Friday, October 30, 2009

Na-No-Wri-Mo.

நாளை நடு ராத்திரி பனிரெண்டு மணிக்கு துவங்குகிறது. NaNoWriMo. தேசிய நாவல் எழுதும் மாதம். 1999ல் துவங்கி எழுதுபவர்களின் எண்ணிக்கை, எக்ஸ்பொனன்ஷியல் ரேட்டில் எகிறிக் கொண்டிருக்கின்றது. சென்ற ஆண்டே குறித்து வைத்தும் மறந்து விட்டேன். இந்த அவ்ருடம் ஞாபகமாக இருந்து பதிவு செய்து கொண்டிருக்கிறேன்.

என்ன போட்டி?

நாவல் எழுத வேண்டும். 'யம்மாடியோவ்..?' என்று வாய் பிளப்போம். நாவல்னா சும்மாவா என்ன?

நம்மைப் போன்றவர்களுக்காக, இந்த போட்டி. ஒரு மாதம் கொடுக்கிறார்கள். நவம்பர் 1 அதிகாலை முதல் நவம்பர் 30 அதி இரவு வரை. மொத்தம் 50,000 வார்த்தைகள் எழுத வேண்டும். கூட்டிக் கழித்துப் பார்த்தால், குத்து மதிப்பாக ஒரு நாளுக்கு 1667 வார்த்தைகள்.

கண்டதையும் எழுதுங்கள். எடிட் செய்யவே வேண்டாம்.

எந்தப் பரிசும் இல்லை; அவர்டுகள் இல்லை; பைசா இல்லை. பிறகு எதற்காக உழைப்பைக் கொட்ட வேண்டும் என்றால், அது கொடுக்கும் த்ரில்லுக்காக.!

இப்போதே எனக்குள் அட்ரினலின் பலூன்கள் வெடிக்கின்றன.

Come. Letz ROCK....!!!

http://www.nanowrimo.org/