Monday, December 01, 2008

சுவை எறும்புகள்.

ங்கிருந்தாலும்
மூக்குகள் வேர்த்து
விடுகின்றன!

கடையில் இருந்து
வாங்கி வந்து,
கவர் பிரித்து,
ஒரே ஒரு
பிஸ்கெட்
சாப்பிட்டு,
மாடிக்குச் சென்று
வருவதற்குள்...

மூக்கு வேர்த்த
எட்டுக்கால்
எறும்பு வீரர்கள்
சுறுசுறுப்பாய்,
பரபரப்பாய்...!

பள்ளங்களிலும்
மேடுகளிலும்,
ஏறியும்,
இறங்கியும்..

வளைவுகளில்
வளைந்தும்,
நேர்கோடுகளில்
மிடுக்கான வரிசைகளிலும்
செல்கின்றன.

எதிர்வரும்
நண்பர்களை
முத்தமிட்டு,
முகமன் கூறி,
செய்தி சொல்லி,
வேக நடை
போடுகின்றன.

வெண்ணை தடவிய
வாசம்
முகர்ந்து,
ஜாம் மினுக்கும்
இனிப்பை நுகர்ந்து...

கூட்டம் கூட்டமாக
விறுவிறுவென
மேய்ந்து,
இனிப்பின்
போதையில்
மயங்கிக் கிறக்கத்தில்
ஆழும்
இந்த எறும்புகளின்
பெயர்கள் என்னவென்று
அறியாத
என்னைப்
போல் இன்றி,
என் பெயரை
அவை
அறிந்து
கொள்ளட்டும்
Chaoxiang
என்பதை..!

6 comments:

thamizhparavai said...

//Chaoxiang//
means...?

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

Chaoxiang என்பது ஒரு சீன ஆண் பெயர்.

இப்போது கவிதை புரிந்திருக்குமே..!

thamizhparavai said...

சத்தியமாப் புரியல வசந்த்...

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

எறும்புகளை, அவற்றின் திறத்தை, அவற்றின் சுறுசுறுபொஐச் சிலாகிக்கும் இவன் ஒரு சீனன். எறும்புகளைத் தின்னுதல் சீனர்களுக்குப் பிடிக்கும் என்பதை அறிவீர் அல்லவா..?

thamizhparavai said...

ya.. vasanth ... i guessed... but didnt hear abt that... thanx

Wandering Dervish said...

எறும்புகளை சிலாகிக்கும் சீனர்கள்,
Chaoxiang சீனன், எல்லாம் சரி.
ஆனால் எறும்புகள் ஒன்றும் சீனர்களின் பிடித்த உணவு அல்ல.
கொரியர்களின் பிடித்த உணவுகளில் ஒன்றாக இருந்தது.ஆனால் இப்போது அவனுங்க ரொம்ப முன்னேறி வெட்டுகிளி,பூச்சி அது இதுன்னு ஒரு வெட்டு வெட்ட ஆரம்பிச்சுட்டாங்க.

கவிதையில் குற்றம் குற்றம் !!!ஹ!!!ஹா