Monday, January 08, 2007

நட்புக்காக....



மேலே உள்ள படத்தைப் பார்த்து விட்டீர்களா? அது நாம் வாழும் பால்வெளி. அங்கே கோடானுகோடி விண்மீன்களோடும், பெருங்கற்களோடும் சுற்றிக் கொண்டு இருக்கின்ற வெப்பத் துகள்களில் ஒன்றை உங்களால் அடையாளம் கண்டு கொள்ள முடிகின்றதா?

மிக்க கடினமாக இருக்கிறது அல்லவா...?

இப்படி துளியும் காண முடியாத கிரகத்தில் வாழும் வெறும் 600 கோடி பேரில் ஒரு கடுகு போல வாழ்கிறோம். அது ஒரு எண்பது ஆண்டுகள். அதற்குள் எத்தனை எத்தனை ஆர்ப்பாட்டங்கள். சண்டைகள். மனஸ்தாபங்கள்... சிறுபிள்ளைத்தனமாக பேச மாட்டேன் போ.. என்று பிரச்னைகள்...

இருக்கும் வரையில் தான் இதெல்லாம். போகும் காலம் வந்தவுடன் எங்கே போகப் போகிறோம்..? மீண்டும் ஒருவரையொருவர் பார்ப்போமா...?

நண்பனைத் தொலைப்பதை விட, நட்பைத் தொலைப்பது தான் வலி மிகுந்தது என்பார்கள்.(வேறு மாதிரி வரும். அது வேண்டாம்).. நெடுங்கால நட்பு ஒன்று உடைந்து கொண்டு காணாமல் போய்க் கொண்டிருக்கின்றதோ என்ற பயம்...

வேறொன்றுமில்லை...

No comments: