என் பயணத்தின் பிம்பங்கள்...!
கண்ணுக்குள் தீ இருந்தும் உன்னை எரித்துக் கொண்டு உறக்கமென்ன...?
Tuesday, February 19, 2008
இருவர் - இரு பாடல்கள்.
இ
ருவர் படத்தில் இருந்து, இரு பாடல்கள்.
Get Your Own Hindi Songs Player at Music Plugin
ஒ
ன்று தூய தமிழ் வரிகளுக்காகவும், பழைய பாணியில் ஒளிப்படுத்தியதற்காகவும் பிரபலமானது. இது போல் எழுத வேண்டும் என்பது என்னதான் பிட்ஸாவில் மூழ்கிய மனதினனானாலும், தமிழ் எழுதுபவர்களுக்குத் தோன்றாமல் இருக்காது. தேனில் பிழிந்த சுவைப் பலாச் சுளையை வெண் பாலில் நனைத்து ஊற வைத்து இனிக்க இனிக்க ரசிக்கச் சுவைத்தால், எப்படி தேவாமிர்தமாய் இருக்குமோ அத்தகைய இனிமையைப் பொழிகின்றது இசையில் நனைந்த செந்தமிழ்..!
ஆஹா! இத்தமிழை அறிவதற்கும், எழுதுவதற்கும் எத்துணை பேறு பெற்றிருக்க வேண்டும்! இது போல் எழுத முயன்று ஒரு மாதிரி கொணர்ந்த கதை
இங்கே
, தங்கள் பார்வைக்கு!
இத்தகைய வலுவும், வளமும் நிறைந்த மொழியில் பிறந்து விட்டு, நீர்த்த தமிழ் பேசிக் கொண்டும், எழுதிக் கொண்டும் இருப்பவர்களைக் காண்கின் வருத்தமே மேலிடுகிறது.
தாமரை நிறைந்த தேன் குடத்தை வைத்துக் கொண்டு தாங்க முடியாமல், தலை கவிழ்ந்திருக்குமாம். குளத்திலேயே வசிக்கின்ற தவளைக்கு அது தெரியாது. பூச்சிகளின் மேல் கண் வைத்து தாவிக் குதித்துக் கொண்டிருக்கும். எங்கிருந்தோ ஆயிரமாயிரம் தொலைவுகளுக்கு அப்பால் இருந்து வரும் தேனிக்கு மட்டுமே இந்தத் தேன் துளிகளை சுவைத்து இரசிக்கும் மனம் இருக்குமாம். பாவம் தவளை, அருகில் இருந்தும் அருமை அறியாத வண்ணம் வாழ்ந்து மடியும், பரிதாபம்..!
Get Your Own Hindi Songs Player at Music Plugin
ம
ற்றொன்று அருமையான கஜல் இசையின் மயக்கும் இராகத்தை வெளிக்காட்டியதற்காகவும் இனிமை மிகுந்த இசைக்காகவும் சிறப்பானது. ஜானகி அவர்கள் பாடியது போல் இருக்கிறது. 'சந்தியா' என்று தெரிகிறது. இவர் யார் என்று எனக்குத் தெரியவில்லை. மிக்க நன்றாய் உள்ளது.
இ
ரு பாடல்களுக்கும் இனிமை கூட்டுகின்றது குழலோசை...! கவனித்துப் பார்த்தீர்களானால் தெரியும் நீங்கள் எதையெல்லாம் மெலோடி , இனிமையான பாடல், காலங்கடந்தது என்று நினைக்கிறீர்களோ அவை அனைத்திலும் புல்லாங்குழலின் இசை கண்டிப்பாக இருக்கும். அக்குழலிசையில் மனதை வருடும் ஒரு மெல்லிய நாதம் மறைந்திருக்கின்றது. இந்த உண்மை அறிந்ததனால் தான் மாயக் கண்ணனும் குழல் நாயகன் ஆனான் போலும்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment