படிக்கட்டுகளில் மெளனமாக இறங்குகின்றது இரவு. வழியும் தென்றலில் உலவுகின்றது காதல். முகில் திரளில் கோடுகளாய் மின்னல். தொலைவுக் காற்றில் ஈரம்.
தோட்டத்தில் உறங்கும் குறும்பாடு. மதில் மேல் மதுக்குடுவை. இலைகளில் நழுவும் வெண்ணொளி. பனிச்சரங்கள் விளிம்பில் அரவம். வேர்களில் ஊடுறுவும் இளநீர். உறக்கத்தில் ஊர். வழி தவறும் மொழி. புலர்பொழுது யுகம். தடுக்கும் கிளை. கூர் கரை உடைப்பு.
ராக்கனவு. ரத்தம் சுவைக்கும் நடுக்கம். முதலை உண்ணும் இளம் கன்று. சிறை புகும் சிறுகுழல். பறை முழக்கம். பதியன் போடும் குருத்து.
விண் நிறை உயிர். சுருள் சுருள் அவிழ் தென்னை. இறைக்க ஊறும் கேணி. மறைந்தே கரையும் குயில். தூவும் மழைப்பன்னீர். குழையும் மண். குளிரும் இமை. மலை கிளரும் நிழல். பிணை கேட்கும் இணை.
புதிதாய் பூக்கும் புழு.
அசை. இசை. அசைக்கும் இசை. இசைக்கும் அசை. இசைக்கும் அசைக்கும் விழைவு.
பழைய விளக்கு. புதிய தீ. எரி குரல்.
புதரில் ஒளியும் மான். சிறகடிக்கும் கிளி. நடுங்கும் தொழுவம். தலைகீழ் பேரருவி. கடும்பாறை நனையும் கருமழை. முழுநிலா நிழல்.
பொன் ஊறும் பழங்கள். தேன் விரவும் ரசம். காணா பயம். விழி ஒதுக்கும் நாணம். நாண் அதிரும் ஒலி. வினை நுட்பம். விருந்தில் பொங்கு தணல். மேல்மாட அன்னம். நுனி படர்க் கொடி.
மிகை நடத்தையில் மிளிரும் கர்வம். புனல் வழியில் நகரும் ஓடம். மிருதுவான முகத்தில் பதியும் முத்தம். மென்சூட்டில் பூக்கும் நாணம். நெற்றிக் கோட்டில் சொட்டும் வியர்வை. செவிமடல் சூட்டில் புருபுருக்கும்மென்மயிர். அனல் தீட்டும் ஓவியம்.
திரி கருக்கும் அகல் சுடர். சுடர் உமிழ் செம்மலர். மலர் நிறை ததும்பும் நுரை. நுரைத்துப் பொங்கும் வெண்பனி. பனி கரந்த நீள்விரல். விரல் தடவும் நாசி. நாசி நகரும் இருள். இருள் கொள்ளும் ஈருடல்.
பெருமூச்சு.