மல்லிகைப் பூவாய் மாறி விட ஆசை... தென்றலைக் கண்டு மாலையிட ஆசை... மேகங்களை எல்லாம் தொட்டு விட ஆசை... சோகங்களை எல்லாம் விட்டு விட ஆசை.... கார்குழலில் உலகைக் கட்டி விட ஆசை.....
என்..... கனவில்.... எவனோ..... ஒருவன்.... என்.... இரவில்.... ஒளியாய்... தெரிவான்... வான் மழை போல்.... உயிரில்..... விழுவான்.... தினம் நான்..... விரும்பும்.... வகையில்.... பொழிவான்..... என் இதழைத்.... தினம் தந்து மாயாது... இனி பாற்.... கடலில்...... அலை என்றும் ஓயாது..... வந்து நான்.... மண்ணிலே.... ஏன்.... பிறந்தேன்..... என்ற கேள்வி வாராது.. இங்கு நீ.... இருந்தால்..... ஒரு தோல்வி நேராது.....
குண்டு மல்லி ரெண்டு ரூபாய்... உன் கூந்தல் ஏறி உதிரும் பூ கோடி ரூபாய்... பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாய்... நீ பாதி தின்று தந்ததால் லட்ச ரூபாய்...
நிலவிடம் வாடகை வாங்கி, விழி வீட்டினில் குடி வைக்கலாமா.... நாம் வாழும் வீட்டுக்குள் வேறாரும் வந்தாலே தகுமா...தேன் மலைத் தேக்குக்கு நீ தான் உந்தன் தோள்களில் இடம் தரலாமா... நான் சாய்ந்திடும் தோள் மேல் வேறாரும் சாய்ந்தாலே தகுமா...
உள்ளே பூ பூக்குது... அடி உச்சி ஏன் வேக்குது... ஆசை பாய் போட்டது.. அட, அச்சம் தாழ் போட்டது....
படைத்தான் இறைவன் உனையே... மலைத்தான் உடனே அவனே... அழகைப் படைக்கும் திறமை முழுக்க உன் உடன் சார்ந்தது... என் விழி சேர்ந்தது... விடிய விடிய மடியில் கிடக்கும் பொன் வீணை உன் மேனி மீட்டட்டும் என் மேனி....விரைவினில் வந்து கலந்திடு... விரல் பட மெல்லக் கனிந்திடு... உடல் மட்டும் இங்கு கிடக்குது... உடன் வந்து நீயும் உயிர் கொடு...
இது இருளல்ல... அது ஒளியல்ல... இது ரெண்டோடும் சேராத பொன்னேரம்.... இது இருளல்ல... அது ஒளியல்ல... இது ரெண்டோடும் சேராத பொன்னேரம்....தலை சாயாதே.. விழி மூடாதே... சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்... பெண்ணே.... கண்ணே...பூலோகம் எல்லாமே தூங்கிப் போன பின்னே... புல்லோடு பூ பேசும் ஓசை கேட்கும் பெண்ணே... நாம் இரவின் மடியில் பிள்ளைகள் ஆவோம்.. தாலாட்ட நிலவுண்டு.....
எழுந்து விட்டோம்... எழுந்து விட்டோம்.. இமயம் போலே... இமயம் போலே... உயர்ந்து நிற்கும் சிகரம் எல்லாம் நமக்கு கீழே... நமக்கு கீழே.... ஆணையிட்டால்... ஆணையிட்டால்... விண்ணும் கூட... விண்ணும் கூட... வந்து நிற்க வேண்டும் நமது காலின் கீழே... காலின் கீழே...
கண்டமனூரு மைதார கண்ணுல வெச்சா ஆகாதா... மைய வெக்கும் சாக்க வெச்சு கைய வெப்ப தெரியாதா... அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு சேந்து போனால் ஆகாதா... மாடப் புடிச்ச முடிச்ச கையில் மயில புடிப்ப தெரியாதா...
உலகில் ஏழல்ல அதிசயங்கள்... வாய் பேசும் பூவே நீ எட்டாவது அதிசயமே... வான் மிதக்கும் உன் கண்கள்... தேன் தெளிக்கும் கன்னங்கள்... பால் குடிக்கும் அதரங்கள் அதிசயமே...
http://vistaprakash.wordpress.com/a-r-rahman-childhood-pictures/
தென்றல் என்னைத் தீண்டினால் சேலை தீண்டும் ஞாபகம்.. சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்.. வெள்ளி ஓடை பேசினால் சொன்ன வார்த்தை ஞாபகம்.. மேகம் ரெண்டு சேர்கையில் மோகம் கொண்ட ஞாபகம்...
தகிட தாங்குதா........குஜாக்கு குஜ...தகிட தாங்கு தக தா......தகதிமி தகதிமி தகிட தகிட தக தகதிமி தலாங்கு தா.......தலாங்கு தக தத்தி தக தக ஜுமி தஜதுமி தலாங்கு தா....
அலை நதியின் புன்னகை.. மழை முகிலின் புன்னகை... நீ காதலின் புன்னகை... அந்த பெளர்ணமி என்பது ஒரு மாதத்தின் புன்னகை... உன் வருகையில் பூத்ததிந்த என் வாழ்க்கையின் புன்னகை...என் வாழ்க்கையின் புன்னகை...
நரம்புகளில் மின்னல் நுழைகிறதே... உடல் முழுதும் நிலா உதிக்கிறதே... வெண்ணிலவை இவன் வருடியதும் விண்மீனாய் நான் சிதறி விட்டேன்...
உன் பேரைச் சொன்னால் ஸ்வாஸம் முழுதும் சுஹ வாசம் வீசுதடி... உன்னைப் பிரிந்தாலே வீசும் காற்றில் வெயில் என் நெருக்கமடி....
வெள்ளாம நீதான்..வெள்ளாடு நான் தான்.. வெக்கத்த விட்டுத் தள்ளம்மா.. வெள்ளாமக் காட்ட விட்டுத்தர மாட்டா..பண்பாடு கட்டிக் காக்கும் கருத்தம்மா...
நேற்று நீ எங்கு இருந்தாய்... காற்றே நீ சொல்வாய் என்றேன்... சுவாசத்தில் இருந்ததாகச் சொல்லிச் சென்றாய்...
பள்ளிக்கூடம் போகயிலே... பள்ளப்பட்டி ஓடையிலே... கோக்குமாக்கு ஆகிப்போச்சு எனக்கு...இத குத்தமின்னு சொன்னா அவன் கிறுக்கு...
காற்றோடு தென்னை அசைகின்ற ஓசை சிங்கார சங்கீதம்.. முத்தாடும் நீரின் மேலே தத்தித் தத்தித் தாவிச் செல்லும் தவளைக்குள் ஓசை சங்கீதம்...
என் எண்ணம் என்ற ஏட்டில் நான் என்னைப் பார்த்த போது... நானே என்னை நம்பவில்லை.. எந்தன் கண்ணை நம்பவில்லை...
தங்கமே.. தமிழுக்கில்லை தட்டுப்பாடு.. ஒரு சரக்கிருக்குது...முறுக்கிருக்குது... மெட்டுப் போடு... எத்தனை சபைகள் கண்டோம்.. எத்தனை எத்தனை பகையும் கண்டோம்... அத்தனையும் சூடங்காட்டி சுட்டுப் போடு...
Thanks :: http://www.arrahman.com/v2/
வாழ்க... வாழ்கவே.... வாழ்க நீயும்... வானம் உள்ளவரை வாழ்க என்றும்... வாழ்க வாழ்கவே காதல் வாழும் வரை வாழ்கவே...
***
ஆகஸ்ட் 22, 2006-ல் எழுதிய ஒரு பதிவின் Excerpt ::
கொஞ்சம் பக்கமா India Today-ல நம்மள மாதிரி யூத் மக்களை 'உங்க ஐடியல் யாரு'னு கேட்டிருக்காங்க போல..
நிறைய பேரு சொல்லி, முதல்ல வந்தது யாரு தெரியுங்களா..? நம்ம சச்சின் தானுங்க...
சச்சின் பத்தி படிக்கும் போதோ, இல்ல ஏதாவது விஷயம் கேள்விப்படும் போதோ, நமக்கு ஒண்ணு தோணுங்க... நமக்கு எப்பவுமே, சச்சினும், ஏ.ஆர்.ரகுமானும் ஒரே மாதிரி தோணுங்க...
ரெண்டு பேரும் கொஞ்சம் குள்ளமாக இருப்பாங்க..ஆனா 'கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது'ங்கற மாதிரி, அவங்கவங்க ஏரியாவில Giant-ஆ தான் இருக்காங்க...
ரொம்ப முக்கியமான விஷயம் ஒண்ணு வந்து, அவங்க குரல்ங்க...ரெண்டு பேர்க்கும் ஒரே மாதிரி குரல்ங்க...எனக்கென்னமோ ரகுமான் பாடிக் கேக்கும் போதும், சச்சின் பேட்டில பேசிக் கேக்கும் போதும் 'சில்'லுனு இருக்குங்க... இப்போ கூட ரகுமானோட 'சில்லுனு ஒரு காதல்'ல ' நியூயார்க் நகரம் தூங்கும் நேரம்' தாங்க கேட்டுட்டு இருக்கங்க..என்ன வாய்ஸ்ங்க....
....
http://kaalapayani.blogspot.com/2006/08/blog-post_115625086371115296.html
.....
Get Your Own Hindi Songs Player at Music Plugin
8 comments:
அருமையான தொகுப்பு.
நன்றி
அன்பு டாக்டர் புருனோ...
மிக்க நன்றிகள் கம்மிங்குக்கும், கருத்துக்கும்...!!!
என்னைப்பொருத்த வரை இந்த ஆஸ்கார் விருதுகள் பூவோட சேர்ந்த நாறு மாதிரிதான் நமக்கு கிடைத்துள்ளது. ஒரு சுத்தமான முழுக்க முழுக்க இந்தியர்களால் எடுக்கப்பட்ட படத்திற்கு கிடைந்திருந்தால் பெருமை பட்டுக்கொள்ளலாம்.
ஆனால் இந்தப்படத்தைப் பார்க்கும் போது, பூவோடு சேர்ந்த நாறு மாதிரியில்லை, பண்றியோடு சேர்ந்த எதோ மாதிரிதான் எனக்கு தெரியுது.
இதை விட சிறப்பான இசை,பாடல்கள் நிறைந்த எத்தனையோ இந்தியப்படங்கள் வந்துள்ளன, அதெற்கெல்லாம் விருதுகிடைத்துவிட்டதா என்ன?
அன்பு அனானி...
இந்தப் படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளதைப் பற்றி நான் இப்பதிவில் எதுவும் சொல்லவில்லையே...! ரஹ்மானுக்கு ஆஸ்கார் பெறும் தகுதி இருக்கின்றதா என்பதற்குத் தான் என் பதில். கூறப்பட்டிருக்கும் பாடல்களை விடவும் ஸ்லம்டாக் பாடல்கள் சிறப்பு என்பதை என்னாலும் ஒப்புக் கொள்ள முடியாது.
ஆனால் இப்பாடல்களுக்காக ரஹ்மான் ஆஸ்கார் பெறும் தகுதி பெற்றவரே என்பது தான் நான் சொல்ல வந்தது.
Congratulations to Mr. A R Rehman for winning 2 oscar awards for India for his Slumdog Millionaire Music
Photos நல்ல இருக்கு.
நீங்க சொன்ன மாதரி இரண்டு பேருக்கும் ஒரே தான்..
என்ன கலக்கல் தான்
நல்லா இருக்கு
வாழ்க ரஹ்மான்..
Dear Tamil Songs...
Yeah... It s really happy to hear that...! Coz i am growing along with ARR songs... not only me.. lots of tamil boyz...!!!
***
Dear Vinoth Gowtham...
மிக்க நன்றிகள் கம்மிங்குக்கும், கருத்துக்கும்...!!!
***
அன்பு அன்வர்...
வாழ்க வளமுடன்...!!
Post a Comment