Friday, June 11, 2010

Chinese Bamboo Flute + Piano.

Wednesday, June 09, 2010

நாதன் தாள் வாழ்க!



னிமுடி மீதில் பிறைமதி ஒளிர
நனிநதி பொங்கி நழுவழி சடையில்
துணியிடை அங்கித் தோலுடை மிளிரத்
தனியெனத் திகழும் தென்திசை குருவே!

ஒருவிழி முகத்தில் ஒளிதர திறந்து
இருவிழி பெருக்கும் இமைநிறை அருளே!
திருமொழி யாவும் திகட்டிட கலந்த
கரும்பிழிச் சாறில் கனிந்திடும் செவியே!

நான்மறை பொழியும் நாதனின் செவ்வாய்
தானுரை செய்தல், தேனுறை பாலில்
வான்திரை விலகி வாடிய பயிர்க்கு
ஊன்நிறை மாமழை ஊற்றினாற் போலே!

விண்ணவர் கடைந்த விடத்தினை எடுத்து
உண்டதும் இடத்து உமைகரம் தடுக்க
கண்டமேல் படர்ந்த கருநிற இடத்தை
கண்டதும் கழலும் கண்களின் பாவமே!

அணிவதும் அரவம்; அருள்வதும் அன்பே;
பணிவதுன் பாதம்; பதிப்பதும் பட்டை;
தணிவதும் தாபம்; தருநிழல் தருவே;
கனிவதும் மனமே; கரம்விடாய் இறையே;

***

Image Courtesy :: http://vamsikarra.files.wordpress.com/2008/03/shiva01.jpg