Saturday, May 24, 2008

நினை..வா.. நினைவா?

வளை இன்று பார்த்திருக்க வேண்டாம் என்று நினைத்தான்.

வேறு ஏதாவதொரு மழை நாளில் பார்த்திருக்கலாம். சின்னச் சின்னதாக தூறல்கள் விழுந்து கொண்டிருக்க, பூக்கள் எல்லாம் நனைந்திருக்க ஒரு பூங்காவில் பார்த்திருக்கலாம். நூலாம்படைகள் சிதறியிருக்க ஒரு நூலகத்தில் பார்த்திருக்கலாம்.

"என்னங்க.. இங்க வாங்களேன். இந்த பேக்கை கொஞ்சம் பிடிங்க. அப்புறம் சுதா.. இங்க வா. அந்த பேன்ஸி பேக்கை அப்பாகிட்ட குடு. கொஞ்சம் சீக்கிரம் வாங்களேன். சும்மா பராக்கு பார்த்துக்கிட்டு.! ஆட்டோ பிடிக்கணும். பஸ்ல இவ்ளோவையும் ஏத்திக்கிட்டு, தி.நகரை விட்டு போயிட முடியுமா, என்ன...?"

இந்த நிலைமையில் அவளைப் பார்த்திருக்க வேண்டாம்.

கடைசியாக அவளைப் பார்த்தது எப்போது?

யிலை பறக்கும் ரயில் நிலையம் ஆள் அரவமற்று இருந்தது. மதியம் 2.30 மணி. பிச்சைக்காரர்களையும், சில டை ஆசாமிகளையும், மடிசார் அம்மணிகளையும் தவிர்த்து என்னோடு பச்சை பிளாஸ்டிக் கூரைகளைத் தாண்டி கொளுத்திக் கொண்டு வெயிலும் இருந்தது.

அன்பரே...

உங்களை இது போன்ற பழைய வார்த்தைகளில் அழைப்பதற்கு வருந்துகிறேன். முடிந்து போன பழைய காதலின் நாயகரை பழைய வார்த்தைகளில் அழைப்பது தானே பொருத்தமாக இருக்கும்? ஆனால் நம் இருவருக்கும் இடையே பொருத்தம் இல்லாமல் போய் விட்டது. சென்ற தினம் ஒரு நாள், தந்தையிடம் நம் காதலைக் கூறினேன். தூக்குக் கயிறா, விஷமா ஏதேனும் வாங்கிக் கொடுத்து விட்டு முடிவெடு என்றார். அப்படி ஒரு நிலையைத் தாங்கிக் கொள்ளும் வலுவில்லாததால், நம் காதலுக்கு அன்றோடு ஒரு . . இந்த முடிவை உங்கள் கண்களைப் பார்த்து சொல்லும் தைரியம் எனக்கு இல்லாததால், இக்கடிதம்.

கண்டதும் படிக்கவும். படித்தவுடன் கிழிக்கவும். கிழித்தவுடன் எரிக்கவும். எரித்தவுடன் கரைக்கவும். வீட்டு வாஷ் பேஸினிலோ, டாய்லெட்டிலோ..! கூட நம் காதலையும் சேர்த்துக் கொள்ளவும்.

வைஜூ.

அமைதியாக இருந்தேன். கொஞ்சம் எதிர்பார்த்து இருந்தது தான். எனினும் இவ்வளவு விரைவில் நடக்க்க் கூடும் என நினைத்திராததால் கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்தது.

மின்சாரவண்டி வந்து நின்றது.

"ன்னம்மா அநியாயத்துக்கு குறைக்கறீங்க? இங்க இருந்து அடையார் போக நூத்தம்பது ரூபா சாதாரணமா கேப்போம். நீங்க எளுவது ரூபாக்கு வரச் சொல்றீங்க. அதெல்லாம் கட்டாதும்மா.."

"என்ன இப்படி சொல்றீங்க. போன வாரம் சரவணாக்கு வந்திட்டுப் போகும் போது கூட இவ்ளோ குடுக்கலியே.."

"அது போன வாரம்மா. பெட்ரோல் வெலை எல்லாம் ஏறிப்போச்சே.."

"ஒரு வாரத்துக்குள்ள வெலவாசி ஏறிடுச்சா, என்ன?"

"சொம்மா கத பேசாதீங்கம்மா..சவாரி வர்றதுனா சொல்லுங்க. இல்லாட்டி ஆள விடுங்க.."

"நீங்க என்னம்மா சொல்றீங்க..?"

"ஏம்பா தம்பி... நூறு ரூபா.. கடசியா.. என்ன சொல்ற...?"

"பெரீம்மா... நீங்களும் இப்படி சொல்றீங்களே. குடும்பஸ்தன். கொஞ்சம் பார்த்து சொல்லுங்கம்மா.. குடும்ப கஷ்டம் தெரிஞ்சவங்க.. சரி.. வாங்க.."

"ப்ரியாக் குட்டி, நீ அம்மா மடியில உக்காந்துக்கோ. அந்த பேக்ஸை எல்லாம் பின்னாடி வெச்சிடு. அத்தை நீங்க உள்ள போய் உட்காருங்க..."

"ன்ன சாப்பிடாம, தட்டையே பார்த்துக்கிட்டு இருக்கீங்க..?"

"ம்.. என்ன கேட்ட...?"

"சரியாப் போச்சு. என்ன ஆச்சு உங்களுக்கு? இன்னிக்கு ஷாப்பிங் போய்ட்டு வந்ததில் இருந்தே உங்க முகம் சரியில்ல. என்ன, உடம்பு சரியில்லையா..?"நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள்.

"ஒண்ணும் இல்லை. கொஞ்ச நேரம் என்னைத் தனியா இருக்க விடறியா.. ப்ளீஸ்..?"

"சரி. அலைச்சல்ல டயர்ட் ஆகி இருக்கீங்கனு நினைக்கறேன். கொஞ்சமா சாப்பிட்டுட்டு போய் ரெஸ்ட் எடுங்க.."

கொஞ்சமாகச் சாப்பிட்டான்.

"நீங்க போய் பெட்ரூம்ல ரெஸ்ட் எடுங்க. கொழந்த அங்க தான் தூங்கிட்டு இருக்கா.. டிஸ்டர்ப் பண்ணாம தூங்குங்க. நான் இந்த ஷாப்பிங் ஐட்டம்ஸ் எல்லாத்தையும் எடுத்து வெக்கறேன்.."

ஏதோ சிந்தித்தவாறே அவன் அங்கிருந்து நகர்ந்தான். படுக்கையறைக் கதவைத் திறந்து உள்ளே சென்றான். ஒரு பூ போல் தூங்கிக் கொன்டிருந்த சுதாக்குட்டியைப் பார்த்தான்.

அங்கிருந்த சோஃபாவில் படுத்துக் கொண்டான்.

'இந்தக் குட்டிப் பெண்ணுக்கு என்ன பெயர் வைக்க இருந்தோம்?'

"ஹேய் வைஜூ! என்ன புக்ஸ் எல்லாம் செலக்ட் பண்ணி இருக்க?"

"ஃபர்ஸ்ட் நீங்க சொல்லுங்க!"

"சரி! பார்!" என்றபடி காட்டினான்.

கயாஸ் தியரி, தி ப்ராஃபெட் - கலீல் கிப்ரான், சித்தர்களின் சாகாக்கலை, தி கம்பெனி ஆஃப் விமன் - குஷ்வந்த் சிங்.

"ஏன் அப்ப வாங்கினாலும் இது மாதிரி பலபட்டறையா வாங்கறீங்க?"

"அப்படிப் படிச்சா தான் எனக்குப் பிடிக்கும்.."

"சரி! இது என்ன சித்தர் புக்? சாமியாராப் போகப் போறியா? சீக்கிரம் சொல்லிடு. நான் வேற ஒரு பையனைப் பார்க்கணும். போன வாரம் சிட்டி சென்டர்ல ஒரு பையனைப் பார்த்தேன்.."

"ஹேய் லூசு! உன் மூஞ்சிக்கு நானே அதிகம் தான். இந்த புக்ல அந்நியன்ல சொல்வாங்க இல்ல, லாலாபஷம், கும்பிபாகம் எல்லாம் சொல்லி இருக்காங்க. இட்ஸ் ரியலி இண்டரஸ்டிங். சும்மா ரொம்ப தப்பு பண்றோம்னு தோணும் போதெல்லாம், இதைப் பார்த்து திருந்த ட்ரை பண்ணலாம்னு வாங்கினேன். நீ என்ன வாங்கினே?"

"ஒரே புக் தான். குழந்தைகளுக்கான அழகான பெயர்கள்..."

"இந்த மாதிரி புக்ஸ் எல்லாம் இங்க கிடைக்குதா என்ன..?"

"பின்ன! உங்க சித்தர் புக்ஸ் எல்லாம் கிடைக்கும் போது, இதுக்கென்ன குறைச்சல்..?"

"சரி! எதுக்கு இந்த புக் இப்ப வாங்கின..?"

"எல்லாம் நம்ம குழந்தைக்கு பேர் செலக்ட் பண்ணத் தான்!"

"பார்ரா! இன்னும் காதலே வீட்ல கன்ஃபார்ம் ஆகல.அதுக்குள்ள பேர் செலக்ட் பண்ற வரைக்கும் போயாச்சா? வீட்ல இந்த புக் ஏன் வாங்கினேன்னு கேட்டா என்ன சொல்லுவ?"

"அடுத்த வாரம் சுஜாக்கு மேரேஜ் வர்றது இல்ல? அதுக்கு கிஃப்டா குடுக்கத் தான்னு சொல்லிக்குவேன். அப்புறம் அவங்களும் மறந்திடுவாங்க. நானே வெச்சுக்க வேண்டியது தான்..."

"என்ன பேர்னு செலக்ட் பண்ணிட்டியா..?"

"அதுக்குள்ள எப்படி தெரியும்..? இருந்தாலும் கொஞ்சம் எடுத்து வெச்சிருக்கேன். மங்கை, ரோஜா, ராம், சுதா..."

"ப்பப்பா! என்ன வெயில்! என்ன வெயில்! வைஜும்மா, போய் ஒரு செம்பு தண்ணி கொண்டு வர்றியா! நான் பேக எல்லாம் எடுத்து வைக்கிரேன். பாரு, ப்ரியா தூங்கிட்டா. எப்பா எவ்ளோ ஆச்சு?"

"பெரீம்மா! கொஞ்சம் பாத்து போட்டுக் குடுங்க!"

"சர்! என் மருமக வர்றதுக்குள்ள கிளம்பிடு! இந்தா நூத்தி இருபது!"

"பெரீம்மா நல்லா இருக்கணும்! நான் வேணா சாமான் எல்லாம் எடுத்து வெக்கவா?"

"ஒண்ணும் வேணாம்! நீ முதல்ல கெளம்பு!"

"அத்தை! நீங்க போய் உக்காருங்க! நான் எல்லா பேக்ஸையும் எடுத்து வைக்கிறேன்."

"ப்ரியாவைப் படுக்க வெச்சிட்டியா?"

"ஆச்சு அத்தை! இனி நான் போய் சமையலைக் கவனிக்கிறேன். அவர் சரியா ஒரு மணிக்கு வந்து சாப்பாடு போடும்பார்...!"

"ஆமா! நீ போய் சமையலைக் கவனி! அவனுக்கு பசி தாங்காது! என்ன கம்பெனியோ? சனிக்கிழமை ஒரு நாள் கூட மனுஷனை நிம்மதியா இருக்க விடாம ஆபீஸுக்கு வா'னு ஆள் வெச்சு கூட்டிட்டு போய்...! இப்ப அவனும் வந்திருந்தா கார்லயே ஈஸியா போய்ட்டு வந்திருக்கலாம். இப்ப பாரு, வெயில்ல ஆட்டோல சுத்திட்டு..!"

"ஆமா! கேக்க மறந்திட்டேன்! எவ்ளோ குடுத்தீங்க ஆட்டோக்கு?"

"அதை விடும்மா! பாவம்! புள்ள குட்டிக்காரன்! இதுக்கெல்லாம் ரொம்ப கணக்குப் பாக்காத! எப்பவாவது தான் ஆட்டோல போறோம்!"

"சரி! நீங்க போய் ரெஸ்ட் எடுங்க! நான் போய் சமையலை ஆரம்பிக்கிறேன். பச்சைப்பயறு குழம்பு, கொத்தவரங்காய்ப் பொறியல், பருப்பு ரசம். ஓ.கே. தான உங்களுக்கு?"

"எனக்கென்னம்மா? நீங்க நல்லா சாப்பிட்டா சரி! ஏதாவது ஹெல்ப் பண்ணனுமா உனக்கு?"

"வேணாம் அத்தை! நான் பார்த்துக்கறேன்! நீங்க போய் ரெஸ்ட் எடுங்க!"

ரவு ஒன்பது மணி.

"என்னங்க..! இப்ப பரவால்லயா?"

"ஓ.கே.."

"சரி! லைட்டை ஆஃப் பண்ணிடுங்க. தூங்கலாம்."

"அனு! நான் இன்னிக்கு மொட்டை மாடில படுத்துக்கறேன்!"

"வாட்ஸ் ஹேப்பண்ட்? இன்னிக்கு நாள் முழுக்க நீங்க சரியில்ல. டாக்டர்கிட்ட போவோமா?"

"நத்திங் டு ஒர்ரி ஹனி! ரொம்ப ஹாட்டா இருக்கற மாதிரி இருக்கு. மாடில படுத்துக்கறேன்!"

"ன்னம்மா இன்னும் அவன் வரலையா?"

"இல்லத்த! நைட் ஏதோ டெலிகான்ஃபரன்ஸ் இருக்காம். வர லேட்டாகும்னு சொல்லி போன் பண்ணார். சாப்பிட்டு படுத்துக்கச் சொல்லிட்டார். நீங்க சாப்பிடுங்க.."

"என்ன வேலையோ? மனுஷனை நிம்மதியா தூங்கக் கூட விடாம்.."முணுமுத்தவாறே சென்றார்.

இரவு உணவை எடுத்து வைத்துக் கொண்டாள். தட்டைப் பார்த்தவாறே..

'இன்னிக்கு அவரைப் பார்த்திருக்க வேணாம். வேற ஏதாவது ஒரு நாள், ஒரு சமயம்...'

Friday, May 23, 2008

ரெண்டு : விளம்பரமும், விமர்சனங்களும்.

நேற்று ஒரு மேக்ஸ் பேப்பர் பார்த்தேன்.

Prababilities of Prababilities and Definition of Possibilities.

அந்த தலைப்பே கவர்ச்சியாக இருந்தது. இத்தலைப்பில் பதிவு போட்டால், சூடான பதிவாக இருக்க வாய்ப்புகள் இருக்கின்றன. அதே போன்ற தலைப்பு கொடுக்கலாம் என்று ,இப் பதிவின் தலைப்பு.

ரெண்டு போட்டிக்கு வோட்டுப் போட்டாச்சா?

சின்ன விமர்சனங்கள் இங்கே :

இரண்டடியில் இன்பம் !

குறள் விளக்கம்.

இரண்டு மனம்

ஊக்க மருந்து.

ரெண்டுக்கு வந்த கோலாகலம்

தகவல் வெள்ளம்.

ரெட்டை ஜடை வயசு

வழிசல் வள்ளுவர்.

தமிழ் Vs உதித் நாராயண்

ரெண்டு ஒரே ஓர் இடத்தில் மட்டும் 'உதித்'தது.

என் இரண்டாம் காதலி

இரண்டாம் காதலின் யதார்த்தம்.

உண்மைத்தமிழன் பாணியில் ஒரு நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட பதிவு

இரண்டாம் காதலின் மதுக் கோப்பை எஃபெக்ட் இது.

எங்க வீட்டுலே Saturday, Sunday-ன்னா 'ரெண்டு'!!!

அனுபவம் போல!

கிபி 2030 - திரு.கமலஹாசனின் புதிய திரைப்படம்

இரண்டு வேடங்களில் கமல் - புதுமை!

ஜோடிப் புறா

தெள்ளிய நீரோடை, கொஞ்சூண்டு நாடகத்தனம் இருப்பினும்!

ப்ளாஸ்டிக் பூக்கள்

கிராமப் பூ!

சன்டேன்னா இரண்டு ! ( வவாச போட்டி)

குடும்ப நிகழ்வு - ஒவ்வொரு!

இந்தியன் புண்ணாக்கு லீக் - to - பழம் நீ அப்பா

IPL திருவிளையாடல்.

குமுதா, செந்தில், இரண்டு கதைகள், தொடரும் இரண்டு முடிவுகள்

வால்.

தலைப்புல ரெண்டு கட்டாயம் வரணும்- வ.வா சங்க போட்டிக்கு

சீரியல் கதைப் பின்னல்.

வீணாகிப்போன இரண்டு தலைமுறைகள்...

எரிதழல் சோகம்.

நதியொன்று விதி தேடி..

காவிரிக் கதை.

நிறைமதி காலம்

சமத்துவரிகள்.

இது ”ரெண்டுக்கு” மேட்டர்

கண்ணில் காணும் கொடூரம்.

”இரண்டு”ங்கெட்டான்

எத்தினி இரண்டு!

இதயம் இரண்டாகிறது

கண்ணீர் எழுத்துக்கள்.

அன்பே சிவம்

தலைப்பே கூறும் தத்துவம்.

ரெண்டு ....ரெண்டா...தெரியுதுங்க...

காட்சிப் பிழை தானோ?

வ.வா.சங்க போட்டியில் குதிச்சாச்சு!!! -" ரெண்டு"!!!!

என்ன அழகு..!

தமிழ்நாட்டில் ஞாயிறுன்னா "ரெண்டு".. வ.வா.ச போட்டிக்கு என் "ரெண்டாவது" பதிவு!!!!

துபாய் வைத்தியர்.

இரண்டுமே அவள்தான்

படம் பார்த்து பாடம் கல்!

இதென்ன கலாட்டா?

அரசியல் மாறாட்டம்.

இரண்டும் ஒன்றும்

திடுக் திருப்.

வ.வா சங்க போட்டிக்கு "ரெண்டு பதிவு"

என்ன, எல்லாரும் சொந்தக் கதை எழுதறாங்க..?

ரெண்டாவது அட்டம்ப்ட்!!

ஞாபகம் வருதே!

யார் இந்த யானைக்கு தீனி போடுவாங்க?!

காமெடி கலாட்டா.

இரண்டாமவன் - இரண்டு நாள் முதல்வன்

முதல்(சேகரிப்ப)வன்.

ரெண்டு

நிறைய ரெண்டு இருக்கு...!

வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழாவுக்காக...

அப்ப 'என்னவளி'டம் இதயமே இருந்ததில்லையா..? கொளப்பறாங்களே!

எனது புலம்பல்கள்_(9)

மறுக்கா ரெண்டு இதயமா? இரவு கவியும் Sen22ம் - இணை கற்பனை!

திரும்பிப் பாருடி!

ஹை! டபுள் லுக்ஸ்! ரியலி லக்கி தான்!

ரெண்டக்கா.. ரெண்டக்கா.. ரெண்டக்கா..

தலைகீழ் சந்தோஷ் லக்கிலுக்!

கருணாநிதி , அன்பழகன் தமிழக அரசியலில் இருந்து , மே இரண்டு முதல் முழு ஓய்வு !!!!!

ரொம்ப ரொம்ப பேராசைகள்.

கொளுத்தும் வெயில் , ரெண்டு மாசம்

சொந்தக் கால்ல நில்லுங்கப்பா..!

இரட்டை பதிவர்கள் இம்சை...

துறை ரெட்டையர்களின் நினைவு!

இரண்டக்க இரண்டக்க...

யோவ் வடக்குபட்டு ராமசாமி....உன்னைய....

ரெண்டே ரெண்டு ஆசைதான்...

ஐயா வடக்குபட்டு ராமசாமி அவர்களே....உங்களை...

தமிழ் பிரியனின் 'தமிழ் இலக்கியத்தில் 'இரண்டு''

தமிழ்ப் பெருமை காட்ட, கடின உழைப்பு! மதிக்கிறேன்.

ஆத்தா! ரெண்டாவது ரேங்க் வாங்கிட்டேன்..

நெருங்கின நண்பர் தான்! அதற்காக வரிகளுக்கு இடையிலும் இடைவெளி இல்லாமலா..?

இரண்டு வார்தைகளால் உல‌கை அறிந்தோம்

உண்மை.

இரண்டு விரல்களின் நடுவில் ஒற்றை குழல்

புகையை ஏழரைங்கறீங்க... ஏழு எழுத்துக்கள் பிழையாக இருக்கே!

ஒரே ஒரு கதை

காதலே ஒரு கல(ர்)வரம்.

டாக்டர் புதுவண்டின் பரிந்துரை

RGB Primary Colour Capped Tablet டப்பிஸ்...!

நிலாவுக்கு இன்று இரண்டு

அழகுக் குட்டிச் செல்லம்..!

இரண்டு மனம் வேண்டும்- டிஎம்எஸ்ஸின் திகில் அனுபவம்

ர'சிப்'பு ரகளை!

இடமாற்றம் - வ.வா.சங்கத்திற்கான போட்டிக் கவிதை

நல்லாத் தாம்லே இருக்கு!

ரெப்பா கியர்.

எப்பா...!

யூ ஆர் ரெகுலர்லி இர்ரெகுலர்

ஆமா, இது நெஜமாலும் நடந்ததா... இல்ல, படம் பேர் கொண்டு வர்றதுக்காக எழுதியதா?தலைப்பில் இருக்கும் Paradox. ரசித்தேன்.

கல்யாண சமையல் சாதம்

சாப்பாட்டை வீணாக்காதீங்க. அது பாவம்.

எனக்கு எப்போதும் இரண்டாவது இடம்

ரெண்டாம் இடத்தில் இருப்பது கொஞ்சம் ஸேஃப்டி தான் போல.

இத்தலைப்பில் மூண்று தவருகள் இருக்கின்றன.

பெட்டிக்கு ரொம்ப வெளிய போய்க் குந்திக்கினு திங்க் பண்ண சொல்லோ, இப்டி தான் ரோசன எல்லாம் தோணும்! உசாரு!

அய்யய்யே!!! 'ரெண்டு' !!!

சரி! உங்க ஊர்ல உங்களை என்னனு கூப்பிடுவாங்க..?

முருகன் கொடுக்காத இரண்டு

ஹமாம்.

தண்டவாளப்பயணம்

பரிமாறப்படாத கதை!

ஒரு ஜோடி நாற்காலியின் கதை

நாற் காலி - அழுகைக் கண்.

அன்பு மகனே

சித்தீஈஈஈஈஈஈஈஈஈஈ...

இரண்டில் ஒன்று......!!!!!!!!!!!!!!!-

ரெண்டு விரல் போதும், இந்தக் கதையை எழுத!

::

68 படைப்புகளையும் படித்து குட்டி குட்டியாய் விமர்சனங்களை யோசித்து முடித்து விட்டேன். எல்லாமே என்னுடைய பர்சனல் கருத்து மட்டுமே! எனவே யார் மனமாவது புண்பட்டிருந்தால், நான் சொல்லும் வார்த்தைகளை மாற்றிக் கொள்ள வேண்டியது தான், பின்புல உணர்வை அல்ல! சில விமர்சனங்கள் பதிவின் Core பற்றிச் சொல்லாமல் வேறு எதையோ சொல்லி இருந்தால், அதை எல்லாம் தமாஷாக எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

நன்றி!

சில.



ந்த வாரம் முழுதும் பணியாற்றியதில் கிடைத்த ஆணிகள் இவை.

படம் நன்றி : http://www.appliedgmc.com/cgif/bump_bolts.jpg

டந்த ஒன்றரை வார இரவுகளைக் கொடுத்து ஒரு நாவல் படித்து முடித்தேன். Delhi - A Novel by Khushwant Singh. தில்லி நகரத்தின் மீது தனக்கிருக்கும் பிரேமையை சிங் அழகாகக் கொடுத்துள்ளார். ஓர் Erotic நாவல் என்று சொல்லப்பட்டாலும், அதனூடே தில்லியின் வரலாறு வசீகரமாகச் சொல்லப்பட்டு இருக்கின்றது. ஆரம்ப அத்தியாயங்கள் தில்லி அரசு டூரிஸ்ட் கைடின் நாட்களைச் சொல்லி விட்டு, ஓர் அத்தியாயம் விட்டு ஒன்றாக தில்லியின் வரலாறும், ஆசிரியரின் வரலாறுமாக மாறி மாறி வருகின்றன.

போகப் போக ஆசிரியரின் வாழ்க்கைச் சம்பவங்கள் இரண்டு பக்கங்களோடு நிறுத்தப்பட்டு நகரின் கதைகள் நீண்டு கொள்கின்றன. துக்ளக், தைமூர், நாதிர் ஷா, ஒளரங்கசீப், ப்ரிட்டிஷ், காந்தி என்று பல காலகட்டங்களில் பயணிக்கின்ற தில்லியின் கதை, நம்மையும் அதனோடு இழுத்துச் செல்கிறது.

கடைசி அத்தியாயங்கள், கமலின் ஹே ராமையும், கல்கி அவர்களின் அலை ஓசையின் கடைசிப் பாகத்தையும் நினைவூட்டுகின்றது.

மதனின் 'வந்தார்கள், வென்றார்களுக்கு' இந்நூலும் ஒரு ரெஃபரன்ஸ் என்பதை அறிந்ததில் இருந்து, இதையும் குறித்து வைத்திருந்தேன். இந்நூல் ஏற்படுத்திய பாதிப்பில் மற்றொரு பிரபல புத்தகமான Train to Pakistan-ஐயும் தேடிப் பிடித்து படித்தாக வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியுள்ளது.

ஓர் அத்தியாயத்தின் கொஞ்சத்தைக் கொடுக்கிறேன்.

சிங் பெயரைக் காப்பாற்றியுள்ளார்.

ழுதிய சிறுகதைகள் எப்படி இருக்கின்றன என்று சர்வே போட்டதற்கு, ஆறு பேர் மதித்து கருத்து தெரிவித்துள்ளார்கள். நன்றி. கடைசி ஆப்ஷனை தேர்விய நண்பரின் வார்த்தைக்கு மதிப்பளித்து, 'சிறந்த சிறுகதை எழுதுவது எப்படி?' என்று விக்கியைக் கேட்டேன். சில இணைப்புகள் கொடுத்தான்.

http://www.wikihow.com/Write-a-Short-Story/

அவற்றில் சில சுவாரசியமாகவே இருந்தன.

உதா :: பொருத்தமான வில்லனைத் தயாரிப்பது எப்படி?

எழுதும் வகையைப் பொறுத்து வில்லனைத் தயாரியுங்கள். ஒருவன் வில்லனாவதற்கு ஏதாவது காரணம் வையுங்கள். அவன் பெற்றோர் கொல்லப்படுவதாக இருக்கலாம். அந்நிகழ்ச்சியை ஊதிப் பெரிதாக்கி, அதனால் அவன் மாறிப்போவதாகக் கூறலாம். கொடூரமானவனாக, கொஞ்சம் சாஃப்டாக, மீடியமாக எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். வில்லனுக்கு பெயர் வைப்பது ரொம்ப முக்கியம். கார்த்திக் என்று பெயர் வைத்தால் வில்லனின் கொடூரம் தெரிகின்றதா? எனவே மாயாண்டி, கபாலி என்று தான் வைத்தாக வேண்டும். இல்லாவிட்டால், அந்த வில்லன் கேரக்டர் மீது பச்சாதாபம் வந்து விடலாம்.

இன்னொரு விஷயம், அவ்வப்போது வில்லனின் கேரக்டரைப் பற்றி சிந்திப்பதை விட்டு விட்டு வெளியேறுங்கள். இல்லாவிடில், அந்த சிந்தனை, உங்கள் கேரக்டரைப் பாதித்து நீங்களே வில்லனாக மாறி விடலாம். ஆரம்பத்திலேயே மிகக் கொடூரமான காரியம் செய்து, வில்லனை அறிமுகப்படுத்த வேண்டாம். கடைசியில் அவன் செய்வதற்கு அதை விடவும் பயங்கரமான காரியத்தை நீங்கள் கண்டுபிடித்தாக வேண்டி வந்து விடும்.

அடுத்தது,

உங்கள் கேரக்டர்களுக்குச் சரியான பெயர் சூட்டுவது எப்படி?

நீங்களே க்ளிக்கிட்டுப் படியுங்கள். மிகச் சுவாரஸ்யம்.

நானும் யோசித்துப் பார்த்தேன். கதையின் ஹீரோக்களுக்கு எல்லாம் அருண், கார்த்திக் என்று தான் பெயரிடுகிறேன். ஏன் கந்தசாமி என்று வைப்பதில்லை? நாம் பெயரை வைத்து கற்பனை செய்து பார்க்கையில் அது தான் சூட்டாகின்றது. வேறு என்ன சொல்ல?

வைரமுத்து அவர்கள் குமுதத்தில் ஒருமுறை, 'குப்பன், குப்புசாமி, குப்புஸ்வாமி' ஆகிய பெயர்களைக் கொண்டு அவர்களது ஜாதியை நாம் அறிந்து கொள்ளக் கூடும் என்றார். இந்தப் பிரச்னை வேறு இருப்பதால், பொதுப்பெயர்கள் வைப்பதே சரி என்று தோன்றுகின்றது.

ஆயிரங்கால் அட்டை ஒன்று போய்க் கொண்டிருந்தது. அப்போது எட்டுக்கால் சிலந்தி அங்கு வந்து, 'அண்னே! உங்களைப் பார்க்கச் சொல்ல , ரொம்ப அதிசயமா இருக்கு! என்னால எட்டு காலை வெச்சிக்கிட்டே நடக்க குழப்பமா இருக்கே! நீங்க எப்படித் தான் , இவ்ளோ கால்களையும் வெச்சுக்கிட்டு சர்வ சாதாரணமா நடந்து போறீங்களோ'னு சொல்லி விட்டு போனது. கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் அந்த வழியே வந்த போது, அந்த அட்டை இன்னும் அந்த இடத்தை விட்டுப் போக முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தது. சிலந்தியைப் பார்த்து, 'தம்பி! நான் பட்டுக்கு கம்முனு எனக்குத் தெரிஞ்ச மெதட்ல போய்க்கிட்டு இருந்தேன். நீ சொன்னதைக் கேட்டு, எந்த காலை முதல எடுத்து வைக்கிறதுனு ரொம்ப குழம்பிப் போய்த் இப்ப தடுமாறி நிக்கிறேன்'னு பரிதாபமாகச் சொன்னது.

அந்தக் கதை போல் ஆகி விடக் கூடாது.

ரு கதைத் தளத்தில் படித்த எழுத்தாளர் ஒருவரின் சுய உரையின் கடைசிப் பகுதி, தமிழ் ::

இக்கதைகள் அனைத்தும் இந்தியாவில் நடப்பதாக எழுதப்பட்டு உள்ளன. பெரும்பாலான இத்தள வருகையாளர்கள் மேற்கு உலகைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், இக்கதைகளை படிப்பதால், இந்தியத் துணைக் கண்டத்தின் கலாச்சாரம் பற்றி ஒரு மேம்போக்கான பார்வை கிடைக்கும் என்று நம்புகிறேன். இச் சுருங்கும் புவியில், உலகின் ஐந்தில் ஒரு மனிதன் சிந்திப்பதையும், நடந்து கொள்வதையும் அவர்கள் தெரிந்து கொள்வது, ஒரு கெட்ட சிந்தனை அல்ல.

அந்த கதைகள் படி தான் இந்தியர்கள் நடந்து கொள்வதாக நினைக்கச் சொல்லும் இந்த எழுத்தாளர் அறுபது வயதைக் கடந்தவராம். மெடிக்கல் ப்ரொபஷனல்.

12G, B19 என்றெல்லாம் எண்கள் இல்லாமல், இங்கு உள்ள பேருந்துகள் அனைத்தும் வெறும் ஊர்ப் பெயர்கள் மட்டும் கொண்ட போர்டுகளைக் கொன்டுள்ளன. எனவே வேறு வழியின்றி நானும் 'அ, அம், அஹ' என்று படித்து வைத்துள்ளேன். இன்று காலை அதிசயமாக 519B என்ற ஓர் எண் போட்டு, கழக்குட்டம் செல்ல ஒரு பேருந்து வந்தது. பேருந்தில் கூட்டமே இல்லை. ஸ்ரீகார்யம் பேருந்து நிறுத்ததில் நின்று கொண்டிருந்தவர்களும் ஏறவில்லை.

சரி, நாம் போவோம் என்று உள் சென்றேன். சாவடிமுக்கு தாண்டி பேருந்து நேராகச் செல்லாமல், ரைட் டர்ன் எடுத்து போக ஆரம்பித்தது. 'ஆஹா! இதனால் தான் யாரும் ஏற்வில்லையா!' என்று நினைத்துக் கொண்டேன். குறுகிய ரோடுகள், வளைந்து வளைந்து சென்றன. மேலேறி, கீழிறங்கி... பேருந்தும் ஒரு மலைப்பயணத்தை நிகழ்த்தியது. பின் ரொம்ப நேரம் கழித்து, காரியவட்டம் ஜங்ஷனுக்கு கொண்டு வந்து, பின் கொல்லம் ஹைவேயில் செல்லத் துவங்கியது.

இதில் சொல்ல வேண்டிய விஷயம் என்ன என்றால், அத்தனை மரங்கள். பூமித்தாய் பூப்பூவாய்ப் பூத்திருக்கிறாள். காய் காயாய் காய்த்திருக்கிறாள். பழம், பழமாய்ப் பழுத்திருக்கிறாள். மாமரங்கள் என்ன, வாழை மரங்கள் என்ன, தென்னை (சொல்லவும் வேண்டுமா?), பூஞ்செடிகள்,புற்கள்... அட, அட...! ஒவ்வொரு வீடும் கொஞ்சம் சின்னதாக இருந்து, காம்பவுண்டுக்குள் பிற இடங்களை முழுதும் செடிகள், மரங்கள் ஆக்ரமித்துள்ளன.

ஒரு வீட்டில் கார் போகும் பாதை மட்டும் மண்ணாய் இருந்து (காரையோ, தாரோ இல்லை. மண் மட்டுமே!), மற்ற இடங்கள் முழுதும் மரங்கள். மேல் மாடியின் கைப்பிடிச் சுவர் முழுதும் தொட்டி கட்டி (கவனிக்க, தொட்டி வைத்து அல்ல, சுவரையே தொட்டியக்கி) பூஞ்செடிகள். பாதையின் இருபுறமும் செடிகள்.

பார்க்கப் பார்க்க ரத்தக்கண்ணீர் வந்தது. நம்ம ஊரில் ஏன் இது போல் பார்க்க முடியவில்லை. தண்ணீர் இந்த அளவிற்கு இல்லாதது ஒரு முக்கியக் காரணம். மற்றொன்று நமக்கு வீடு முழுதும் செடிகள் வைத்து வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாததே என்று தோன்றுகிறது.