சடசடவென அடித்துப் பெய்கின்ற மழையில் நனைந்து நடந்திட ஆசை.
கிடுகிடுவென இடிக்கும் இடியின் ஒலி தீண்டுகையில், 'அர்ச்சுனா.. அர்ச்சுனா' என்று அரற்றிட ஆசை.
பெரும் பிரவாகமாய் சாலை ஓரங்களில் நிறைந்து ஓடும் பழுப்பேறிய நீரில், 'சலப்.. சலப்' என சத்தம் வர குதித்திட ஆசை.
கடைக்கண் பார்வையிடும் கன்னிக் கண்கள் போல், சாய்ந்து பெய்யும், நீர்த் தாரைகள், முகத்தில் அறைந்திட சைக்கிளை ஓட்டிச் செல்ல ஆசை.
மேற்குத் தொடரின் முகடுகளைத் தாண்டி வரும் கரும் மேகங்களின் வடிவங்களில், எதையெதையோ தேடித் தேடித் தேய்கின்ற நேரங் கழிக்க ஆசை.
கீழ்த் திசையில் கிளம்புகின்ற கோடி வெளிச்ச மின்னலின் கரங்களைப் பிடித்து, சுழித்தோடும் காவிரியில் இறங்கிட ஆசை.
2 comments:
அந்த மூன்றாவது வீடியோ அப்படியே மனதை நனைத்து விட்டது. மழையை படம் பிடிக்கும் எண்ணம் அற்புதம். யார் எடுத்தது?
சின்ன சின்ன ஆசைகளை தெரிவிக்கும் உங்கள் வரிகளும் அருமை.
அன்பு ஸார்... தங்கள் வருகைக்கு நன்றிகள்...
//
மழையை படம் பிடிக்கும் எண்ணம் அற்புதம். யார் எடுத்தது?
//
நானில்லை ஸார்... மழையின் அருமை தெரிந்த ஒரு மலையாள சகோதரர் எடுத்தது போல்... யூட்யூப்-ல் பயணித்த போது கிடைத்தது...
//
சின்ன சின்ன ஆசைகளை தெரிவிக்கும் உங்கள் வரிகளும் அருமை.
//
மிக்க நன்றிகள் ஸார்...
Post a Comment