Tuesday, July 14, 2009
என் Uniqueகோட்டு நன்றிகள்.
Updated :: 15.Jul.2K9, 12:53.
அன்பு தமிழ்ப்பறவை...
மிக வருத்தமாயிருக்கின்றது. கதைகளைப் பற்றிய ஒருவரது உண்மையான கருத்தைத் தெரிந்து கொள்ளவே இந்த சர்வேயை வைத்தேன். இதிலும் கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டுள்ளது எனும் போது, இதன் அர்த்தம் முற்றிலும் இறந்து போய் விடுகின்றது. எனவே நான் மகிழ்ந்ததற்கான காரணங்கள் இப்போது இல்லை. இந்தப் பதிவை அழித்து விடலாமா என்று யோசித்தேன். ஆனால ஒரே ஒருவராவது உண்மையான ஓட்டு போட்டிருப்பார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது. அவருக்காக பதிவை நீக்காமல் என் வருத்தத்தையும் கூடவே பதிவு செய்து கொள்கிறேன்.
பொதுவாக எனக்கு பத்திரத் தன்மைகள் குறைவான/இல்லாத ஓட்டளிப்பு முறைகளில் நம்பிக்கையில்லை. அத்தகைய நம்பிக்கை எற்படுத்தும் வகைகளில் தமிழ்ப் பதிவுலகம் நடந்து கொண்டதில்லை. என் பதிவுகளில் அத்தகைய ஓட்டளிப்பு பட்டன்களும், திரட்டி dependencyகளும் வைத்துக் கொள்வதில்லை என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இதனால் இழக்கின்ற ரீடர்கள் எண்ணிக்கை மிக அதிகம் என்றாலும், நல்ல படைப்பு வாசகர்களை இழுத்து வரும் என்ற நம்பிக்கை மலையளவு இருக்கின்றது.
இனிமேலும் ஓட்டளிப்பு எதிர்பார்த்தல்களை வைத்துக் கொள்ள வேண்டாம் என்ற நம்பிக்கை அளித்த உங்கள் செயலுக்கு நன்றிகள்.
அன்புடன்,
இரா.வசந்த குமார்.
Subscribe to:
Posts (Atom)