Saturday, May 09, 2009

Enigma - Silent Warrior.



Long ago, for many years
White men came in the name of GOD
They took their land, they took their lives
A new age has just begun
They lost their GODS, they lost their smile
they cried for help for the last time.
Liberty was turning into chains
But all the white men said
That's the cross of changes

In the name of GOD - The fight for gold
These were the changes.
Tell me - is it right - In the name of GOD
These kind of changes ?

They tried to fight for liberty
Without a chance in hell, they gave up.
White men won in the name of GOD
With the cross as alibi
There's no GOD who ever tried
To change the world in this way.
For the ones who abuse His name
There'll be no chance to escape
On judgement day

In the name of GOD - The fight for gold
These were the changes.
Tell me - Is it right - In the name of GOD
These kind of changes ?
Tell me why, tell me why, tell why
The white men said:
That's the cross of changes ?
Tell me why, tell me why, tell why,
In the name of GOD
These kind of changes.

கா...போ...!



ருந்திராட்சைகளின் மென் தோலை மின்னல் நகங்களால் கிழித்துப் பிரித்து வானம் தன் மேல் ஒட்டி வைத்துக் கொண்ட முன்னிரவு இன்னும் கொஞ்சம் நேரத்தில் வந்து விடப் போகின்றது. ஆரஞ்சுச் சாற்றை அள்ளிப் பூசிக் கொண்ட ஒற்றைக் குடைக்குள் ஒளிந்து கொண்டு நீ வருகிறாயா என்று பார்க்கிறேன், தூரத்தில்! இல்லை.

கரைகளில் கவிழ்ந்திருந்த கற்களின் கூரான முனைகளில் எல்லாம் ஈரம் பூத்திருக்கின்றது. நண்பகலிலிருந்து நழுவிக் கொண்டு நகரப் பார்த்த ஒளித் துணுக்குகளைக் கொஞ்சம் கொஞ்சம் அங்கங்கே ஒட்டி வைத்து, காற்று தலையாட்டுகிறது. இந்த நீர்க்குளத்தின் எல்லைகளில் புற்கள் படர்ந்திருக்கின்றன. குளிர்ச் சொதசொதப்புடன்...! ஒரு ஜிலீர் வாசத்துடன்..!

ஊசியிலை மரங்கள் என்னை உற்றுப் பார்க்கின்றன. அதன் நுனி இலைகளில் இருந்து சரிந்து கொண்டே இருக்கின்றது எனக்கான அவற்றின் கண்ணீர், மெளனமாய்! பட்டை உறியும் பழுப்பு உடல்களில் படபடப்பாய் நகம் கடிக்கும் குழந்தைகளாய் நீர்ச் சொட்டுக்கள்.

மாலை வேளையின் மயக்கம் கண்களில் தளும்ப பறவைகளும் கூடுகளுக்குத் திரும்புகின்றன. சிறகுகளில் இருந்து பிரியும் இறகுகள் சுழன்று, சுழன்று... குளத்தின் மெல்லிய பரப்பில் மிதக்கின்றன. மெல்ல சுருண்டிருக்கும் அவற்றின் ஒவ்வொரு மிருது இழைகளும் கூசச் செய்யும் உன் கழுத்தோர பூனை முடிகளைச் சொல்லும்.

மேகங்கள் கொத்துக் கொத்தாய்ப் புரள்கின்ற வானப் பரப்பின் பிம்பங்கள் அசைந்து கொண்டே இருக்கின்றன. எங்கோ தூரத்தில் மழை பெய்து கொண்டிருக்க வேண்டும். மெல்ல மெல்ல முகிழ்க்கின்ற மொட்டுக்களாய் குளிர் ஏறுகின்றது. சரிவிலிருந்து நகர்ந்து வருகின்ற சிற்றோடை சுழலில் ஒன்றையொன்று சுற்றிக் கொண்டு, நுரை பிறந்து வெடித்து, பிரபஞ்சத்தின் முகமிலியோடு கலக்கின்றன.

பொட்டல் பொட்டலங்களாய் வீடுகள் தெரிகின்றன. யாரோ வந்து என்னை விசாரிக்கக் கூடும். ஒரு சின்ன பெண் வந்து ஒரு பூ கொடுக்கக் கூடும். கோபித்துக் கொண்ட மனைவியை யாரேனும் முத்தமிடக் கூடும். அவன் அவளது கணவனாகவும் இருக்கலாம். மெழுகுவர்த்தி கரைந்த பின் யாரோ அதன் படிமப் பரப்பைச் சுரண்டவும் கூடும். ஜன்னல் வழி நகர்வில் இருக்கும் முகில் சரங்களை யாரேனும் பார்த்துக் கொண்டிருக்கலாம். பூனைக்குட்டியை மேலே போட்டுக் கொண்டு ஒரு சிறுபையன் தூங்கிக் கொண்டிருக்கலாம். பழைய காகம் போல் ஒவ்வொரு கல்லாய் எடுத்து இந்த நீர்ப்பரப்பை நிரப்பும் என்னைப் போல் எவரேனும் ஒரு பெண்ணுக்காகக் காத்திருக்கலாம்.

நிஜத்தில் எப்போதும் கலந்திருக்கும் நிழல் போல், ஒரு நதியோடு எப்போதும் தொடர்ந்திருக்கும் அலை போல், அந்த மரங்களோடு எப்போதும் பொறித்திருக்கிறது காதல். காலடிகளில் எப்போதோ முளைத்து, கிளைத்து, வளர்ந்து, உழைத்து, இறந்து, சருகாகிப் போன பழுப்பு இலைகள் கண்டமேனிக்கு வளைந்திருக்கும். அதன் மேல் ஓர் எறும்பு சறுக்கி விழாமல் நடந்து போகும் போது, கால் சுளுக்கிக் கொண்டு விழும் போது என்னைப் பார்த்து விட்டது. மெல்ல ஓர் இலையை நகர்த்திக் குளத்தில் தள்ளி, அசைந்து கொண்டே இருக்கின்ற அலைகளின் மேல் துடுப்பு போட்டு என் கரைக்கு வந்தது. நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி விட்டு, என் அருகில் குதித்து கை நீட்டியது. கொடுத்தேன். கடித்து விட்டு சரசரவென்று ஓடிப்போனது. எறும்பைப் போல் தான் நீயும் செய்யப் போகின்றாயா?

பின்மாலை மெல்ல மெல்ல பின்னோக்கி நகர்ந்து செல்ல, முன்னிரவு முன்னோக்கி வந்து கொண்டிருக்கின்றது. நீ வாழும் தெருக்களில் இந்நேரம் விளக்குகள் ஏற்றப்பட்டிருக்கலாம். ஒவ்வொரு விளக்காய் மூடி திறந்து எண்ணெய் ஊற்றி, திரி கிள்ளி, தீ முத்தம் வைத்து கண்ணாடி மூடி வைத்து விட்டுப் போகும் போது, உன்னறை ஜன்னல் உறைகளிலும் குழைந்த வெளிச்சப் பொட்டுக்கள் தெரிந்திருக்கும் அல்லவா..? உன் படுக்கையில் சிதறியிருக்கும் புத்தகங்களோடு போர்வையும் குழம்பியிருக்கையில், நீ என்ன செய்து கொண்டிருக்கின்றாய்?

மழை இங்கும் இன்னும் பெரிதாக வரலாம் என்று இறுக்கச் சாத்திக் கொள்ளும் வீட்டில் இருந்து, நீ வெளியேறி துளிகளைக் குடிப்பாயா...? வெளியே நின்று, ஈரப்பொடிப்பொடியாய் உதிர்ந்து கொண்டிருக்கும் ஒரு பழைய மரத்தைப் பார்த்து, நீ என்ன நினைப்பாய்..? கூரைகளில் இருந்து நேர்க்கோடுகளாய் விழும் போது நீ என்ன செய்வாய்?

உன்னோடு இறுக்க ஒட்டிக் கொள்ளும் மென் வெண் ஆடைகளை இந்த சிறுமழை கலவரப்படுத்தாதோ? தெருக்களில் நிறைந்து ஓடி முடித்த பின் மெல்ல ஓய்கின்றன வானின் துளிக் கொண்டாட்டங்கள். ஒரு மைனா அனுப்புகிறேன். அதன் குரல் கேட்டதா உனக்கு..? சுடர் குறைந்து, பொட்டாய்த் துளிர்த்துக் கொண்டிருக்கும் ஒரு வீதி விளக்கின் கொம்பில் அமர்ந்து கூவுகின்றதே, என்னை நினைவுபடுத்தவில்லையா அது..?

இன்னும் ஈரம் கசியாத செம்மண் பாதை வழியாக நீ நடக்கப் போகும் தடங்களுக்காக சகதிகளே காத்துக் கொண்டிருக்கையில், ஈரம் குறையாத செவ்விதழ்கள் வழியாக நீ பதிக்கப் போகும் இடங்களுக்காக நானும்...!

Friday, May 08, 2009

ச்சும்மா கில்கில்ப்பு ஜில்பான்ஸ்....!

ச்சரிக்கை 1: கொயந்த பசங்க எல்லாம் ஒதுங்கிக்கோங்க. அப்பால எதுனா ஆச்சுனா ப்ரச்சன தான்.

எச்சரிக்கை 2: பெருசுங்களும் ஒதுங்கிக்கோங்க. அப்பால எதுவும் ஆகலைன்னா ப்ரச்சன தான்.

***

நெருங்க... நெருங்க... பொறுங்க..பொறுங்க...




ஹொயன்ன...ஹொயன்னா...!



இல்லயா பின்ன... வாரே...வாரே...வா...



உன்மடி பொன்மடி மன்னவன் கொண்டாடும் நேரம் என்ன, சொல்லடி.. சொல்லடி...சிந்திச்சே..



தெப்பம் போல தத்தளிக்கும் செம்பருத்தி நாத்து...



கண்டேனடி காஷ்மீர் ரோஜா... வந்தேனடி காபூல் ராஜா...



நெஞ்சில் பாயுது... காமன் விடும் பாணம்...



கவா..கவா..கவா..



மேலே கண்ட...சரி..சரி.. கேட்ட பாடலுக்கு தேவா எங்கிருந்து 'இன்ஸ்ப்ரேஷன்' (நன்றி : கெளதம் வாசுதேவ மேனன்!) பெற்றிருக்கிறார் என்பதை கீழ்க்காணும் பாடலைக் கேட்டு அறிந்து கொள்வீராக..!! முக்கியமாக சரணங்கள்!



ஜில்லென்று வீசுது வாடை... நில்லாமல் நீங்குது ஆடை... (இது இன்டர்நேஷனல் ஃபிகர் அல்லோ...!! நடு நடுவில் டார்ச் லைட்டுகளைக் காட்டி மூடையே கெடுக்கறாங்க..! ச்சை...!! :-|)



இது தான்டா பீக்...!!!!



சரி...சரி...இன்னிக்கு இதோட முடிச்சிக்கலாம்... எதுனா இம்பார்டெண்ட்டா மிஸ்ஸாகி இருந்தா சொல்லுங்கப்பா...!!! :)

Tuesday, May 05, 2009

ஏக் டவுன் மே(ங்) ஏக் மோக்ளி ஹிந்தி படித்தான் ஹை!



செய்ண்ட் மேரிஸ் மெட்ரிகுலேஷன் ஸ்கூலில் இருந்து மாற்றப்பட்டு ஏழ்மையான மற்றொரு கிறித்துவப் பள்ளிக்கு மாற்றப்பட்டதில் காணாமல் போனது இந்திப்பாடம். சனிக்கிழமை மாலைகளிலும், திங்கள், புதன் முன்னிரவுகளிலும் சித்ரஹார், சித்ரமாலா வகையறாக்களால் கொஞ்சம் கொஞ்சம் புரிந்தாலும் அகாடமிக்காக படிக்க முடியாமல் போனதை ஈடுகட்ட வெளியே வகுப்புகளுக்கு அனுப்பினார்கள்.

மீனாட்சி அம்மன் திருமண மண்டபத்திற்குச் செல்லும் வழியில் ஒரு டீச்சர் வகுப்பு எடுத்தார்கள். ஏற்கனவே மெட்ரிக்கில் எழுத்துக்களைப் பிய்த்துப் பிய்த்துப் போட்டு எழுதிப் பழகியதால், முதலில் கற்றுக் கொள்ளும் பெயரை எழுதினேன். பின் வரிசையாக நாடுகளின் பெயர்கள் என்றெல்லாம் எழுதி அவரை ஒரேடியாக அசத்தி விடுவது என்று முடிவெடுத்துச் செயல்பட்டுக் காட்டினால், அதை வாங்கி ஓரமாக வைத்து விட்டு, மீண்டும் அ, ஆ-வில் அ..ஆரம்பித்தார். வெறுத்துப் போனேன். பிறகு தான் தெரிந்தது, அதுவரை நான் எழுதியதெல்லாம் எழுத்தல்ல; பார்த்திபன் கவிதைகள் என்று!

பிறகு மெய்ன் ரோட்டில் ப்ரகாஷ் ஸ்டோர்ஸுக்கு கொஞ்சம் தள்ளி இருந்த ஒரு ஹிந்தி சார் வீட்டில் கற்றுக் கொள்ள அனுப்பப்பட்டேன். சார் வீடு கொஞ்சம் பழைய காலத்தது. ரோட்டில் இருந்து நான்கு படிக்கட்டுகள் ஏறினால் வீடு திறந்து, நீளமான பாதை காட்டும். அதில் போனால், முற்றம் வரும். மேலே கம்பிகள் வேயப்பட்டிருக்கும். அதன் வழி வெய்யிலும், அவ்வப்போது மழையும் வரும். (இப்போதைய கவிதைகளுக்கு முற்றம் வரும் போதெல்லாம் கற்பனை செய்வது இதையே!). பின் பெரிய பட்டாசாலை, உள்ளே ரெண்டு ரூம்கள். வந்த வழியே இடது புறம் திரும்பினால், படிக்கட்டுகள் மேலேறும். கூடவே நாமும் ஏறினால், பால்கனி வரும். அங்கே ஒரு ரூம் இருக்கும். பால்கனியில் ஒரு டேபிள், நாற்காலி போட்டிருப்பார்கள். ஓர் அக்காவும் இருப்பார்.

சாருக்கு ரெண்டு பெண்கள். ஒரே பையன். எனக்கு அவர்கள் ரெண்டு அக்காக்களும், ஒரு பையனும் ஆனார்கள். சார் கொஞ்சம் கண்டிப்பு. கொஞ்சம் கொஞ்சம் ஏ.எம்.ராஜா போல் இருப்பார். அடியெல்லாம் விழும். சார் வெளியே போயிருக்கும் சமயங்களில் சொல்லி விட்டுப் போவார். பெரிய அக்கா தான் பாடம் நடத்துவார். டெஸ்ட் வைப்பார். சாரிடமிருந்து கஷ்டப்பட்டு பெயர்க்க வேண்டிய 'good' அக்காவிடமிருந்து பூ மாதிரி உதிரும்.

அந்தப் பையன் இருக்கிறானே... செம வாலு!

அப்போது உருவம் படம் வந்திருந்தது. மோகன் தியேட்டரில் மோகன் படம். மேக்கப் இல்லாமலேயே அவர் நடித்திருப்பதாக வதந்தி. அப்படம் பற்றிய அனுபவம் பின்னர்!

நானே படம் பார்த்து பயந்து போயிருந்தேன். ஒரு நாள் மின்சாரம் காணாமல் போயிருந்தது. க்ளாஸுக்குப் போயிருந்தேன். அக்கா கீழே ஏதோ வேலையாக இருந்தார்கள். புக்ஸை எல்லாம் எடுத்துக் கொண்டு மாடியில் இரு, வருகிறேன் என்றார்கள். 'பயமாக இருக்கு..' என்று முனகிக் கொண்டே, ஒவ்வொரு படியாகத் திக்திக்காக ஏறிச் சென்று விட்டேன். மேலே ஏதோ ஒரு டானிக் பாட்டில் மூடியில் சின்ன திரி நீட்டி, சீமெண்ணையில் நடுங்கிக் கொண்டிருந்தது. கொஞ்ச நேரம் கழித்து, கொலுசு சத்தம் முன்னால் செல்ல, அக்கா வந்தார். நான் பயத்துடன் அருகிலேயே அமர்ந்து, அந்த வெளிச்சத்திலும் 'யஹ் கலம் ஹை' சொல்லிக் கொண்டிருக்க, திடீரென வாசலில் இருந்து... ஒரு 'பேஏஏஏஏ...'!!

'உருவம்' மோகன் போல் முகமெல்லாம் கொப்புளங்களோடு ஒரு மூஞ்சி..! அவ்வளவு தான். கத்திக் கொண்டே கைகளால் முகம் மூடிக் கொண்டு அக்கா மடியில் விழுந்து விட்டேன். உலுக்கி எழுப்பினார்கள்.'நாயே..! கழுதையே..!' என்றெல்லாம் திட்டு. அந்த உருவத்தைத் தான்!. வெண்டைக்காய் காம்புகளையெல்லாம் ஒட்டிக் கொண்டு அலற வைத்திருக்கிறான் அந்த பாவி...!!! அக்காவின் தம்பி.

சார் புண்ணியத்தில் முதல் பரிட்சையான 'ப்ராத்மிக்' எழுதி பாஸுக்கு கொஞ்சம் மேலே வாங்கியதில் திருப்தி.

இப்போது அந்த வீடு மட்டும் அங்கே இருக்கின்றது என்று நினைக்கிறேன்.

நீண்ட தூக்கத்தில் இருந்து விழித்து, அடுத்த படையெடுப்பு நடந்தது ஒன்பதாவதில்! ஃபயர் ஸ்டேஷனுக்கு எதிரில், ஒரு டீச்சர் இருந்தார்கள். அவர்கள் நன்றாகவே எடுத்தார்கள். அடுத்த பரிட்சைக்கு பேர் 'மத்யமா'வாம்! மதியமா படிப்பாங்க போல!

நானும் இப்போது கூடவே தம்பியும் வந்தான். அவன் ப்ராத்மிக். நான் மத்யமா. சத்தமாக படிக்கச் சொல்வார்கள். படிப்போம். அந்தியூரில் இருந்து ஒரு சகோதரர்கள் வருவார்கள். அண்ணன் பேர் மட்டும் நினைவிருக்கிறது. காமேஸ்வரன். பையனும் நல்லா சிகப்பாகவே இருப்பான். ஆனால் தம்பி கருப்பாக! டீச்சருக்கு ஒரு நாள் ஆச்சரியம். 'அதெப்படி..? வழக்கமா தம்பி தான சிகப்பா இருப்பாங்க..?' என்று கேட்டார்கள். 'அதானே..?' என்று நானும் கேட்டேன் கடுப்பாய்!

கஷ்டப்பட்டு தட்டுத் தடுமாறி எங்களை ஒப்பேற்றினார்கள். மல்டி ஷிப்டுகளில் பாடங்கள் எடுத்தாலும், எந்த வகுப்பிலும் எந்த பிரிவினர் சென்று கேட்டாலும் சொல்லித் தருவார். சில சமயம் சிரிப்பாய் இருக்கும். தடிமாடுகள் போன்ற, கை நெஞ்செல்லாம் சுருள் சுருளாய் முடி கலைந்த அண்ணன்கள் எல்லாம் ஒல்லியாய் இருந்த டீச்சரிடம் பயந்து நிற்பதைப் பார்க்கவே, நாங்கள் போய், 'டீச்சர் இது கலமா, கமலா..?' என கேட்போம். டீச்சர் பேர் கமலா இல்லை என்பதறிக!

திருச்சி மலைக்கோட்டை அடிவாரத்தில், தெப்பக்குளத்து ஒரு கரையில் மேற்கு பார்த்து இருக்கும் அகஸ்தியர் புக் ஸ்டால் ஒவ்வொரு பரிட்சைக்கும் பாட புத்தகங்கள், கேள்வி பதில்கள் எல்லாம் அச்சடித்து வெளியிடுவார்கள். ஹிந்தி தேர்வு எழுதுபவர்களுக்கெல்லாம் அவை தான் தெய்வம் தொழாத் துணை! டீச்சரே ஆர்டர் செய்து வாங்கித் தருவார்கள். பழைய கேள்வித்தாள்கள், விடைகள், டெஸ்டுகள், அடித்தல், இம்போஸிஷன், திருத்தல்கள் என்று அவரும் எத்தனையோ பாடுபட்டும், அரசினர் ஆண்கள் மேனிலைப் பள்ளியில் ஒரு ஞாயிற்றுக்கிழமை எழுதிய தேர்வில், ப்ராத்மிக்கில் வாங்கிய அதே மார்க் வாங்கி பாஸ் செய்தேன்.

என்ன, ப்ராத்மிக் நூற்றுக்கு! மத்யமா இருநூற்றுக்கு! :)

அப்புறம் +2, காலேஜ், வேலை என்று திசை மாறிப் போனதில் ஹிந்தி நழுவிப் போனது.

ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டத்திலும் ஒவ்வொரு பரீட்சை எழுதி ஆயிற்று. இரண்டு வருடங்களுக்கு முன்பு 'இராஷ்ட்ரபாஷா' என்ற மூன்றாவது தேர்வுக்குத் தயாராகலாமா என்று அகஸ்தியரை எல்லாம் வாங்கி வைத்தேன். கைபடாமல் இருக்கிறார்.

இப்போது நிஹோங்கோ, டாய்ஸ்ச் என்றெல்லாம் எல்லை தாண்டிய மென்முறையில் சீன் காட்ட முயலும் போது, அன்று ஹிந்தி படித்த நாட்கள் எல்லாம் என் முன் நடந்து வந்து, 'நீயெல்லாம்...?' என்று வெவ்வெவ்வே காட்டுகின்றன.

***

1987-ல் Salt-n-pepaவின் Push It.



ஐஸ் ஐஸ் பேபி..வேர்ல்பூல்...வேர்ல்பூல் என்று ஒரு டக்கர் ஃபிகர் ஃபேமிலியோடு ஆடுவது தோன்றுகிறது.