Wednesday, July 08, 2009

மொக்ஸ் - 09.JUL.2K9.

சென்னையில் இருந்த நாட்களில் பல சமயம் ஒன்றை கவனித்ததுண்டு. வார நாட்களில் கொளுத்தும் வானம், சனிக்கிழமை காலைகளில் கருப்படைந்து, ஞாயிறுகளில் மழையாகப் பொழிந்து தள்ளி விடும். மீண்டும் திங்கள் காலையில் பளிச்சென்றிருக்கும்.

'எப்படி இந்த வானத்திற்கு வீக் எண்ட் தெரிகின்றது? எப்படி திங்கள் எல்லோரும் எழுந்து வேலைக்குப் போங்கப்பா என்று சொல்வது போல் சுள்ளென்று வெயில் காய்ச்சத் தொடங்குகின்றது?' என்று சில சமயங்களில் ஆச்சரியப்பட்டதுண்டு.

இங்கே, இதைப்பற்றி எழுதியிருக்கிறார்கள்.

கரம் அமுதாவின் வெண்பா வலையில், எழுதிய ஒரு வெண்பாவை பதிவுக்காக இங்கே குறித்துக் கொள்கிறேன்.

நடையோ அபாரம்! நவில்கருத்தும் நன்றே!
தடையென்றா லாங்காங்கே யுள்ள - கடையிற்
பழுத்த பழத்திற் புகுந்ததீய வண்டுபோன்
றெழுத்துப் பிழைநீக் கியன்று!

பிரபல எழுத்தாளரான லதானந்த் சாரின் வலையில் ஒரு பதிவுக்கு எழுதிய கமெண்ட் வெண்பாவையும் இதனுடன் சேர்த்துக் கொள்கிறேன். இந்த வெண்பா புரிய வேண்டுமெனில், அந்தப் பதிவைப் படித்தல் தேவை.

காட்டிலாகா ஆசாமி கண்போல் கவனிப்பார்.
ஊட்டிக்குச் செல்ல விருப்பமா? - மாட்டுஜெர்கின்.
கைவீசிப் போகலாம், கிஸ்ணா சுவீட்ஸின்மென்
மைசூர்பாக் கும்கிடைக்கும், உண்.

Dr.பாலமுரளிகிருஷ்ணாவின் இரண்டு பாடல்களையும் கேட்டால்,வயதாக வயதாக குரல் கனிந்து பழுக்கும் என்பதை நம்பத் தொடங்கலாம் போலிருக்கின்றது.

சின்ன கண்ணன் அழைக்கிறான் ::



அன்பாலே அழகாகும் வீடு ::



Jack, do u c dis 4m heaven? May b a wonderful dedication 2 u. ;-(...