Thursday, December 31, 2009

வாழ்த்திய வாழ்த்தொலி போய்...புத்தம் புதிய ஆயிரம் ஆண்டுகளின் முதல் பத்தின் கடைசிப் பெளர்ணமியில் என்னைச் சுற்றி இலேசான குளிர் பறக்கிறது. பின்புறத் தோட்டத்தில் விரிந்த வாழை இலைகளில் நிலவொளி வெள்ளம் பாய்ந்துச் சேகரமாகி, நடுப் பட்டையில் ஓடி நுனியில் சொட்டுகின்றன. செதுக்கிய இலைகளில் ஒளிக் குளங்கள் தேங்கிக் காற்றுக்குத் தத்தளிக்கின்றன. தென்னங் கீற்றுக்கள் சரிந்த வாட்களாகிக் கூர்மைகளில் வெள்ளி பூசியிருக்கின்றன. கொஞ்சம் சாய்ந்த ஒற்றைப் பலா மரத்தின் ஒரு 'சிறு காம்பில் தொங்கும் பலாக்கனியை' எறும்புகள் கீறியிருக்க, வெடித்ததில் மெல்லிய இனிப்பு மணம் காற்றில் சுகமாய்ப் பரவுகின்றது. வாசலொட்டிய சிற்றோடையில் குளிர்ந்த நீர் சலசலத்து ஓடுகையில், அசைந்தாடும் காதல் வடிவ இலைகளில் நீர்ச் சுட்டிகள் உள்ளங்கையில் பாதரசத் துளிகள் போல் மின்னுகின்றன. மதில் பக்கத்தில் பூத்திருக்கும் செம்பருத்திப் பூக்களுக்கும், பெயர் தெரியாத அந்த மஞ்சள் மலர்களுக்கும், இரவின் கரும் இடுக்குகளுக்குள் ஒளிந்து கொண்டு 'ட்ரூச்சு..ட்ரூச்சு..' எனச் சத்தமிடும் பூச்சிகளுக்கும், மழை வாசம் உணர்ந்தாலே 'கொர்ரக்...கொர்ரக்...'காய் உற்சாகக் கூச்சலிடும் சின்னத் தவளைகளுக்கும், கம்பி வேலி மேல் நின்று கொண்டு சின்னத் தலையை இப்படியும் அப்படியுமாகத் திருப்பித் துளிக் கண்களை இமைத்து, தன் துயர் நனைந்த இராக்காலக் கனவுகளைக் கூவும் வயலட் நிற வெல்வெட் சிறகு மைனாவுக்கும் நாளை புத்தாண்டு என்பது தெரியுமா?

ஆனால், நமக்குத் தெரியும்.தன் கடைசி மணிகளில் ஓடிக் கொண்டிருக்கும் இந்த கி.பி.2009 எனக்கு என்ன அர்த்தம் ஆகின்றது என்பதைக் கொஞ்சம் - கழுத்து வலித்தாலும் பரவாயில்லை என்று - திரும்பிப் பார்க்க விரும்புகிறேன்.

எழுதுவதைப் பொறுத்த வரை கொஞ்சம் வருத்தமும் நிறைய சந்தோஷங்களும் கலந்திருந்தன.

சென்ற வருடத்தை விட இந்த ஆண்டு பத்திக்குப் பாதி பதிவுகள் குறைந்து விட்டது என்பதில் வருத்தம் இருக்கின்றது. காரணமும் புரிகின்றது. கடந்த வருடத்தின் சந்தோஷ மனநிலை இந்த ஆண்டு முழுதுமே இல்லை. மென்பொருளாளனுகே ஆன பொருளாதாரப் பயங்கள், தனிக் கவலைகள் போன்றவை இருந்தன. எழுதுவதை முதன்மைப்படுத்தி, கவலைகளை நியூரான் குழப்பத்தின் இருளான பிரதேசங்களுக்கு அனுப்பி வைத்தேன்.


மகிழ்ச்சி பல காரணங்களால்!

செறிவான சில சிறுகதைகள் எழுத முடிந்தது.

மனையியல்.
கோடானு கோடி!
கிளி முற்றம்.
பொன்னி.
ஓர் உரையாடல்.
Blackhole..!

பயணக் கட்டுரைகள் எனக்கே பிடித்த மாதிரி நன்றாக வந்தன.

காவிரிக் கரையோரத்திலேயே...
சுதந்திர நாளில்...மதுரையில்..!
ஏப்ரலில் இருந்து மேக்கு ஒரு பயணம்!
பண்ணாரிக்குப் போனேன்.

உரையாடல் அமைப்பினர் நடத்திய சிறுகதைப் போட்டியில் இருபதில் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்ட ஒரு கதையை எழுதியதில் மற்றொரு மகிழ்ச்சி. பாஸ்டன் பாலா அதை முதல் மூன்றுக்குள் வைத்தது எதிர்பாராத இனிப்பு.

புதுக்கவிதை இயக்கம் தோன்றி ஐம்பது ஆண்டுகள் ஆகியதைக் கொண்டாடிய 'நவீன விருட்சத்தின்' செப்டம்பர் மாதக் காலாண்டு இதழில், யோசிப்பவர் மற்றும் அனுஜன்யாவின் சிறுகதைகளுக்கு இடையே நெருக்கிக் கொண்டு 'மாமா எங்க' கதையும் அச்சில் வந்தது. யோசிப்பவரின் ஆலோசனையின் படி அனுப்பி வைத்ததால், 'யுகமாயினி'யில் 'முதல் அறிவியல் புனைகதை' வெளியானது.

மும்பையில் இருந்து 'எதைப் பற்றியும் பற்றாமலும்' நவீனக் கவிதை எழுதும் 'யூத்' அனுஜன்யா, 'சுவாரஸ்யப் பதிவர்களில்' ஒருவனாக என்னையும் டிக் செய்தது ஆச்சர்யக் களிப்பை அளித்தது.

வலைச்சரத்தில் அ.மு.செய்யது என்ற பதிவர் 'காலத்தை வென்றவர்கள்' என்று இந்தக் கதைகளை வைத்துச் சொல்லியிருந்தது கூச்சம் கொடுத்தது. இவர் படிக்கிறார் என்பதே இவர் சொல்லித் தான் தெரிந்தது. இது போன்று எத்தனை பேர் சைலண்டாகப் படிக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

பிறந்த நாளுக்கு முன்னாள், நீல.பத்மநாபன் அவர்களைச் சந்தித்து ஆசி பெற்று வந்ததையும், அடுத்த நாள் நாகர்கோயிலில் மீனாட்சிபுரத்திற்குப் போய் ஜெயமோகன் அவர்களைப் பார்த்து, ஒரு கிட்கேட் மட்டும் கொடுத்து, மதிய உணவுடன் ஆலோசனைகளையும் பெற்று வந்ததையும் மறக்க முடியாது.

தொழில்நுட்பக் கட்டுரைகள் எழுத வேண்டும் என்று மிக நாட்களாக விருப்பம் இருந்தது. இயற்பியல் கட்டுரைகள் எழுதி வந்தாலும், அவை அறிவியல் என்ற வகையின் கீழ் வரும். ஏற்றாற்போல் சிங்கைப் பதிவர்கள் அமைப்பு 'மணற்கேணி - 2009'ல் கட்டுரைகள் கேட்க, பணியாற்றும் துறையின் அடிப்படைகளை முடிந்த அளவுக்குத் தமிழ்ப் படுத்தி அனுப்பி வைத்தேன். முடிவுக்காகக் காத்திருக்கிறேன். தொடர்ந்து எழுத வேண்டும்.

இந்த ஆண்டின் மிகப் பெரிய சாதனையாக கருதுவது, நேனோரிமோ. முதன் முதலாக ஆங்கிலத்தில் ஒரு நாவல் எழுதும் சவாலை எனக்குள்ளேயே ஏற்படுத்திக் கொண்டு, எழுத உட்கார்ந்தேன். செப்டம்பர் மத்தியில் இருந்து ஆரம்பித்து, அக்டோபர் மாதம் முழுக்கவே ஒன்றும் க்ரியேட்டிவாகத் தோன்றவேயில்லை. ஜெயமோகன் அவர்களிடம் கேட்ட போது, 'அவ்வளவு தான். சரக்கு காலி' என்றார். 'சரிதான்' என்று கொஞ்சம் துக்கத்தோடு இருந்தேன். 'அது ஒரு பனித்திரை' என்று காட்டி மீண்டும் அடைத்திருந்த பாட்டில்களை நுரைகள் பீய்ச்சியடிக்கத் திறந்து விட்டது, நேனோ. என்.சி.சி. கேம்ப் அனுபவங்களைக் களமாக்கிக் கொண்டு எழுதத் துவங்க காதல்களும், மோதல்களும், கிண்டல்களும், சாகசங்களுமாக அந்த நாவல் அருமையாக வந்து கொண்டிருக்கின்றது.

Na-No-Wri-Mo.
NaNoWriMo.Update.1
NaNoWriMo.Update.2
NaNoWriMo.Update.3
NaNoWriMo.Update.4
NaNoWriMo.Update.5
NaNoWriMo.Update.6.Final

சில முயற்சிகள் குறைப்பட்டும் போயின. 'ஆகாயக் கொன்றை' என ஒரு குறுநாவல் எழுதத் துவங்கி மூன்று சேப்டர்களில் நிற்கின்றது. முடிக்க வேண்டும்.

என்னமோ நிறைய எழுதிக் கிழித்தவன் போல் சிறுகதை எழுதுவது பற்றிச் சில பதிவுகள் எழுதினேன். பாறைகளில் பதுங்கிய விதை போல் சில மனங்களில் ஒளிந்திருக்கலாம். மழை நுனி தொட்டதும் முளைக்கலாம். முதல் துளி விழும் நொடி தான் ரகசியம்.

சிறுகதைப் போட்டியாளர்களுக்கு ஓர் உதவி!
சிறுகதைப் போட்டியாளர்களுக்கு ஓர் உதவி!.2.
புதிய எழுத்தாளர்களுக்கு 11 யோசனைகள்.
நானும் எழுதுகிறேன் 10!

வருடக் கடைசியில் ஈரோடு பதிவர்கள் சங்கமம் மற்றுமொரு திருப்புமுனை. மேடையில் நூற்றுக்கும் மேலான இரட்டைக் கண்கள் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கையில் உள்ளங்கை வேர்க்காமல் பேச முடிகின்றது என்பதை அறிந்து கொண்டேன். அதற்கு முழுக் காரணமும், பேசுவதை முன்பே எழுதிக் கொண்டு சென்றது தான். எனவே பேட்டை மாறாமல் ஓட முடிந்தது. பேசிய உரையைப் படித்துப் பார்த்தால் ஒன்று தெரியும். அப்பட்டமான வாத்தியார் ஸ்டைல். அதற்காகவும் வாத்தியாருக்கு மேலும் சில நன்றிகள்.

இந்த ஆண்டு முழுதும் படித்தது என்று பார்த்தால் மிகக் குறைவு தான். வலைப்பக்கங்களைப் படிப்பதைத் தவிர, புத்தகங்கள் நிறைய படிக்கவில்லை. நம் நாட்டு விடுதலைப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு படைப்பு எழுதும் ஐடியா இருக்கின்றது. இது நம் எழுத்தாளர்கள் அனைவருக்குமே இருக்கும் என்று நினைக்கிறேன். பிரிவினை அத்தனை சம்பவங்கள் நிறைந்த உணர்ச்சிபூர்வமான வரலாறு. பதினெட்டாம் நுற்றாண்டின் மத்திய ஆண்டுகளில் பம்பாயின் எல்லைக் குடிசைகளில் வாழ்ந்த தமிழ்க் குடும்பத்தில் பிறக்கும் பையனின் வாழ்க்கையை, கூடவே பிறந்த இந்திய ரெயில்வேயுடன் பின்னிப் பிணைந்து 1947-ல் உச்சக் காட்சியுடன் நிறைவு செய்ய ஆசை.அதற்காக வாங்கிய புத்தகங்களை மட்டுமே படித்தேன். தோதாக, ஜெயமோகன் அவர்களும் காந்தியைப் பல கோணங்களில் எழுத, சேர்த்து வைத்து விட்டேன்.

வலை மற்றும் அலுவலகம் தாண்டிய ஒரு குடும்ப வாழ்க்கை என்ற ஒன்றுமிருக்கின்றது. அதில் இவ்வாண்டின் பெருமகிழ்வாக ஒரு சொந்த வீடு வாங்க முடிந்தது. ஆறு வருடங்களுக்கு முன்பு ஐ.சி.எஃப். செல்லும் 47-டியில் இரண்டு நாட்கள் சாப்பிடாததால் மயங்கி விழுந்தவனுக்கு இன்று ஒரு அடர்ப் பச்சைப் பெய்ண்ட் அடித்த வீடு சொந்தம் என்பதற்கு ஆச்சரியப்படுவது இயல்பே என்றான் சீனி. எஸ்.பி.ஐ. கட்டிய ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருக்கிறோம் என்பதாகவே நான் உணர்கிறேன். என்ன, மாத வாடகை தான் கொஞ்சம் அதிகம்!

தமிழ்ப்பறவையுடன் ஏறத்தாழ வருடம் முழுக்க தினம் பேசினேன். யோசிப்பவர் அவர் முயற்சிகளில் என்னையும் இழுத்துக் கொள்கிறார். அதற்கு என்ன தவம் செய்தேன் என்று தெரியவில்லை.

அனலில் எரிந்த முத்துத் தமிழன் மறக்க முடியாமல் செய்து விட்டான். ஆஸ்கார்த் தமிழன் அன்பையும், அடக்கத்தையும் பறைசாற்றினான்.

மொத்தத்தில் 2009 கொஞ்சம் நடுக்கத்திலேயே வைத்திருந்தாகவும் எழுதுவதில் கொஞ்சம் தனித்த நடை வந்திருப்பதாக உணர்வதாகவும் கடந்து கொண்டிருக்கின்றது. வரும் ஆண்டிற்கென சில கனவுகள் வைத்திருக்கிறேன்.

அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Cheeeeeerzzzzz and Rock U Buddiezzzzz.....!!!!!!

Wednesday, December 30, 2009

முரண் உணர்.(A)

ஸ்ட்ராபெர்ரி நிறம் விரும்புவாள்.
சீதாப்பழத்தைத் தோல் வரை தின்பான்.
பாயும் ரயிலுக்குள் பின்னே நடப்பாள்.
கடப்பாறை நீச்சல் தெரிவான்.
தோல் என்பதால் ஷூ வெறுப்பாள்.
தனியாய் மலையேற்றம் போவான்.
தோழியிடம் பிணக்கென்றால் நிலவுடன் சண்டையிடுவாள்.
ஹாங்காங் படப் பேய்களின் ரசிகன்.
பப்பி1, பப்பி2 என்று பூனைகள் வளர்க்கிறாள்.
கண்களைக் கட்டி ரேடியோ அஸெம்ப்ளிங் செய்வான்.
நகங்களை ரத்தம் வரை கடிப்பாள்.
வாட்ச் கட்ட மாட்டான்.
கணக்கில் எப்போதும் அவள் நூறு.
டாய்லெட்டில் புத்தகம் படிப்பான்.
ஊட்டியில் பாட்டி வீட்டுக்குப் பக்கத்தில் முதல் தற்கொலை பார்த்தாள்.
லாரிக்கடியில் பிராய்ந்ததில் வலதுகாலில் அவனுக்கு ஒரு தழும்பு.
வானம் பார்த்து மேகம் எண்ணுவாள்.
பஜ்ஜி படர்ந்த தந்தியை உதறிப் படிப்பான்.
45க்குள் ஒருமுறை அண்டார்ட்டிகா அவள் ஆசை.
டாம் சாயருக்கு ஒரு ஃபேன் ஃபிக்ஷன் அவன் கனவு.
மழையென்றால் அவளுக்கு ஆஹா.
மழையென்றால் அவனுக்கு ஆகா.
கார்த்திகை கடைசி முகூர்த்த முன்னிரவில்,
மண்டபத்தில் டெக்கெடுத்து
'சிங்கார வேலன்' ஓடுகையில்,
சாத்திய அறைக்குள்
பூக்கட்டில் நடுங்க,
அவர்கள்
வேகமாய்ப் புணர்ந்தனர்.

***

(உரையாடல் கவிதைப் போட்டிக்காக எழுதியது.)

Friday, December 25, 2009

ஈரோடு சங்கமம் - 2K9 - Cooooool!"நாப்பது ரூபா ஆகும் சார்..!"என்றார் அந்த ஆட்டோக்காரர். பயணிகளின் சீட்டில் சரிந்து படுத்திருந்தார். மஃப்டியில் தான் இருந்தார்.

நான் சவிதாவில் நின்று கொண்டிருந்தேன். மதியம் மயங்கி வானம் மாலையைக் கவ்விக் கொண்டிருந்த 15:40. ஞாயிறு பிற்பகல் என்பதால், பிரஃப் ரோட்டில் மூன்று சைக்கிள்கள், ஓர் ஆட்டோ, பி.எஸ்.பார்க்குக்குத் திரும்பிய '5' தவிர ஐந்து ஈக்கள், எட்டு காக்கைகள் இருந்தன. ஷட்டர்கள் வளைந்த வாசல்களில் கடைகள் இறுக்க மூடியிருந்தன.

"கலெக்டரேட் போக அவ்வளவு ஆகுமா..?" இந்தா, இங்கிருந்து நாலு எட்டு வைத்தால், எம்.ஜி.ஆர். சிலை. அவர் முகம் பார்க்கும் பெருந்துறை ரோட்டில் ஒரு இருபது எட்டு வைத்தால், வந்து விடுகின்றது ஆட்சியர் அலுவலகம்.

திரும்பியே பார்க்காமல் நடக்கத் தொடங்கினேன்.

சாம்பாரில் தூள் போல் மேகங்கள் விரவியிருந்தன. சாலை மத்தியின் கம்பங்களில் சரடுகளில் தலைவர்கள் தொங்கினர். செங்கல் பத்திரங்களுக்குள் மரங்கள். கண்ணாடிக் கடைகள், சர்பத் ஸ்டால், மட்டன் ஷாப், மருந்துக் கடை, காலியாக இருந்த ஆட்டோ ஸ்டாண்ட். வெட்டிய பிரிவில் வளைந்து, சிவப்பு வட்டம் நிறுத்தியிருந்த டீசல் வாகனங்களுக்குள் புகுந்து பெருந்துறை ரோட்டைப் பிடித்தேன்.

மே.எம்.சி.ஹெச். கிளை போர்டு பெரிதாய்த் தெரிந்தது; இரவில் எரியும். சாலைத் தடுப்பின் கம்பிகளில் ஜூவல்லர்ஸ் விளம்பரங்கள். கீழே ஒதுக்கிய மணல் சிறு குன்றுகள். குப்பைகள். ஸ்கூட்டியில் 'U' அடித்த பெண்ணுக்கு வயது பத்தா..? எதிர்த்த ஆட்டோவில் கிரைண்டரை மனைவி போல் கட்டிக் கொண்டு ஒருவர் போனார். சைக்கிள் கேரியரில் பேட் செருகிப் பறந்த சிறுவன் சட்டையில் மூன்று பட்டன்கள் திறந்திருந்தன. டீ ஸ்டால் வாசலில் கண்ணாடிகள் ஏற்றிய ஸ்கார்பியோ நின்றிருந்தது. தூரத்தில் 'தீரன் சின்னமலை மாளிகை' பொடிமாஸ் எழுத்துக்களில் தெரிந்தது. பொதுப்பணித் துறை அலுவலகமான காலிங்கராயன் இல்லத்தில் 'அனுமதி இல்லாமல் யாரும் வரக் கூடாது' போர்டின் கீழ் ஒரு சட்டை கிழிந்த பைத்தியக்காரன் படுத்திருந்தான். அவன் தாடி மேல் ஓர் பூச்சி ஊர்ந்தது. ஷேர் ஆட்டோ ஒன்று கடந்து லேசாகத் தயங்கிப் பின் விரைந்தது. கத்திரிப்பூ நிறத்தில் ஒரு மாருதியின் பின் கண்ணாடியில், 'Santhosh','Shalini' காமிக் சான்ஸ் முறையில் ஒட்டியிருக்க, ஜன்னலில் முன்னங்கால்களைத் தொங்க விட்டு புஸுபுஸு நாய்க்குட்டி எட்டிப் பார்த்தது.

ரண்டாவது வளைவு திரும்பியதும், லோட்டஸ் ஷாப்பிங் ஷோரூம் தெரிந்தது. மூடப்பட்டிருந்தது. ஒட்டி ஒரு சந்து போனது. அதன் நுழைவாயிலில் இருந்து பார்த்தால், கடைசி முனையில் ஈரோடு பதிவர்கள் சங்கமம் எம்ப்ளம் காற்றில் கலைய, நோக்கி நடந்தேன். அங்கிருந்து எவ்வித அம்புக்குறியோ, டேக் டைவர்ஷனோ இல்லாததால், ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்ட ஓர் எதிர் அரங்கத்தில் தான் சங்கமமாகிறார்கள் போலிருக்கிறது என்று நினைத்தேன்.

நல்லவேளை, கொஞ்சம் பேர் நின்று கொண்டிருந்த மற்றொரு கட்டிடத்தில், 'The Builder Association of India' என்ற மெட்டல் போர்டு தெரிய அங்கு சென்றேன்.

மாடத்தில் நின்ற பதிவர்களுக்கு நிச்சயமாய் என்னைத் தெரிந்திருக்காது. 'யாரோ ஓர் ஆசாமி வெளியூரில் இருந்து வருகிறான் போலிருக்கிறது.' என்று ஒரு ஷார்ட் டெர்ம் விரோதப் பார்வை பார்த்தார்கள். நானும் நிகழ்வை முடித்து விட்டு அப்படியே அனந்தபுரம் ரயில் பிடிப்பதாக இருந்ததால், ஒரு துணி மூட்டை முதுகில் சுமந்திருந்தேன். நானும் அவர்களை பதிலுக்கு சந்தேகப் பார்வை பார்த்து விட்டே, மரக்கதவைத் திறந்து ஏ.ஸி. அறைக்குள் சென்றால், ஏ.ஸி.இல்லை.

வழக்கம் போல் கடைசி வரிசைக்கு போய் ஓர் ஓரமாய் ஒதுங்கி உட்கார்ந்து கொள்ளலாம்; கூப்பிடும் போது போய் எழுதிக்கொண்டு வந்ததை ஒப்பித்து விட்டு வந்து விடலாம் என்று கடை வரிசையில் மூட்டையைச் சாத்தினேன். உப்புசமாக இருந்தது. சும்மாவா, ஒன்றரை மைல் இதோ இந்த லேப்டாப்பையும், வீட்டுச் சாப்பாட்டு உடம்பையும் தூக்கிக் கொண்டு வந்ததில் வேர்த்தது. வெளியே சென்று காத்தாட நிற்க வெளிச் சென்றால், ஒரு வண்டி வந்தது.

புத்தகங்கள் இறக்கினார்கள். நானும் 'உபசரிப்புக் குழுவில்' இருக்கும் ஒருவன் என்பதைக் காட்டிக் கொள்வதற்காக, ஒரு கட்டு புத்தகங்களை ஆம்னியிலிருந்து எடுத்து வைக்கும் போது, பெயர் பார்த்தால், 'ஈரோடு மாவட்ட வரலாறு' என்றிருந்தது. அட்டையில் தந்தை பெரியார், ம.செ. வரைந்த தீரன் சின்னமலை, பவானிசாகர் அணை மற்றும் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் ஆலயக்கோபுரம் (ஹைய்யா! நம்ம ஊரு!) கண்டதும் மகிழ்ச்சி வந்தது.

கொஞ்சம் கொஞ்சமாகப் பதிவர்கள் வந்தனர். தெரிந்தவர்கள் கட்டிக் கொள்ள, சிரித்துப் பேசிக் கொள்ள, எப்போதும் போல் கூச்ச சுபாவியான நான், ஒரு திட்டில் உட்கார்ந்து கொண்டு எப்போதும் போல் எல்லோரையும் கவனிக்கத் தொடங்கினேன்.

கதிர் வந்தார். கூட்டத்தில் கரைந்தார். சட்டையில் குத்திக் கொள்ள பெயர்ப் பேப்பர் தந்தார். தங்க பின்னூக்கு. குத்திக் கொண்டேன். நவீன மாட்டு மடி போல் திருகியதும், டேப்பில் டீ சுரந்தது. டிஸ்போஸ்பிள் தம்ளரில் பிடித்துக் குடித்தோம். புகைப்படக் கலைஞர் நந்து மாடத்தில் எல்லோரையும் தெலுங்கு வில்லன்கள் போல் கைதூக்கி நிற்க வைத்துப் படம் பிடித்தார். ஒரு போட்டோகிராபர் BAI போர்டைப் படம் பிடிக்க என்னை நகரச் சொல்ல, நான் என்னைத் தான் படம் பிடிக்க விரும்புகிறார் என்று இன்னும் கெத்தாய் அதை மறைக்க, அவர் தலையில் அடித்துக் கொண்டார். (யோவ்..! நகருய்யா அந்தாண்ட..!)

வேறொரு வேனில் திருப்பூர்ப் பதிவர்கள் வந்தார்கள். யாரிடமோ நான் கேட்க, 'ஆமாம்..! வால்பையன் மட்டையாகி விட்டார் தான்!' என்றார். நந்துவிடம் 'நிலா ஏன் வரவில்லை?' என்று கேட்டதற்கு, குழந்தைதனமான காரணம் சொன்னார். அவருடன் பேசும் போது, ஒரு பதிவர் வந்து, 'நீங்கள் கொங்கு வாசலில் எழுதும் வசந்தா..?' என்று கேட்டார். '..லிலும் எழுதுகிறேன்..' என்றேன். 'நீங்கள் எந்த வசந்த்..?' வினவினார் வேறொருவர். 'சாதா வசந்த் தான்..!' பதிலுறுத்தேன். டீ குடித்தேன்.

'தமிழ்மணம்' காசி ஆறுமுகம், லதானந்த் போன்ற பெரியவர்கள் வந்தனர். கை கொடுத்துத் திருப்பி வாங்கிக் கொண்டேன்.

பழமைபேசி தன் ப்ளாக்கர் ப்ரொஃபைலிலிருந்து நேரடியாக வந்திருந்தார்.

கல்வெட்டாளர் செ.இராசு அவர்கள் எழுதிய புத்தகங்களை டேபிளில் அடுக்கும் போது, ஆரூரன் அவர்களிடம் 'வானம் கறுத்து கனமாய் எப்போது வேண்டுமானாலும் அழத் தயாராய் இருக்கிறது' என்று சொன்னதை மதித்து, வேறு பக்கமாய் வைத்துக் கொண்டார். ஆயிரம் ரூபாய் கொடுத்தது தவிர ஈரோடு வலைப்பதிவர் சங்கமத்திற்கு என்னுடைய மூன்றாவது பங்களிப்பு இது என்பதை, ஏ.ஸி. இருந்தும் இல்லாததுமான ஹாலுக்குள்ளே வெட்டிப் பேச்சு, அதாவது அனானிகள் பற்றிய சூடான பேச்சு நடந்து கொண்டிருந்த போது வெளியே மழை கொட்டியதே உறுதிப்படுத்தியது.

அனைவரும் டீ குடித்து முடித்ததும், சரியாக நான்கு மணிக்குத் துவங்குவதாக இருந்த சங்கமம் நிகழ்வு, சற்று அரைவட்டம் சரிந்து நான்கு இருபதுக்குத் துவங்கியது.

கதிர் மேடையில் அமர்பவர்களைக் கூப்பிட்ட போது, என்னையும் கூப்பிட்டு விட்டார். கொஞ்சம் பேர் சோகையாகக் கைதட்டினார்கள். பாக்கெட்டில் எழுதி வைத்த காகிதத்தைத் தொட்டுப் பார்த்து அதன் இருப்பை உறுதி செய்து கொண்டு, ஜிப் எல்லாம் சரியாகப் போட்டிருக்கிறேனா என்று பார்த்துக் கொண்டு (அதாவது தலை குனிந்து) முன் வரிசையில் ஒரு ஸீட் காலியாக இருந்தாலும், பின் வரிசைச் சீட்டில் உட்கார்ந்து கொண்டேன். பக்கத்தில் 'செந்திலின் பக்கங்கள்'.

அமீரகத்தில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல் பூசியே குளிப்பார் போலிருந்தது. செவப்புன்னா செவப்பு அப்படி ஒரு செவப்பு. போதாக்குறைக்கு மஞ்சள் சட்டை வேறு அணிந்திருந்தார். கொஞ்சம் தள்ளியே உட்கார்ந்து கொண்டேன். இடது பக்கம் ஒரு சீட் காலி விட்டு, பதிவர் ரம்யா மற்றும் கடைசியாகப் பதிவர் சுமஜ்லா.

முன் வரிசையில் பதிவர் 'வலைச்சரம்' சீனா அவர்கள், கல்வெட்டாளர் செ.இராசு அவர்கள், பதிவர் ஆரூரன், தமிழ்மணம் காசி மற்றும் பழமைபேசி.

கதிர் எல்லோரையும் வரவேற்று விட்டு, ஆரூரன் தலைமையேற்று நடத்துவார் என்று சொல்லி விட்டு கீழேயே முன் குழுமத்தில் உட்கார்ந்து கொண்டார். அதை யாராவது முன் மொழிந்தால், நான் வழிமொழிவதற்குத் தயாராகத் தான் இருந்தேன். ஆனால் யாரும் முன் வராததால், நானும் வழி வரவில்லை.

அரூரன் எழுந்து முதலில் தமிழ் வாழ்த்துப் பாட அழைக்க, ஓர் அம்மணி வந்து மைக் பிடித்தார். 'நீராரும் கடலுடுக்க' நினைத்தால், அவர் வேறு ஒரு பாடலைப் பாடினார். கட்டுடைப்பு அப்போதே துவங்கி விட்டது. (பின் வால்பையன் தொடர்ந்தார்!) எல்லோரும் எழுந்து நின்று என்னவோ 'பாவம் போல்' தலை குனிந்து நின்றதைப் பார்த்தால், the so called தமிழன்னை மனம் வருந்தியிருப்பாள்.

நன்றாகவே பாடினார் அவர். முடிந்து எல்லோரும் அமர்ந்த பின், ஆரூரன் தலைமை உரை பேசினார். காலிங்கராயன் வாய்க்கால் பற்றியும், அந்த மன்னரைப் பற்றியும் பேசி விட்டு, அந்தக் காலத்தில் பதிவுகள் இல்லாததால், அவர் பெயர் Calling-கரையான் என்றாகி விட்டதால், எல்லோரும் அன்றாட வாழ்க்கையைப் பதிவு செய்வதன் மூலம் 'வரலாறு மிக முக்கியம் அமைச்சரே' என்று அறிவுறுத்தினார்.

பிறகு ஒவ்வொருவரையும் ஒரிஜினல் தலைப் பெயரையும், வலைப் பெயரையும், தத்தம் வலை முகவரியையும் சொன்னார்கள். தலைக்குத் தலை காமிரா காட்டி வீடியோவில் விழுங்கிக் கொண்டார்கள். நானும் அவசரமாக எழுந்து யாருக்கும் தெரிந்து விடக் கூடாதே என்பதே லட்சியம் போல், கடகடவெனச் சொல்லி விட்டு உட்கார்ந்தேன்.

பிறகு ஈரோடு பதிவர்களின் கருத்துக்களில் முதலாவதாக என்னைக் கூப்பிட்டு விட, மடித்து வைத்திருந்த சீட்டை எடுத்து, அத்தனை வோல்டேஜ் சாப்பிடும் ஃப்ளாஷ்ஷின் போட்டான்கள் மேலே பாய மைக் முகத்தில் 'வணக்கம்' சொன்னால், அது இருமியது. ஒருவர் பின்னால் ஆம்ப்ளிஃபயரைத் திருகி விட்டுத் தலையாட்ட, 'மற்றொரு வணக்கம்' என்றேன். இன்னும் சீராகவில்லை.திரும்பிப் பார்த்தேன். கொஞ்சம் குமிழ்களைச் சுற்றினார். சரி செய்து விட்ட நம்பிக்கையில், உற்சாகமாய் 'இன்னொரு முறை சொல்லுங்க' என்றார். 'கடைசியாய் ஒரு வணக்கம்' என்றேன். சக்ஸஸ்.

மேடைப் பயம் வருமோ என்ற கவலை இருந்தது. சுத்தமாக இல்லை. அவ்வப்போது எழுதி வைத்துப் படித்ததன் இடையில் உடனே தோன்றியதையும் சொன்னேன். பாரதியைப் பற்றிய ஆசிரியப்பாவைப் படித்து முடித்த போது எல்லோருக்கும் பிடித்திருந்தது போல் தெரிந்தது. நிறைய கைதட்டல்கள் கேட்டன. காரணம், அந்தக் கடைசி வரி அதிர்ச்சியில் இருக்கின்றது. இடையே வால் இரண்டு கேள்விகள் கேட்டார். அவரைப் பற்றி ஏற்கனவே தெரிந்திருந்த காரணத்தால், எனக்கு அவரது குறுக்கீடுகள் எவ்வித உணர்வையும் தரவில்லை. சிலர் பொது வெளியில் நடந்து கொள்ளும் முறையை மீறி விட்டார் என்கிறார்கள்; சிலர் நிகழ்ச்சியைக் கலகலப்பாக்கினார் என்றார்கள். அவை அவரவர் ஃபீலிங்; மொத்த அவையின் அல்ல.

கரெக்டாக நான் பேசி முடித்து அரை நிமிடத்தில் என் அம்மா வந்தார்கள். மகன் பேசியதை மிஸ் செய்து விட்டார்கள். வீடியோ இருக்கின்றது என்று சொல்லி இருக்கிறேன்.

பதிவர் சீனா அவர்கள் வாசகர்களின் எதிர்பார்ப்பையும், பதிவர்களின் எதிர்பார்ப்பையும் பற்றி அவர் வீட்டம்மா எழுதிக் கொடுத்தது என்று ஒப்புக் கொண்டு படித்துப் பேசினார்.

பதிவர் சுமஜ்லா, பதிவுகளை அழகாகவும், நிறைய விட்ஜெட்டுகளையும் இணைத்து பதிவின் பக்கங்களைச் செம்மைப்படுத்துவது எப்படி என்று நிறைய பேச நினைத்திருந்தாலும், காலம் ஐந்து நிமிடங்களே கொடுக்கப்பட்டதால், சுருக்கமாகச் சொல்வதாகச் சொன்னார்.

பழமைபேசி 'சுருக்'காகப் பேசி, நறுக்காக முடித்தார். அவர் பேச்சில் அயல்தேசப் பனி படர்ந்திருந்தது. கொஞ்சம் கொங்கும் மணந்தது.

உலகத் திரைப்படங்கள் பற்றிப் பேசிய வண்ணத்துப்பூச்சி சூர்யா, 'வேட்டைக்காரன்' ரிலீஸைப் புயல் என வர்ணித்தது வருத்தம் தந்தது. புயலாவது வருவதாகப் பயம் காட்டி, பிறகு ஆந்திராவுக்கோ, ஒரிஸாவுக்கோ திசை மாறி விடும்.

செந்தில்வேலன் விக்கியில் தமிழ்க் கட்டுரைகளின் போதாமையைப் பின்னிஷ் மொழிக் கட்டுரைகளின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டு வருந்தினார். அமீரகத்தில் நடந்த கணிணிப் பயிலரங்கம் பற்றிச் சொன்னார்.

மதியமே ஈரோடு வந்து விட்ட சென்னைப் பதிவர்கள் சங்கம நிகழ்வுக்கு வந்த போது, மணி நாலரையைத் தாண்டி விட்டது.

பதிவர் ரம்யா அவர்கள் சமூகத்தில் நமக்கு என்ன பங்கு என்று பேசினார். நன்றாகவே இருந்தது. (இப்படிச் சொன்னால் இப்போது எதுவும் ஞாபகம் இல்லை என்று அர்த்தம்!)

கதவைத் திறந்து 'அகநாழிகை' வாசுதேவன் வந்த போது,அவர் பெயரைக் கூப்பிட்டு விட, வலைப்பதிவு எழுத்தாளர்கள் அச்சு ஊடகத்திற்கு வர வேண்டும் என்று வரவேற்றார்.

சிறப்பு உரையாற்றிய கல்வெட்டாளர் செ.இராசு அவர்கள் வலைப்பதிவு எழுதுவதால், இவற்றை எழுத வேண்டிய பேப்பர்கள் மிச்சமாகி மரங்கள் காப்பாற்றப்படுகின்றன என்றார். கோபன் ஹேகனில் 'அவர்கள்' அடித்துக் கொண்டதை விட, ஈரோடு சங்கமத்தில் இயற்கையைக் கொஞ்சம் காப்பாற்றி விட்டோம் என்று பெருமிதம் அடைந்தேன். அவரது 'ஈரோடு மாவட்ட வரலாறு' நூலை ஊருக்குப் போகும் போது படித்தேன். நிறைய தகவல்களோடும், கொஞ்சம் சுவாரஸ்யமாகவும் இருந்தது.

'தமிழ்மணம்' காசி, வலைப்பதிவின் அவசியத்தை ஆட்சியாளர்களும் கூட இப்போது உணரத் தலைப்பட்டு விட்டார்கள் என்பதால் உஷாராக இருக்கவும் என்றார். நாமக்கல்லில் அன்று காலையில் ஆட்சியருடன் சென்று கிராம மக்கள் வலைப்பதிவு மூலம் எப்படி அரசு நிர்வாகத்தைத் தொடர்பு கொள்வது என்பதைப் பற்றி விளக்கம் கொடுத்ததாகச் சொல்ல, ஒரிச்சேரிப் புதூர் கருப்புசாமி, கட்டற்ற சுதந்திரத்தின் இணையத்தைக் கையில் கொடுத்து, 'எதை வேண்டுமானாலும் தேடலாம்; கிடைக்கும்' என்று சொல்லி விட்டு ஒதுங்கினால், எதை முதலில் தேடுவான் என்று யோசித்துப் பார்த்தேன்.

பிறகு நிறைய பதிவர்கள், 'ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்' என்று அச்சடித்த துணியின் காதுகளையும் கால்களையும் பிடித்துக் கொள்ள, 'க்ளிக்'குகள் சாட்சியாக, குழுமம் துவக்கப்பட்டு விட்டதை அறிவித்தார்கள்.

நான் சென்று வால்பையன் அருகில் அமர்ந்து கொள்ள,கலந்துரையாடல் துவங்கியது.

அனானி பற்றிய கேள்விகள் தாறுமாறாகப் பாய்ந்தன. ஓர் ஓரமாக உட்கார்ந்து அனானியும் கேட்டுக் கொண்டிருந்தால், மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்ற அளவில் அரை மணிக்கும் மேலாக அவரைப் பற்றியே பேசிக் கொண்டிருந்ததில், உண்மையில் 'பிரபல' பதிவர் அவராகத் தான் இருக்குமோ என்ற ஐயம் வந்தது.

கருத்துச் சுதந்திரம் பற்றிக் வருத்தப்பட்டோம்; உளவுத் துறையால் நாம் கவனிக்கப்படுகிறோம் என்று கிலியூட்டப்பட்டதும், 'ஏன் அவர்கள் கமெண்ட் போடுவதில்லை?' என்ற நியாயமான கவலைப்பட்டோம்; வலைப்பதிவு எழுதி மட்டுமே பிழைத்துக் கொண்டிருக்கும் சில அதிர்ஷ்டசாலிகளைப் பற்றிப் பேசி ரகசியப் பெருமூச்சு விட்டோம்; வலைப்பதிவுகளைப் ப்ராடெக்ட் அனலிசிஸ் பண்ணும் ஒரு கருவியாகப் பாவிப்பதாகச் சொல்லி, அதனால் ப்ளாக் படிப்பதே தமக்கு வேலை என்று ஒருவர் சொல்ல, அவரிடம் 'ஓபனிங் இருக்கா..?' என்று சிலர் கேட்டோம்;

வால்பையன் ஒவ்வொருவரின் பேச்சுக்கு நடுவிலும் இடையே புகுந்து தன் கருத்தைச் சொல்ல முயன்றார். பிறரால் அது ஒரு மாதிரிக் 'காசியில் பிராமணனை வெட்டிய பாவம்' போல் பார்க்கப்பட்டது. வலைப்பதிவில் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் வேட்டைக்காரனை வேட்டையாடுபவர்கள், நிஜ வெளிக்கு வந்தவுடன், சமூகம் எதிர்பார்க்கின்ற படி தான் ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது :).

நன்றியுரையில் கதிர் எல்லோருக்கும் - வந்த பதிவர்கள், வராத நல்லவர்கள், கொஞ்ச வாசகர்கள், தொலைதூரத்தில் இருந்து வாழ்த்தியவர்கள், ..த்தியதுடன் பைசாவும் அனுப்பியவர்கள், தமிழ்மணம் முகப்பில் வைத்திருந்தது, ஹால் கொடுத்த கட்டிட சங்கத்தினர், வீடியோ பிடித்த பவானிக்காரர்கள் - எல்லோருக்கும் நன்றி சொன்னார்.

தேசிய கீதம் பாடும் எண்ணமே யாருக்கும் வராமல், உணவுக் கூடத்தை வெற்றி கொள்ள விரைந்தேன். அங்கங்கே முடிச்சு முடிச்சாய் நின்று பேசிக் கொள்ள ஆரம்பிக்க, நானும் அம்மாவும் சாப்பாட்டுக்குச் சென்று அசைவம் பகுதியில் உண்டோம். கே.எஸ்.ஆரில் பணிபுரியும் இருவர் பதிவர்களாய் அறிமுகம் செய்து கொண்டு பேசி விடை பெறும்போது நண்பர்களாகிப் போயினர். முனைவர் இரா.குணசீலன் அவர்கள் இளமையாய் இருந்து, அவர் மட்டும் முடிந்த அளவுக்குத் தூய தமிழ் பேச, அசைவத் தமிழ் பேசினேன். மதுரை ஸ்ரீ, கார்த்திகைப் பாண்டியன் ஆகியோரிடமும் பேசினேன். அஸ்ஸாம் ஆர்மிக்காரர் விட்டலன் அவரது கவிதைத் தொகுப்பைக் கொடுத்தார். சுவையான டிட்பிட்ஸ் அவற்றின் சில பக்கங்களில் கிடைத்தன. வாழ்த்துக்கள் இராணுவக் கவிஞரே!

உபசரிப்புக் குழுவின் அடிப்படையாகப் பைசா கொடுத்து விட்டு, கதிரிடமும், வால்பையனிடமும் விடை பெற்று விட்டுக் கிளம்பினோம்.

பஸ்ஸே வரவில்லை. இருபது நிமிடங்கள் கழித்து வந்த ஓர் ஆட்டோவில் முப்பத்தைந்து ரூபாய்க்கு ஈரோடு ஜங்ஷன் சென்றால், கூட்டமே இல்லாத, ஆச்சரிய ஞாயிறு இரவு அது. பதிலுக்குச் சென்னையிலிருந்தே மாலை போட்ட அன்பர்களை நிரப்பி அனந்தபுரம் வாரச் சிறப்பு ரயில் வந்தது. அம்மா வீட்டுக்குக் கிளம்பி விட்டார்கள்.

ரயிலின் முன்பு மூன்று ஜெனரல் கோச்சுகளைச் சேர்த்தவர்கள், கடைசியில் வைத்திருந்தது ஒன்றே ஒன்று தான். வழக்கம் போல் அடித்துப் பிடித்து ஏறி, சிங்கிள் விண்டோ சீட்டில் கிடைத்த தக்கிணியூண்டு இடத்தில் உட்கார்ந்து 'ஈரோடு மாவட்ட வரலாற்றை'ப் பிரித்தால், எதிரில் தொங்கியவாறு உட்கார்ந்திருந்தவர் 'நிங்ஙள் வஸந்த்குமார் தன்னே..?' என்றார்.

'அதே' என்றேன். மலையாளிகள் வரை என் எழுத்துப் பரவியிருப்பது பெருமகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் கொடுத்தது.

'நிங்ஙள் எங்ஙனம் எண்ட பேர் அறிஞ்சது..?' என்று சோதித்தேன்.

'ஒண்ணுமில்லா..! நிங்ஙள் பாக்கெட் சீட் பறஞ்சுது..! எனிக்கு கொறச்சு தமிழ் படிக்கான் அறியும்' என்று காட்டினார்.

அப்போது தான் கவனித்தேன். டீ-ஷர்ட் பாக்கெட்டில் தங்கப் பின்னூக்கில் குத்தியிருந்த 'ஈரோடு தமிழ்ப் பதிவர்கள் சங்கமம் - உபசரிப்புக் குழு' கார்டை கழட்டாமல் வைத்திருந்தேன்.

'ஆரானு க்ரூப் அது..?' என்று கேட்டார்.

'எண்ட க்ரூப்பாக்கும்..!' என்று சொன்னேன். அதில் ஏதோ ஒரு சந்தோஷம் இருந்தது.

ரயில் வேகம் எடுத்துப் பாய்ந்தது.

Wednesday, December 23, 2009

உருகி ஊற்றட்டும்.ந்தச் சிவந்த ரோஜாக்கள், பறக்கின்ற தேவதைகளாகி, அழகின் வருகையை அறிவிக்கட்டும். கூரிய அம்பெனப் பரந்து நிரப்பும் கதிர்க் கூச்சல்கள், தாயைப் போல் இந்த பூமியைத் தழுவட்டும். பொழிகின்ற பனித்துளிகள், எப்போதுமான பச்சையைக் காலையின் இலைகளிலிருந்து கழுவட்டும். யுக, யுகங்களாய் நிமிர்ந்து நிற்கின்ற மாமலைகள் சத்தியத்தின் பழமையைச் சொல்லட்டும். நுரை ததும்ப ஓடும் பெருநதிகள், இயற்கையின் என்றும் நில்லா இயக்கத்தை விளம்பட்டும்.

அந்தரத்தில் மிதக்கின்ற கருங்கொண்டல்கள் நம் எல்லோருக்குமான தாகத்தைச் சுமக்கட்டும். கோடானு கோடி வைரப் பூச்சிகளால் நிறைந்திருக்கும் இரவு ஆகாயமே, பாதரசக் துளிகளைச் சொட்டிச் சொட்டி ஊசிக் குளிரால் துளைக்கட்டும். வெள்ளித் தகடுகளாய்ச் சரியும் வெயில் பாளங்கள் , முத்தெனத் துளிர்க்கும் மெல்லிய முடிகள் வருடும் சிறு செடிகளைக் குடிக்கட்டும். ரகசியமாய் நனைகின்ற கடுமழைக் காலங்களில் கவிந்த இருள் காடுகளின் பேரமைதியைச் சில்வண்டுகளின் ரீங்காரங்கள் சுவைக்கட்டும்.

பெருத்த மெளனம் பூசிய பிரபஞ்சத்தின் மற்றொரு மூலையில் ஓர் இராக்காலக் குயில் சோகத்தைச் செருகிய ஒற்றைக் குரலில் கூவும் போது, மதுரமான ஒரு மாலையின் பொன் கீதம் என்னில் படர்ந்து பருகும் போதும், உருகி ஊற்றட்டும் என் உடல்.

Monday, December 21, 2009

ஈரோடு சங்கமத்தில் பேசிய உரை.

நேற்று நடந்த ஈரோடு தமிழ்ப் பதிவர்கள் சங்கமத்தில் பேசிய
பேச்சு. முழுக்க முழுக்க இங்கு இருப்பது போல் பேசவில்லை. எனினும் நிறைய இதில் இருப்பவை தாம்.

கதையெழுதி.

இது ஓர் அழகிய இனிய மாலை.

தமிழின் பெயரால் இணையத்தில் எழுதும், வாசிக்கும் சிலர் இங்கே குளிர் சிதறும் அரங்கத்தில் குழுமியிருக்கிறோம். எனக்கு முன்னால், பக்கத்தில், பின்னால் அமர்ந்திருக்கும் உங்களில் பலர் வலைத்தளங்களில், வலைப்பூக்களில் அழகாக, ஆழமாக, இயல்பாக, ஈரமாக எழுதுபவர்கள். உங்களுக்கு 'கதையெழுதுதலைப்' பற்றிச் சொல்வதற்கு எனக்கு தயக்கம் இருக்கிறது. ஆயினும் ஈரோட்டிலிருந்து கிளம்பிய வலைப்பதிவர்களில் ஒருவன் என்ற சிறு சலுகையைப் பய்ன்படுத்தி, என் மீச்சிறு அனுபவங்களைப் பகிர்வதில் உவப்புறுகிறேன்.

கதையெழுதுவதில் பல வகைகள். கவிதை, சிறுகதை, குறுநாவல், நாவல் என. இங்கே சிறுகதை என்பதை மட்டும் பேச விரும்புகிறேன். அது மேற்சொன்ன வரிசையில் கவிதைக்கும், குறுநாவலுக்கும் இடையே கொஞ்சம் சொகுசாக அமர்ந்திருக்கின்றது. என் அனுபவத்தில், சிறுகதை என்பது ஒரு குறிப்பிட்ட உணர்வை வாசகர்களுக்கு ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்டு வரிசையாகக் கோர்க்கப்படும் சம்பவங்களின் சீரான தொகுப்பு.

கவிதை என்பது நேரடியாக இதுதான் என்று சுருக்கமாகச் சொல்லிவிடுவது. நாவலில் மெதுவாக வாசகரைத் தயார்படுத்திக் கூட்டிச் சென்று முடிவில் ஆழ்த்தலாம். சிறுகதை இரண்டுக்கும் இடையில். நிறைய சமயம் இல்லை, அதற்கு! ஆரம்பத்திலேயே படிப்பவரைக் கவ்விச் சென்று,கடைசியில் தொப்பென்று போட்டு விட வேண்டும். எனவே பெரும்பாலான சிறுகதை எழுத்தாளர்கள் 'ஆரம்ப வரியிலேயே கதையைத் துவக்கி விடு' என்கிறார்கள்.

சிறுகதைக்கான கருவை எங்கிருந்து பெறுவது? எங்கிருந்தும்! ஒருமுறை திருவனந்தபுரத்தில் இருந்து மதுரைக்கு அனந்தபுரி எக்ஸ்ப்ரஸில் சென்றேன். நெல்லை தாண்டி மாலை ஆறு இருக்கும். மணியாச்சி என்று நினைக்கிறேன். அங்கே நின்ற போது ஒரு கிழவர் ஏறினார். தலை முழுக்க வெள்ளி நார்; உடல் முழுக்கச் சுருக்கங்கள். காதுகளில் முடி. சட்டையைச் சுருட்டி விட்டிருந்தார். பழுப்பேறிய வேட்டி. இவர் போன்ற கிழவர்களை, நாம் அவ்வப்போதைய எப்போதாவதுகளில் சந்திக்கிறோம். இவர் கொஞ்சம் வித்தியாசமாய் இருந்தார். அவர் கைகளில் ஒரு நார்ப்பை இருந்தது. அதில் இட்லி, பூரிப் பொட்டலங்கள் இருந்தன. ஒவ்வொருவராய்க் கேட்டுக் கொண்டே வந்தார். அவர் கைகள் நடுங்கிக் கொண்டேயிருந்தன.

அவரைக் கவனித்த போது, மனதில் ஒரே ஒரு கேள்வி ஒலிக்கத் தொடங்கியது. 'இந்த வயதில் இவருக்கு ஏன் இந்த நிலைமை?' அவரைக் கேட்கவில்லை. அந்தக் கேள்வி வைக்கோல் போருக்குள் ஒளிந்து கொண்ட மின்மினியைப் போல் எங்கோ உள்ளுக்குள் மின்னிக் கொண்டே இருந்தது.

உரையாடல் அமைப்பினர் சிறுகதைப் போட்டி நடத்திய போது, அந்தக் கிழவர் மேலே எழும்பி வந்தார். அவர் கண்களில் இருந்த வெறுமையை என்னால் மறக்க முடியவில்லை.

'இவருக்கு இந்த வயதில் ஏன் இந்த நிலைமை?' என்ற கேள்விக்கு நானாகவே ஒரு பதிலைத் தேடினேன். இத்தனை வருட வாழ்க்கையில் ஒரு விடையை உருவாக்க முடிந்தது.

மணியாச்சிக் கிழவரை பெங்களூருக்கு மாற்றினேன்; அனந்தபுரி எக்ஸ்ப்ரஸ், சேலம் மெயில் ஆனது. மதுரைக்குச் செல்லும் தனியான மென்பொருளன் நான், கன்னடக் கிறித்துவப் பெண்ணைக் காதல் செய்து, மணம் செய்து, 'டெய்ஸி' என்ற ஒரு வயதுக் குழந்தை பெற்று, கொஞ்சம் சலிப்பு ஏற்படத் துவங்கிய இளம் தகப்பன் 'ராகவன்' ஆனேன்.

இத்தகைய ஸ்தல, கால, பொருள் மாற்றங்கள் அவசியத் தேவை என்கிறார்கள். இல்லாவிடில் வக்கில் நோட்டீஸ் போன்ற உபத்திரவங்கள் வரலாம் என்று பயமுறுத்துகிறார்கள். அந்தக் கதை சிறப்பாக வந்தது; பரிசும் கிடைத்தது.

கதை எழுதுவதில் மற்றோர் அல்ப சந்தோஷம், கூடு விட்டுக் கூடு பாய்தல். இந்த குறுகிய வாழ்க்கையில் நம் எல்லைகள் தீர்மானிக்கப்பட்டு விட்டன. உதாரணமாக இனி என்னால் என் ஏழாம் வகுப்புக்குச் சென்று தெற்றுப்பல் இருந்த ஒரு சக மாணவனைப் 'பல்லன்' என்று கேலி செய்து நட்பைத் தொலைத்ததை அழிக்க முடியாது. ஆனால் ஒரு கதையில் அவனாக மாறி என்னை நானே அவனாய் மன்னித்துக் கொள்ள முடியும்.

ஓர் எலியாக மாறி பூனைத் தொந்தரவுகளை எழுத முடியும்; எலிகளுக்கும் பெருச்சாளிகளுக்குமான வர்க்கப் போராட்டங்களைச் சொல்ல முடியும்; ஒரு போலிசாக, ஒரு விவசாயியாக, பாத்திரத்திற்குப் பெயர் பொறிப்பவராக, ஒரு ஜி.எம்.மின் செகரெட்டரியாக, ஆறு வயதுப் பெண்ணாக மாறி மாறிச் சிந்திக்கும்மனம் பெறும் மகிழ்ச்சியிலேயே எழுதுவதன் நோக்கம் எழுதுபவனுக்கு நிறைவேறி விடுகின்றது.

வார்த்தைகள் முக்கியமா? ஆம். நாம் உபயோகப்படுத்தும் வார்த்தைகளே நாம் இலக்காக வைத்திருக்கும் இறுதி உணர்ச்சிக்கு வாசகரைத் தயார் செய்யும் மந்திரங்கள்.

விஜய் டி.வி.யில் விவேக் கவிஞர் வைரமுத்து போல் பேசிக் காட்டுகிறார். பாட்டி வடை சுட்ட கதை தான். 'ஒரே ஒரு ஊரில்'என்று ப்ரியதர்ஷினி படிக்க, விவேக், 'புழுதி படிந்த ஒரு கிராமத்தில்' என்கிறார். இந்த இரண்டு துவக்கங்களும் நம் மன உணர்வில் ஏற்படுத்தும் வித்தியாசங்கள் சில. அதுவே 'சூரியக் கதிர் வெளிச்சமாய் எழும்பி வந்தது; பச்சை மரங்கள் உற்சாகமாய்த் தலையாட்டின; சின்னச் சின்ன அழகிய பறவைகள் கீச்சு கீச்சென்று கத்திக் கொண்டே இங்குமங்கும் உல்லாசமாகத் திரிந்தன; அந்த வளமான கிராமத்தில்...'என்று
ஆரம்பிக்கும் போது அது எழுப்பும் மனநிலையைச் சிந்தியுங்கள்.

எனவே ஒரு கதை எழுதும் நாம் பயன்படுத்தும் வார்த்தைகளை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.

சுஜாதா 'ஓரிரு எண்ணங்கள்' என்ற கட்டுரைத் தொகுப்பில் கதை எழுதுவதைப் பற்றி மற்றும் சில எழுத்தாளர்களின் கூற்றுக்களைச் சொல்லி இருக்கிறார்.அவற்றில் சிலவற்றை இங்கே குறிப்பிட்டால் நம் எல்லோர்க்கும் உதவும் என்பதால்!

ஹெல்மட் பாந்கைம் என்பவர் 689 நல்ல சிறுகதைகளைப் படித்து,'நல்ல சிறுகதை' என்பதற்குச் சில அடையாளங்களைச் சொல்கிறார்.

1. என்ன சொல்லப்பட்டது என்பது எப்படி சொல்லப்பட்டது என்பதை விட முக்கியம்.

2. சிறுகதை என்பது முடிவுக்கு மிக அருகில் துவங்கும் பெரிய கதை.

3. நல்ல கதையில் எழுதுபவரின் நினைவாற்றலின் நுட்பம் இருந்தே தீரும்.

4. 85 விழுக்காடு கதைகள் பார்த்த, கேட்ட, உணர்ந்த, படித்த அனுபவத்தைச் சார்ந்ததாக உள்ளது.

5. நல்ல சிறுகதை எழுத்தாளர்கள் நிறையப் படித்திருக்கிறார்கள்.

6. எல்லாக் கதைகளும் கொஞ்சம் அவசரமும், கொஞ்சம் உணர்ச்சி ஊற்றும் கலந்து எழுதப்பட்டவை.

மற்றும் சில வாக்கியங்கள்.

பெரும்பாலான கதைகள் ஒரு பேசப்பட்ட வாக்கியத்தில் முடிகின்றன. வாழ்க்கையின் அபத்தத்தைச் சுட்டிக்காட்டி ஒரு கேள்விக்குறியில் முடிகின்றன. சிறுகதை ஒரு தனிப்பட்ட சுருக்கமான அனுபவத்தைப் பேசுகிறது.

என் தனிப்பட்ட அனுபவத்தில் சிறுகதை எழுத ஆர்வமுள்ளவர்கள், வெண்பா இலக்கணம் படிப்பது மிக உதவிகரமாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.

வெண்பா, யாப்பின் அத்தனை சிக்கலான விதிகளுக்குள், அதன் எதுகை, மோனை, முதலடி முதலாம் மற்றும் மூன்றாம் சீர்கள், குறில் நெடில் கூட்டணிகள் போன்ற கட்டுப்பாடுகளுக்குள் ஒரு நல்ல வெண்பா எழுத முயல்வது, ஒரு சிறுகதையின் வடிவம் பற்றிய ஒரு பிரக்ஞை, ஒரு கவனம் தரும் என்பது தெரிய வருகின்றது.

எழுதிய ஒரு வெண்பாவைச் சொல்கிறேன்.

குரங்குதான் முன்னோர் குறிப்பிட்டார் டார்வின்
அரங்கை நிறைத்தது கைதட்டல் - அடங்கியபின்
எல்லாம் அறிவேன் எழுந்துஒருவர் சொல்லியது
இல்லாளால் முன்பே யான்!

இந்த வெண்பாவில் ஒரு காட்சி சொல்லப்படுகிறது. நான்கு வரிகளுக்குள் ஓர் அரங்கம், ஒரு விஞ்ஞானி, அவரது புரட்சிக் கருத்து, அனானி ஒருவரின் வாழ்க்கை.இத்தனையும்.

இப்படி எழுதி எழுதிப் பயிற்சி பெற்ற மனம், சிறுகதையிலும் அந்தச் சுருங்கச் சொல்லி விரித்துப் பொருள் கூறும் வித்தையைக் கைக் கொள்வது எளிதாகிறது.

மற்றோர் ஆசிரியப்பா.

பாரதி கவனமாய்ப் பாஞ்சாலி சபதத்தில்
சாரதி உடைநல்கும் செய்யுளைச் செதுக்குகையில்
செல்லம்மாள் சமையலறை இருட்டுள்
மெல்லமாய்ச் சொன்னார், "மதியத்திற்கு அரிசியில்லை!"

இதிலும் மகாகவியின் வாழ்வின் ஒரு காட்சி இருக்கிறது.

எனவே நம் கவனத்தைப் பாதிக்கின்ற, கவர்கின்ற சம்பவங்களைக் கூர்ந்து நோக்குவதன் மூலம் நம் மனம் நிகழ விரும்புகின்ற முடிவைச் சிறுகதையாகத் தொகுத்துக் கொள்ளமுடியும் என்று நம்புகிறேன்.

முடிப்பதற்கு முன்பாக,நேற்று நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்ல விரும்புகிறேன். வீட்டில் இணையம் இல்லை. எழுதியாக வேண்டிய வேலை ஒன்று இருந்தது. எனவே இணைய மையம் சென்று விட்டு, அது முதல் மாடியில் இருந்தது. கீழே வந்து சைக்கிளை எடுக்கும் போது தான் கவனித்தேன். தரைத்தளத்தில் நிறைய கடைகள் இருந்தன. மோட்டர் கடை, டி.வி. ஷோரூம், சலூன், போட்டோ ஸ்டுடியோ, பேன்ஸி ஷாப். அந்த ஷாப்பில் இரண்டு கூண்டு எஸ்.டி.டி பூத்கள் இருந்தன. வாசலில் ஓர் ஒரு ரூபாய் காயின் தொலைபேசிப் பெட்டி. ஷாப்பின் இன்சார்ஜ் ஒரு பதினைந்து வயதுப் பெண். நான் சைக்கிளை எடுக்கும் போது, ஒரு மனநிலை சரியில்லாதவர் நடந்து வந்தார். இளம் வயது தான் இருக்க வேண்டும். அந்த ஷாப்பை நோக்கிச் சிரித்துக் கொண்டே போனார். அந்த பெண் பயந்து போட்டோ ஸ்டுடியோவுக்கு ஓடி, அங்கிருந்த ஒருவரை, "அண்ணா... பைத்தியம் வருது..!
தொரத்துங்ணா..!" என்றாள். அவர் எதுவும் சொல்வதற்குள், அவர் 'ஃபோன்....ஃபோன்....' என்று சொல்லிக் கொண்டே மஞ்சள் டெலிபோனை நெருங்கி விட்டார். அந்தப் பெண் தைரியம் பெற்று, "ஃபோன் ஒர்க் பண்ணலை..' என்று கத்தினாள். அவர் அதைப் பொருட்படுத்தாமல், சிரித்துக் கொண்டே, ரிஸீவரை எடுத்து, ஏதோ எண்களை அழுத்தி, "ஹலோ..!" என்றார்.

அவர் யாருக்கு கால் செய்திருப்பார் என்ற கேள்வியில் ஒரு சிறுகதை இருக்கின்றது.

நன்றி.

Thursday, December 17, 2009

சுட்டாலும் மேன்மக்கள்...

வெயில் பட்டையில்
எச்சில் துப்பினேன்.
வானவில் காட்டியது.

Tuesday, December 15, 2009

Tibetan Meditation Musiq.

திபெத் பற்றி ஏதோ தேடிக் கொண்டிருந்த போது, இந்த இசைக் கோர்வை கிடைத்தது. கேளுங்கள்.

Viva Forever.Do you still remember how we used to be
Feeling together believe in whatever
My love has said to me
Both of us were dreamers Young love in the sun
Felt like my saviour My spirit I gave you
We'd only just begun
Hasta Manana Always be mine
Viva Forever I'll be waiting
Everlasting Like the sun
Live Forever for the moment
Ever searching for the world
Yes I still remember every whispered word
The touch of your skin, giving life from within
Like a love song that I've heard
Slipping through our fingers, like the sands of time
Promises made, every memory saved
Has reflections in my mind
Hasta Manana, always be mine
Viva Forever, I'll be waiting
Everlasting, Like the sun
Live Forever, For the moment
Ever searching, for the world
But we're all alone, was it just a dream
Feelings untold, They will never be sold
And the secrets safe with me
Hasta Manana, always be mine
Viva Forever, I'll be waiting
Everlasting, Like the sun
Live Forever, for the moment
Ever searching, for the world!

***

http://www.lyrics007.com/Spice%20Girls%20Lyrics/Viva%20Forever%20Lyrics.html

***

Saturday, December 12, 2009

ஆயிரமாயிரம் துளிகள்...!!!

ல்லிகை முத்துக்கள் வெண்ணிற விளக்குச் சுடர்களின் தலைகீழாய் நின்றன. ஒன்றன் பின் ஒன்றாய்ப் பனிச் சுழிகள் மெல்ல நகர்ந்து கொடிகளின் மென்மையான பசிய உடல்களை நனைத்து தீர்ந்தன. துல்லியப் பனிச் சரகம் ஒன்று மதுக் குப்பி மணம் போல விரவிக் கொண்டிருந்தது. உள்ளார்ந்த மடிப்புகளோடு வளைந்து சரிந்த மலை முகடுகளின் நிழல் ஒதுங்கிய ரகசிய ப்ரதேசங்களில் கனவுகள் தாழிடப்பட்டிருந்தன. மிதக்கும் ஈரக் கொத்துக் கொண்டல்கள் தம் நுரை தேகங்களில் குளிர் பதுக்கிச் சிலிர்த்தன. இன்னும் நீலம் கரைந்திராத பிரபஞ்ச வானம் ஒன்றின் தனித்த நிலவு, அதன் மேனிக்குள் பொதிந்து வைத்திருந்த பால் நுரைகளைத் ததும்பத் ததும்ப பொழிந்து கொண்டிருந்தது.

வனத்தின் மேற்கேயிருந்த மூலைகளில் இருந்து பெயர் தெரியாத நுணுக்க ஓசைகள் கிளம்பி வந்தன. புகையும் ஒரு குளிரின் மரகத ஆடைகள் தம் ஜரிகைகளில் எழுதிக் கொள்ள தூரத்துச் சிகரங்களின் விளிம்புகளில் கோடிட்டிருந்த மஞ்சள் ரசத்தைத் வழித்து எடுத்துக் கொண்டன. ஓடும் மழை மேல் வானிலிருந்து ஒரு நதி செங்குத்தாய்ப் பாய்ந்து கொண்டிருக்கையில், ஆயிரமாயிரம் நீர்ச்சிலந்திகள் எங்கெங்கும் ஜனித்து உடனே கரைந்தன.

கொத்துக் கொத்தாய்த் தலைக்கு மேல் திரண்டு விட்டிருந்த முகில்கள் தமக்குள் முத்தமிட்டுக் கொள்கையில் நனைந்த பூமியின் ஒரு மேலாடை செம்பழுப்பாய்க் கரைந்து ஓடியது. திசைகளில் சொல்ல முடியாத நேரங்களில் இடிகளின் ஆவர்த்தனங்களில் காட்டின் பூக்கள் நடுங்கின. மரங்களின் இடுக்குகளில் கனிந்த இருள் பச்சை நிறத்தோடு நனைந்தது. மாலை நேரத்தின் மந்தகாச மரணம் மெல்ல மெல்ல மலர்ந்து கொண்டிருக்க, கருமை தடவிய இரவின் பிறப்பு மழை சொல்லும் வார்த்தைகளோடு இரைச்சலாய் நிகழ்ந்தது.

தாரை தாரையாய் ஊற்றும் நேர்க் கோடுகளில் சலசலக்கின்றது இம்மாமழை. பெய்யும் போதும், பெரு மரங்களின் பட்டைகளைப் பறித்துக் கொண்டு பாய்கின்றது. சின்னஞ்சிறு செடிகளைச் சுற்றி வட்டம் போட்டுக் கரைத்து ஓடுகின்றது. மண் மேடுகளின் மேனி தழுவி, அணைத்து, தன்னோடு உள்ளிழுத்து, பாறைகளின் மேல் 'ஹோ'வென மோதி, கோடானு கோடி நுரைகளாய்த் தெறிக்கின்ற போது, அத்தனைத் துளிகளிலும் ஆயிரம் மழைப் பிம்பங்கள் பதிகின்றன.***

இவன்..!

மழை ரகளை.

ஒரு மழை நாளின் இரவில்.

மழை பொழிந்த வானமும், மனதில் கிளர்ந்த கானமும்..!

மழை பெய்தலினால்...!

தூறல் போடும் மேகங்கள்.

பனி விழும் மலர்வனம்...

அறுபதைத் தொடும் ஆகாயம்.

Many Many Happy Returns of the day to our beloved SuperStar...!!!!!!!!!Enough told.Let the Almighty continues to give thalaivar the needs he required and what he could handle best.***

மோக்ளியின் ஷா - இன் -ஷா.

ஷா - இன் - ஷா என்ன சொன்னார்?

நீ ரஜினி ரசிகனா? ரஜினி வெறியனா? - பதில்.

ரஜினியும் நாசரின் முகமும்...!

பாபா.

ARR - இளம் பேட்டி.

பல்லாக்கைத் தூக்காதே... பல்லாக்கில் நீ ஏறு!

Tuesday, December 08, 2009

தமிழ்ப்பதிவர்ச் சங்கமம் - 2009 - ஈரோடு - அழைப்பு.ந்த மாட்டுத் தொழுவத்தில் வைக்கோல்கள் குவிக்கப்பட்டிருந்தன. விளக்கு வெளிச்சம் மிகக் குறைவாக வைக்கப்பட்டிருந்தது. தாங்கள் அங்கே இருப்பதை உலகுக்குக் காட்டிக் கொள்ள விரும்பாத சிலர் அங்கே குழுமியிருந்தனர். அவர்கள் தங்கள் நாட்டு மன்னனின் கொடுங்கோலுக்குப் பயந்து கழுதை மேல் ஏறித் தப்பித்து வந்தவர்கள். இரவிலிருந்து பனி ஒழுகித் தரையெங்கும் நனைந்து கொண்டிருந்தது. மிக இலேசான காற்று மட்டும் சத்தமேயில்லாமல் அந்தத் தொழுவத்தின் ஈசல் இறகு போன்ற கூரைகளைத் தடவிச் சென்றது. மேகங்கள் இருளில் கரைந்த பெருவெளியின் கீழே புள்ளியாய் மினுக்கிய ஒளித்துகள்கள் மிதந்து கொண்டிருந்த மெளன வேளையில் அந்தத் தொழுவத்தில் அவள் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். குழந்தை விரல்களைச் சுருட்டிக் கொண்டிருந்தது. அங்கிருந்த செம்மறி ஆடுகள் தம் பரவசம் நடுங்கும் கண்களோடு அந்தத் தேவகுமாரனைப் பார்த்துக் கொண்டிருந்தன. அவனுடைய பஞ்சு விரல்களுக்கிடையே இருந்த ரேகைகளில் 'அயலாரிடத்திலும் அன்பு செய்யுங்கள்', 'வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே, என்னிடத்தில் வந்து இளைப்பாறுதல் பெறுங்கள்' என்று எழுதியிருந்தன. அந்த உள்ளங்கைகளின் மென்மையில் பின்னொருநாள் ஆணிகள் இரத்தத்தால் முத்தமிடும் போது, அவனது சிவந்த அதரங்கள் 'அவர்கள் அறியாமல் செய்கிறார்கள். அவர்களை மன்னித்து விடும்..!' என்று பரமபிதாவை வேண்டிக் கேட்டுக் கொள்ளப்போகின்றன.

அந்த இரகசியத்தை அறிந்த ஒரே ஒருவனாகிய அந்த பிதா கரைந்து அழுத ஒற்றைச் சூட்டுத் துளி ஒரு விண்மீனாகிச் சில குருமார்களை நெடுந்தொலைவில் இருந்து அந்த மரியாள் மகன் உதித்த, மாட்டுத் தொழுவத்திற்கு அழைத்து வந்து, வரும் 20 டிசம்பரோடு கிட்டத்தட்ட இரண்டாயிரத்துப் பத்து வருடங்களுக்கு மேலாகப் போகின்றன.

அந்த ஞாயிற்றின் பிற்பகலும், மாலையும் முத்தமிடும் நேரத்தில் ஒரு 'தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு' நடைபெற இருக்கின்றது. எங்கே..? ஈரோடு மாநகரில், பெருந்துறை ரோட்டில் கலெக்டர் ஆபீஸுக்கு அருகே லோட்டஸ் ஷாப்பிங் சென்டர் இருக்கின்றது. அதற்குப் பின்புறத்தில் பில்டர்ஸ் அசோஷியன் ஆஃப் இந்தியா ஹால் இருக்கின்றது.

அந்த ஹாலின் செயற்கை குளிர்ப் பொழிவில் நனைந்து கொண்டே சூடான விஷயங்களை அலசலாம்; அறையை நிரப்பியிருக்கும் மஞ்சள் வெளிச்சத்தைப் பூசிக் கொண்டு, எழுத்துக்கள் மூலம் மட்டும் கண்ட தமிழர்களோடு பேசலாம்; இரவு உணவைச் சுமந்து கொண்டு இன்னும் கொஞ்சம் நாம் நெருக்கமாகிக் கொள்ளலாம்; அதன் பஞ்சு பதுக்கிய நாற்காலிகளில் அமர்ந்து நம் நெஞ்சுக்குள் இன்னும் நேசம் சேர்த்துக் கொள்ளலாம்.

வாருங்கள். மஞ்சள் மாநகரில் இருந்து எழுதும் பதிவர்கள் கூட்டிணைந்து அழைக்கிறார்கள்; அழைக்கிறோம். இராமானுஜன் பிறந்த மண்ணிற்கு அழைக்கிறோம்; பெரியாரின் பூமிக்கு வரவேற்கிறோம்; காவிரி வளம் பாயும் கவின் நகருக்கு உங்கள் அனைவரையும் எதிர்நோக்குகிறோம்; கொங்கு மண்டலத்தின் செழிப்பைக் காண, மண்ணின் மரியாதையை மனதோடு உணர தமிழ் வலைப்பதிவர்களை வழி பார்க்கிறோம்.

ஓர் ஓய்வு நாளின் மதியம் மூன்றரையிலிருந்து ஏழு மணிக்குள் நாம் பார்க்க விரும்பும் பதிவர்களையும், நோக்க விரும்பும் நண்பர்களையும் நேரில் பார்க்கலாம்.

எங்கே ::

பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா ஹால் (ஏ/சி),
லோட்டஸ் ஷாப்பிங் சென்டர் பின்புறம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்,
பெருந்துறை சாலை,ஈரோடு - 11.

என்று ::

20.டிசம்பர்.கி.பி.2009.

எப்போது ::

மதியம் 15:30 முதல் குறைந்தது 19:00 வரை.

எப்படி வருவது ::

ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து ஆட்டோவில் வரலாம். நடந்து வர விரும்புபவர்கள், பேருந்து நிலையத்திலிருந்து மேற்குத் திசையில் நடந்து வந்தால், அபிராமி, தேவி அபிராமி தியேட்டர் காம்ப்ளக்ஸ் வரும். அந்த தியேட்டர்களைப் பார்த்து நிற்கும் போது, உங்கள் இடது கைப்புறமாக ஒரு சாலை இருக்கும். அதனை ஒட்டியே நடந்து வந்தால், ஒரு பத்து நிமிடங்களுக்குள்ளாக தங்க முலாம் பூசிய எம்.ஜி.ஆர். நடு ரோட்டில் நிற்பார், ஒரு திசையைப் பார்த்து விரல் நீட்டி! நீங்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும், அவர் காட்டும் வழியில் ஒரு சாலை வரும். அதில் தான் நடந்து வர வேண்டும். வந்தால், பதினைந்து நிமிடங்களுக்குள்ளாக இரண்டு 'S' வளைவுகளைக் கடந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரும். அங்கிருந்து பார்த்தால், லோட்டஸ் சென்டர் தெரியும். பிறகு நீங்களே வந்து விடுவீர்கள்.அல்லது பெருந்துறை/நசியனூர் செல்லும் பேருந்துகளில் டிக்கெட் எடுத்தும் 'கலெக்டரேட்' நிறுத்தத்தில் இறங்கிச் சுற்றுமுற்றும் பார்த்தால் கண்டு கொள்ளலாம்.

நீங்கள் ரெயில் ஏறி வருவதாக இருந்தால், ஸ்டேஷனில் மறக்காமல் இறங்கி விட வேண்டும். தூங்கி விடாமல் இருப்பது பர்ஸுக்கு நலம் பயக்கும். ஸ்டேஷனுக்கு வெளியே வந்தால், 'பாட்ஷா'க்கள் அன்போடு அழைப்பார்கள். விரும்பினால் ஏறிக் கொண்டு ஸ்தலத்திற்கே கெத்தாக வந்து இறங்கலாம். வீட்டில் சரியாக கணக்கு காட்ட வேண்டியவராக இருந்தால், ஜங்ஷனுக்கு வெளியே பேருந்து நிலையம் செல்லும் பேருந்துகள் வந்து கொண்டே இருக்கும். அதில் ஏறி நிலையத்தை அடைந்து, பின் முன் சொன்ன வழிகளைப் பின்பற்றி வந்து சேரலாம்.

நீங்கள் விமானத்தில் பறந்து வருவராயின், ஈரோட்டில் இன்னும் விமான வெளி இல்லாததாலும், பெருந்துறையில் ஜென்மங்களாய் அதற்கான பணிகள் நடந்து வருவதாலும், வேறு வழியில்லாமல் கொங்கு மாநகர்க் கோவையில் தான் இறங்கியாக வேண்டும். பீளமேட்டில் தான் நிலையம் உள்ளது. அது நகர் மையத்தில் இருந்து ஓர் இருபது கி.மீக்கள் இருக்கும். ஏர்போர்ட்டில் இருந்து வெளியே வந்தால், தேசிய நெடுஞ்சாலை 47 ஒரு தார்ப் பட்டாடை போல் ஜொலிக்கும். அங்கே பேருந்து நிறுத்தத்தில் ஈரோடு பேருந்து ஒன்றைக் கேட்ச் செய்யலாம். மற்றவர்களை விட, நீங்கள் கொஞ்சம் எளிதாக வரலாம். ஆம், ஈரோட்டுக்குள் நுழையும் கோவைப் பேருந்து, 'கலெக்டரேட்'டைக் கடந்து தான் நிலையம் சென்றாக வேண்டும். எனவே நீங்கள் நம்பிக்கையாய் நடத்துனரிடமும், இன்னும் உஷாராய்ப் பக்கத்துப் பயணியிடமும் சொல்லி வைத்து, 'ஜூம் டி.வி. தி நெக்ஸ்ட் மீடியாவில்' வரும் ஜோதிகாவின் அழகை நூற்று இருபத்தேழு முறைகள் பார்த்து முடிப்பதற்குள், தலத்தை வந்து சேரலாம்.இன்னமும் உங்களுக்கு குழப்பம் தான் என்றால், கீழ்க்காணும் மண்ணின் மைந்தர்களை அலைபேசியிலோ, பேட்டரி தீர்ந்தால் ஒரு ரூபாய் காயினிலோ அழைத்தால், காலோடு Call-ஆக வந்து கூட்டிப் போவார்கள் என்பது திண்ணம்.

வால்பையன் 99945-00540
ஈரோடு கதிர் 98427-86026
ஆரூரன் 98947-17185
பாலாசி 90037-05598
ராஜாஜெய்சிங் 95785-88925

இந்தப் பதிவர்ச் சங்கமத்தில் சில குறிக்கோள்கள் வைத்திருப்பதாகத் தெரிகின்றது.

* பதிவர்களுக்கிடையேயான அறிமுகம்
* நட்பை மேம்படுத்துதல்
* பதிர்வர்கள் வாசிப்பாளர்கள் பரஸ்பரம் சந்திக்கும் வாய்ப்பு
* பதிவுலகம் பற்றிய சந்தேகங்களுக்குத் தீர்வு
* எழுதுவது பற்றிய தயக்கத்தைத் தகர்த்தல்
* சமூகம் மற்றும் இலக்கியம் சார்ந்த பகிர்வு

மேற்கண்ட வரிகள் உங்களுக்கு கொஞ்சம் 'கேராக' இருந்தால், உங்களைத் 'தக்க முறையில்' கவனிப்பது என வால்பையன் உறுதியளித்துள்ளதாக காற்றுவாக்கில் செய்தி கிடைக்கின்றது. எனவே கலக்கம் வேண்டாம்; கலக்க மட்டும் வேண்டும்.

அந்த மனுஷ்யகுமாரன் வழங்கிய திராட்சை ரசத்தின் மகிமை அன்று நம்மை நனைக்கட்டும். ஆமென். :)

***

கதிர் பதிவு

வால்பையன் பதிவு

ஆரூரன் பதிவு

Monday, December 07, 2009

மொக்ஸ் - 17.Feb.1999 (?)

போன வாரம் வீடு மாற்றினோம் அல்லவா..? அதில் கிட்டத்தட்ட எடைக்குப் போய்விட்ட மூட்டைக்குள் இருந்து ஒரு நோட்டைக் கைப்பற்றினேன். சொல்லப் போனால் மீட்டேன் எனலாம். அந்த நோட்டிற்கு வயது இப்போது பத்து.

கொஞ்சம் மஞ்சள் பூசிக் கொண்டிருந்த அதன் தாள்களைப் புரட்டும் போது, அப்போதைய துளி நான் தெரிகின்றேன்; என் ஆர்வங்கள் தெரிகின்றன.

முதல் பக்கத்திலிருந்து பார்த்துக் கொண்டு வருகிறேன்.

ஆவர்த்தனப் பண்புகள் என்று சில வேதியியல் குறிப்புகள். பின் சடாரென டாபிக் மாறி, வெக்டர் அல்ஜீப்ராவின் சில ஃபார்முலாக்கள். பிறகு வரிசையாக ட்ரிக்ணோமெட்ரிக் சம்ன்பாடுகள். சில பக்கங்களில் எரிபொருள் இல்லாமல் காற்றின் வீசு விசையாலேயே வண்டி ஓடச் செய்யும் மெக்கானிக் இன்னொவேட்டிவ் மெதடின் பென்சில் டயாக்ராம். எப்படி அவ்வாறு சிந்தித்தேன் என்று இன்று புரியவில்லை. I born intelligent; education ruined me. :)

பரீட்சை சமயங்களுக்கான சில டைம் டேபிள்கள். திடீரென ஒரு C நிரல். அதில் ஒரு வாக்கியத்தில் எத்தனை vowels, எத்தனை consonants என்று அறிவதற்கான எளிய முறை. ஒரு பக்கம் முழுக்க ஸ்ரீ ராமஜெயம். அவ்வளவு தான். முன் அட்டையிலிருந்து படித்துக் கொண்டே போனால் முடிந்து விடுகின்றது.

இப்போது நோட்டின் பின் அட்டையிலிருந்து தலைகீழாகப் படித்துக் கொண்டே வந்தால், முதலில் நீர்த்த கரைசல்கள் என்று துவங்கும் ஒரு வேதி வாக்கியம். தொடர்ந்து முழுதும் எனது புதுமையான 'சமன்பாடு உருவாக்கங்கள்'. இயற்பியல், கணிதம் என்று வேறு வேறு துறைகளில் சில முயற்சிகள்.

இன்பினிட்டி மேல் அத்தனை பிரியம் இருந்திருக்கின்றது. 0 மற்றும் இன்பினிட்டிகளை வைத்துக் கொண்டு என்னென்னவோ செய்திருக்கிறேன். 0/0 = 1, 0*இன்பினிட்டி = 0 அல்லது +- 1, sin(0/0), மதிப்பு கண்டுபிடித்தல், 0-இன்பினிட்டி = இன்பினிட்டி என்ற கணிதக் கிறுக்குகளுக்கு இடையே அவ்வப்போது, pkw = pka+pkb+2log(alpha) என்ற வேதிச் சமன்பாடு எழுதி, பின்னாடியே m/myu = 0.7362* 10 to the power of -50 - (1) மற்றும் lemda*m = 2.2086*10 to the power of -42 -(2) 'எனவே, பொருள் அல்லது ஒளிமூலத்தின் நிறையை அழ்திகரித்தால், அது வெளியிடும் ஒளியின், 1) அலைநீளம் குறையும், 2)அதிர்வெண் அதிகரிக்கும்' என்ற ஓர் இயற்பியல் முடிவு எழுதியிருக்க, இறுதியாக 1=2 என்ற விசித்திர முடிவு வேதியியல் சமன்பாட்டில் முயல்கையில் எட்டிப் பார்க்கின்றது.

சில பக்கங்களில் மதன் கார்ட்டூன்களைப் பிரதியெடுக்க முயன்றிருக்கிறேன். ஒரு ஆங்கிலக் கவிதை கண்ணில் படுகின்றது.

Only You..!

Now what I say to you!
Your eyes when touch my heart!
Now what I do to you!
Except, share my world with you!

You are not in here, but
My thoughts all in your near!
The time makes me to leave you,
When we see, say you!

I search you in the garden
In the sky, In the tars, In the rain..!
You're not in these things,
They lost their wings..!

When you search in the air, you hear
My long live sad in my tears!
When we meet in any time!
There is no words to talk with us.!

In many distance to the moon
The distance comes to our home!
How many distance with us,
My love will haven by you!

When my legs go to the heaven,
My thoughts want to touch you!
When the fire burns in my body,
The eyes want to see you, only you..!

-r.vasantha kumar.
17/02/99: 10:15

யாருக்காக இப்படி உருகி உருகி எழுதியிருக்கிறேன் என்றே தெரியவில்லை. ஒரு உயிர்க் கசியும் காதலுக்கு அதைக் கொள்ள ஒரு பெண் கூட தேவையில்லை என்பதே புரிகின்றது.

ஆங்கிலப் பிரயோகம் 99லிருந்து இந்தப் பத்து வருடங்களுக்குள் ஓர் இஞ்ச் கூட முன்னேறவேயில்லை என்பதைத் தான் முந்தின சிறுகதையும், இந்த கவிதையும் சொல்லி விடுகின்றன.

"வாழ்வோ தாழ்வோ நிரந்தரம் இல்லை. இது பயணம். போகிற வழியில் ஒரு பூ கிடைக்கும். ஒரு முள் குத்தும். ஒரு கல் தடுக்கும். ஒரு நிழல் ஆசுவாசப்படுத்தும். வெயில் கொளுத்தும். சந்தோஷமா மழை கொட்டும். பசிக்கு ஒரு கனி கிடைக்கலாம். கொண்டாடவோ, திண்டாடவோ எதுவும் இல்லை.

இது பயணம்...!"

-டி.என். சேஷகோபாலன்
(04.01.98 - ஆனந்த விகடன் - 133)

பக்கங்களுக்கிடையில் கிடைத்த எழுதி வைத்த பத்தி, இந்த நோட்டெங்கும் விரவியிருக்கும் அப்பாவின் வாசத்தை நினைவுபடுத்துகின்றது. இதற்காகத் தான் இந்தப் பத்தியை அப்போது எழுதி வைத்தேனோ, என்னவோ..!!!

Indianness.

டெல் கணிணி நிறுவனத்தார் ஒரு விர்ச்சுவல் ஸ்டுடியோ நிர்மாணித்து, அதில் 1. வரைகலை, 2.நிழற்படக்கலை, 3.எழுத்துக்கலை ஆகியவற்றில் தேசம் எங்குமிருந்தும் படைப்புகளை வரவேற்றார்கள். கஸின் பாலாஜி சொல்லித் தான் இப்படி ஒன்று நடப்பதாக அறிய வந்தேன். உடனே எங்கோ சுறுசுறுவென்றது. ஆங்கிலத்தில் எழுதும் ஒரு வாய்ப்பு என்பதாலும் முதல் இரண்டிலும் இப்போதைக்கு எனக்கு போதை இல்லை என்பதாலும், மூன்றாவதில் இறங்க முடிவெடுத்து, சில வகைகளில் எழுதலாம் என்று சார்ட் போட்டு வைக்க, மடிக்கணிணியின் திடீர் உறக்கத்தில் அத்தனையும் எழுத முடியாமல் போனது. மூன்றே மூன்று மட்டும் எழுதிக் கோர்த்திருந்தேன்.

அதில் ஒன்றான Indianness என்ற இச்சிறுகதையைக் கீழே படிக்கலாம். வழக்கம் போல் இலக்கணக் கற்களைப் பொருட்படுத்தாமல் விட்டு விடுங்கள்; இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாகக் கற்று வருகின்றேன்.

The following was what happened, during my last visit to India. It was my first visit too.

Hai, I am John. I run a medium level computer company at Westbourne. Apart from looking excel sheets and worrying about the shares, I have one more activity which boosts my spirit. Travel. I love traveling. I visited enough countries where euro gets accepted with a smile. I experienced a lot in the lands. Once I was in Congo and swam over the waves of Nile, I was a bit escaped from a gun shot. At Afghan, I met a wonderful friend named Mr.Rasoul. Even now, he sent mails frequently.

The idea of visiting India came from one of my off-shore partner Mr.Dinesh Chawla. He runs a small software developing company with less than thirty employees at Gurgaon. After some casual chats, we came to a plan that I have to visit his company and design our strategies for the next year. And I could travel as per my wish.

My preference was Kanpur. Surprised..?

The very first thing, which I came to know about India, was neither Mahatma Gandhi nor TajMahal. It was the 1857 Indian Mutiny. My mother told me about that very long back. I never forget her lines, "Honey..! This picture was my grandpa Mr.William Atkinson. Your great grandpa. There was a country named India. Once it was under East Indian Company rule. He was a soldier in an army troop at Kanpur, a small town then. On 1857 there was a mutiny happened. At that time he was killed by an Indian chepoy." He was sitting on a chair in that old picture. His eyes showed the power.

Clearly, the story of my ancestor getting killed in India didn't make me to think about my decision twice. I tried to learn some Hindi words. I searched some websites to know about India. And, I traveled to Delhi last July.

The conveyer belt in Delhi International Airport, sucked. It didn’t roll for a long time. I turned around and found my package and took all my travel accessories. After getting out of the security checkups, I called Dinesh. He was waiting for me at the lounge. After greeted ourselves, we walked out of the centralized AC building. Immediately I was caught under the hard and hot hands of Mr. Sun. Suddenly I thought about my g.grandpa who worked under the same sun, one and half centuries back.

After two days of official meetings, I started to travel towards Kanpur. Dinesh could not come with me, since his mother was serious at that time. One of his office mates Mr.Varun Malhotra accompanied me. He was a young man. We traveled by a tourist cab. He talked a lot. And slowly he delved into sleep. I was awakening. I stopped the cab often, to take enough good snaps of the sceneries around us.

Agra was on the way. But I was more interested on a well which succumbed enough of British dead bodies of ladies and children than a huge building for a single queen. So I skipped it. Now the well wasn’t there at Kanpur. Instead there was an 'all souls church'. I wished to pray there for my ancestors.

When we reached Akbarpur, the cab broke down, unexpectedly. The A/C was getting off. Varun got up and he himself getting sweated immediately. No need to tell about me. He enquired the status of the cab and the driver replied. From what Varun told, I came to know that the cab won’t move within two hours. Damn..!

I got out of the car. The town was getting fried. And a foreigner is always an attractive specimen. The children, the walkers, cyclists and the old men who sat idle in the shops looked me. The driver dived into the engine. Varun checked his mobile to arrange another cab or scolding the cab owner, I didn’t know. It was dead. He went to search for a PCO box. At that time, a cyclist stopped his cycle near to me and stared me closely. Was I looked to him as an actress..?

"Hai..! I am Nandalal. I am a school teacher. If you can’t bear the Indian heat, you can come to my home for some time to take a little rest..!"

"Hai..! I am John from England!" I replied. We shaked our hands. His English was broken. Yet I understood that. I couldn't refuse the offer for two reasons. First thing, as he told I couldn’t stand under this raging sun. Second, the traveler inside me instructed, to meet different people. I looked for Varun. He wasn't nearby. I joined him. I took my camera and sat the back of the cycle. Oh..! my back..!!

His house was a far outer from the NH91. Three cows were standing there sleepily inside their own kettle. By seeing us, within a second a small crowd came and surrounded his home. Isn't a rare scene that a Whiteman was sitting behind a bicycle and their neighbor riding it?

We entered his home. The windows were open and filled with faces enough to block all the sunlight and flies, tried to come inside. His wife and children were standing and staring me with a shy.

"Sorry..!" He told to me and told something to the neighbors in Hindi. The crowd slowly vanished. I started to look the house.

A TV stand was there. Some dance was running in the TV. Some books were present. Some goddesses were hanging on the walls. A tube light was blinking. A fan was trying to revolve but failed considerably. "Low voltage..!" he told. And, I saw a lengthy knife was framed and kept on high.

I looked that with interest. He came with a plate of sweets and glass tumbler of water. He noticed my looking and told, "It was one of our ornaments from the past. My ancestors used it during the wars in ancient times. Lastly it was used by my great grand father during...! Please take the sweets...” he sat in a nearby chair.

I got that he didn’t complete the sentence. I asked," Can you tell me where it was used lastly..?"

He was silent for some time and told. "During the 1857 mutiny at Kanpur..!"

Now it was my turn to be silent. Then I told, "Dear Nandalal..! Do you know one thing..? My name is John Atkinson. My great grandpa was a soldier in a British army troop during that time. He was killed then..!"

Nandalal was shocked. "Are you related with Atkinson..?” I nodded. "This knife was getting bathed with a river of blood on that fateful day. It might touch your grandpa too..!"

Uneasiness surrounded us. The situation was so dramatic. The third generation of two enemies fought for their own kingdoms, met in a dry July month. From somewhere, the sound of a crow flying came. The dusk was approaching.

"Mr.Atkinson. I have a gift for you!" He told and went inside of a room. I saw the nearby one. One of his children smiled. I called him. He looked his mother's face for approval. She nodded. The boy ran towards me. I wondered how the children in India respect their parents.

I took him and kept on my lap.

"naam kya..?" I learnt some words before starting to India.

"Krishna...” the voice was so powerless.

Nandalal came with a box. It was very old. Layer after layers of dust were present on it. He opened it slowly. The noise itself told that inside of the box got fresh air after so many years. He took a small box. He opened it. A small ring was present there.

"Mr. John Atkinson! This ring was your grandfather's. The name 'Atkinson' was present on it. My grand father robbed enough of prosperity that day. I suspect he had stolen from your grandpa after killing him. It was a sin carrying this with us. Now today is the day which our sin gets vanished. Please take this..!"

I was dumb struck.

This was their property. My countrymen came here to do business and then captured the entire nation. They robbed India for more than two centuries. The entire wealth ness generated here was taken to England’s wellness. But this poor school teacher tried to return what his grandpa looted from mine long ago.

Is this the one which makes this country sustain for her entire history..? Does this humanity of her children make her alive under all her invaders? Is this Indianness, the world has to learn?

Yes, here the mobile didn’t work. The land was as hot as the sun attacked directly. The roads were damaged. The poverty was high. But the humans are there. The real humans, who respect the other men, lived there. I read about Gandhi. But, no way could I see him. There, I have seen the ideology of Mahatma in Nandalal. If India was filled with Mahatmas, who will win this country..?

I felt, my eyes were wet.

I told, “Dear lovable Nandalal..! I was grateful to get this ring from you. You really proved, you are a real son of this country. I respect that. But I can’t take this ring. It must be yours..!"

"No John..! This was stolen one. After I found the owner, how can I keep it further? Please take..!"

I thought for a moment. Then I took it. "Nandalal..! Now its mine. So I can use it as my wish, right..?"

"Yes John..!"

I took his son Krishna and opened his right hand fingers and kept the ring. Then I closed his fingers. "Now I gave my property as per my wish..!"

Nandalal was silent. Small tears rolled on his cheeks.

After half-an-hour, I reached the same place where I left NH91. Varun was searching me. And then he was happy after seeing me. We entered into the cab. I waved my hands to Nandalal.

"Ok..! Driver, please go fast to Kanpur, so that we can reach it before night..!"

I told peacefully, "Varun..! Let’s return to Delhi. Now, there is no necessity to see churches. I have seen the godness here itself...!"

He stared me with enough confusion.

படித்துப் பார்த்துக் கருத்து சொன்ன தமிழ்ப்பறவை, 'நாடகீயம் அதிகமாக இருக்கின்றது' என்றார். சில சமயம் சம்பவங்களில் நாடகத் தன்மை இருக்க வேண்டியது அவசியம் என்றே நான் நினைக்கிறேன். இல்லாவிட்டால், இதன் எந்திர இறுக்கம் நம்மை அழுத்தி விடும். மனதளவில் ஃப்ரிக்ஷனைக் குறைக்கச் சில எமோஷனல் நிகழ்ச்சிகள் தேவைப்படுகின்றன.

Tuesday, December 01, 2009

NaNoWriMo.Update.6.Finalந்தப் பதிவிற்குத் தலைப்பாக 'நேனோரிமோவும் திருவள்ளுவமும்' என்று Catchyயாக வைக்கலாமா என்று யோசித்தேன். காரணம், கடைசி நேரங்களில் வள்ளுவரின் சில வரிகள் என்னைக் காப்பற்றின. சொல்கிறேன்.அக்டோபர் மாதக் கடைசியில் நேனோரிமோ களத்தில் பெயர் பதிவு செய்யும் போது, அது அத்தனை கடினமாக இருக்கும் என்று தோன்றவில்லை. முப்பது நாட்களுக்குள் ஐம்பதாயிரம் வார்த்தைகளில் ஒரு நாவல் எழுத வேண்டும். நாள் ஒன்றுக்கு வெறும் 1667 வார்த்தைகள். எழுதும் சில பதிவுகளே, இரண்டாயிரம் வார்த்தைகளைக் கடந்து சர்வசாதாரணமாகப் பறக்கும் போது, தினம் ஓர் ஆயிரம் சுலபமே என்று பட்டது. இடையில் நான்கு வார இறுதிகள் இருக்கின்றன. வார நாட்களில் எழுதாமல் விட்டு விட நேர்ந்தால், சேர்த்து வைத்து எழுதி விடலாம் என்ற முன்முடிவு எடுக்க முடிந்தது. பிரபஞ்சத்தின் தனியான உயிர்க்கோளான புவியின் பெரும்பாலான அத்தனை நாடுகளில் இருந்தும் கொத்துக் கொத்தாகப் பதிவு செய்து கொண்ட போது, 'நம்மால் முடியதா என்ன..?' என்ற நினைப்பு வந்தது. உடலெங்கும் அட்ரீனலின் பலூன்கள் வெடிக்க அந்த உற்சாக முதல் இராத்திரிக்காகக் காத்திருந்தேன்.

முதல் தடை அக்டோபர் மாதக் கடைசியிலேயே துவங்கி இருந்தது. என் மடிக்கணிணி அவ்வப்போது வெள்ளித்திரையைக் காட்டும். கொஞ்ச நேரத்தில் சரியாகி விடும். கொஞ்ச நாட்களில் 'U' பட்டன் சிணுங்க ஆரம்பித்தது. ஒரு மாதிரி சரிப்படுத்திக் கொண்டு பயன்படுத்தினேன். சொல்லாமல், கொள்ளாமல் ரீ-ஸ்டார்ட் ஆகி, எழுதியவற்றைக் காற்றில் கரைய வைத்தது. மாத இறுதியில் பொசுக்கென்று உயிர் விட்டது. வாங்கிய கடையில் கொண்டு காட்டினால், 'வாரண்டி காலி. சேர்த்து விட்டுப் போ. சரிப்படுத்தி பில் தீட்டுகிறோம்' என்றார்கள். ஊரில் சென்று பார்த்துக் கொள்கிறேன் என்று எடுத்து வந்து விட்டேன்.

நவம்பர் முதல் தேதி, ஒரு ஞாயிற்றுக்கிழமை. ஊரில் இருந்தேன். என்ன எழுதுவதென்று ஓரளவிற்கு மட்டுமே முடிவு செய்திருந்தேன்.

எஞ்சினியரிங் கல்லூரியின் முதலாண்டு முடிந்த மே மாதத்தின் வெய்யில் நிறைந்த நாட்களில் ஓர் இருபது நாட்கள் என்.சி.சி. ஆர்மி கேம்ப்புக்காகச் சென்றிருந்தோம். அது சென்னை மாநகரின் அருகில் அப்படி ஒரு வனாந்தரப் பிரதேசம். அங்கு கொண்டாடிய நிகழ்வுகள் அடி மனதின் ஆழத்தில் தேங்கியிருந்தன. அந்தப் பின்புலத்தில் நான்கு முதலாண்டு மாணவர்களைச் சொல்லலாம் என்று ஒரு பனிப் படலமான ஐடியா தோன்றியது.

அவர்கள். மாநிலத்தின் வெவ்வேறு பேட்டைகளில் இருந்து வருகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவுகள். வெவ்வேறு மனநிலைகள்; தனித்தனியான ஏரியாக்களில் திறமைகள்; வெவ்வேறு துறைகள்.

பவன் பிரமாதமான கிரிக்கெட் மற்றும் கிடார் விளையாடி; கொஞ்சம் அறிவாளி; இசைப் பிரியன். இவனுக்கு ஒரு காதல் வருகின்றது. என்.சி.சி. கேம்பிற்காகச் சென்ற இடத்தில் ஒரு கிராமத்துப் பெண் தன் தைரியங்களால் இவனைக் கவர்கிறாள்.

ரிதம் சென்னைப் பையன்; ஹாஸ்டல் வாழ்க்கையை அனுபவிக்கவே விடுதியில் சேர்கிறான்; இயற்பியல் மேல் பைத்தியம்; இவனுக்கு ஒரு பெங்காலிப் பெண் மேல் முதல்-பார்வைக்-காதல் வந்து விடுகின்றது.

வினோத் ஒரு ஜாலி பேர்வழி; இவன் மெக்கானிக்கல் துறை என்றாலும் எலெக்ட்ரானிக்ஸ் மேல் தீராப் பிரியம்; பெண்களைக் கவர்வதில் வல்லவன்; கிரிக்கெட் பிடிக்காது; கால்பந்து ரசிகன்;

கெளசிக் அமைதியானவன்; நிறையப் படிக்கப் பிடிக்கும்; கொஞ்சம் இயற்பியல் ஆர்வம் உண்டு; கவிதைகள் கிறுக்குவான்; சிறப்பானவன் இல்லை; கல்லூரியில் நூறு பேருக்கு இவனைத் தெரிந்தால் அதிகம். ஆனால் இவனுக்கு நட்பு முக்கியம். நண்பர்களுக்காக எதுவும் செய்வான். அவர்களுக்கு ஏற்படுகின்ற பிரச்னைகளுக்குத் தீர்வு சொல்வதில் சமர்த்தன். இவனுக்கு ஒரு மறக்க முடியாத பள்ளிக் காதல் இருக்கின்றது. அவளைத் தொலைத்து விட்டான். கதை இவன் பார்வையில் சொல்லப்படுகிறது. இவன் கொஞ்சம் கொஞ்சம் நானே! :)

தவிர இவர்களுக்கு கான்ட்ரடிக்ஷனுக்காக அமன் கான், பரத், ரவி, திலக் கொஞ்சம் சீன்களில் வருகிறார்கள்.

இவர்கள் மிகச் சாதாரண மாணவர்கள். சென்னையின் ஒரு புறநகர்ப் பொறியியல் கல்லூரியில் சேர்கிறார்கள். வேறுவேறானவர்கள் இரண்டு விஷயங்களால் ஒன்றுகிறார்கள். ஹாஸ்டல் மற்றும் என்.சி.சி. ஆர்மி கம்பெனி.

மேற்சொன்ன நால்வரின் முதல் ஆண்டு கல்லூரி நினைவுகள், என்.சி.சி. பரேட் நிகழ்வுகள், அங்கே ஒரு 'கொஞ்சம் சேடிஸ்டான' சீனியருடன் ஏற்படுகின்ற மோதல்கள், அவனது பழி வாங்கல்கள், இவர்கள்து பதிலடிகள், ஒவ்வொருவரின் காதல்களுடன் கேம்ப் வருகிறார்கள். அந்த இருபது நாட்கள் ஒவ்வொருவரையும் மாற்றிப் போடுகின்றது. அந்த சம்பவங்கள் இந்தச் சராசரிகளிடம் இருக்கும் வல்லமைகளை வெளிக் கொணர்கின்றன. மீதி நாவலில் படித்துக் கொள்க. :)

இப்படி ஒரு கேரக்டர் சார்ட் போட்டு வைத்துக் கொண்டு கணிணி இல்லாததால் நோட்டிலேயே எழுதத் தொடங்கினேன், அந்த நவம்பர் மாத முதல் நாள் நள்ளிரவில்! ஆரம்பத்தில் என்ன துவங்குவது என்று தெரியாமல் ஒரு prologue மட்டும் கைக்கு வந்த போக்கில் எழுதி விட்டு, முதல் சேப்டரில் நான் கல்லூரியில் சேர்ந்த நிகழ்ச்சிகளை கெளசிக் பேரில் எழுதத் துவங்கி விட்டு, இரண்டாவது சேப்டர் முடித்துப் பார்த்தால், ஒரு பெரிய சிக்கலில் சிக்கிக் கொண்டதை உணர முடிந்தது.

கதையின் களம் என்.சி.சி. கேம்ப். ஆனால் முதல் சேப்டரை கல்லூரியின் முதல் நாளில் அட்மிஷன் ஆவதில் துவங்கி விட்டேன். அப்படியே போய்க் கொண்டிருந்தால், முதலாண்டு முடிவில் வர வேண்டிய கேம்பிற்கு வருவதற்குள் விடிந்து விடும். முதல் சேப்டரில் கல்லூரியில் முதல் நாளைச் சொல்லி விட்டு, இரண்டாவதிலேயே கேம்பிற்கு நகர்ந்து விட்டால், ஒரு சைக்காலஜிக்கல் பிரச்னை வந்து விடுகின்றது. கேம்பிற்குள் நண்பர்களுக்குள் இருக்கும் நெருக்கம், வாசகர்களுக்குப் பிடிபடாது. காரணம், பையன்கள் ஒரு வருடம் கூடவே வாழ்ந்திருப்பதால், ஒவ்வொருவனைப் பற்றியும் ஒவ்வொருவனுக்கும் ஓர் அபிப்ராயம் வந்திருக்கும். அதனை ஒட்டித் தான் கேம்பிலும் நடந்து கொள்வார்கள். ஆனால் வாசகர்கள் அந்த ஒரு வருடத்தை இன்னும் படிக்கவில்லை. எனவே வாசகர்களுக்கும், என் பாத்திரங்களுக்கும் எந்த வித ஒட்டுதலும் இருக்காமல் போய்விடும். அந்நியமாக எட்டிப் பார்க்கப்படுவார்கள். அதை எந்த எழுத்தாளனும் விரும்ப மாட்டான்.

எனவே வாசகர்களும் மனதளவில் அந்த முதலாண்டைக் கடந்து வர வேண்டும் என்று நினைத்தேன். கொஞ்சம் யோசித்த போது, வழி கிடைத்தது.

இப்போது எழுதிய முதல் சேப்டருக்கு முன்பாக ஒரு சேப்டரை கேம்பில் நடப்பதாக மாற்றி விட்டுப் பிறகு வரும் கல்லூரி அட்மிஷனை அங்கிருந்து கெளசிக் நினைத்துப் பார்ப்பதாக மாற்றி விட்டேன். அப்படி முதல் பார்ட் முழுக்க, சேப்டர்கள் கேம்பிற்கும், கல்லூரிக்கும் மாறி மாறி குதித்து நகர்ந்தன. இரண்டு களங்களையும் இணைக்கின்ற புள்ளியை வைப்பதில் மட்டும் துளிச் சிரமம் இருந்தது. சமாளித்து விட்டேன்.

மூன்று வருடங்களாகச் சிறுகதைகள் எழுதும் பழக்கத்தில் சம்பவங்களும், வசனங்களும் எழுதும் லாவகம் மனப்பழக்கம் ஆகி இருப்பதால், என்னை நானே வியந்து கொண்டு அழகாக எழுத முடிந்தது.

இரண்டாவது தடங்கல், எதிர்பார்த்த எந்த ஒரு வார இறுதியிலும் என்னால் அனந்த புரத்தில் தங்க முடியவில்லை. வீட்டில் ஒரு முக்கிய வேலை நடந்து கொண்டிருந்ததால், ஒவ்வொரு வாரமும் வெள்ளி இரவு, வண்டி கட்டிக் கொண்டு கேரளாவைக் கடந்து, சனி, ஞாயிற்றில் சாம்பார் சாதமும், காவிரி ஆறும் கொண்டு மீண்டும் திங்கள் காலை ஆறரைக்கு அனந்தபுர மண்ணை முத்தமிட்டதில் எந்த விடுமுறை நாளும் கதையைத் தொடவில்லை.

முதல் வாரத்தில் எழுதிய ஆறாயிரம் வார்த்தைகளோfஉ இரண்டு வாரங்கள் நழுவி விட்டிருந்தன. எழுதிக் கொள்ளலாம் என்ற ஏளனமா என்று தெரியவில்லை. ரிமோ தளத்தின் ஃபாரங்களில் சென்று பார்த்தால், அதற்குள் முப்பதாயிரம் எழுதியவர்கள் எல்லம் இங்கே ஒரு கும்மி போடுங்கள் என்று இழைகள் வர ஆரம்பித்து விட்டிருந்தன. பயம் பிடிக்கத் தொடங்கியது.

சரசரவென இறங்கினேன். கணிணி இல்லை. மூன்றாம் வாரம் ஊருக்குச் சென்ற போது, அக்கா மாமாவிடம் சொல்லி அவருடைய பரண் மேல் துன்ங்கிக் கொண்டிருந்த கணிணி ஒன்றை வாங்கி வந்து எழுத முயன்றேன். வீட்டில் டேபிள், சேர் இல்லை. எவ்வளவு நேரம் தான் உட்கார்ந்து கொண்டே டைப்புவது? முதுகு வலிக்கும்; அடுத்த ஐநூறு வார்த்தைகளக் குப்புறப் படுத்துக் கொண்டு எழுதினால், கழுத்து வலிக்கும். அவ்வளவு தான். அணைத்து விட்டு தூங்கி விடுவேன்.

ஊருக்குப் போகும் ட்ராவல்ஸ் பஸ்ஸின் இருள் பூசிய நகரும் கண்ணாடிப் பெட்டிக்குள் செல்போன் சுரக்கும் போட்டான்கள் நடனமிட சில சேப்டர்கள் எழுதினேன்; ஜெனரல் கம்பார்ட்மெண்ட்டின் அணையா மஞ்சள் வெளிச்சத்தில், பச்சை வாழை தின்னும் கிழவி குழம்பிப் பார்க்க, பேனா பின்புறத்தைக் கமல் போல் கடித்துக் கடித்து, செருப்பு சுமக்கும் மின்விசிறியைப் பார்த்துக் கொண்டு சில சேப்டர்கள் எழுதினேன்.

கொஞ்சம் கொஞ்சமாக எண்ணிக்கை எகிறத் தொடங்கியது.

நான்கு பகுதிகளுக்கு ஐம்பதாயிரம் வார்த்தைகள்; சேப்டர் ஒன்றுக்கு ஆயிரம் வார்த்தைகள். ஒவ்வொரு பகுதிக்கும் பத்து சேப்டர்கள். சில சேப்டர்களுக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா வார்த்தைகள் சேர்த்துக் கொள்ளலாம் என்று போட்டு வைத்த திட்டம் எல்லாம் மழையில் கறையான் புற்று போல் கரைந்து போனது. உதாரணமாக ரிதமின் லவ் ப்ரோபஸல் பகுதி மட்டும் ஏழாயிரத்தைநூறு வார்த்தைகளைத் தின்று விட்டு, 'இன்னும் கொஞ்சம் காதல் கொடுப்பாயா?' என்று கேட்டது. ஸ்ட்ரிக்ட்டாக 'நோ' சொல்லி விட்டேன்.

ஃபாரம்களில் சில நண்பர்கள் கிடைத்தார்கள். நாட்டிற்கு ஒரு குழு இருந்தது. நமக்கும் ஒரு குழு. அதில் வழக்கம் போல், Chennai Confederacy, Hyderabad Novelists, Kolkata Calvery, Bangalore Nanowrimos, Mumbai Writers என்றெல்லாம் கிளைகள். அது நம் நாட்டுக்கு மட்டுமே உரிய சிறப்பல்லோ? இதில் ஒருவர் 'Anyone from Delhi and Assam Region?' என்று ஓர் இழையைத் துவங்கினார். 'எப்படி டெல்லியையும் அஸ்ஸாமையும் இணைக்கிறாய்?' என்று ஒருவர்-2 கேட்க, அந்த ஒருவர்-1 'நான் டெல்லிக்கும் அஸ்ஸாமிற்கும் இடையே அதிகம் பயணிக்கின்றவன். அதனால் தான்..!' என்று பதிலிறுத்தார்.

சில ரிமோக்கள் ஆச்சரியத்தில் ஆடிப் போகச் செய்தனர். சென்னையிலிருந்து 13 வயதில் நாவல் எழுதும் குழந்தைகள் நண்பர்கள் ஆனார்கள். ட்விட்டரில் என்னையும் பெரிய மனது பண்ணிச் சேர்த்துக் கொண்டார்கள். 12 வயதில் ஒரு பெண் ஃபேண்டஸி எழுத, 55 வயதில் ஒரு தாத்தா, 45 வயதில் எழுதுபவரைப் பார்த்து, 'நீ ஒரு டைனோசர் என்றால், நான் ஓர் உறைந்த ஃபாஸில்' என்று சொல்லி, யங் அடல்ட் நாவல் எழுதுவதில் 'ஒர்வர் மற்றொருவரை வாழ விரும்பும்' ஏதோ ஓர் உளச் சங்கதி இருக்க வேண்டும்.

அந்தச் சிறுமிகளைப் பார்க்கச் சத்தியமாய்ப் பொறாமையாக இருந்தது. எத்தனை அழகாய் எழுதுகிறார்கள்! என் ஆங்கிலம் எத்தனை அமெச்சூர்த்தனமாய்ப் பல்லிளிக்கின்றது என்பதைப் பார்த்த போது, அரசுப் பள்ளியில் சேர்த்த அம்மா அப்பா மேல் கோபம் வந்தது; என் 'கண்ணன் என் காதலன்' பதிவுகளைப் பார்த்து ஆறுதல் படுத்திக் கொண்டேன். உங்களுக்கு ஓர் இரகசியம். நானும் எட்டாவது ஆண்டு விடுமுறையில் மூன்று நாவல்கள், தமிழில், டைரியில் எழுதி வைத்திருந்தேன். ராஜேஷ்குமார் பாதிப்பில் அதன் பக்கங்கள் எல்லாம் ரத்தம் கசியும். :). தொலைந்து விட்டது. ;(

சரி, கதைக்கு வருவோம்.

அவ்வப்போது வெறியோடு எழுதி, பிறகு சில நாட்கள் ஓய்வெடுத்து, இப்படியே போய்க் கொண்டு முப்பதிரெண்டாயிரம் தொட்ட போது, தேதி 26 ஆகி விட்டிருந்தது. கதை ஒரு சுவற்றில் போய் முட்டிக் கொண்டு விட்டது. அதற்கு மேல் நகர்த்த வேண்டுமெனில், கொஞ்சம் வரலாறு படித்தாக வேண்டும்; இல்லையேல் பொருட்பிழை வரலாம். நேரமே இல்லை..!!

வெள்ளிக்கிழமை கேரளாவில் பக்ரீத். அலுவலகம் விடுமுறை. கடைசி வாரக் கடைசி. இதை விட்டு விட்டால், அவ்வளவுதான். கடையை இழுத்துச் சாத்தி விட்டுப் போக வேண்டியது தான். ஒரு முடிவோடு வீட்டுக்குக் கிளம்பிப் போனால், விசேஷம் தயாராக இருந்தது. மூன்று நாட்களும் நோட்டையோ, கணிணியையோ தொட முடியவில்லை.

பவானியில் இருந்து கொஞ்சம் தொலைவில் ஊருக்கு வெளியே கரும்பு வயல்களைக் கடந்து சென்றால், அடர் பச்சை பெய்ண்ட் அடித்த, சுவர்களுக்கு பெண்களுக்குப் பிடித்த மென் பிங் நிறம் பூசிய சிறியதொரு இல்லத்தை வாங்கியிருந்தோம். அந்த விழா ஞாயிறில் ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்கான வேலைகளில் கொஞ்சம் கொஞ்சம் நேரம் செலவு செய்யச் செய்ய, நிஜ வாழ்க்கையின் விரல்களுக்கு இடையேயான இடைவெளிகளில் என் கதாபாத்திரங்கள் நழுவிச் சென்று கொண்டேயிருந்தார்கள். உள்ளத்தில் ஆயிரம் வருத்தங்களும், கோபங்களும் இருந்தாலும், புன்னகை முலாம் பூசிய முகமூடி அணிந்து கொண்டு எல்லாரையும் கூப்பிட்டுக் கூப்பிட்டு வரவேற்று, 'பல சின்னஞ் சிறுகதைகள் பேசியதில்', 'நீங்களா எங்களை வடிவமைப்பவர்?' என்று அடிபட்ட பார்வை பார்த்துக் கொண்டு காற்றில் கரைந்தனர் என் சம்பவங்கள்.

ஞாயிற்றுக்கிழ்மை மதியத்திற்கு மேல் 'அனல் மேலே பனித்துளி' ஆனேன். உடலெங்கும் கொதித்தது; இமைகளுக்குள்ளே யாரோ இரண்டு கரண்டி எரிகின்ற கரி அள்ளிப் போட்டுக் கொண்டேயிருந்தனர். 'DOLA' என்று எழுதிய ஒரு வெள்ளைக் கட்டியை மாத்திரை என்று சொல்லிச் சொல்லி வென்னீருடன் அம்மா கொடுத்த ஐந்து நிமிடங்களுக்கு தொப்பலாக வியர்வையில் நனைந்து, பிறகு மீண்டும், காற்றில் ஏறும் பகல் நேரம் போல் வெப்பம் உடலில் ஊறிக் கொள்ளும். 'நாளை லீவ் போடுகிறாயா..?' என்று கேட்டார்கள். ஆசையாய்த் தான் இருந்தது. முழுதாய் ஒரு ராத்திரி கூட புது வீட்டில் தூங்கவில்லை. தூங்கிப் பார்க்கலாம என்று தோன்றியது; வேண்டாம். அலுவலகம் அழைத்தது.

ரயிலில் எழுத நினைத்தேன்; முடியவேயில்லை. ஒரு மாதிரி உட்கார்ந்து கொண்டு, தூக்கமா, மயக்கமா என்று கோடு கிழிக்காத முறையில் சரிந்து கொண்டே வந்து, கொல்லம் தாண்டி கொஞ்சம் தூங்க முடிந்து, அனந்தபுரத்தில் இறங்கிய போது, காய்ச்சல் துளி மட்டுப்பட்டது போல் இருந்தது. அலுவலகம் சென்ற போது, கணக்கு உள்ளே ஓடியது. 32768. இன்னும், கிட்டத்தட்ட பதினெட்டாயிரம் எழுத வேண்டும்.

எப்படி எழுதுவது...? எப்படி வெல்வது?

உள்ளேயிருந்த ஒரு சாத்தான் நெட்டி முறித்து எழுந்தான்.

எப்போதும் சென்று படிக்கும் ஓர் இயற்பியல் தளத்திற்குச் சென்று, இரண்டு பக்கங்களைக் காப்பி செய்து நாவலில் போட்டு பார்த்தால், 54000 தாண்டியது. அப்படியே மேலேற்றி விட்டேன். 'நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள்; கொண்டாடுங்கள்' என்று தளம் சந்தோஷக் கூச்சல் போட்டது.

உள்ளேயிருந்த சாத்தான் பெருமிதச் சிரிப்பு செய்தது.

இரண்டாவது நிமிடத்தில் இருந்து ரிமோ நண்பர்களிடம் இருந்து வாழ்த்துக் கடிதங்கள் வந்து குவியத் தொடங்கிய போது தான், மனசாட்சி என்னும் வெள்ளை எருது மூச்சு உறுமியது.

இது யாரை ஏமாற்றும் காரியம்..? யாருக்காக எழுதுகிறாய்..? யாருக்காக உன் கற்பனைகள்..? இது என்ன வகை ஏமாற்று வேலை..?

அதன் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அந்நியனின் விசிறும் அட்டைகள் போல் சாத்தானின் ஒவ்வொரு வியர்வைத் துளையிலிருந்தும் விஷத்தை உறிஞ்சி வெளியே துப்பத் துப்ப, மூளையில் படிந்த அழுக்குத் திரை கிழியத் தொடங்கியது.

இதற்கு மேல், வாழ்த்தி வந்த ஒரு சென்னை ரிமோ மாணவருக்கு எழுதிய மன்னிப்பு வாக்குமூலத்தை இணைக்கிறேன். இந்த மன்னிப்புப் படலம் எனக்கே பிடித்திருந்தது.

hai vc3_aku,

hearty wishes and congratz..!!! you finally made it. i like that fighting thought.

first i want to say a big sorry. why..? the reason follows. let me warn, it is a big reply. :)

I was going smooth in my own pace during the earlier periods. but once i could start seeing the rocket rides of my buddies and non-buddies, the tempo inside me got fired and yes, i have to admit, my ego too got squashed by seeing their numbers. then i tighten my seat belts and changed the gear into eighth within seconds, then.. vroooooom...!!!! on the way of riding fast and mad, i was getting boosted by xing the milestones with increased 1000s...!

but a big obstacle stopped me for the last three days. from last friday upto sunday i was busy in our house warming ceremony. i could not touch the PC or my pen to write. yesterday i returned to office. i was tired by the house works and the thought of 'just only 32k.. u ass want to become a writer..?'.

then i did a big mistake of my life. i went to a physics website and copied some pages and filled them in my story. I updated that in the site, then i jumped into 54k. within minutes the congratz mails started to flow. and by seeing the mails i got to know my wrongness. i fell into dark mood then. i totally lose all of my faith of becoming a writer, and believe me, i was in tears. my characters questioned me, 'is this what you do our creator saab..?'. there was a thirukural, which immediately came into my mind. it said, ' don't lie intentionally; if you did, then your soul will condemn you forever!'

I roamed thro the profiles of my buddies and slowly got my passion back.

i deleted the copied items first. i checked two points. one) which make me to stop moving further, 2)what is the time now?. by thinking i found the reasons. the answer for the first one was, i was in the mid way of a serious chat between two NCC boys and a muslim freedom fighter on a republic day in the merina beach. that section wanted more thoughts and i had to be aware of some historical facts. That was not possible because i was in the last evening. the answer for the second was, 15:30 Hrs. I had still eight hours and thirty minutes to combat.

I asked myself, 'Cant i make 18K within eight point five hours, if i move to some other flexible section of my novel..?'.

then i decided to switch off all my official windows. i located into a deserted PC in the deserted section of a test lab. i opened my novel in the word file and kept the cursor at the end of the file. the ms word 2007 shows the word count was 32,278. i opened a notepad and structured that into a rectangle window, which could carry nearly one thousand words. i fixed the time such as for every twenty minutes i had to fill that notepad with my words. no caps, no apostrophe, no alignment, no designing and not thinking. just pour words whatever come in your way related to the section. write continuously. that was the plan i made. it resembled like there was a big drum which could contain 50K words waiting to get filled and i used a small bucket which could carry 1K words. I had to take the words from my creative well eighteen times and pass them into the ms word drum.

i started at 15:30.

i didnt go for snacks; say 'no' for evening tea; 'i dont come!' for my friends who called for dinner; 'i will come late; please you carry on.!' to my roommate who called; 'i will pick an auto!' to the office security, who came to inform the last bus was waiting. i was typing the letters without stopping. i gave a three minutes break for using restroom, since i could not say to the nature, 'you, please wait..!' :)

i was in 1500 words lagging, when the clock said, 'just half an hour more, buddy!'.

i caught in fire then. then i directly jumped into the word file and started typing the fastest i could do. all the words which got formed in my mind fell into the document in their scrambled form. i didnt worry about that. type. type. type. yes, i was in perfect mad for that final thirty minutes. then, successfully i crossed 50K when the time was just ten minutes to midnight. i didnt stop. like an express to get halt i typed until 11:59, then i stopped. when the bell started ringing 00:00, the count was 50,420..!!!

i was happy for only one reason that the second half of the yesterday showed me I could deliver nearly 18000 English words in 8.5 hours..!!!

i could be sad if i didn't write; if i cheated everyone including me; but the letters from my writing buddies cleaned the dust on my mind and gave me the boost by whispering in my ears 'never never never give up'..!!!

I thanked for that..! I love you all..!! special thanks to VC3_AKU..!! :)

இறுதியாக எக்ஸ்பிரஸ் ரயில் நிற்பது போல் எழுதி முடிக்கும் போது, 50,420 தொட்டிருந்தேன்.

உண்மையில் எனக்கு இது ஒரு மிகப் பெரிய சாதனை தான். ஆங்கிலத்தில் பெரிய அளவில் எந்த புனைவையும் வாசித்ததில்லை. அதன் புனைவு மொழி தெரியாது. ஆங்கில இலக்கணம் அவ்வளவு சிலாக்கியம் இல்லை; In, On பொருத்தங்கள் துல்லியமாகத் தெரியாது. அந்த இலட்சணத்தில் க்ளோபல் அளவில், கலந்து கொண்ட 1,70,000 பேரில் வென்ற 19% ரிமோக்களில் ஒருவனாக இருப்பதை நினைக்கும் போது, இந்த வெற்றிக்கு என்ன அல்லது யார் காரணம்..?

முதலில் நான் இல்லை; என் பாத்திரங்களே என்னை இழுத்துச் சென்றன. வலைப்பதிவில் தமிழ் எழுதிப் பழகிய மனம் ஆங்கிலத்தில் வெறும் ஆடையைப் போட்டுக் கொள்வது சுலபமாக இருந்தது.

அவ்வப்போது படித்துப் பார்த்துப் பதில் சொன்ன தமிழ்ப்பறவை, வெங்கி ஆகியோருக்கும், கிடைத்த நேரங்களில் வாழ்த்திய அனந்தபுரத் தமிழ்ச்சங்கர் திரு. கமலநாதன் அவர்களுக்கும், வீடு மாற்றுவதில் என்னை ரொம்பவும் தொந்தரவு செய்யாமல் அவனாகவே எல்லா வேலைகளையும் செய்த தம்பிக்கும்...

நன்றிகள் சொன்னால் விரும்புவார்களா? என்று யோசிக்கிறேன்..!!!

PS :: இந்த ரிமோ போட்டியில் கலந்ததில் சில விஷயங்கள் புரிந்தன. கலந்து கொண்ட சிறுவர்/மிகள் எத்தனை லாவகமாக மொழியைக் கையாள்கிறார்கள்? இவர்கள் வலைப்பதிய வந்தால் எப்படி எல்லாம் கலக்குவார்கள்? நாம் த்மிழ் வலைப்பதிவில் என்ன செய்து கொண்டிருக்கின்றோம்? 'பொல்லா வினையேன்' என்று அடுத்தவரைப் புறங்கூறியும், வெறும் ஈசல் எழுத்துக்களை எழுதிக் கொண்டும் காலம் தள்ளிக் கொண்டிருக்கிறோம்; இரத்தக் கண்ணீர் வருகின்றது. இந்த ஒரு மாதமும் எங்கோ வேறோர் உலகில் வேறெதோ தளத்தில் படித்துக் கொண்டிருப்பது போல் தோன்றியது. தமிழில் எப்படி நாம் அந்த தரத்தைக் கொண்டு வரப் போகின்றோம்? ஆங்கிலத்தில் எழுதியதால் இப்படித் தோன்றவில்லை. அவர்கள் சிந்திக்கும் போக்கு, எழுதும் விஷயங்கள் வேறு எங்கோ உள்ளன. நாம் இன்னும் டீக்கடை பெஞ்சுக்களைத் தான் ப்ளாக்கில் வேறு வடிவில் உருவாக்கிக் கொண்டிருக்கிறோமோ என்ற கவலை வருகின்றது. ஜெயமோகன் எழுதியதில் முழுக்க சரியல்ல; எனவே முழுவதும் தவறல்ல. மொக்கைகளும், எரிச்சல்களும், அரசியல்களும் இருக்கும் இதே இடத்தில் தான் ஒருவருக்கு ஒன்றென்றால், கூடும் கரங்களும் இருக்கின்றன என்பதைத் தெரிந்தே இருக்கிறேன்.

அந்தப் பிள்ளைகள் எல்லாம், தமிழ் வலைப்பதிவுகளை வாசிக்க வந்தால், என்ன நினைப்பார்கள் என்பதை விட, எவற்றைப் பார்க்க நேரிடும் என்பதில் தான் என் வருத்தம் இருக்கின்றது.

Thursday, November 26, 2009

NaNoWriMo.Update.5

முப்பத்தொன்றாயிரம் தொட்டிருக்கிறேன். நாவலின் ஒரு க்வார்ட்டர் முடிந்திருக்கின்றது. அடுத்த பாகம் துவங்கியாக வேண்டும். நான்கு நாட்களில் இன்னுமொரு இருபதாயிரம் முடித்தாக வேண்டும்.

இரண்டாம் பாகம் முழுதும் என்.சி.சி. கேம்ப் நிகழ்வுகளை எழுத வேண்டி திட்டம் போட்டிருப்பதால், மனதின் அடி ஆழத்தில் மறைந்திருக்கும் நினைவுகளை மீட்டுக் கொண்டு வர, யூட்யூபில் தேடிய போது கிடைத்த சில அருமையான வீடியோக்கள் கீழே ::

கல்லூரி நினைவுகள் எழும்பி வந்து காட்சிகளை நனைக்கின்றன.

என்.சி.சி. சிம்பயாஸத்தின் துவங்கிய கதை ::எஸ்.ஆர்.எம். கேடட் ஒருவரின் ஆவணப் பட முயற்சி ::என்.சி.சி. பாடல் ::

Wednesday, November 25, 2009

NaNoWriMo.Update.4

ந்த நொடியில் இருபத்தெட்டாயிரம் வார்த்தைகள் மட்டுமே எழுதியிருக்கிறேன். இன்னும் மிச்சம் இருக்கின்றது.

NaNoWriMo இணையத் தளத்தில் கொடுத்துள்ள சினாப்சிஸைக் கீழே (:-)

Synopsis: My Camp..!

Pawan, Rhitam, Vinoth and Kowshik.

The events happened to/by these four boys in the first year of their college life and in the NCC Camp, they attended.

The novel has their own

Young... Adventurous... Luck...Humorous...

and a BIG slice of romance too...!!!

Excerpt: My Camp..!

Part – 1.
Chapter – 1.

The Chennai Beach to Chengalpet sub urban electric train stopped for one minute at Singaperumal Railway Station. It was the hottest month of the country on the first year of the new millennium. The compartments were in meter gauge, then. So, the train was leaner compared with its broad gauge counterpart. The speaker in the station announced ours arrival. 'The train to Chengalpet from Chennai Beach is just...'

Pawan pulled his guitar bag. It was aligned with his other suitcase which had all his main things.

Rhitam shouldered his travelers’ bag. I was sure it must have some physics books and Shakuntala Devi’s puzzles and teasers.

Vinoth yelled like a hungry wolf. A child got awake from its nice Saturday morning sleep and started to do its next known job. Cry! He stopped immediately after the child's young mother stared him as a roadside rogue. He carried his bag. It had a symbol of a skeleton head. And on its neck side it was printed in the blood color as, 'Sketch the Skeleton'. I always wonder from where he gets this type of ‘terror’ things! He had one smaller box. I was sure it should have a set of electronics instruments and parts such as capacitors, wires, 555 timer chips, wires and resistors and transistors – the only sisters he accepted!

From the last one year I found, that even Vinoth was a Mechanical Student; he had a great passion in electronics. I hold my suitcase which had my essentials.

வெவ்வேறு பிண்ணனியிலிருந்து வரும் நான்கு பையன்கள், மாணவர்களாகியதில் நண்பர்களாகி ஒருவருக்கொருவர் தோள் கொடுத்து, இளம் ரத்தம் துடிக்க என்.ஸி.ஸி.கேம்புக்குச் செல்லும் கிராமத்தில் சந்திக்கின்ற துல்லிய அனுபவங்கள், சீனியருடன் உருவாகி விடுகின்ற மோதல், அந்த இயல்பான மற்றுமொரு கிராமத்தின் சில அமானுஷ்ய நிகழ்வுகள், ஒவ்வொருவனுக்கும் ஏற்படுகின்ற விதம் விதமான காதல்கள், எதிர்பாராத சில எதிரிகள்...

இந்தக் களமும், கதையும் நிரம்பப் பிடித்திருக்கின்றது. இதன் முக்கிய கதாபாத்திரங்கள நால்வராக என்னை நானே வகுத்துப் போட்டு, ஒவ்வொருவரின் உள்ளேயும் தாவிப் போய் அவனது இயல்பை வார்த்தைகளாக வார்த்தெடுக்கும் போது, கிட்டத்தட்ட கடவுளாகும் மகிழ்ச்சி வருகின்றது.

மே மாதக் கோடையில் மரத்தின் இலைகளில் குவிந்து கசியும் வெய்யிலை ஆங்கிலத்தில் வார்க்கத் தெரியவில்லை. என்றாலும் ஓரளவிற்கு அந்த வெக்கையை எழுத முயன்றிருக்கிறேன்.

ஏ.ஸி. கரைக்கும் குளிர் அறையிலிருந்து அந்த 'சாவ்தான்..!,'ஆராம்ஸே..' பரேடுகளுக்கு என்னைக் கடத்திச் சென்று மில்லினியத்தின் புத்தம் புது ஆண்டின் முதல் கோடை விடுமுறையில் அனுபவித்த கேம்ப் நிகழ்ச்சிகளை மீண்டும் ஏதோ வகைகளில் நியூரான் நரம்புகளில் நடத்திக் கொள்வது சுகமாக இருக்கின்றது.

துவக்கத்தில் ஒரு மாதிரி எழுதத் துவங்கி, இப்போது படித்த நண்பர்கள் தமிழில் எழுதுவதைப் போலவே சுவாரஸ்யமாக இருக்கின்றது என்று சொல்லும் போதெல்லாம், வாத்தியார் நினைவில் வந்து போகிறார். எழுதும் போது எனக்கே தெரிந்து விடுகின்றது, இத்த உத்திகள் (வாத்தி)யாரிடம் படித்தது என்று!

'எழுதுவதற்கு வரம் தேவையில்லை; தொழில்நுட்பம் தெரிந்தால் போதும்' என்று வாய்ப்பாடு சொல்லிச் சென்ற ஆசானுக்கு ஆயிரம் நன்றிகள்.

Friday, November 20, 2009

NaNoWriMo.Update.3

ப்போதைய நிலவரத்தில் இருபதாயிரத்திற்கு ஐநூறு வார்த்தைகள் பின்னால் நின்று கொண்டிருக்கிறேன்.

இதுவரை எழுதிய அளவில் பார்க்கும் போது, என்ன நடக்கின்றது என்பதைச் சொல்கிறேன். ஒரு காட்சியின் துவக்கத்தை மட்டும் கற்பனை செய்கிறேன். பின் அது அதன்பாட்டுக்கு எங்கெங்கோ என்னை இழுத்துச் சென்று, எனக்கே ஆச்சரியமூட்டும் அளவிற்குக் காட்சிகளும், அவற்றிற்கேற்ற வசனங்களும் தம்மைத் தாமே உருவாக்கிக் கொண்டு வளர்கின்றன.

பிறகு எங்கே எவற்றைச் சொல்லி முடிய வேண்டுமோ, அந்த இடத்தில் ஆச்சரியமாக காட்சித் தொடர் நிறைவு பெற்று நின்று விடுகின்றது. எப்படி முடிவுப் புள்ளி தெரிகின்றது என்று யோசித்தால், அதற்கு ஆழ்மனத்தை இத்தனை நாட்கள் சிறுகதைகள் எழுதிப் பழகிய பழக்கம் என்று புலனாகிறது.

நாவல் துவக்கத்தில் கொஞ்சம் தடுமாறினேன். இப்போது ஊதுவத்தி புகைகள்போல் சுருள் சுருளாகத் தமக்குள் கிளர்ந்து எழுந்து உருவாகி, உருண்டு, திரண்டு...ஒரு வடிவமைப்பிற்குத் தாமே கெட்டித்து வந்து ஒரு சேப்டராக ஓடி நின்று விடுகின்றது.

ஒவ்வொரு சேப்டரும் இப்போது ஒவ்வொரு சிறுகதையாகவே எழுதுகிறேன். முன்னோர்கள் சொன்னதன் காரணம் இப்போது தான் அதன் பலனை எஞ்சாயிக்கிறேன்.

'எழுதுபவனுக்கு இரண்டு மனம் இருக்குமோ?' என்று வாத்தியார் சொன்னதை நன்றாக அனுபவிக்கிறேன்.

எழுதியபடி ஓர் ஆழ் மனம் முன்னோக்கிச் சென்று கொண்டே இருக்கின்றது; வெளி மனம், ஒரு வாசகன் போல் அதன் பின்னோக்கி ஓடி அந்த எழுத்துக்களை அனுபவித்து மகிழ்ந்து, ஆழ்மனம் வாசகன் என்ன உணர்வை அடைய வேண்டும் என்று தீர்மானித்து உருவாக்கிக் கொண்டு போகின்றதோ, அந்த உணர்வை வெளிமனம் திகட்டத் திகட்ட அனுபவிக்கின்றது.

நேற்று எழுதியதன் ஒரு பகுதியை கீழே வெளியிடுகிறேன். அந்தப் பகுதியை எழுதும் போது, உடலுக்குள் ஏதோ ஒரு சாத்தான் புகுந்து கொண்டது போல், என்னால் உட்காரவே முடியாமல், அந்த எக்ஸைட்மெண்ட் தாங்க முடியாமல், எழுந்து கிறுக்கன் போல் குறுக்கும் நெடுக்குமாக நடக்கத் தொடங்கி விட்டேன். அழுகையே வரத் தொடங்கி விட்டது.

அந்தக் கிளர்ச்சியை மொத்தமாகக் கொட்ட வேண்டும் என்று பண்ண முடியாமல் ஒவ்வொரு எழுத்தாக எழுத வைக்கிறானே கடவுள் என்று கோபம் கூட வந்தது. ஒவ்வொரு எழுத்தாக டைப் அடிக்க அடிக்க, காட்டாற்று வெள்ளம், ஸலைன் குழாயில் சொட்டுகிறது.

சம்பவங்கள் கண் முன் நடந்தன; திடீரென ஒரு கேரக்டர் உதித்து மறைகிறான். அவனுக்கும் பிரத்யேகமாக ஒரு வசனம் தோன்றி மறைகின்றது. அவனுக்கும் ஓர் இயல்பு.

இந்த நாவலை முடிக்கவே முடியாது என்றும் தோன்றுகிறது. இன்னும் முதல் பாகத்தையே முடிக்கவில்லை. எழுத நினைத்திருந்த எட்டாவது சேப்டரே மூன்றாவது பாகமாக, 8.a, 8.b, 8.c என்று போய்க் கொண்டிருக்கின்றது.

எழுத்தாளனாக இருப்பது வரமா, நரகத்தைத் தின்னும் சாபமா என்று புரியவில்லை. என்னை உருக்கிக் கொண்டிருக்கின்றது இது..!

இந்த நாவல் ஒரு காயசண்டிகை; இந்த மூளை ஓர் அட்சயப் பாத்திரம்; அது தீராப் பசியோடு 'இன்னும்....இன்னும்...' என்று ரத்தம் பாயும் நாக்கைச் சுழற்றிக் கேட்டுக் கொண்டேயிருக்க, இது தீராப் பிரியத்தோடு 'இந்தா....இந்தா...' என்று பருக்கைகள் கொட்ட அள்ளி அள்ளிப் போட்டுக் கொண்டேயிருக்க...இரண்டுக்கும் இடையில் ஓர் அற்ப மானுட உடல் சிக்கிக் கொண்டு துடிக்கின்றது..!

ஆனால் ஒன்று..! நிஜ வாழ்வில் என்னைச் சுற்றியிருக்கும் நெருப்பு கக்கும் ட்ராகன் பிரச்னைகளிலிருந்து கொஞ்ச நேரமாவது என்னைக் கண்ணீரில் பொத்திக் காக்கிறார்கள் என் கேரக்டர்கள்..!

ஆனாலும் அந்தக் கண்ணீரும் நெருப்பைப் போல் சுடுகின்றதே...! என் செய்வேன்...?

<***>

"this is a big ground with red soil for a hard soccer match...!" vinod told by looking the ground.

"but your clothes will get a reddish layer, if you fight in this field. or the blood will drench if you play hard like in the november semis..! " pawan told.

"like Manchestar United jersey...!" vinod twinkled.

vinod was a soccer fan. not simply a fan, but an admirer.

last november the sports club of the college arranged a soccer tournament between departments to select fresh batch soccer team. we had seen a completely different vinod there. there he appeared, as he wasnt a boy who spoke about girls; got interested about latest flicks; flirtous. in the soccer section which was at the eastern part of the college ground, vinod showed a soldier inside him; the bravefull, the fighter, the never tired spiritful and the never give up warrior.

all the matches in which vinod's batch participated were one sided, excpet three matches.

the first one was between vinod's E batch vs C batch. that was a third league one. since everyone was fresher, none knew one's capability better. there was a friend of EEE named Tilak in C batch. He showed a powerfull knock in the second league match between A and C. He became a star immediately after he goaled a second one in that A vs C. so it was spread that this E vs C would become one sided. but it wasnt.

upto the first half of the match, null was for the two teams. but it seemed vinod and tilak found the other's knowledge in handling the ball, passing and the tricks. in the very five minutes of the second half, tilak made a goal straight forward. none was in the line; that was straight to the post. (Rhitam murmured to me that ‘the ball passed like light particle’) before twenty minutes for the end, the ball was in vinod's legs; literally. he was dancing; practically. he reached the post and simply passed to vinay. after that a rat could do, vinay did. goal. equal. the time was going to finish. we were shouting as 'penalty....penalty...'. very surprisingly tilak put one more goal. but this time, it was not direct shot. there was two sets of legs in between him and the post. A won.

That night me, aman and pawan went to vinod’s room for taking him to dinner. his roomies were already gone. the door wasnt locked. inside it was pure dark. we opened it and lit up. vinod was the only person there and lying in the bed with a collapsing sheet.

"vino..! come for dinner..!" aman asked. i went and sat nearby him. "vinod..! get up..!" i told. he opened his eyes. those were in red. and he started crying...yes man... the romantic boy cried.

both aman and pawan came near. vinod lied on my lap and continued. "vinod..!" pawan came to tell something. i signalled them to leave and assured will-bring-vinod. they left and closed the door.

"vinod..! it was just a game. and also it was a league one. still you have a chance to go quarters..!" i tried to cool him.

"kowshi..! you dont know that. soccer is my girl friend. she is my lover. the ball starts rolling in me from my age three. i cant imagine a life without soccer. and a defeat in that was equivalent to rub my brain in mud..!"

"understood dude..! but you have to pass it..!"

"how..? Were you be the same if you lose your girl..? did you feel that..?"

i was dumb strucked. I know my friend. i felt that loss.

"vinod..! let the past be past. you want to take a revenge for this defeat, right..?"

"damn sure.!"

"then, there is only one chance. by the point calculations, C was already in quarters. E has three matches before that. you have to make win in all that matches to do two things. one, to make sure E's entry in to quarters. two, to show the arrival of a fighter who could stop tilak. do you accept that..?"

" entirely..! "

"then, you have to play all these matches. to accomplish that, by the laws of nature you have to be alive. because i never heard the news, ghosts played soccer. because of they do not have legs to kick the ball or the keeper. so, to keep youself alive, you have to come with me and take the heavenly food, chappathis and kuruma, provided by our motherly mess..! "

vinod laughed. mission completed.

after he came with a washed face, he asked, " can you tell me what rhitam could tell if you ask whether ghosts can stand..?"

"might be the same reason, 'no. because ghosts dont have legs..' " i replied.

" that would be a layman's answer. but i am sure, rhitam, as a physics geek, would tell ' since they dont have legs, the center of gravity which make a thing to stand still, gets confused on where to present. so, even if they try to stand, they couldn't..!"

i busted. and i was happy vinod gained his form back. then i asked the question, " vinod, do you think the laws of gravity apply to ghosts too..?"

and we continued our pointless chat for the entire night.

The second match was three days later. it was the last league match. it was between E and B. E was already in quarters by winning the other two games they played. B was already out of the tournament. but that match showed the perfect defence game by vinod. exactly i could tell that match was an example of vinod's controlled play. E was already in a safe region with three goals in the first half. out of that one was by vinod. there was no goal in the second half made by neither one. there was very close four tries by B. vinod captured two of them and stopped two of them. if the ball goes into vinod's legs in that match, he never make it to come near any of the posts. the ball revolved nearby the center of the ground. 3 – 0. obviously, E won.

since E was already in the next round, the victory celebrations were not big. we walked out the dark ground and towards the hostel block, pawan asked, " so you must be happy now... vinod...?"

"ofcourse. but not fully..! " vinod replied.

"yes..! because he has to prove E = m C square..!" who else, rhitam.

"why again to prove..? and why vinod..?" aman asked with enough confused tone.

"not that what old albert told. vinod has to prove, that E batch has the power equal to multi times, m for that, of even of two C batches..! am i right..? " rhitam explained.

"rhitam.. come here..!" pawan called peacefully. rhitam was coming near to vinod.

"what yaar..? " rhitam told by came near to pawan. Pawan made a big pat on rhitam's left back. it was like spanking him. rhitam's reply for that was a small 'ouch..!'

needless to say that everyone was in different batches, we never think about winning of our batches, but our friends. out of us four, vinod was the only one played and what a player he was..! we gave importance to friends over batches, because the later would end after the first sem.

The third one which never forgettable was the second semi. fortunately or not, the chance for the clash between E and C didnt happen in the quarters. they separately played against some medium teams and easily won. in the semis it was D vs A. E vs C. in the first semi D won with 2 - 1.

the grand match between E vs C was conducted on one friday. i was surprised by the presence of huge crowd. it didnt contain not only our freshers but seniors too. it was because the fame of both tilak and vinod reached immensely in the campus.

the match started. the new ball started to roll between legs. the gallery was small compared to the crowd sitting there. and not only in that, students were standing around the ground wherever space was present.

within the first ten minutes everyone understood that was not a game between two teams; but between vinod and tilak. the ball struggled between them. slowly the others treated to help their own team superstar to handle the ball. after fifteen minutes from the start, tilak made a goal. the crowd shouted. within two minutes vinod equaled it. The crowd shouted for this too. that was the status upto five minutes before first half. but tilak made a pass to anand and he made it simply.

2 - 1…! I had seen small clouds started to gather then.

they exchanged the sides and the second half started. one of a friend from geo named hari came near to me and told, "kowshi..! this half would be one sided. because that side is a lucky one to tilak. he made many goals when they played from that side. so this must be a easy win to them. i go to room and just tell me the same result. ok..?" he smiled and left.

from the play within five minutes i understood the strategy by C. Tilak, Tarun and Anand played the aggressive play and the remaining in defence. I was sure that even a layman fan as me understood that, so vinod must knew that. i was correct. but vinod took a reverse strategy opposed to everyone expected. since E was in need of goals, i thought many of them took up aggressive and less to stop C from goaling.

surprisingly, vinod single handedly took up the aggressive play and the others were kept in defence. that was a remarklable move by vinod and it paid twice. he made two goals with five minutes apart. then the game turned towards C. 3 - 2.

after that we have seen the tempo increased in the crowd, in the ground and in the sky too. The small clouds stayed there became big black bodies waiting there to pour. the last fifteen minutes came. then it happened.

tarun passed the ball from the middle of the ground and it came into tilak's. he rolled that here and there and came near to the post and collect his full power then kicked. vinod was jumping from his position eight steps from the post and floated in the air and exactly carried the ball on his ....nose.

the crowd shouted; we shouted and jumped into the ground. i thought rhitam would tell this time 'it was like a comet dashed on earth'. but he was strucked by seeing the sight. a blood flood started to flow from the nose. we went and teared the hand kerchief of aman and tried to stop the red thing.

'"vinod..! come...will go to clinic urgently...!" i shouted more than the crowd's large noisy shouts, so that it would be hearable by him. he was highly shocked happened to him but shouted firmly, " go out of the ground friends..! i have to play....!

we were surprised in heart and left him and aman's kerchief in the ground. everyone in the ground was taken aback by vinod's words but they thought not to allow vinod’s words make them to lose, it seemed.

the game started again. the aggressiveness continued in both sides and especially from C. but it failed miserably. because vinod made one more goal with his broken nose and un broken faith.

when the whistle arrived from the refree and flag was shown, everyone in the ground ran to vinod, who was at that time near his post and surrounded him. tilak hugged vinod tightly and shouted, "vinod...! you deserved this...! you deserved this dude...!"

we took vinod to the campus clinic. The doctors scolded us as a good doctor has to do. Vinod was kept there for one hour.

We went to the medium size hotel afterwards to celebrate vinod’s attitude.

Before we went I told "boys, wait for one minute. i will come.!". They confused but started to wait in the then empty ground. i went to the ground floor of our block and to the room nearby bathrooms. i knocked it. one boy came from inside and opened the door.

"oh kowshi..! what's the result..? as i told, right..?" he asked. He had a book of ‘ Mastering Astrology within 10 days’ in his hand.

i told calmly, " your luck side fucked off...!".

do you want, that I have to say E batch won the final vs D and the Sports Club Soccer Trophy – 99 and both Vinod and Tilak were selected for the college soccer team directly..?

<***>

கண்ணன் காலடிகளில் கொஞ்ச நேரம் படுத்துக் கொள்ள வேண்டும் போல் இருக்கின்றது..!!!