Tuesday, December 07, 2010

நானே



தேடிய பெருங்கவிதை ஒன்று நெடுங்காலமாய் ஒரு கல்லிடுக்கில் ஒளிந்து கொண்டிருந்தது. தடுக்கிக் கொண்டு கீழே விழுந்ததும் ஒரு சாரையைப் போல மெல்ல எட்டிப் பார்த்தது. அதன் நா நுனியில் வார்த்தைகளின் நஞ்சு தடவப்பட்டிருந்தது. மேனிமேல் ஒரு பளபளப்பான தோல் நிலவொளியில் மினுங்கியது. நாசி வழி வெங்காற்று வெளியே வந்து சுற்றுப்புறத்தைச் சூடாக்கியது. நீல விழிகள் பாரித்த ஒளி, உமிழ்ந்த வேகத்தில் சிறு கற்கள் பொசுங்கின. கைகள் அற்றுக் கால்களும் அற்று மெல்லத் தன்னை அசைத்து வெளியே வந்து நின்றது.

அள்ளி விழுங்கிக் கொள்ளும் யத்தனத்தில் மெல்ல அணுகினேன். செவ்வாய் மேல் காமம் பூசியிருக்க, முத்தமிட்டேன். தீ தீண்டும் சுகம். வழுவழு உடல் தரித்து ஈரம் பதித்த நல் வரிகளால் எழுதப்பட்டிருந்ததைக் கொஞ்சம் கொஞ்சமாய் விழுங்கினேன்.

நானே கவிதையானேன்.!!

Pic courtesy :: http://www.allarminda.com/wp-content/uploads/2010/10/poetry2.jpg

மணற்கேணி - 2010 - அழைப்பு.



மிழ் வலைப்பதிவுகளில் பலதரப்பான தளங்களில் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றைப் பற்றியும் அவற்றின் மேலான தங்கள் எண்ணங்களையும் அப்பதிவுகளைப் பார்வையிடுவோர் தங்கள் பின்னூட்டங்களில் பதிலிடுகின்றனர். எளிதாகக் கண்ணுக்குப் படும்வகையில் அமைவன திரைப்படம், திரை நிகழ்வுகள் மற்றும் அவற்றை ஒட்டி வாழும் துணை உறுப்புக்களான விமர்சனங்கள், ஒப்புமை கண்டறிதல்கள் போன்றன. அவற்றைத் தவிர்த்துப் பார்க்கையில் அரிதாகவே வேறு பல துறைகளைப் பேசும் பதிவுகள் கிடைக்கின்றன.

அச்சிறுபான்மைப் பதிவுகளை இன்னும் கொஞ்சம் வலுப்பெறச் செய்ய எடுக்கப்படுகின்ற ஒரு முயற்சி 'மணற்கேணி'.

சிங்கப்பூர் வாழ்த் தமிழ்ப்பதிவர்கள் தமக்குள் அமைத்துள்ள ஒரு குழுமம், இத்தலைப்பில் நம்மைச் சிந்தையால் துழாவச் செய்யும் சில கருதுகோள்களைக் கொடுத்துக் கட்டுரைகளைக் கேட்கின்றது. எளிதில்லாத ஒரு பணி என்பதால் இவ்வாண்டு இறுதிநாள் வரை நேரம் கொடுத்துக் காத்திருக்கிறார்கள்.

நடுவர்களைக் கொண்டு தேர்வு செய்யப்படும் கட்டுரையின் ஆசிரியர்களை சிங்கைக்கே அழைத்து ஒரு வாரம் முழுதும் உபசரித்துப் பற்பல நிகழ்வுகளில் பங்கேற்கச் செய்து, அவர்கள் தம் வாழ்நாளில் மறந்திட இயலாவண்ணம் அன்பால் தழுவி அனுப்பி வைக்கிறார்கள்.

மேலதிக விவரங்களுக்கு ::

மணற்கேணி- 2010

சென்ற ஆண்டில் கலந்து கொண்டு எழுதிய அறிவியல் கட்டுரை : ஒலிதச் சமிக்ஞைப் பகுப்பாய்தல்.

ஈரோடு தமிழ்ப்பதிவர்ச் சங்கமம் - 2010 - அழைப்பு.



சென்ற ஆண்டைப் போலவே இந்த வருடமும் 'ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்' சங்கமம் நிகழ்வை நடத்த முடிவு செய்திருக்கின்றது.

தேவகுமாரனின் பிறந்தநாளுக்கு அடுத்து டிசம்பர் 26-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை ஈரோட்டில் என நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலதிகத் தகவல்கள் விரைவில்.

விவரங்களுக்கு ::

கதிர் - 99653-90054
பாலாசி - 90037-05598
கார்த்திக் - 97881-33555
ஆரூரன் - 9894717185
வால்பையன் - 9994500540
ராஜாஜெய்சிங் - 9578588925
சங்கமேஸ் - 9842910707
ஜாபர் - 9865839393
நண்டு நொரண்டு - 9486135426

ஈரோடு கதிர்

***

சங்கமம் - 2009 தொடர்பாக எழுதிய பதிவுகள் ::

தமிழ்ப்பதிவர்ச் சங்கமம் - 2009 - ஈரோடு - அழைப்பு.

ஈரோடு சங்கமம் - 2K9 - Cooooool!

ஈரோடு சங்கமத்தில் பேசிய உரை.

ஈரோடு சந்திப்பு - 2009 - கடைசியாய்க் கொஞ்சம்!