Sunday, September 09, 2007

ஒக்க ஸ்மால் பிராப்ளம்...

ங்க.. எனக்கு ரொம்ப நாளா ஒரு பிரச்சினை... இத எப்படி சரி செய்யறதுனு தெரியலைங்க...

யாராவது அனுபவஸ்தர் இருந்தீங்கனா, கொஞ்சம் சொல்லுங்கப்பா..

அட அது ஒண்ணும் இல்லீங்க.. இன்னிக்கு தி.நகர் போய் ஒரு புக் ஷாப்புல சுத்திட்டு இருந்தேங்க. அப்போ மொழிப் புக்ஸ் கொஞ்சம் வாங்கலாம்னு நெனச்சேன். திடீர்னு ஒரு ஞானோதயம்.

'அட... அது தான் நிறைய லேர்னிங் மெட்டீரியல்ஸ் நெட்டுலயே கிடைக்குதே.. அப்புறம் இத எதுக்கு காசு செலவு பண்ணி வாங்கணும்னு' தோணுச்சுங்க..

ஒண்ணும் வாங்காம வந்துட்டேன்.

ஆனா அப்புறம் நெட்ல கண்ட கழுதையெல்லாம் பாத்துட்டு இருக்கோமே ஒழிய அந்த ஸ்டடி மெடீரியல்ஸ் டவுன்லோட் செஞ்சு படிக்கத் தோண மாட்டேங்குது...

இந்த பிரச்னை ரொம்ப நாளா இருக்குங்க.. இத எப்படி சரி பண்ணலாம்னு யாராவது அனுபவஸ்தர் இருந்தீங்கனா.. கொஞ்சம் சொல்லுங்க சாமி.. உங்களுக்குப் புண்ணியமா போகும்...

6 comments:

cheena (சீனா) said...

நன்று நண்பரே !! இது மாதிரி பிரச்னைகள் எனக்கும் உண்டு ‍ ‍ வாரத்தில் இரு நாட்கள் இதற்காக ஒதுக்கி மனத்தைக் கட்டுப்படுத்தி தரவிறக்கம் செய்து படியுங்கள் ‍‍ வாழ்வில் முன்னேற சுயக்கட்டுப்பாடு அவசியம்

இரா. வசந்த குமார். said...

அன்பு சீனா...

தங்கள் வருகைக்கு மிக்க நன்றிகள்...

'சுயக் கட்டுப்பாடு' அப்படி, இப்படினு எல்லாம் எழுதியிருக்கும் போது, நீங்க 'வேற மாதிரி' புரிஞ்சிக்கிட்டீங்கனு நினைக்கிறேன். பரவால்ல.. விடுங்க...

Anonymous said...

சீனா சரியாத்தான் சொல்லியிருக்கார்
வசந்த்...

:)))))))))

இரா. வசந்த குமார். said...

அன்பு மல்லிகை... நீங்களுமா அப்படிப் புரிஞ்சுக்கிட்டீங்க....?

Anonymous said...

:))))

இல்ல இல்ல..:)

சீனா யோசிச்சு பதில் சொல்லியிருக்காரேன்னு சப்போர்ட் செய்தேன்...:)

இரா. வசந்த குமார். said...

சரி.. இதோட இதை விட்டுடுவோம்....