திபெத் பற்றி ஏதோ தேடிக் கொண்டிருந்த போது, இந்த இசைக் கோர்வை கிடைத்தது. கேளுங்கள்.
Showing posts with label இறை நிலை.. Show all posts
Showing posts with label இறை நிலை.. Show all posts
Tuesday, December 15, 2009
Saturday, January 19, 2008
விளக்கு - ஒரு விளக்கம்.
இந்து விளக்குகளில் ஓர் அர்த்தம் இருப்பதாகவே நான் பார்க்கிறேன்.
விளக்குகள் எப்படி பணியாற்றுகின்றன?
ஒரு சிறு குழிவான பாத்திரம். அது தான் விளக்கு. அதனுள் எண்ணெய் அல்லது நெய் ஊற்றப்படுகின்றது. பஞ்சு அல்லது நூலினால் திரிக்கப்பட்ட திரியானது அதனுள் இடப்படுகின்றது. ஒரு முனை வெளியே மேல் நோக்கி நீட்டப்படுகின்றது. திரியில் நெருப்பு ஏற்றப்படுகின்றது. விளக்கில் இடப்பட்டிருக்கும் நெய்யோ, எண்ணெயோ திரி வழியாக மேலேறி நெருப்பு எரியத் துணையாய் இருக்கின்றது. எண்ணெய் தீரத்தீர விளக்கு எரிந்து , எண்ணெய் தீர்ந்தவுடன் விளக்கும் அணைந்து போகின்றது.

மனித உடலும் இந்த விளக்கைப் போல் தான் உள்ளது.
உடலின் கீழ் இருக்கும் ஆற்றலானது எண்ணெய் போன்றது. அது தலையில் இருக்கும் வரையில் தான் நமது ஐந்து புலன்களும் செம்மையாகப் பணியாற்றுகின்றன. எண்ணெய் தீரத் தீர எரிகின்ற ஆற்றல் குறைந்து அதனால் ஐம்புலன்களும் தமது ஆற்றலை இழக்கத் தொடங்குகின்றன. எவ்வாறு எண்ணெயைத் திரியின் நுனிக்குக் கொணர்வது? அதற்குத் தான் முதுகெலும்பு எனும் திரி உதவுகின்றது. அதன் மூலமாக எண்ணெய் வேறெந்த வழியிலும் வீணாகாமல், திரியின் நுனிக்கு ஏற்றிக் கொண்டு வர திரி சுடர் விட்டு பிரகாசிப்பது போல், நமது ஐம்புலன்களும் திறம்பட பணியாற்றுகின்றன.
விளக்கு : மனித உடல்.
எண்ணெய் : உடலின் கீழ் உள்ள ஆற்றல்.
திரி : முதுகெலும்பு.
திரியின் நுனி : தலை, முகம்.
என்னே, நமது முன்னோர்களின் சிந்தனை...!
Friday, January 18, 2008
மெளனமே பதில்.

ரீசார்ஜபிள் பேட்டரி எப்படி சார்ஜ் ஆகின்றது தெரியுமா..?
ப்ளக்கில் கனெக்ஷன் கொடுத்தவுடன் மெயின் கரண்ட் பாய்ந்து பாட்டரியச் சார்ஜ் செய்கின்றது என்று தான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். பிற்கு யாஹூவைக் கேட்டதில் யாஹூவார் இப்படி பதில் கூறினார்.
http://ask.yahoo.com/20031030.html
அதாவது நெகட்டிவ் முனையில் இருந்து பாஸிட்டிவ் முனைக்கு சர்க்க்யூட் வழியாகச் சென்ற எலெக்ட்ரான்களை மீண்டும் எதிர் முனைக்குக் கூட்டி வருவதைத் தான் சார்ஜ் செய்வது என்கிறோம். (இதெல்லாம் கல்லூரியிலேயே படித்தது தான். என்ன செய்வது? பிடுங்கும் ஆணிக்கும் படித்த பிரியாணிக்கும் ஸ்நானப்ராப்தி (அப்படின்னா என்னாங்கோ?) கூட இல்லை.)
இக்கதை எதற்கு இப்போது?
நமது உடலிலும் ஆற்றல் உள்ளது. அதனை எழுப்பி, அவ்வப்போது தலையில் ஏற்றி விட்டால் தான் அடுத்த நாள் நம்மால் வேலை செய்ய முடியும். இல்லாவிடில் கொஞ்ச கொஞ்சமாக ஆற்றல் தீர்ந்து போய், பேட்டரி Died .
எங்கு வேண்டுமானாலும் எலெக்ட்ரான்களை எதிர்முனைக்கு கொண்டு வர முடியுமா? அதுதான் எலெக்ட்ரான்கள் மற்றும் அதனை ஏற்ற வேண்டிய எதிர்முனை இரண்டும் பேட்டரியிலேயே உள்ளன. பின் ஏன் மெய்ன் ப்ளக் தேவைப்படுகின்றது?
அது போல் தான் உடலின் கீழ் இருக்கும் ஆற்றலை மீண்டும் தலைக்கு ஏற்ற உதவும் மெய்ன் ப்ளக்குகளாக கோயில்கள் உள்ளன. (இங்கு கோயில்கள் என்பன வழிபாட்டு இடங்கள்.)
நமது ஆற்றல், மற்றும் ஏற்ற வேண்டிய நமது தலை இரண்டும் நம்மிடமே இருப்பினும், கோயில்கள் அதைத் தூண்டும் வேலை செய்ய தேவைப்படுகின்றன.
அந்த ஆற்றல் எனும் இறைநிலை நமக்குள்ளேயே இருக்கின்றது.
கவுண்டரின் காமெடி நிகழ்ச்சியைப் பார்ர்கின்றோம். வாய் விட்டு சிரிக்கின்றோம். அவர் வந்து நம்மை சிரி என்றாரா? இல்லை ஏதேனும் தொடு முறையில் சிரிக்கச் சொன்னாரா?
இல்லை இந்தச் சிரிப்பு நம்முடன் தான் இருந்தது. அதனை மூடியிருந்த திரையைத் திறக்கும் வேலையைத் தான் அவர் செய்தார்.
அது போல் தான் துக்கமும், கோபமும், இன்ன பிற உணர்ச்சிகளும், உணர்வுகளும் நம்முடன் தான் இருக்கின்றன. சுற்றி நிகழும் நிகழ்வுகளும், நாம் காணும் காட்சிகளும் தான் ஒவ்வொரு உணர்வை நம்க்குள் இருந்து வெளிக் கொணர்கின்றன.
அது போல் இறைநிலையும், இறைவனும் நமக்குள்ளேயே தான் இருக்கிறார்கள். நாம் காணும் காட்சிகள் அந்த இறைநிலையை வெளிக் கொணரும் வகையில் , காட்சிகளை நாம் காண வேண்டும்.
கண்களைத் திறந்து காணும் வெளிக் காட்சிகளால் பல உணர்வுகள் தூண்டப்பட்டாலும், இறைநிலை அதனால் மிகக் குறைந்த அளவே தூண்டப்பட வாய்ப்புகள் இருக்கின்றன.
கண்களை மூடி உள்ளே பார்ப்போம். நாம் கண்களை இமைகளால் மூடியபின் நம் கண் பார்வை இன்றி போய் விடுகின்றதா என்ன? இல்லை. வெளி உலகத்திற்கும், நம் கண்களுக்கும் இடையில் திரை விழுகின்றது. அவ்வளவு தான். மற்றுமொரு உலகம் நமக்குள் இருக்கின்றது.
ஆன்மீக நிலை பற்றி வெளியே சொல்லக் கூடாது என்பார்கள்.
ஒரே ஒரு சிந்தனையை மட்டும் கூறிக் கொண்டு இப்பதிவை முடித்து விடுகிறேன்.
நமது வாழ்வின் பொருள் என்ன? எதற்கு இங்கு வந்திருக்கிறோம்? என்பதெல்லாம் கல்பகாலமாக கேட்கப்பட்டு வந்திருக்கும் கேள்விகள்.
தற்காலத்துக்கு, பொட்டி தட்டுவது தான் என் வேலையா? இதற்கு தான் நான் பிறவி எடுத்திருக்கிறேனா? இந்த Project -ஐ வெற்றிகரமாகச் செய்து முடிப்பது தான் என் பிறவியின் நோக்கமா? எதற்கு இந்த வேலை? என் நாள் பொழுதுகள் எல்லாம் 4 போல் மடிந்து உட்கார்ந்து போக வேண்டுமா?
.. இன்னும் பல கேள்விகள் நாக்கின் நுனியில் அமர்ந்திருக்கின்றன.
Subscribe to:
Posts (Atom)