Saturday, May 17, 2008

மற்றுமொரு நீ!

ரவின் மென் குளிரின் கைகளைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருக்கிறேன், நடுக்கத்துடன். பதியன் போட்ட ரோஜாச் செடியின் புது மொட்டைப் பார்த்தபடி! மலராகுமா, முள்ளாகுமா தெரியாத பதிலைத் தருவிக்கும் கேள்வியைச் சுமந்து கொண்டு!

தன்னைச் சுற்றி ஒரு மண் வளையம் இட்டதையும் அறியாது, அதனைச் சுற்றி ஒரு மன வளையம் இருப்பதையும் தெரியாது, தென்றலின் மெல்லிய தாலாட்டிற்குத் தலையாட்டியது தாவரம்.

கோடானு கோடி கண்களுடன் ஆர்வமாய்ப் பார்த்துக் கொண்டிருக்கிறது கருவானம். எண்ணித் தீராத துளைகள் வழியே அனுப்பிக் கொண்டே இருக்கிறது பனித் துளிகளை!

இரகசியமாய், வெகு பத்திரமாய் வைத்திருக்கச் சொல்லி, கொடுத்து வைத்திருந்த மனமெனும் பீப்பாய், ஒவ்வொரு துடித்தலுக்கும் பீச்சியடிக்கிறது அமுதக் காதலை!

இலைகளின் இருளான இடுக்குகளின் வழியே கசிந்து கொண்டிருந்த குளிர்க் காற்று, கண்களின் துணை கொண்டு கண்டு கொள்கிறது, என்னை!

ரோஜாக்கள் அறியாது முள்ளின் வலியை!

No comments: