Friday, May 07, 2010

I just called to say....



ர் அக்டோபர் மாதத்தின் மதியத்தின் சனிக்கிழமை மதியம் கொஞ்சமாய் மழை பெய்து முடித்துக் கொண்டிருந்தது.

பூங்காவின் பாதைகளில் ஈரம். மதில்களில் நீர்த்தாரைகள். போஸ்டர்கள் சுவரோடு ஒட்டியிருந்தன. வறுகடலை வண்டி குடையின் கீழ் இயங்கியது. வானத்தில் குப்பலாய் மேகங்கள் அப்பிக் கிடந்தன. சோடியம் விளக்குகள் சோம்பலாய் எரியத் துவங்கின. காற்று சிலுசிலுவென வீசிக் கொண்டிருந்தது. சாலையின் ஓரங்களில் மஞ்சள் குட்டைகள் ஃப்ராக்டல்களாய் அசைந்தன.

நீ ஒரு ஸ்கூட்டியை அப்படி ஒரு சிறுகுளம் தெறிக்க க்றீச்சென நிறுத்தினாய். சாவியின் காதைச் திருப்பினாய். சிமிட்டிய ஆரஞ்சுக் கண்கள் இமை மூடிக் கொண்டன. இறங்கி, ஸ்டேண்ட் போட்டு விட்டு, ஹெல்மெட்டைக் கழட்டி, மாட்டி விட்டு, இறங்கிக் கொண்டாய்.

சாவியைச் சுழற்றியவாறு, துப்பட்டாவைக் கழுத்தைச் சுற்றிப் போட்டுக் கொண்டாய். உன் ஜீன்ஸில் மழை ஈரம் குளிர்ப்படுத்தியது. ப்ளூ டாப்ஸில், 'Love. Win' ஜிகினா எழுத்துக்களில் திரண்டிருந்தன. தோளில் சரிந்த கைப்பையை மெல்லிய இடையோடு ஒட்டி வைத்து நேர்ப்படுத்தினாய். ஒரு கையில் வளையல். மற்றொன்றில் மெல்லிய வாட்ச். சின்ன செயின் ஒன்றைக் கடித்துக் கொண்டே பூங்காச் சுழற்கதவைச் சுற்றி உள்ளே சென்று விட்டாய்.

சிலர் குடை பிடித்தவாறே வாக்கிங் போனார்கள்; அவர்கள் கேன்வாஸில் கறைகள். ஒரு தாத்தா நீள நாற்காலியின் ஒரு முனையில் அமர்ந்து மூச்சு வாங்கிக் கொண்டிருக்க, பக்கத்தில் பாட்டி செல்போனில் யாருடனோ பேசினாள். செயற்கைப் புற்குடைகளுக்குள் அப்பா, அம்மா பேசிக் கொண்டிருக்க, பையனும் பெண்ணும் மரங்களிலிருந்து ஒருவர் மேல் ஒருவர் மழை தெளித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு டீனேஜ் கூட்டம் சின்னதாய் கால்பந்து விளையாடிக் கொண்டிருக்க, அங்கே மட்டும் ஆரவாரம் கேட்டது. மற்றபடி அத்தனை பறவைகளும் எல்லாத் திசைகளிலும் பறந்து கொண்டிருந்தன.

நீ நடைபாதையிலிருந்து கொஞ்சம் தள்ளியிருந்த இரண்டு பேர் நாற்காலியில் அமர்ந்து கொண்டாய். கைப்பையினைத் திறந்து தடிமனாய் ஒரு புத்தகம் எடுத்தாய். My Name is Red. Orhan Pamuk. படிக்கத் தொடங்கினாய்.

நான் வந்தேன். அருகில் அமர்ந்து கொண்டேன். பார்த்துப் புன்னகைத்தாய். புத்தகத்தை மூடி வைத்து, நெருங்கி அமர்ந்தாய். என் கையை உன் தோல் மேல் வைத்துக் கொண்டாய்.

"எதற்கு வரச் சொன்னாய்..?" என்று கேட்டாய்.

மெல்ல சிரித்தேன்.

"சுற்றிப் பார்..!" என்றேன்.

பார்த்தாய்.

மூன்று பேர் நின்று கொண்டிருந்தார்கள். ஒருவன் கீ-போர்ட். பேட்டரியை செட் செய்து விட்டு, அலட்சியமாக சூயிங்கம் மென்றான். நீ பார்த்ததும் "ஹாய் ஏஞ்சல்..!" என்றான். மற்றொருவன் அகெளஸ்டிக் கிடாரை குறுக்காக அணிந்து கொண்டு ஸ்ட்ரைக்கரைச் சரியாக விரல்களுக்குள் பதுக்கி நரம்புகளை மிடுக்கிக் கொண்டிருந்தான். கிடார் பாடியை மனைவி போல் மெல்லத் தட்டி, மூன்றாம் நரம்பைச் செல்லமாய்ச் சுண்டினான். காற்று அதிர்ந்தது. இன்னொருவன் சிந்தசைஸர் பட்டன்களைத் திருப்பிக் கொண்டிருந்தான். இடது கையால் உனக்கு ஒரு சல்யூட் சொன்னான். அவன் இடது காதில் கடிக்கன் அணிந்து, ஸ்லீவ்லெஸ் கோட்டால் மூடியிருந்த உடலிலிருந்து கிளம்பிய இடது கையில் ட்ராகன் டாட்டூ வரைந்திருந்தான்.

நீ அவர்களைப் பார்த்து முடித்து, இரு புருவங்களுக்கிடையே குழப்ப முடிச்சுடன் என்னைப் பார்க்க, நான் கையில் வயர்லெஸ் மைக் எடுத்து வைத்துக் கொண்டு உன்னைப் பார்த்துக் கண் சிமிட்டினேன்.

லேசான புன்னைகையுடன் பாமுக்கைக் கைப்பையில் வைத்துக் கொண்டாய். தாத்தா என்னவென்று பார்த்தார். பாட்டி, செல்போனை அணைத்து விட்டு, தாத்தாவிடம் நம்மைப் பார்த்து ஏதோ சொன்னாள். கால்பந்து பையன்கள் "கோல்...!" என்று கத்தினார்கள். மிஞ்சிய மழையுடன் விளையாடிக் கொண்டிருந்த பையனும் பெண்ணும் அந்த அசோக மரத்தின் இலைகளைப் பிடித்து இழுக்க எம்பிக் கொண்டிருந்தார்கள். அம்மாவும் அப்பாவும் குர்குரேயைத் தீர்ந்து விட்டதா என்று கவிழ்த்துப் பார்த்தார்கள். மதிலுக்கு வெளியே சாலை குறை இரைச்சலாய்ப் பேசியது.

மூன்று பேரும் ஓர் ஒத்திசைவுடன் கிளம்ப, பாடத் தொடங்கினேன்.

No new year's day to celebrate
no chocolate covered candy hearts to give away
No first of spring, no song to sing
in fact here's just another ordinary day

No April rain,
no flowers bloom no wedding
Saturday within the month of June.
But what it is, is something true made up of
these three words that I must say to you:

I just called to say I love you
I just called to say how much I care
I just called to say I love you
[ Find more Lyrics on http://mp3lyrics.org/nv ]
and I mean it from the bottom of my heart

No summers high,
no warm July no harvest moon to
light one tender August night.
No autumn breeze,
no falling leaves not even time
for birds to fly to southern skies.

No libra sun, no Halloween
no giving thanks to all the Christmas joy you bring.
But what it is, though old so new to fill
your heart like no three words could ever do.

I just called to say I love you
I just called to say how much I care
I just called to say I love you
and I mean it from the bottom of my heart
of my heart, of my heart

உன் முன்னால் மண்டியிட்டுக் கைகளை விரித்து மறைத்து வைத்திருந்த ஒற்றை சிகப்பு ரோஜாவை உன்னிடம் நீட்டினேன். ஒரு மெளனமான புன்னகையால் அதை வாங்கிக் கொண்டாய்.

"You are amazing...!" சொன்னாய்.

"இந்த உதடுகளுக்குப் பேசுவதை விடவும் இன்னும் சிறப்பான வேலை கொடுக்கலாம்..!" என்றேன். உன் கழுத்தின் மென் செயினைத் தடவி, விரலால் வலிக்காமல் இழுக்க, மிகமிக பக்கம் வந்தாய். உன் கன்னத்தின் வழுவழு வாசமும் தீண்டியது. இன்னும் கிட்டகிட்ட பக்கம் வரும் போது, ஈரம் படர்ந்த உதடுகளை நெருங்கிய போது....

மூன்று பேரும் பீத்தோவன் 9வது சிம்பொனியை இசைக்கத் தொடங்கினார்கள். தாத்தா பாட்டி கிளம்பி விட்டார்கள். கால்பந்து பையன்கள் கைதட்டினார்கள். பையனும் பெண்ணும் இன்னும் தூரமான மரங்களைத் துரத்திக் கொண்டிருக்க, அப்பாவும் அம்மாவும் மெல்லப் புன்னகைத்துக் கொண்டார்கள்.

பறவைகள் ஆரஞ்சு வானத்திற்குப் பறந்து கொண்டிருந்தன.



***

Image Coutesy :: http://files.myopera.com/m2m99/albums/604687/Art%20love%20mrm%201.jpg

Thursday, May 06, 2010

கடவுளால் மட்டுமே முடியும்.



ப்போது களத்தின் கடவுளும் ட்வீட்டர் வந்து விட்டார். இரண்டு நாட்களுக்கு முன்பு சேர்ந்தார். நொடிக்கு 1.2 என்று சென்று கொண்டிருந்த பின் தொடர்வோர் எண்ணிக்கை, பத்திரிக்கைகள், ட்வீட்டுகள், இணையத் தளங்கள் என்றெல்லாம் தகவல் தீ போல் பரவிச் செல்ல, இப்போது நொடிக்கு ஐம்பது பேர் என்று ராக்கெட் வேகத்தில் பாய்ந்து கொண்டிருக்கின்றது.

சச்சின்.

ஷாரூக் கான் இதுவரை பெற்றிருக்கும் அதிகப் பின் தொடர்வோர் எண்ணிக்கையில் இரண்டே நாட்களில் பாதியைக் காலி செய்து விட்டு, பறக்கிறார்.

நீங்களும் தொடருங்கள்.

@sachin_rt

எனக்குப் பிடித்த ஒரு ட்வீட்.

Ashutosh_Rai: I know its wrong to compare but cnt help, sudn't v hv atleast 1 politician whom d masses wud love n respect like #Sachin @sachin_rt

me : The last one in that calibre was assassinated 62 years back. ;(

Tuesday, May 04, 2010

...ஆதலினால் காதல் செய்வீர்!



னவுக்குள் ஊர்வலத்தில்
தேர் வலம் வரும்;
நினைவுகள் கல்லெறிந்த
சிலையாகும்;
செல்பேசி மினுக்கிட
இதயம் இரட்டிப்பாகும்;
குறுந்தகவல் அனுப்பி, பதில் காலம்
மனம்
கடல் மேல் ஒளியாகும்;
கண்ணாடியிலிருந்து
பார்க்கும் கண்கள்
வெட்கம் காணும்;

வாக்கிங் போகையில்
முந்தின இரவு மழையில்
நனைந்த நாய்க்குட்டி
உதறும் போது,
உங்களுக்கும் சிலிர்க்கும்;
அத்தனை
காதல் பாடல்களும்
உங்களுக்காகவே பாடப்பட்டிருக்கும்;
வோர்ட்ஸ்வொர்த்
உங்கள் கவிஞர் ஆவார்;

விக்கியில் 'ரொமாண்டிசிஸம்'
படிப்பீர்;
கூகுளில்
'Classic Love Poems'
தேடி நெகிழ்வீர்;
<3 என்றே
உங்கள் தகவல்கள் முடியும்;

வயிற்றுக்குள்
பட்டாம்பூச்சிகள் சிறகடிக்கும்;
கால்களில் பஞ்சு
சேர்ந்து கொள்ளும்;
அரையடிக்கும் மேலேயே
மிதப்பீர்;
பசிக்கத் தோன்றாது;
காற்றில் துணுக்குகளில்
கவிதைகள் மிதக்கும்;
ஊற்றும் வெயிலிலும்
உற்சாகம் உணர்வீர்;
தெருவெங்கும்
ரோஜா பூத்திருக்கும்;
பறவைகள்
உல்லாசமாகக் கூச்சலிடும்;

பைத்தியம் போல் எதற்கோ
புன்னகைப்பீர்;
தனக்குள் பேசுவீர்;
மழையில் கிடார் வாசிப்பீர்;
மேகக் கிறுக்கல்களில்
முகம் தேடுவீர்;
இரவின் தனிமைக்குள்
புகுந்து கொண்டு,
ஜன்னல் வழி குளிரும்
நிலவை முத்தமிடுவீர்;

மற்றுமொரு பகல்
இடையில்
முடியாது
நீண்டு கொண்டிருக்கையில்...
மெளனமாய்
அழத் தயாராவீர்;