தலைவரின் பாடல்கள் பல வாழ்வியல் முறைகளையும், நெறிகளையும் நமக்கு எடுத்துக் காட்டும். அந்தப் பலவற்றுள், எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது.
அவரது பாடல்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொண்டு, அதை மட்டும் பின்பற்றி நடந்தால் வாழ்வில் போதும் என்று நான் நினைக்கின்ற ஒரே பாடல் இது தான்..!
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்!
இவர் போல் யாரென்று ஊர் சொல்ல வேண்டும்...!
Thursday, July 12, 2007
Wednesday, July 11, 2007
Acronym.
இவை, ஒரு காலத்தில் ஆணி இல்லாத நேரத்தில் எழுதியவை. சும்மா பாருங்க..!
TI :
Thinking Intelligible.
MOTOROLA :
Management of Ordered Technical Offices Rolling On Legitimate Assignemnts.
SHARP :
Shrinking in Heaven by Allotting Regular Projects.
TOSHIBA :
Tiny objects within Small Hand, Industrial rule Breaking Appliances.
SAMSUNG :
Smoothly Affliate Maker and Sponsoring Unavoidable National Game.
(அப்போது, சாம்சங் ஸ்பான்சரில் ஒரு கிரிக்கெட் தொடர் நடந்து கொண்டிருந்தது.)
PHILIPS :
Processing Highly Intellectual and Lateral Included Product Sessions.
ANALOG :
Acronym of a Narrative of Ancient Leader Offering Gimmicks.
HP COMPAQ :
Highly Proclaimed Computer but Operated with Major Possibility of Anytime Queries.
MICROSOFT WINDOWS 95 :
Mega International Comapny Rendering Operating Systems with Obscure Functionality but Think, Without It Nobody could Do Official Works Since 95.
(எனக்கே ரொம்ப பிடிச்சது, இது..!)
LINUX :
Lovely Immediate Neighbour for Users of X-windows.
INTEL :
Introducing New Technologies in Electronics Labs.
or
Involved in Naming of Trends Emanating Logically.
PENTIUM :
Processor Emerged from Narrow Truthfull Intel's Unobstacled Mind.
ORACLE :
Occupying and Ruling Application Comapnies by Lending Essentials.
TDK :
Traditional but Drowning Kickoff.
TCS : Temporary Comapny, then Switchover.
INFOSYS :
Indian Financial Office Satisfies Yielding Stockholders.
என்ன, இதுக்கே கேரடிச்சு போனா எப்புடி..? இன்னும் ஸ்டோரிஸ் எல்லாம் வருதுல்ல..!
TATA CONSULTANCY SERVICES :
That was Atomic Time.
A Coffee Ordered N Set Up Launch Time of Atombomb.
New Coffee, Yeah..!
Some ஈs R Vanishing In Captain's Eyes.
Switchpressed.
COGNIZANT TECHNOLOGY SOLUTIONZ(S) :
Cool Ohio.
Going Natural Island
Zebras Are Naturally There.
Turning. Elephants CHatting, N Oh with LOvely Girl You.
Suddenly, One Lion. Usher Took (me).
I cry. Oh! Natural Zoo! (Scenery)
இது என்ன கதைனு எனக்கே புரியல தான்..! ஹ்ம்.. என்ன பண்றது. நீங்களும் படிச்சிட்டீங்க. யாராவது அர்த்தம் சொல்லுங்கப்பா..!

அருவிப்பூ..!
மேல் வானில் திரண்டு வரும் கரு மேகங்களே! கீழ் வானில் கிளைத்தெழும் வெண் மின்னல்களே! பச்சை நூலாடை விரித்த காவிரிக் கரையோரங்களே! வெள்ளைப் பருத்தியாய் வானம் விரிக்கும் கொக்குக் கூட்டங்களே! அவளைக் கண்டதுண்டா, நீங்கள்?
விண்ணும், மண்ணும் கம்பிக் குச்சிகளால் கரம் கோர்த்துக் கொண்ட, ஒரு மழைநாளின் மாலையில் தான் பார்த்தேன்.
முன்பனிக்காலப் பின்னிரவில் ஒரு மெல்லிய மேலாடை போல், பெய்து கொண்டிருந்த வெண் பனிப்பரப்பின் வழியே, முழுப் பெளர்ணமியைப் பார்த்ததுண்டா? எனில் அவள் முகத்தை நீங்கள் பார்க்கும் அவசியமில்லை.
மலைத்தொடர்களின் அடிவாரச் சரிவுகளில், அடர்ந்து வளர்ந்திருக்கும் நெடுநெடு மூங்கில் மரங்கள், மேலைக் காற்று மேனி தீண்டுகையில், வளைவதைக் கண்டதுண்டா? எனில் அவள் புருவங்களை நீங்கள் பார்க்கத் தேவையில்லை..!
இருள் வானெங்கும் மிதந்தோடும் வெண்ணிலாவைக் கண்டிருப்பீர்கள்! வெண்பரப்பில் உருண்டு ஜதிபாடும் கருநிலவைக் கண்டதுண்டா? இன்றெனில் அவள் கண்களை நீங்கள் பார்த்ததில்லை போலும்!
இறக்கைகளே இருகைகளாகப் பறக்கும் சின்னஞ்சிறு குருவிகளின் கீச்கீச்சைக் கேட்டதுண்டா? அவள் பேசுவது கூட அப்படித் தான் இருக்கும்.
செவ்விள மாதுளை மொட்டுகளைப் போர்த்தியிருக்கும் சிவந்த முரட்டுத் தோலைச் சுவைத்ததுண்டா? நல்லவேளை, அந்த இதழ்கள், அது போல் சிவந்திருப்பினும், அவை போல் கடினமில்லை.
மென் மஸ்லின் காஷ்மீர் துணிகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி, மிருதுவாக்கி, முத்தமிட்டதுண்டா நீங்கள்? மிட்டேன். அவள் அவற்றை உதடுகள் என்றும் கூறுவாள்!
வெண்மணி முத்துக்கள் கோர்த்த மாலைகள் இரண்டு ஒளி வெள்ளம் தெறிப்பதை இரசித்ததுண்டா? அவள் சிரிக்கையில் த்திருக்கிறேன்.
பச்சைப் பெரியவர்கள் பார்த்திருக்க, குட்டிச் செடிச் சிறுவர்கள் தலையசைக்க, மென் தென்றல் தடவிச்ச் எல்லும் பூங்காக்களில் சிறுவர்கள் சறுக்கு விளையாடுவது போல், அவள் பின் கழுத்தின் சரிவில் வியர்வைத்துளிகள் சறுக்கி விளையாடும் போதும், நான் அங்கு சிறுவனாகிறேன்.
வெண் பஞ்சுக் குன்றுகள் இரண்டை அருகருகே பார்த்ததுண்டா? வேண்டாம், நீங்கள் பார்க்கவே வேண்டாம்.
அவள் ஓர் அருவிப்பூ! குருவிக் குரல்! சருகுக் கும்பலின் நடுவே பூத்திருக்கும் சாமந்திப் பூச்சரம்! உருகி உருகி ஓடுகின்ற வெண்பனித் துளி! என்னை உருக்கி உருக்கிப் பார்க்கின்ற எரிமலைக் கரம்!
மென் சோகங்களைத் தூண்டுகின்ற குழலோசை! என் யோகத்தைத் தீண்டுகின்ற நிழல் பாஷை!
பேசிப் பேசிக் கொல்கின்ற சொல்லின் பெரு ஆழி! என்னைப் பேசாமல் வெல்லுகின்ற மெளனப் பேரூழி...!
Tuesday, July 10, 2007
மாலை நேர மயக்கம்..!
கீழ்வானின் எல்லைப்புறங்களில் பெருத்த கரும்பூதங்களாய் மேகங்கள் காட்சியளித்தன. தூரத்தில் பெருமழை பெய்து கொண்டிருப்பதை, தெளிவற்ற ஒரு புகைப்படம் போல் தெரிந்த, ஈரப் பொழிவு, தொலைவின் ஒற்றைக் குயிலின் ஓசையோடும், குளிர்ந்த காற்றின் வாசத்தோடும் தெரிகின்றது.
படிகளை எல்லாம் மீறி, கரைகளைத் தொட்டு ஓடுகின்ற காவிரியின் கரையில் நின்று கொண்டிருந்தேன். மந்தமான மதியப் பொழுதின் மயக்கமான பகல், இலேசான சூடு கலந்த, காற்றில் நதியை அசைத்துக் கொண்டிருந்தது.
பெயரறியா, உறவறியா பறவைக் கூட்டமொன்று அவ்வப்போது எழும்பி, எழும்பி பறந்து கொண்டிருந்தது.
அருகின் மயானத்தின் இறுக்கி மூடிய பச்சை நிறக் கம்பிக் கதவுகள், பயமுறுத்துகின்ற வாழ்வின் நிஜமுகத்தை மறைத்து, இறுக்கமாய் இருக்கின்றன.
கதவுக்குக் கட்டுப்படாத பிணப்புகையொன்று மேடையின் கூரையையும் தாண்டி மேலெழுந்து மறைகையில், வாழ்கின்ற வாழ்வைப் பற்றின வேதனையொன்று என் கண்களில் நிழலாடுகின்றது.
மாயை! மாயை! என்று உளறிச் சென்ற வார்த்தைகளின் வரிகளில், வரிசை கட்டி நிற்கின்ற வருத்தங்கள் நெஞ்சில் வந்து வந்து செல்கின்றன.
மழை நெருங்கி வந்து கொண்டிருக்கின்றது. உள்நோக்கி உற்றுப் பார்த்தால் உறுத்தும் உள்ளதெல்லாம் அசிங்கம்! ஓரளவுக்கு மேல் ஒதுங்கிக் கொள்! தத்துவங்களையெல்லாம் தருவது போல் பாசிபடர்ந்த பாறைகள், சிக்க வைக்கும் பச்சைத் தாவரங்கள்,இடமறியா சுழல்களை மூடியபடி நகர்ந்து கொண்டிருக்கின்றது நதி!
மெல்ல மெல்ல இருள் கவிழ்ந்து வருகின்றது! சில்வண்டுகளின் ரீங்காரம் அதிகமாகின்றது. சில்லென்ற துளிகள் சடசடவென்று பெரிதாகின்றன!
இருளின் மழையில், கடைகளின் கூரைகளிலிருந்து ஒழுகும் தாரைகளின் வேகத்தில், சின்னச் சின்னக் குழிகளில், பூமியே பால்லாங்குழி மேடையாகின்றது.

எழுதியது : 2004-ல் ஏதோ ஒரு நாள். குறித்து வைத்துக் கொள்ளவில்லை.
Monday, July 09, 2007
அசத்திப்புட்ட புள்ள...!
ஆண் : நெல்லறுக்க வந்த போது
நெஞ்சறுத்து போன புள்ள!
பருத்தி பறிக்க வந்து
பறிச்சதென்ன என் உசுர!
பெண் : மதுர மல்லி வாங்கித் தந்து
மனசெடுத்துப் போனவரே!
மத்தியான நேரம் பார்த்து
மணம் பேச வந்தீரா?
ஆண் : மணம் பேச மனை செல்ல,
மாமனில்லை, மாமியில்லை!
மகராசி ஒம் முகம் பார்த்து,
மாலை மாத்த ஓடி வந்தேன்!
பெண் : ஆளப் பார், ஆசையப் பார்,
அழகான நெனப்பப் பார்!
அலையற மனசக் கொஞ்சம்
அடக்கியாளற வழியப் பார்!
ஆண் : அடியாத்தீ சொல்லப் போற
அறிவுரையாத் தள்ளப் போற!
சொல்லு கொஞ்சம் பாப்போம், உன்
சொல்லக் கொஞ்சம் கேட்போம்!
பெண் : உம்மளவு அறிவுமில்ல,
ஒலக்கைக் கொழுந்துமில்ல,
அழகா நான் சொல்றதெல்லம்,
அய்யனாருசாமி அருளே!
ஆலமரம் அரசமரம்
அடுத்திருக்கும் திண்ணையோரம்
ஆடுற ஆட்டமெல்லாம்
அறுத்தெறியச் சொல்றேன்!
கையில மல்லியப்பூ, கலர்கலரா சட்டை,
கழுத்துல புலிநகமும்,
கழத்தி விட்டு கழனியில
கால் வைக்கச் சொல்றேன்!
குந்திக் குந்தித் தின்னாக்கா
குன்றுபணம் கரைஞ்சோடும்!
குன்றிமணி சேத்தாலும்
குனிஞ்சுநிமிரச் சொல்றேன்!
சொந்தமா ஒரு முடிச நீ
செதுக்கி வெக்க வேணும்! ஒவ்வொரு
செங்கலிலும் உன் ரத்தம்
செழிச்சிருக்கச் சொல்றேன்!
அப்படியொரு குடிச
ஆசயாக் கட்டிவிட்டு
அத்த மகளக் கேளு,
ஆரு தடுப்பா, பாத்துக்கலாம்!
ஆண் : அழகழகா வார்த்த வச்சு
அன்பால பூசி
அத்தான் மனசுல ஏத்தி,
அசத்திப்புட்ட புள்ள!
எழுதியது : 19 - MARCH - 2004.
(On the way to Bangalore)
நெஞ்சறுத்து போன புள்ள!
பருத்தி பறிக்க வந்து
பறிச்சதென்ன என் உசுர!
பெண் : மதுர மல்லி வாங்கித் தந்து
மனசெடுத்துப் போனவரே!
மத்தியான நேரம் பார்த்து
மணம் பேச வந்தீரா?
ஆண் : மணம் பேச மனை செல்ல,
மாமனில்லை, மாமியில்லை!
மகராசி ஒம் முகம் பார்த்து,
மாலை மாத்த ஓடி வந்தேன்!
பெண் : ஆளப் பார், ஆசையப் பார்,
அழகான நெனப்பப் பார்!
அலையற மனசக் கொஞ்சம்
அடக்கியாளற வழியப் பார்!
ஆண் : அடியாத்தீ சொல்லப் போற
அறிவுரையாத் தள்ளப் போற!
சொல்லு கொஞ்சம் பாப்போம், உன்
சொல்லக் கொஞ்சம் கேட்போம்!
பெண் : உம்மளவு அறிவுமில்ல,
ஒலக்கைக் கொழுந்துமில்ல,
அழகா நான் சொல்றதெல்லம்,
அய்யனாருசாமி அருளே!
ஆலமரம் அரசமரம்
அடுத்திருக்கும் திண்ணையோரம்
ஆடுற ஆட்டமெல்லாம்
அறுத்தெறியச் சொல்றேன்!
கையில மல்லியப்பூ, கலர்கலரா சட்டை,
கழுத்துல புலிநகமும்,
கழத்தி விட்டு கழனியில
கால் வைக்கச் சொல்றேன்!
குந்திக் குந்தித் தின்னாக்கா
குன்றுபணம் கரைஞ்சோடும்!
குன்றிமணி சேத்தாலும்
குனிஞ்சுநிமிரச் சொல்றேன்!
சொந்தமா ஒரு முடிச நீ
செதுக்கி வெக்க வேணும்! ஒவ்வொரு
செங்கலிலும் உன் ரத்தம்
செழிச்சிருக்கச் சொல்றேன்!
அப்படியொரு குடிச
ஆசயாக் கட்டிவிட்டு
அத்த மகளக் கேளு,
ஆரு தடுப்பா, பாத்துக்கலாம்!
ஆண் : அழகழகா வார்த்த வச்சு
அன்பால பூசி
அத்தான் மனசுல ஏத்தி,
அசத்திப்புட்ட புள்ள!
எழுதியது : 19 - MARCH - 2004.
(On the way to Bangalore)
வாழ்த்து மடல்!
பரிசாய் என் தமிழ் தான் தரமுடியும்,
தரிசாய் என் கரங்கள் தற்போதைக்கிருப்பதால்!
புகழொளி பட்டுத் திருமேவும் கதிரின்
திகழொளி பட்டுத் திரை வானெங்கும் தித்தித்திட,
வள்ளித் தலைவன் வாசமலர் சூடிநிற்ப,
வெள்ளிக்கிழமை துணை சேர்ந்தாய், வாழி!
நாதசுரம் மேளமெல்லாம் நல்லோர்தம் ஊதிநிற்ப,
வேதமுறை பட்டரெல்லாம் வேண்டும் முறை ஓதிநிற்ப,
கூதலுற்ற காற்றுவந்து கூரையெங்கும் கூடுகட்ட,
பாதவிரல் தரைதேய்ப்ப பாங்குடன் நிற்கின்றாய், வாழி!
சுற்றி நிற்கும் பேரதனால் சுற்றமாயினர்,
உற்ற நண்பர் உறவினர் உவந்து நிற்பனர்,
பெற்ற நேரமெண்ணி அம்மை வாழ்த்திநிற்ப,
உற்றவனின் மணிவிரலில் விரல் கோர்த்தாய், வாழி!
தீவலம் வரும்போது திருமகனின் விரல் பிரியாய்,
நீவலம் வருகின்ற மாமாவின் மனம் பிரியாய்,
சேர்வளம் சேர்கின்ற செழும்வாழ்வு பிரியாய், உங்கள்
பேர்வலம் வரச்செய்யும் பிள்ளைகள் பெறுவாய், வாழி!
ஒருபாதி பெற்று, ஓருயிராய் நின்றாள் அன்னை,
திருமகளோ நாரணனின் துணையாய் நின்றாள்!
தருவாய் உன் அன்பையெல்லம் கற்பகத்
தருவாய் மனம் சேர் மன்னன் மேல், வாழி!
'வாழ்த்துதற்கு வயது வேண்டும்', வயதாகிப் போன மொழி!
வாழ்த்துதற்கு மனம் போதும், வந்து நிற்க மாட்டாமல்,
வாழ்த்த வந்துள்ளேன், வாழி வாழி பல்லாண்டு,
வாழையடி வாழையென்று வாழி வாழி பல்லாண்டு!
எழுதியது : 05 - DEC - 2003.
என் இருள் காலங்களில் ஓர் அக்காவின் திருமணம் நடந்தது. வெட்கத்தினால் நான் மண விழாவிற்குச் செல்லவில்லை. பின் ஒரு நாள் அவர்களைப் பார்க்கச் சென்று, அப்போதும் அவர்களுக்கு அன்பளிக்க ஒன்றும் கையில் இல்லாததால், வற்றாத அன்னை நதியாய்த் தமிழில் எழுதிக் கொடுத்தக் கவிதையிது!
இப்போதும் படிக்கையில்... ஏதேதோ நினைவுகள்...!

Labels:
காதல் தொடாத கவிதை.,
ஞாபகம் வருதே.
இவன்..!
மழை என்பது அவனுக்குக் கழுத்து வரை இறுக்கிக் கொள்ளும் போர்வை போல ! அடித்துப் புரட்டி, அசைத்துப் பார்த்து, சூறாவளியாகச் சூறையாடி விட்டு, இடியால் உடுக்கடித்து விட்டு, மின்னலால் மிரட்டி விட்டு, அமிழ்ந்தோடும் அட்டகாச மழையைத் தான் அவன் சொல்கிறான்!
சுழித்தோடும் நதியின் நுரைகளில் எல்லாம் தூரக் கவிஞர்களின் ஓலைகளின் ஓசைகளை அவன் கேட்கிறான்!
அழுக்குகளை அகற்றி விட்டு, அழகாக்கிச் செல்லும் அமிழ்து மழையின் மடியில் அமர்ந்து கொள்ள, அவன் விரும்புவான்! வெயில் புழுக்கத்தில் வெந்து போகும் அவன், மழையின் மடியிலேயே மடிய விரும்புவான்! நரம்புகளை எல்லாம் நனைத்துச் செல்லும் மழையின் கரங்களைப் பிடிக்கத் துழாவுவான்!
சாரல்களின் ஸ்பரிசங்களில் சங்கமிக்கத் துடிப்பான்! சப்தங்களின் சாரங்களிலும், சகதிகளின் ஈரங்களிலும் அவன் சங்கீத சஞ்சரிப்பை உணர்வான்! குடை நனைத்து, உடல் நனைக்கா மனிதர்க்காகப் பரிதாபப்படுவான்!
பூந்தூறல் தூவும் புதுமழையைப் போற்றுவான்! பேய்மழையின் பெய்தலுக்கு நனைந்து கொண்டே நன்றி நவில்வான்! உளறல்களின் உச்சத்திலேயே உரையாடும், உறவாடும் அவன் உதடுகளுக்கு உறை போடும் மழையை மெளனத்தாலேயே மதிப்பான்!
பூமி தழுவிப் புதிதாக்கும் மழை நேரங்களில் தான் அவன் உயிர்ப்பான்! வெயில் கண்ட போதெல்லாம் வெறுப்பான்! பொங்கிப் பெருகும் புது வெள்ளத்தின் மஞ்சள் மாலைகளில் மனம் தொலைப்பான்!
மெளனமாக அதன் பார்வைப் பொழிவில் நனைவான்! நனைந்து, அதில் கரைந்து, கரைந்து காற்றில் கலப்பான்! சிதறிச் செல்லும் சிறுதுளிக்குச் சிறகசைத்துச் சிலிர்க்கும் சிட்டுக் குருவியாய் உடல் நினைப்பான்! சந்தோஷ மழை நேரங்களில் சண்டைகளை வெறுப்பான்!
புகைவண்டிகளால் புண்பட்ட சாலைகளின் புன்னகைத் தோழி மழையே! பாதைகளின் கண்ணீரைப் புகையாக்கித் தீர்ப்பாள்!
சாலைகளைத் தழுவிக் கொள்வாள்! கழுவிக் கொள்வாள்! பின் நழுவிச் செல்வாள்!
அவனது வேனில் நேர உளறல்களுக்கும் நிறமூட்டும் நிறமி மழை! சிரிப்பூட்டும் சிறுமி! அவன் எழுத்துக்கெல்லாம் மழையே தாய்!
மழை அணுகும் போதெல்லாம், அவன் மனதுக்குள்ளே மசக்கை! பிரசவிக்கின்றது பேனா, இதைப் போல்!
அவன் கனவுகளில் மழை வரும்! மழை வருகையிலெல்லாம் அவன் கனவு காண்கிறான்!
அவன் - இவன்...!

எழுதியது : 04 - JUNE - 2003.
தேவதையைக் கண்டேன்.
பறக்கும் பறவையின் விழும் சிறகின் ஒலியும் கேளாத மதியப் பொழுதின் உறக்கத்தின் கனவுகளில் வரும் தேவதை, தூரத்து ஒளிப் புள்ளியை ஒற்றி வைத்த நெற்றியினள். காஷ்மீர் மஸ்லினில் ஜொலிக்கும் ஆடையினள்! ஒயிலாய் நின்ற ஒளிவெள்ளம் அவள்! அருகினில் நெருங்கினள்!
படுத்திருந்த தலையணை ரோஜாப்பூக் குவியலானது! உடுத்தியிருந்த உடைகள் உருவிக் கொண்டு போக, மேகப் பொதிகளில் இருந்து ஆடை நெய்து அணிந்து கொண்டேன்! தூக்கக் கலக்கத்தைத் துரத்தி விட்ட உற்சாகம் பெற்றுக் கொண்டேன்!
தொழுது நிற்கையில் பாதம் கவனித்தேன்! பனிப்புகையில் காலணிகள் அணிந்திருந்தாள்!
"எங்கே உன் காலணிகள்..?" கேட்டேன்.
"ஒன்றை சிண்ட்ரெல்லா கொள்ள, மற்றொன்று மாட்டியதோ இளவரசன் கையில்..!" என் மேல் பெருமூச்செறிந்தாள்.
"எனக்கு ஏதேனும் பரிசு தருவாயா?"
"செல்வமெல்லாம் நேர்மையான விறகுவெட்டிக்குக் கொடுத்த கோடரிகளில் போய் விட்டது!"
"கொடுப்பதற்கென்றே பிறந்தவர்களோ நீங்கள்..?"
"எடுப்பதற்கென்றே நீங்கள் பிறந்தது போல்..!"
"கனவுகளில் மட்டும் தான் காட்சியளிப்பீர்களோ?"
"நிஜத்தில் வந்தால் நிறமாவது மிஞ்சுமா..?"
"எல்லா தேவதையும் நீ தானோ..?"
"ஏன், தேவதைகளிலும் ஜாதிகள் நினைத்தீரோ..?"
பதில் தெரியாமல் விழித்து விட்டேன்.
எழுதியது : 20 - FEB - 2004.

Subscribe to:
Posts (Atom)