞ்சம் தெரிந்து கொள்வது அதிகாரத்தின் உரையாடலைச் சுக்கு நூறாக உடைத்து நொறுக்கி ஊதித் தள்ளிவிடும் என்பது கார்க்கி மேல் சத்தியமாதலால் ('பேட்டி என்பது பலகாரத்தைத் தின்று கொண்டே உரையாடல் அல்லவா?' எனக் கேட்கும் அர்ஜூனனின் கேள்விக்கு கிருஷ்ணன் சொன்ன பதில் என்னவாக இருக்கும்?), சில கண்ணிகள் ::

ஜெயமோகன் சொல்கிறார் ::

சிறுகதையில் என்ன நடக்கிறது?
சிறுகதை ஒரு சமையல்குறிப்பு

யெஸ்.பாலபாரதி சொல்வது ::

ஒரு நல்ல சிறுகதை எழுதுவது எப்படி?

திண்ணையின் இலக்கியக் கட்டுரைகள் பகுப்பில், சில நல்ல கட்டுரைகள் வரையறை செய்கின்றன.

சிறுகதை தியானங்கள் (மூலம் : கர்ட் வானகட்)
சிறுகதை - அதன் அகமும் புறமும் - சுந்தர ராமசாமி
அறிவியல் புனைவுகள் - ஓர் எளிய அறிமுக வரலாறு - அரவிந்தன் நீலகண்டன்
படைப்பிலக்கியத்துக்கு அச்சாரம் - இந்திரா பார்த்தசாரதி
'கதைச்சொல்லி'யும், கதையும் - கே. ராமப்ரசாத்.
சிறுகதை என்னம் களம் துரும்படியில் யானை படுத்திருக்கும் - எஸ்.ஷங்கரநாராயணன்
கதை சொல்லுதல் என்னும் உத்தி - தேவமைந்தன்

வே.சபாநாயகம் ஒரு 40 பேரின் குறிப்புகளைத் திண்ணையில் தொகுத்திருக்கிறார். என்ன சொல்கிறார்கள் கீழ் வருபவர்கள்..?

தேவன்
தி.ஜானகிராமன்
சுஜாதா
லா.ச.ராமாமிர்தம்
கி.சந்திரசேகரன்

அகிலன்
தி.ஜ.ரங்கநாதன்
கு.ப.ராஜகோபாலன்
இந்திரா பார்த்தசாரதி
த.ஜெயகாந்தன்

சி.சு.செல்லப்பா
க.நா.சுப்ரமண்யம்
புதுமைப் பித்தன்
அ.ச.ஞானசம்பந்தன்
ஜெயமோகன்

தொ.மு.சி.ரகுநாதன்
வி.ஆர்.எம்.செட்டியார்.
வாசந்தி
அசோகமித்திரன்
கி.ராஜநாராயணன்

மகாகவி பாரதியார்
எம்.டி.வாசுதேவன் நாயர்
அகஸ்தியன்
ந.பிச்சமூர்த்தி.
ந.சிதம்பரசுப்பிரமண்யம்

ரா.ஸ்ரீ.தேசிகன்
லியோ டால்ஸ்டாய்
மாப்பசான்
பி.எஸ்.ராமையா
விந்தன்

பேராசிரியர் கல்கி
ஹெப்ஸிபா ஜேசுதாசன்
அனுராதா ரமணன்
பிரபஞ்சன்
தாலமி

ச.து.சு.யோகி
கஸ்டவ் ஃப்ளாபேர் (Gustave Flaubert)
மாக்சிம் கார்க்கி
ராஜாஜி
சாலை இளந்திரையன்

இவர்களையெல்லாம் படிக்காமலும் அற்புதமான சிறுகதைகள் வருகின்றன. முடிந்த அளவிற்கு படித்துப் பார்க்கலாம்.

போட்டியில் கலந்து கொள்வனவற்றில் ஒரு நல்ல சிறுகதையாவது இவற்றைப் படித்துப் பார்த்து வந்தால், இப்பதிவிற்குச் செலுத்திய உழைப்பு வீணில்லை என்று மகிழ்வேன்.

***

இன்னும் கொஞ்சம், நாளை வேறொரு பதிவில் எழுதுகிறேன்.

***

போட்டிக்குத் தொடர்பு :
சிறுகதைப் போட்டி: 20 கதைகளுக்கு தலா ரூ. 1,500 பரிசு

பைத்தியக்காரன் : 9840907375
(சென்னை நம்பர்.)
sivaraman71@gmail.com