Thursday, March 18, 2010

Sawan Main - Falguni Pathak.

Wednesday, March 17, 2010

சின்னஞ்சில குறிப்புகள்.சென்ற 26ம் தேதி இங்கே மிலாடி நபி. விடுமுறை. சென்னையில் சில வேலைகள் இருந்ததால், வியாழன் மாலை ஐந்து 25-க்கு கிளம்பும் சென்னை எக்ஸ்ப்ரஸில் சீட் ரிசர்வ் செய்து வைத்தேன். அன்று மாலை சென்று பார்த்தால், வால் புறத்தில் கடைசிப் பெட்டியில் கடைசி சீட். எங்களோடு ரிசர்வ் பெட்டிகள் நின்று, ஜெனரல் திறக்கின்றது.

அங்கே இருந்து கசிந்த கொஞ்சம் பேர் வர்கலா, கொல்லத்தில் இறங்குபவர்கள் இங்கேயும் ஒட்டிக் கொண்டார்கள்.

ஒரு தாத்தாவைக் அவரை விட இளம் தாத்தாக்கள் சென்னைக்கு அனுப்பி வைக்க வந்தார்கள். நானும் சென்னை தான் என்றவுடன் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு வண்டி கிளம்பும் போது, ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்கிக் கொடுத்து டாட்டாவினார்கள். தாத்தா படு ஷார்ப். நான் வாங்கி வைத்திருந்த காலச்சுவடு மற்றும் திரிசக்தி புத்தகங்களை வரி விடாமல் வாங்கிப் படித்துக் கொண்டார்.

கோட்டயத்தில் ஒரு குடும்பம் ஏறிக் கொண்டது. ஒரு வயதானவர். அவருக்குக் கழுத்துக்கு மேல் இயங்காது. எனவே ஒரு தள்ளுவண்டி. ஓர் அம்மா. தள்ளுவண்டியைத் தள்ளுவதற்கென்று ஒரு வேலையாள். ஒரு செம சுட்டிப் பையன்.

நான் கூட அந்த வயதானவர் பையனின் தாத்தா என்று நினைத்தேன். அமிர்தாவில் மூன்றாமாண்டு படிக்கும் அருண் வெங்கடேஷ் (சேலத்து ஜூனியர் ஒருவருடன் வந்தார்). தான் சொன்னார். அவர் அவனது அப்பாவாம். கனெக்டிகட்டில் வேகக் காரில் போகும் போது, கண்டெய்னர் நேரடியாக மோதி பாரலைஸஸ் என்றார்.

அவருக்கு மூன்று குழந்தைகள். இரு பெண்கள். பையனின் அக்காக்கள். இவன் கடைசி. பெரிய அக்கா மும்பாயில் இருக்க, சின்னவர் சென்னையில் பொறியியல் படிக்க, அவரைக் காணச் சென்று கொண்டிருந்தார்கள்.

எனக்கு பையன் மேல் என்னவோ இரக்கம் வந்து விட்டது. அத்தனை இளம் வயதில் அவனுக்கு இந்தத் துயரம் வந்திருக்க வேண்டாம் என்று தோன்றியது. தந்தையற்றமையின் வலி தெரிந்தவன் நான். எனக்கு எதிர்ப்புறம் அப்பர் பெர்த்தில் படுத்துக் காலாட்டிக் கொண்டே ஓர் பேப்பர்பேக் வெர்ஷன் Goose Bumps படித்தான்.

அவனிடம்,

'ஹாய்..!'

கொஞ்சம் யோசித்து விட்டு, 'ஹாய்..' என்றான்.

'உன் பெயர் என்ன?'

'ஸ்நேஹித்..!'

'உனக்குப் படிக்கப் பிடிக்குமா..?'

'ரொம்ப..'

'ஒரு கதை எழுதறேன். படித்துப் பிடிச்சிருக்கான்னு சொல்றியா..?'

ரயில் அசுரத்தனமாய் தண்டவாளங்களை அரித்துப் பறந்தது. ஜன்னல் கம்பிகளில் வெளியே விரவிய பனி தெறித்து நனைத்தது.

'சரி..!' என்றான்.

சென்னை போவதற்குள் ஒரு குறு நாவல் எழுத வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு, நான்கு பக்கங்கள் எழுதி முடிக்கும் போது, 1960களின் தொடர்கதை சேப்டர் முடிவு போல் 'விதி சிரித்தது'.

பேனா காலி.

ரக்கோணம் தாண்டும் போது விழித்துப் பார்த்தேன். ஸ்நேஹித் தூரத்து மலைகளில் மெல்லிய படலங்களை ரசித்துக் கொண்டிருந்தான். கூப்பிட்டுக் காட்டினேன்.

பாதியில் முகம் மலர்ந்து, 'எனக்கு ஃபெடரர் பிடிக்கும்னு எப்படி உங்களுக்குத் தெரியும்..?'

'so nice..!'என்றான் முடித்து.

சென்ட்ரலில் இறங்கிப் போகும் போது, கூப்பிட்டு டாடா சொன்னான். அவன் சோகத்தைத் துடைக்கும் ஒரு கதை எழுத வேண்டும் என்று முடிவு செய்து வைத்தேன்.

மேற்கு மாம்பலத்தில் ராமு வீட்டில் தான் இரண்டு நாட்கள் தங்கினேன். செம கவனிப்பு. நல்ல சாப்பாடு. நன்றி ராமு, கிருஷ்ணா, அம்மா.

வெள்ளி மதியம் நிலாரசிகனைத் தொடர்பு கொண்டு சி.ஐ.டி. நகரின் கிருஷ்ணா ஓட்டலில் புரோட்டா சாப்பிட்டோம். பின் பாலம் ஏறி, இறங்கி, யூ அடித்து நியூலேண்ட்ஸ் நூல் விற்பனையகத்தில் நிறைய புத்தகங்கள் வாங்கினேன். நான் கொஞ்சம் எடுத்துக் கொள்ள, அவர் பலரைச் சிபாரிசித்தார். அவர்கள் பெயரையெல்லாம் அப்போது தான் கேள்விப்பட்டேன். 'படித்துப் பாருங்கள்' என்று சொன்னார். கவிதைத் தொகுப்புகள், சிறுகதைக் கொத்துக்கள், எப்போதும் பெண், கடல்புரத்தில் எல்லாம் வாங்கியதில், கணிப்பொறி கணக்கிட்டுத் துப்பிய பில்லில் மீச் சரியாக ஆயிரம் ரூபாய் வந்திருந்தது.

ரெயில்வே ட்ராக்கை ஒட்டிய அபார்ட்மெண்ட் மாடியில் அப்போதைக்குத் தனியாக பனியன் லுங்கியில் இருந்த திரு.விஜய் மகேந்திரன் என்ற எழுத்தாளரைக் காணக் கூட்டிச் சென்றார்.

அங்கே ஒரு மூன்று மணிநேரம். அத்தனையும் உருப்படியாக அவரது எழுத்து அனுபவங்கள் மற்றும் அவருடைய ஒரு சிறுகதைத் தொகுப்பையும் இலவசமாகக் கொடுத்தார்.

மாலையில் மாம்பலம் ஸ்டேஷனை ஒட்டிய ஒரு பிள்ளையார் கோயிலின் முதுகில் சாய்ந்திருந்த இணையக் கடையில் இரு மணிகள் கழித்தேன். பின் ராமு வீட்டுக்குப் போய் 'எப்போதும் பெண்' படித்தேன். அது வாத்தியாரின் கதையே அல்ல. ஜெயஸ்ரீ மேடம் சொல்வது போல் 'சின்னி இறந்திருந்தாள்' படித்து முடிக்கும் போது கண்களில் நில்லா வெள்ளம்.

பின் கடல்புரத்தில். ஓர் ஊரின் கதையாகத் துவங்கி அதுவும் பின் 'பிலோமி' என்ற பெண்ணின் கதையாகத் தான் வளர்ந்தது. அருமை.

அன்று இரவு உணவுக்கு பைனான்ஸ் செக்டாரில் பணிபுரியும் வெங்கியுடன் ஜி.என்.செட்டி சாலையில் முருகன் இட்லி கடைக்கு அருகில் இருக்கும் தாபாவில் நாண் உண்டோம். பின் புதுப்பிக்கப்பட்ட பூங்காவைச் சுற்றி ஒரு நடை. தி.நகர் மேம்பாலத்தைக் காணும் போது மூன்று வருடங்களுக்கு முன் பெங்களூர் சிட்டி மார்க்கெட்டில் பார்த்த உள் குழிந்த பாலம் நினைவுக்கு வந்தது.

அடுத்த நாள் காலை. மாம்பலம் ரெயிலில் ஏறி எழும்பூரில் இறங்கி எதிர் வாயிலுக்குப் போய் மீண்டும் மேலேறி இறங்கி முன் வாசலுக்கு வந்து புரசைவாக்கம் அபிராமியில் இறங்கினேன். அபிராமி மாலில் கொஞ்ச நேரம் சுற்றிப் பார்த்து விட்டு, மதுரை ஜிகர்தண்டா (ஸ்மால் 25/-) எடுத்துக் கொண்டு டி-ஷர்ட் நிறைக்கும் இளமை ஜோடிகளை ரசித்தேன். ஐஸ் டூர் செல்லவில்லை. எகிப்தியன் சிலையின் கீழ் கெளதமி நடிக்கும் சீரியல் போர்டு.

கோட்டைக்கு நேர்ப் பேருந்து இல்லை என்பதால், பாரீசுக்குப் போகும் ஏழைப் பிடித்தேன். முன் சீட்டில் இரு இளம் பையன்கள். வாய்க்கு வந்த பாட்டை உளறிக் கொண்டே வர, அவர்களுக்கும் முன் அமர்ந்திருந்த ஓர் பெண் கைக்குழந்தையுடன் வேறொரு சீட்டில் ஒதுங்கிக் கொண்டாள்.

பாரீஸில் இறங்கி, சாலையைக் கடந்து, அந்தப்புறம் போய், 21G இரட்டைப் பேருந்தில் வாகாய் அமர்ந்து கொள்ள, கிண்டி பண்ணைக்குச் செல்லும் வாண்டுகள் ஆரவாரக் குரல்களில் உள்ளே குதித்தனர்.

தலைமைச் செயலகத்தில் இறங்கிக் கொண்டு, செக்யூரிட்டிகளிடம் விவரம் சொல்லி அகழி மேல் நடந்தேன்.

கோட்டையை விட்டு, ஆர்மி மைதானத்தைச் சுற்றி, என்.சி.சி. டைரக்ட்ரேட் தேடினேன். இந்தி தவிர மற்றொன்றறியா ஆர்மியர்கள் தவறாக வழி சொல்ல, கொளுத்தும் முன் மதிய வெயிலில் கொஞ்சம் அலைந்தேன்.

பின் கண்டுபிடித்துச் செல்ல, அங்கே இருந்த ஒரு மலையாள ஆபிஸர், நான் திருவனந்தபுரத்தில் இருந்து வருகிறேன் என்றவுடன் ஆச்சரியமாய் 'தமிழ் இவ்வளவு நன்றாகப் பேசுகிறீர்களே?' என்றார். 'எல்லாக் கலர்த் தமிழனும் நான் தான்' என்றேன்.

எழுதிக் கொண்டிருக்கும் ஒரு கதைக்கு என்.சி.சி. தகவல்கள் தேவை. ஆனால் அங்கே நூல்கள் இல்லை. எந்தக் கல்லூரியின் ஏ.என்.ஓ.வைக் கேட்டாலும் கொடுப்பார்கள். ஜெராக்ஸ் கொள்ளுங்கள் என்றார். வளர நன்னி ஸாரே!

பக்கத்தில் இருந்த கோட்டை அருங்காட்சியகம். வேலைகள் நடந்து கொண்டிருந்தாலும், மக்கள் நடந்து கொண்டிருந்தார்கள். சில க்ளிக்குகள்.

அன்று மதியம் ஒரு முக்கியமான வேலையாக பெஸ்ண்ட் நகர் சாஸ்திரி நகரில் ஒருவரைச் சந்தித்து விட்டு, மீண்டு மாம்பலம் ஏகினேன். மூட்டையை எடுத்துக் கொண்டு, நிலாரசிகன் பைக்கில் தொற்றிக் கொண்டால், மயிலாப்பூர் உட்லேண்ட்ஸில் ஒரு விழா என்று கூட்டிச் சென்றார்.

REMEMBERING SUJATHA.

இரண்டாம் ஆண்டு நினைவு கூறல். மதன், ஷங்கர், மனுஷ்யபுத்திரன், இ.பா, டி.டி. நடராஜன், ராஜீவ் மேனன், கடைசியாகப் பார்த்திபன் பேசினார்கள். இரவு உணவும் போட்டார்கள். சூப்பர்.

ஆட்டோ பிடித்து, சென்ட்ரலில் 150/- கொடுத்து இறங்கி, புறநகர் நிலையத்தில் சீட்டு வாங்கிக் கொண்டு 10.10 சேரனில் முன் ஜெனரல் பெட்டிகளுக்கு ஓடினேன். பச்சை விழும் முன் மாடிக் கம்பிப் பரண் ஒன்று கிடைத்தது. ஏறிக் கொண்டதில் கொஞ்சம் படித்து, கொஞ்சம் தூங்கி, கொஞ்சம் விழித்து, கொஞ்சம் பாட்டுக் கேட்டு....பிப்ரவரி கடைசி தினம் விடிகாலை ஈரோடு ஜங்ஷனில் இறங்கினால், ஞாயிறு வானில் திங்கள் குளிர்ந்து கொண்டிருந்தது.

(படங்கள் நாளை.)

***

சென்னையில் இருந்த இரு தினங்களில் ட்விட்டியவை ::

Am on the way to Chennai now. Plan to meet some college/work/blog/hometown/print media frnz there.

In the train, met a very cute boy named Snehith. He is doing 8th. He is a book lover. Immdtly i started a children story. He the hero.

Hv completed two chapters. Very unfrtntly my pen finished. DAMN. While reading, Snehith wonders 'how do u noe me a federer fan?'. I smiled.

I promised him that i will send the story once i finished. He thanked. I feel thats a way i cud make that sad boy happy for atleast sometime

Being in Chennai streets filled by falling Na vapour lights and running yellow autos gives me heavy nostalgic.

Today is the very first time i see T.nagar flyover. For me it looks similar to the flyover at The City Market, Bangalore.

Irrespective of how much popular v r in our home,a crowdy city turns us faceless.I hv read a story beautifully depicts that once in kungumam

I wonder 'how the status liking riches never worry abt waiting in front of Big hotels lyk ...s'. Result of image building.

I am in gnchetti road. Cing arusuvai arasu n hot breads nearby. I remember they wrote articles in AV once.

Q: Why i left this city? A: There is a big story behind that. A story of betrayal, cheating and darkness.

This was written in a travelogue on my Madras excursion in +2. 'Merina. Vangaala kadal. Seerani thidal. Pattam vidal. Baloon sudal.' I like.

I am witnessing how Chennai keeps the pride of max number of road accidents in the country. Such disobedience of traffic rules...!

Am at Abirami mega mall in Chennai. Now going to secretariate.

Parrys Corner. Once City's central bus station, now it appears in complete ignorance, with dust filled trees n broken roads.

The Merina road starts at Parrys Corner as one side of it are shops selling smuggling imports and in the other High Court.

Visited NCC Directorate inside Fort. And the Museum nearby. Experienced fantastic. Will be detailed in blog.

Madhya Kailash temple gets its highest devotees at 1 night b4 semester exams start in CEG Guindy campus.

Aah..! The fountain works in the main gate of AU. Prophecy required to predict that in our days.

The thangachi in Pothys ad looks cuter in her paavadai sattai than her akka. hehehe....

Am staying in West Mambalam for these two days. I enjoyed it in all it's meanings. Tnx Mambs.

Sitting in the crowd of Sujatha Memorable event. In the dias some celebs. Boring increasingly. :(

I think if he alives he wont allow these type of events. He may tell 'rubbish'.

As a tamil reader what do i get if Sujatha drinks coffee with these ppl. I personally hv image of him. Thats fine for me. I think.

Yesterday i got 'Eppothum Pen'. I searched that for long time. An unexpected story from Sujatha. Tears in most of the pages. Chinnu!

Similarly read 'kadalpurathil'. It started as a story of family. But it also turns into story of Philomi - a girl. Liked that too.

Ok. Highly experienced two days in Chennai is gettin over. Tonight am leaving the metro. Small sad. Is the city calling me again? Donno now.

How does Chennai look to me? A highly spicified masala pel puri.