Saturday, June 14, 2008

ஆடிப் பாவைத் தலைவன்.

காதல், ஊடல், பிரிவு, கூடல், பசலை, அச்சம், நாணம், மடம் பயிர்ப்பு, உடல் மெலிவு, நலிவு, துயரம், தலைவன், தலைவி, கிழத்தி, காதற்பரத்தை, உவமை, உவமேயம் எல்லாம் அணி அணியாக அழகாக அலங்காரம் செய்திருக்கும் ஆசிரியப்பா பாடல்களால் அமையப்பட்டு இருக்கின்றன குறுந்தொகைப் பாடல்கள்.

சில நாட்களாக இவற்றை வாசித்து வருகிறேன். சில பதிவர்கள் குறுந்தொகைப் பாடங்கள் ஏற்கனவே நடத்தி இருப்பதாகத் தெரிகின்றது. (Google)வேறு வழியே இல்லை. எனக்கு பாடம் எடுக்கும் சாத்தியம், சத்தியமாக இல்லை. நமது களமான கதை சொல்லும் தளத்தில் குறுந்தொகையைக் கொண்டு வரலாமா என்று எண்ணியுள்ளேன்.

எல்லாப் பாடல்களுக்கும் கதை சொல்லுதல் என்பது அசாத்தியமே (எனக்கு). அவ்வப்போது சில பாடல்களுக்கு - கதை சொல்ல தோதான - மட்டும் சொல்ல நினைக்கிறேன். ஏதேனும் தவறு இருப்பின் திருத்திக் கொள்ள அறிவுரைகள் தரின் மகிழ்வேன்.

என்னிடம் எப்போதோ வாங்கிய புலியூர்க் கேசிகன் அவர்கள் உரை எழுதி, பாரி நிலையத்தால் வெளியிடப்பட்ட ஒரு நூல் இருக்கின்றது. மேலாடையும் அற்ற, கீழாடையும் அற்ற கவர்ச்சிக் கன்னி போல், முன் மற்றும் பின் அட்டைகள் இல்லாமல் வெறும் மேட்டராக மட்டுமே உள்ளது. குறுந்தொகைக்கு ஏற்ற அலங்காரம் தான். ;-)

அந்நூலை மட்டுமே ரெஃபரன்ஸாக கொள்கிறேன்.

****