Thursday, October 15, 2009

Greeny Diwali Wishes...!!!வசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருக்கிறேன். நாளை தீபாவளி. அலுவலகத்தில் எட்டு மணி நேரம் கண்டிப்பாக இருந்தாக வேண்டும். 8 - 20 தான் கணக்கில் வைத்துக் கொள்ளப்படும். 17:30க்கு சென்னை எக்ஸ்ப்ரஸ் இருக்கிறது. அதைப் பிடிக்க வேண்டுமெனில் குறைந்தது 17 மணிக்காவது ஸ்டேஷனில் இருந்தாக வேண்டும். அப்போது தான், ஆரவார பட்டாஸ்களும், வானம் நிரப்பும் பூச்சிதறல்களும், அதிர்வேட்டுகளும், சுற்றிச் சுற்றி அடிக்கும் சங்கு சக்கரங்களும், வீறி எழுந்து பொறியும் நிலபுருஸ்களும், ச்சும்மா கையிலேயே தூக்கி வீசும் ஊசி வெடிகளும், கல் பாம்களும், 500, 1000 என வாலா வால்களும், 'டம்...டம்...'...'டமார்...'... 'டொம்...'... ஊஷ்ஷ்ஷ்ஷ்.....' ...'பொட்...' சத்தங்களும் நிறையும் சனிக்கிழமை மீ அதிகாலை 4 மணிக்கு ஈரோட்டை அடைய முடியும். அத்ற்கு இன்று 16 மணிக்கு ஆபிஸிலிருந்து வெளியேறியிருக்க வேண்டும். எனவே கூட்டிக் கழிச்சுக் கணக்குப் பார்த்தால், இன்று 8 மணிக்குள் உள்ளே இருந்தாக வேண்டும். இன்னும் bag பேக் செய்யவில்லை.

எல்லா துணிகளையும், புத்தகங்களையும் அடைத்துக் கொள்ள வேண்டும். மடிக்கணிணியை மூட்டை கட்டி ஊரிலேயே வைத்து விட்டு வரலாம் என்று இருக்கிறேன். நிறைய நேரங்களைத் தின்று விடுகின்றது. உருப்படியாக ஏதாவது இணையத்தில் செய்கின்றேனா என்றால், இல்லை. எப்போது பார்த்தாலும் ஆர்குட்டில் நண்பர்கள் கோர்ப்பதும், மேட்டர் சைட்டுகளுக்கு விசிட் அடிப்பதுமாக வெட்டியாக போகின்றது.

உடல் வேறு ஏறிக் கொண்டேயிருக்கின்றது. 120 கூடிய விரைவில் ரீச் செய்து விடுவேன் என்று நினைக்கிறேன்.குறைந்தது 100 வருடங்களாவது வாழ்ந்து, எழுதி, உங்களை எல்லாம் கொடுமைப்படுத்த வேண்டும் என்ற உன்னத நோக்கம் கொண்டிருப்பதால், உடம்பையும் கொஞ்சம் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.

எனவே, மக்கள்ஸ்...இன்னும் கொஞ்ச காலத்திற்கு பதிவுகள் எழுதுவதை நிறுத்தி/குறைத்து விட்டு, ஜிம்மே பழியாய்க் கிடக்க உறுதி எடுத்திருக்கிறேன். தீபாவளி ரெஸல்யூஷன்.

வேண்டுதல் இருந்தால் யாரிடமும் சொல்லக் கூடாது என்பார்கள். நண்பர்களிடம் சொல்லலாம் தானே..! சோம்பேறித்தனம் எட்டிப் பார்த்தால், நீங்கள் ஞாபகப்படுத்த்வீர்கள் என்பதற்காக, உங்கள் காதிலும் 'எல்லோரும் பார்த்துக்குங்க.. நானும் ஜிம் போறேன்... ஜிம் போறேன்..' என்று சொல்லி விடுகிறேன்.

தீபாவளியைப் பத்திரமாகக் கொண்டாடுங்கள். தலை தீபாவளியர்களுக்கு ஸ்பெஷல் விஷஸ்..! தலைவரின் என்றும் பசுமையான தீபாவளிப் பாடல் பார்த்துக் கேட்டு....என்ஸாய்...!!!
மத்தளச் சத்தம் எட்டு ஊருதான்
எட்டணும் தம்பி, அடி ஜோராக..!!

வெக்கிற வாணம் அந்த வானையே
தெக்கணும் தம்பி, விடு நேராக...!!!செழுமையான தீபாவளிக்கு வாழ்த்துக்கள்...!!

8:04 PM 10/22/2009
updated :: as mom told, i have removed some words. :)

Sunday, October 11, 2009

மொக்ஸ் - 11.Oct.2K9

சூப்பர் ஸ்டாராக இருப்பதன் இழப்புகள் என்னவாக இருக்கும் என்று யோசித்த போது, ஒரு விஷயம் தோன்றியது.

தனது தனித்திறமையை வெளிப்படுத்தி, தமது துறையில் ஆழ்ந்த நுணுக்கங்கள் அறிந்தவர் என்பதை அவர்களல் ஒருபோதும் காட்ட முடியாமல் போய் விடுகின்றது. முக்கிய காரணம், அவர்களின் மீதான எதிர்பார்ப்பு வானத்திற்குச் சென்று முட்டி நிற்பது!

If Cricket is religion, Sachin in God என்று சொல்பவர்களும், நீலப்படையில் ராகுலைத் தான் ஆட்ட நுட்பங்கள் தெரிந்தவர் என்று அலசி விடுகிறார்கள். சச்சினுக்கு அவை தெரியாதா? அப்படியில்லை. காரணம், சச்சின் க்ளவுஸ் மாட்டிக் கொண்டு களத்தில் ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டு நுழையும் போதே, ஆரவாரிக்கும் மைதானவாசிகளும், டி.வி., முன் விசிலடிப்பவர்களும் எதிர்பார்ப்பது, 'டெண்டுல்கர் ஒவ்வொரு பந்திற்கும் சிக்ஸர் அடிக்க வேண்டும்' என்பது தானே?

ரஜினிக்கு நடிக்கத் தெரியாதா? முள்ளும் மலரும் பார்த்ததில்லையா..? ஆனால் இப்போது அவரைச் ச்ற்றி ஒரு இண்டஸ்ட்ரி வளர்ந்திருக்கின்றது. ஓர் படம் வரப்போகின்ற அறிவிப்பு வந்தாலே உறக்கம் கலைகின்றது. இப்போது, அப்படி அவரால் தன் முழுத் திறமையையும் காண்பித்து அத்தனை உற்சாகத்தையும் வடியச் செய்ய வேண்டியது தேவையில்லை.

சுஜாதாவால் 'the so called' இலக்கியம் படைத்திருக்க முடியாதா..? அவர் படைத்திருக்கிறார் என்பது வேறு விஷயம் (குருபிரசாத்தின் கடைசி தினம், பதவிக்காக..)

ண்மையில் தமிழ்ப்பறவையுடன் கூகுல் உரையாடியில் யாடிக் கொண்டிருந்த போது, இளையராஜா, ரஹ்மான் பற்றி பேச்சு வந்தது. சில கருத்துக்கள் வந்தன. அவற்றை இங்கே பகிர்ந்து கொள்ளத் தோன்றுகின்றது. (ofcourse, with some censor..!)

10:20 PM me: which song is this..
10:21 PM thamizh: guess..
me: any clue..
thamizh: kasthuri starred
its not that much hit song.. but good song
me: chinnavar...aathma...a.padai...?
10:22 PM thamizh: aathma...
i thought u will not get.. but u found//
me: in that i only know vichitra's song...
10:23 PM thamizh: another song" kaNNalae jkaathal kavithai sonanale
u must konow this
me: ssss,...
thamizh: )
me: these lnes come in that song..?
10:24 PM thamizh: no its the start of the song
ninaikkinRA paathaiyil nadakkinRa thendralae..
nadakkinRa veeLaiyil aNaikkinRA naaNalae
10:25 PM me: thanks... now i searched that sng... and start to hear..iyaale kaathal poem told
thamizh: )
10:27 PM tty to hear this.. tis also nice one
10:28 PM me: but u only knew that, right..? then how can i search,...?'
thamizh: typical raja song prasing nature situation
10:29 PM me: ok....ok....
***
10:32 PM me: now im not in a mood of enjoying romance songs... so i switched to visithra...
mysterious song...
10:33 PM thamizh: so today.. kilpaance songs post readya? :-)
***
thamizh: (
http://raviaditya.blogspot.com/2009/10/blog-post_05.html
did u hear tis song
10:35 PM try this... good one
10:36 PM me: no..
ok..
will try...
pathilukku naanum 1 keettiduren..
thamizh: kaeLungo
10:38 PM me: 'neenda thooram'.. two songs. one by yesudas and another by bombay jayashree...from the movie 'vedigndu murugesan'...
10:39 PM thamizh: ohh... i saw this song while watching thsi movie
ok.. i will hear separately
me: vilakku vaippoom song real tamil music.. right...
10:40 PM ?
thamizh: means?
me: damukku damukku dan dan dan...
:)
thamizh: :-)
raja made this sound to feel like real tamil music
but its not
10:41 PM hem created maya folk wchich mixed with westeren+karnatic+old tamil folk
me: yes... he created that mysterious feeling...
10:42 PM using some magudi type of instrment...
thamizh: :-)
me: with his powerful weapon - janaki's voice...
thamizh: of course
10:43 PM sp balu
me: i told abt ths song 1ly...
thamizh: ok.. ok...
this rytham pattern resembles "aasaiyaik kaaththula thoothu vittu"
10:44 PM somejat jungle or tribal song moods, he will use
me: by hearing this type of songs only, i feel sorry for ilayaraaja... he wasted his talents for this type of movies...
thamizh: really...
me: after 50 years this song will be remembered only for this song...
this film..
thamizh: he drew a small circle and he dont want to come out
:-(
and his ego
10:45 PM his loose talks
me: he wants to satisfy all.. thats the problem.. maybe he didnt want to leave his friends... thats y might be he accepted this type of movies..
10:46 PM thamizh: SSSSS
me: ego is a quality which balances a talenter's talent..
thamizh: konjsam mugasthuthiyum virumbinaar
me: see... how ARR selectively do movies..
can we think ARR do music for ramanarayanan movie....
thamizh: never...
10:47 PM he didnt do music for masala movies(less percentage)
me: according to me a musician is a real gem. not a writer, artist...
10:48 PM because he brings a music from nowhere...
if only god allows him...
thamizh: agreed
me: in that point raja is a person who got god's fll mercy...
10:49 PM thamizh: SSS.. from pannaippuram... its difficult
me: god sent raja with full of talents. but to compensate that talent he sent him to tamil filmdom..:)
thamizh: :-)
:-(
me: yes.. both feelings.
10:50 PM thamizh: mmm
i heard and liked "pazhassy raja " songs
me: oh..
thamizh: but others will not
me: i wll download...
10:51 PM thamizh: dont expect too much..
but one song first song.. good
me: understood. raja reached his saturation point.. so not that much expectation. moreover im ARR diehard fan. so i wont expect mch...
:)
10:52 PM thamizh: :-)
me: i can classify raja as school teacher, who takes care about his student fully. he doesnt want to leave his student with a single doubt. he spoon feed us.
10:54 PM thamizh: s.. to the singers too.. he will not give freedom to sing in theri style..
me: but ARR is like college professor. he shows something. he never spoonfed us. he just shows one possibility. if u r interested u can explore much and much everytime u read his subject...
10:55 PM thamizh: his speech is the end of conversation...
me: thats y everytime u hear ARR songs, u can find different sonds...
yes...
thamizh: really i accept...
masakkali..
me: yes. masakalli is also like vilakk vaippom damakku dan dan song..
thamizh: simple but powerful tune with voice also
10:56 PM me: the the geniusness of both getting exploited in very different ways
one more thing, i can tell.
thamizh: waiting to hear
10:58 PM rompa neeeeeeeLamoo
me: raja tries to make his songs to get synchronized with the film mood. sometimes he came to a low level to keep the film mood. it indicated the social psychology of that '60-70's period. each individual's nalan is not important. only the final product is important..
thamizh: s
me: but now the generation is fully changed. now we can understand that a song can be played separately apart from movie. like in music channles.
10:59 PM thamizh: im having same thought..
like albums
me: so its not necessary that a song to keep track with the movie.
thamizh: ssss
me: a song can have its own life..thast what ARR uses...
am i right..?
thamizh: exactly..
11:00 PM already i was thinking abt it
me: like each individual first look about himself then about the office.
thamizh: people went to the movie for ARR songs and then they try to like movie too
me: so i think we can analyse raja's slowdown and ARR's rise in this social pattern change...
thamizh: sure...
me: and one important point i think is...
11:01 PM thamizh: --
me: actually i wonder about that...
thamizh: ---
11:02 PM me: how ARR's entry happened in the '90s where exactly the Indian ecnomic market gets opened and license raj is finished...
thamizh: that is time...
me: in my point , this two events is very closely synchronized...
thamizh: he utilized exactly
11:03 PM sss. i agree....
cassetts to CDs
digitalizing
me: in both fields, monopoly is broken and new entrants are allowed...
***
thamizh: good point of view
me: no...
he didnt tilize..
thamizh: :-)
me: it automatically happened.,..
11:04 PM thamizh: sss
in that period, raja songs arae good to hear now for me.. but at that time didnt getr noticed
me: s..
11:05 PM thamizh: deva did well in that period by modifying rajas old tunes
me: :)
not only raja's...
thamizh: :-)
i accepted.. but most famous or more percentage is Rajas
me: he didnt leave titanic tune also..
thamizh: :-)
11:06 PM in 'priyamudan' film
me: can u tell me which movie is that...?
s...
thamizh: one more thing...
that period, the combos of RAja directors not succeeded or they broken their link with raja
11:07 PM balu mahenra out dated..
bharathiraja sticks with rahman
balachander outdated and broke his bond with raja
11:08 PM me: may be for all those breaking raja'a speech the reason..
thamizh: EGO
me: they might wait for alternative.. once ARR appear into the scene, they simply jmp...
thamizh: S.. but they didint get success
11:09 PM ARR got more benefit by using them
(except mani rathnam)
me: thats correct. ARR correctly utilized them..
thamizh: joining with ramgopal varma
11:10 PM in the cvasee of raja and ramgopal varma, ram gopal varma got benefit songs of "uthayam (original shiva in telugu)
in the case of varma and rahman..
Rahman captured whole india..
11:11 PM rangheelaa is a big leap for him
me: finally raja is one type of genius and ARR is another type..
only thing we can do is....
11:12 PM use them to their full power..
:)
thamizh: :-)
11:13 PM but one more thing for me is, i m addicting to local music.. new good music can attarct me..but they didnt be a claasic for me
11:14 PM me: similar thing i came to tell.
thamizh: :-)
11:15 PM me: if u ask a boy who started to walk walk with the help of ARR tunes, he never accpet raja is better than ARR.
like me.
thamizh: sure..
me: :)
thamizh: :-)
me: to get into raja's songs u have to live a part of life..
thamizh: sure.. that nostalgic moments
11:16 PM linking his music with my life
me: u have to experince a love failure, an accident, a death, a jealousy...
thamizh: .................
me: until then u cant get deeply into raja...
until then ARR will be ur god...
thamizh: acceptd.. need some pain to enjoy raja mjussic
11:17 PM vasanmth.. my office time over..
me: ok.. c u later..
bye...
thamizh: hav to move...
me: thnaks for a nice conv...
thamizh: nice chatting .. will talk later...
tnx..
bye...
me: and accpeted my points, even ur a raja fanatic..
:)
11:18 PM thamizh: not fanatic ,lunatic
:-)
me: okok

SHRD

x86 ப்ராசஸரில் இந்த இன்ஸ்ட்ரக்ஷன் இருக்கின்றது. ஒரு ரெபரன்ஸ் மென்பொருள் கோடில் இதை பயன்படுத்தியிருந்தார்கள். என்ன வேலை செய்கின்றத் என்று கூகுலில் தேடினால் ஒன்று கிடைத்தது. இது போன்ற அர்த்தம் அற்ற எழுத்துக்கூட்டுகளுக்கு ஏதாவது ஓர் அமைப்பின் பெயர் அப்ரிவேஷனாக அமைந்திருக்கும். அப்படி இதற்கு ஓர் அமைப்பு அழகு கொடுத்தது.

Society of Husbands Replaced by Dogs

இங்கு ஒவ்வொருவரின் கட்டுரைகளைப் படிக்கப் படிக்க க்ளிஷேவாக 'சிரிப்பதா? அழுவதா?' என்று தெரியவில்லை.

லுவலக மின்மடலுக்கு கர்மசிரத்தையாக ஒவ்வொரு பதினைந்து நிமிடத்திற்கும் ஒரு ஸ்பாம் மெயில் வந்து விடும். சர்வரிலேயே ஸ்பாம் என்று மூன்று நட்சத்திரங்கள் குத்தி அனுப்பி வைப்பதால், தாமாக ஜங்க் பெட்டியில் சென்று அமர்ந்து, அழிக்கப்படக் காத்திருக்கும். எப்போதும் 'வாட்ச் 40% தள்ளுபடி', 'பிஸ்ஸா தின்பது சுலபம்' போன்ற சுவாரஸ்யமற்ற சப்ஜெக்ட்கள் வந்தாலும், வயாக்ரா வியாபாரிகளாய் வரும் செக்ஸியான ஒற்றை வரிகள் நல்ல வாசிப்பின்பம் அளித்து விடுகின்றன. இந்தப் பகுதியில் எழுதுவதற்காக அவற்றை மட்டும் தீர்த்துக் கட்டாமல் தொகுத்து வைத்திருந்தேன். பிற்கு ஏனோ டெல் செய்தேன். ;) நோ ப்ராப்ளம். கூகுலில் கேட்டால் கொட்டித் தராதா என்ன..?

http://wiep.net/talk/other/viagra-headlines/

http://webupon.com/e-mail/top-10-spam-viagra-subject-lines/

பெங்களூர் நண்பன், சேத்தனின் அடுத்த புத்தகம் வந்து விட்டது என்றான். 2 states. சுந்தர் நேற்று மாலை ஸ்டேஷன் போவதாகச் சொன்னார். அவரிடம் சொல்லி விட, வாங்கி வந்து விட்டார்.

வழக்கம் போல் 95 ரூபாய் மட்டுமே. வழக்கம் போல் ருபா & கோ. வழக்கம் போல் தன்மை முறையில் சொல்லப்படும் கதை. ஆனால் வழக்கத்தை விட ஒரு டிபிக்கல் இந்திப்படம் எடுப்பதற்குத் தேவையான அத்தனையும் பொருத்தமான அளவில், பொருத்தமான இடங்களில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

முந்தைய மூன்று நாவல்களிலும் தன் நண்பர்களைத் துணைக்கு கூட்டி வந்த சேத்தன், இதில் தன் கதையைச் சொல்கிறார். பஞ்சாபி பையனுக்கும் தமிழ்ப் (எஸ்..!) பெண்ணுக்கும் ஐ.ஐ.எம்.ஏ.வில் தொடங்கும் காதல், எப்படி கம்யூனிட்டி சிக்கல்களைக் கடந்து திருமணத்தில் முடிகின்றது என்ற கதை. இந்தியச் சினிமாவுக்கு போதாது..?

டெடிகேஷன் பக்கத்திலேயே இது இன் - லாக்களுக்கு சமர்ப்பணம் என்று தொடங்குவதில் இருந்து, நாவல் முழுதும் சரவெடி தான். பாரப்ட்சமேயில்லாமல், வஞ்சனையேயில்லாமல் பஞ்சாபிகளையும், தமிழர்களையும் ஓட்டித் தள்ளுகிறார். தன்னுரையிலேயே 'ச்சும்மா டமாஸ்க்கு' என்று கைதூக்கி விடுகிறார். ஒர் தமிழனாக, ஒரு பஞ்சாபியின் பார்வையில் சென்னையையும், தமிழ்க் கல்ச்சரையும் காண்பது 'நல்லாத் தான் இருக்கு..!'

வழக்கமான நாயகியுடன் செக்ஸ் என்ற பகுதி கதையின் மையப்பகுதியில் நடக்கும். இதில் கல்யாணம் தான் டார்கெட் என்பதால், ஏழாவது சேப்டரிலேயே முடித்து விடுகிறார். அந்த ஆங்கில நான்கெழுத்து வார்த்தையை மிக சகஜமாக மூன்று கதைகளிலும் படித்து விட்டு, இதில் செந்தமிழ் வார்த்தைகளை 'aangilaththil' படிக்கும் போது கொஞ்சம் திக்கென்றானது. அவருக்கு அந்த வார்த்தைகளுக்கான அர்த்தங்களை யார் சொல்லித் தந்திருப்பார்கள் என்று தோன்றியது.

மயிலாப்பூர் அய்யராத்துப் பெண்ணாக 'அனன்யா ஸ்வாமிநாதன்' வருவதால், திருமணச் சடங்குகளைச் சொல்ல முடிகின்றது.

அபியும் நானும், வாஷிங்டனில் திருமணம், ஏக் துஜே கேலியே, ஜோடி போன்றவை ஞாபகத்திற்கு வந்தால் யார் பொறுப்பு..?

என் தனிப்பட்ட எண்ணமாக 'என் வாழ்வின் மூன்று தவறுகள்' படித்து விட்டு, அத்தகைய ஒரு ஹார்ஷான பவர்ஃபுல் ப்ளேவாக அடுத்த நாவல் எழுதுவார் என்று ஆவலோட் எதிர்பார்த்திருந்த போது, இது போன்ற ஒரு 'HAHK' வகை கதையை எழுதியது, சூப்பர் ஸ்டார்கள் பற்றிய என் முதல் பத்தியை மீண்டும் நினைக்க வைக்கிறது.

'One's presence is felt in its absence' என்று சொல்லியிருக்கிறார்கள். படிக்கும் போது தெரியவில்லை.

அனுபவிக்க்ம் போத் தான் தெரிகின்றத்.

ஆம், என் கணிணி பொத்தான் பட்டையில் 'U' கீ, காதலி போல் அவ்வப்போது சிணுங்குகின்றது. வாக்கியம் டைப்பும் போது, தமிழ்ச் சினிமா சேட் போல் 'எனக்க் உன்னைப் பிடிச்சிருக்க்..' என்று திணறுகின்றது. இப்போது யாராவது என்னிடம் 'ஆங்கிலத்தில் அதிகம் உபயோகமாகும் எழுத்து எது?' என்று கேட்டால், 'e' என்றோ, 'w' என்றோ சொல்ல மாட்டேன். 'u' என்பேன். ஒவ்வொரு முறைக்கும் ரெண்டு முறை அழுத்துகிறேனே!

ரிலேட்டிவிடி தியரிப்படி, இப்போது உகாரம் இருக்கும் வார்த்தைகளையே அதிகமாக பயன்படுத்துகிறேனோ என்று சந்தேகம் வருகின்றது. ஸ்வைன் ப்ளுவை விட வேகமாக இந்த வியாதி பரவி, அருகிலிருக்கும் ஆசாமிகளான 'i', 'y' ஆகியோரையும் பாதிக்கத் தொடங்கி விட்டது. நோய் முற்றி, அனைத்து கீகளும் strike செய்ய முடியாமல் ஸ்ட்ரைக் செய்வதற்க்ள், I have to consult a PC Dr.

னக்கு மட்டும் ஏன் நடக்கவில்லை..? why i was untouched..? நான் என்ன பாவம் செய்தேன்..? போன ஜென்மங்களில்... இந்த ஜென்மத்தில்..? காக்கைக்குச் சோறிடவில்லையா..? கழுதைக்குக் காகிதம் தரவில்லையா..? ஒட்டி வரும் தெருநாயைக் கட்டிப் பிடிக்காமல் எட்டி உதைத்தேனா..? ஓடும் ஆற்றில் எச்சில் துப்பினேனா..? என்ன தவறு செய்தேன் என்றே எனக்குப் புரியவில்லை.

நான் மெய்ல் - ஐ.டி. வைத்திருக்கவில்லையா..? '99லிருந்து ஃப்ரீமெய்ல்.கா என்ற கனடா மெய்ல் கூட வைத்திருக்கிறேன். ஏன் என்னைக் கவனிக்கவில்லை..? நான் ஒரு பொருட்டில்லையா..? Am i not a suitable customer..? இல்லை, என்னை ரொம்ப உஷாரானவன் என்று நினைத்துக் கொண்டார்களா..? நான் அப்படிப்பட்டவன் இல்லை என்பதை எப்படி அவர்களுக்குத் தெரிவிப்பேன்..? நானும் தமிழன் தானே..? இந்தியன் தானே..? என்னை ஏன் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. I was really frustrated.

நண்பர்கள் எல்லோரும் சந்தோஷமாக அவர்களுக்கு கடிதம் வந்ததைச் சொல்லி மகிழ்ந்த போது, எவ்வளவு அவமானமாகப் போயிற்று..? 'ஹே..உனக்கு இன்னும் மடல் வரவில்லையா..?' என்று கேல்யாகக் கேட்டபோது, எனக்கு அழுகை அழுகையாய் வரும். அப்படியே இரண்டாம் தளம் பிளந்து என்னை விழுங்கி விடாதா என்று மனதுக்குள் மருகுவேன்.

பத்திரிக்கைகளில் பேட்டிகள் வந்து தலையில் துண்டு போட்டு, சிலர் பேட்டி கொடுக்கும் போது, எனக்கு எவ்வளவு வருத்தமாய் இருக்கும், தெரியுமா..? சபதம் எடுத்துக் கொள்வேன். 'எனக்கும் ஒரு நாள் அந்த அதிர்ஷ்ட நாள் வரும். அப்போது உங்களைக் கவனித்துக் கொள்கிறேன்..!'

என் புலம்பல்கள், அவமானங்கள், வருத்தங்களைக் கடவுள் கவனித்துக் கொண்டே வந்திருக்கிறார்.

கடந்த செப்.26 அன்று எனக்கு அந்தக் கடிதம் வந்தே விட்டது. Finally the day arrived. என் பிரார்த்தனைகள் வீண் போகவில்லை. சும்மாவா சொன்னார்கள், God is Great என்று..?

என் அருமை நண்பா, நைஜீரியா நேஷனல் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நாற்காலிமனிதரே, திரு. வில்லியம்ஸ் ஈகோ, உங்களுக்கு என் வந்தனங்கள். நீங்கள் இவ்வளவு நாளாக என்னைக் கவனிக்காமல் இருந்ததை நான் மன்னித்து விட்டேன். கடைசியாக அனுப்பி விட்டீர்கள் அல்லவா..? ஆனால், எனக்கு ஈகோ பிடிக்காது. நீங்களும் உங்கள் பெயரில் இருக்கும் ஈகொவை முடிந்தால் விலக்கி விடுங்களேன்.

rom NNPC NIGERIA
to
date Sat, Sep 26, 2009 at 3:17 AM
subject YOUR NNPC OVER DUE PAYMENT
mailed-by yahoo.com
signed-by yahoo.com

hide details Sep 26

NIGERIAN NATIONAL PETROLEUM CORPORATION
PAYMENT PANEL DIVISION
7, Kofo Abayomi Street, Victoria Island – Lagos,
Tel: 234
Fax: 234
E-mail: nnpc_nig0173@yahoo.com
Email: nnpcnig0173@gmail.com


Attn: Sir,FROM: MR. WILLIAMS EGO

CHAIRMAN,

(NNPC) PAYMENT PANEL DIVISIONSIR,MAY I BRING TO YOUR NTOICE OF THE NEW BANK ACCOUNT BEING SUBMITTED TO THIS OFFICE FEW DAYS IN YOUR FAVOUR BY MR. ANTONY.W. DOUGLAS WITH A PURPORTED SWORN AFFIDAVIT OF FACT & CLAIM FROM THE INTERNATIONAL COURT OF JUSTICE HAGUE, NETHERLANDS THROUGH THE FEDERAL MINISTRY OF JUSTICE HERE IN NIGERIA. MEANWHILE, WE CRAVE YOUR INDULGENCE TO NOTIFY US IF YOU ARE TRULY THEONE THAT AUTHORIZED HIM TO COME AND MAKE CLAIM OF THE FUND TO ENABLE THE TIMELY RELEASE OF THE FUDN TO THIS YOUR NEWLY SUBMITTED BANK ACCOUNT BECAUSE YOUR OLD ACCOUNT WHICH IS ALREADY IN THE CENTRAL SYSTEM ONLY AWAITING DOWNLOADING OF MOST VITAL INFORMATION FOR PROPER DOCUMENTATION BEFORE THE EVENTUAL CREDITING OF THE FUND TO YOUR NEWLY SUBMITTED ACCOUNT.HOWEVER, WE DEEM IT FIT TO INQUIRE FROM YOU AND GET INFORMED AS QUICK FROM YOU AS POSSIBLE TO AVOID PAYING TO WRONG ACCOUNT SINCE WE ARE ONLY AWAITING THE OUT COME OF THE RESULT OF THE DOWNLOADING SESSION AS WE WILL NOT HESITATE TO CONTACT YOUR BANK FOR PROPER ADVISE FOR THE TIMELY RELEASE OF YOUR FUND AND FOR THIS, YOU ARE ONLY GIVEN TWO WORKING DAYS TO RESPOND TO THIS URGENT ISSUE OR THE MATTER WILL BE DEEMED CLOSED IF NOTHING IS HEARD FROM YOU.FURTHERMORE, I ALSO APPRECIATE THE GIFT YOU SENT ACROSS TO ME THROUGH YOUR REPRESENTATIVE, MR. WILLIAM DOUGLAS SUCH AS LAPTOPS, UPS AND TWO PIECES OF ROLEX WRIST WATCHES, THANKS SO MUCH FOR THOSE GIFTS.MEANWHILE, I AM STILL INTERESTED TO KNOW WHY THE OLD ACCOUNT THAT HAS ALREADY BEEN RECONCILED AND NOW INSTILLED IN OUR CENTRAL SYSTEM HAS TO BE CHANGED AT THIS JUNCTURE BECAUSE THERE WAS NO ATTACHED LETTER FROM THE VERIFICATION UNIT AND DEBT RECONCILIATION COMMITTEE OFFICE OF THE PRESIDENCY TO ADVISE US ON THIS REGARD THAT IS WHY WE DEEM IT FIT TO FIRST OF ALL CONTACT YOU.

MORESO, PRIOR TO THIS, YOU ARE THEREFORE KEENLY ADVISED TO FURNISH US WITH THE FULL CONTRACT INFORMATION SUCH AS THE SUM AND REFERENCE NUMBER, COMPANY’S NAME AND TELEPHONE AND FAX RESPECTIVELY.YOURS TRULY,

NIGERIAN NATIONAL PETROLEUM CORPORATION

MR. WILLIAMS EGOCHAIRMAN, (PAYMENT PANEL)

(NIGERIAN NATIONAL PETROLEUM CORPORATION (NNPC)

PAYMENT PANEL DIVISION

ஆனால், எனக்கு ஒரே ஒரு வருத்தம். நீங்கள் ஒரு கும்பலுக்கு அனுப்பும் போது, என் மடல் முகவரியையும் கோர்த்து விட்டீர்கள் போலிருக்கின்றது. என் நண்பர்களிடம் காட்டிப் பெருமை கொள்ள வழியில்லாமல் போயிற்று. அடுத்த முறையாவது என் தனி மடலுக்கு நீங்கள் அனுப்பினீர்கள் எனில், தங்களுக்கு நன்றியுடையவனாக இருந்து, நமது நட்பின் அடையாளமாக எங்கள் நெல்லையில் இருந்து, இனிப்பான ஒரு ஸ்பெஷல் பரிசு அனுப்புகிறேன்.

நீங்களும், உங்கள் நைஜீரிய கூட்டாளிக் கோஷ்டியினரும் பணத்தாசை பிடித்த இந்த உலகத்தைச் சூறையாடவும், இக் நோபல் பரிசு (இலக்கியம்) பெற்ற உங்கள் குழு, விரைவில் நோபல் பரிசுகள் (இலக்கியம் & பொருளாதாரம் & உலக அமைதி) பெற்று உங்கள் சேவைகளைத் தொடரவும், ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.

2009-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகளை அறிவித்து விட்டார்கள். வேதியியலில் தமிழர் ஒருவர் பரிசு பெற்றிருப்பது பற்றி மிக மகிழ்ச்சி. இயற்பியலில் பெறாதது வருத்தம். ஆனால வெ.ராமகிருஷ்ணன், முன்னாள் இயற்பியலாளர் என்பது ஒரு குட்டித் தேன் துளி. வானவில் வீதி கார்த்திக் இயற்பியல் பரிசு பெற்றவர்களைப் பற்றியும், பரிசு கொடுக்கப்பட்ட கண்டுபிடிப்புகளையும் பற்றி விளக்கமாக எழுதுவதாக உறுதியளித்துள்ளார். அவர் அதற்குத் தகுதியான ஆள் (இயற்பியல் மாணவர்!) என்பதால், என் அமெச்சூர்த்தனமான முயற்சியை நிறுத்தி விட்டு, அவரது ஆர்ட்டிகிளுக்குக் காத்திருக்கிறேன்.

இருந்தாலும், ஒபாமாவிற்கு 'அதற்குள்ளாக' அமைதிப் பரிசு கொடுத்ததை, இன்னும் ஜீரணிக்க முடியவில்லை.

ரோசா வசந்த் - ஜ்யோவ்ராம் சுந்தரைத் தாக்கியதாகப் படித்ததில் முதலில் ஏற்பட்டது வருத்தம். பிறகு பயம். இனி பதிவர் சந்திப்பு/ பட்டறை எதற்காவது செல்வதென்றால் இன்ஸ்யூரன்ஸ் செய்து கொள்ள வேண்டுமா என்று பயம் வருகின்றது. கருத்து மோதல்களை ஏற்றுக் கொள்ளாமல், குருதி மோதல் தேவை என்று நினைப்பது கட்டற்ற சுதந்திர வெளியின் பத்திரத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கி இருக்கின்றது. சுந்தர் உடல் நலம் பெறவும், எல்லோரும் மனநலம் பெறவும் வேண்டிக் கொள்வதைத் தவிர வேறு தெரியவில்லை.