Thursday, October 15, 2009
Greeny Diwali Wishes...!!!
அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருக்கிறேன். நாளை தீபாவளி. அலுவலகத்தில் எட்டு மணி நேரம் கண்டிப்பாக இருந்தாக வேண்டும். 8 - 20 தான் கணக்கில் வைத்துக் கொள்ளப்படும். 17:30க்கு சென்னை எக்ஸ்ப்ரஸ் இருக்கிறது. அதைப் பிடிக்க வேண்டுமெனில் குறைந்தது 17 மணிக்காவது ஸ்டேஷனில் இருந்தாக வேண்டும். அப்போது தான், ஆரவார பட்டாஸ்களும், வானம் நிரப்பும் பூச்சிதறல்களும், அதிர்வேட்டுகளும், சுற்றிச் சுற்றி அடிக்கும் சங்கு சக்கரங்களும், வீறி எழுந்து பொறியும் நிலபுருஸ்களும், ச்சும்மா கையிலேயே தூக்கி வீசும் ஊசி வெடிகளும், கல் பாம்களும், 500, 1000 என வாலா வால்களும், 'டம்...டம்...'...'டமார்...'... 'டொம்...'... ஊஷ்ஷ்ஷ்ஷ்.....' ...'பொட்...' சத்தங்களும் நிறையும் சனிக்கிழமை மீ அதிகாலை 4 மணிக்கு ஈரோட்டை அடைய முடியும். அத்ற்கு இன்று 16 மணிக்கு ஆபிஸிலிருந்து வெளியேறியிருக்க வேண்டும். எனவே கூட்டிக் கழிச்சுக் கணக்குப் பார்த்தால், இன்று 8 மணிக்குள் உள்ளே இருந்தாக வேண்டும். இன்னும் bag பேக் செய்யவில்லை.
எல்லா துணிகளையும், புத்தகங்களையும் அடைத்துக் கொள்ள வேண்டும். மடிக்கணிணியை மூட்டை கட்டி ஊரிலேயே வைத்து விட்டு வரலாம் என்று இருக்கிறேன். நிறைய நேரங்களைத் தின்று விடுகின்றது. உருப்படியாக ஏதாவது இணையத்தில் செய்கின்றேனா என்றால், இல்லை. எப்போது பார்த்தாலும் ஆர்குட்டில் நண்பர்கள் கோர்ப்பதும், மேட்டர் சைட்டுகளுக்கு விசிட் அடிப்பதுமாக வெட்டியாக போகின்றது.
உடல் வேறு ஏறிக் கொண்டேயிருக்கின்றது. 120 கூடிய விரைவில் ரீச் செய்து விடுவேன் என்று நினைக்கிறேன்.
குறைந்தது 100 வருடங்களாவது வாழ்ந்து, எழுதி, உங்களை எல்லாம் கொடுமைப்படுத்த வேண்டும் என்ற உன்னத நோக்கம் கொண்டிருப்பதால், உடம்பையும் கொஞ்சம் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.
எனவே, மக்கள்ஸ்...இன்னும் கொஞ்ச காலத்திற்கு பதிவுகள் எழுதுவதை நிறுத்தி/குறைத்து விட்டு, ஜிம்மே பழியாய்க் கிடக்க உறுதி எடுத்திருக்கிறேன். தீபாவளி ரெஸல்யூஷன்.
வேண்டுதல் இருந்தால் யாரிடமும் சொல்லக் கூடாது என்பார்கள். நண்பர்களிடம் சொல்லலாம் தானே..! சோம்பேறித்தனம் எட்டிப் பார்த்தால், நீங்கள் ஞாபகப்படுத்த்வீர்கள் என்பதற்காக, உங்கள் காதிலும் 'எல்லோரும் பார்த்துக்குங்க.. நானும் ஜிம் போறேன்... ஜிம் போறேன்..' என்று சொல்லி விடுகிறேன்.
தீபாவளியைப் பத்திரமாகக் கொண்டாடுங்கள். தலை தீபாவளியர்களுக்கு ஸ்பெஷல் விஷஸ்..! தலைவரின் என்றும் பசுமையான தீபாவளிப் பாடல் பார்த்துக் கேட்டு....என்ஸாய்...!!!
மத்தளச் சத்தம் எட்டு ஊருதான்
எட்டணும் தம்பி, அடி ஜோராக..!!
வெக்கிற வாணம் அந்த வானையே
தெக்கணும் தம்பி, விடு நேராக...!!!
செழுமையான தீபாவளிக்கு வாழ்த்துக்கள்...!!
8:04 PM 10/22/2009
updated :: as mom told, i have removed some words. :)
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
தீபாவளி வாழ்த்துக்கள்.
நீங்கள் சொன்னது மாதிரி நானும் செய்ய வேண்டும். வெயிட் மேட்டர் தான்.
தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள் !
வெகு சீக்கிரம், வெகுவாய் குறைந்து/குறைத்து வாங்க :)))))
//
எனவே, மக்கள்ஸ்...இன்னும் கொஞ்ச காலத்திற்கு பதிவுகள் எழுதுவதை நிறுத்தி/குறைத்து விட்டு,//
?!?
:-(
பதிவு எழுதுற குறைச்சுக்கிறீங்களா? எகொசா இது? நோ.....!
தீபாவளி வாழ்த்துக்கள்..! :)
அன்பு பின்னோக்கி...
கண்டிப்பாக இந்த முறை ஆரம்பித்து விட வேண்டும். நீங்களும் ஆரம்பித்து விடுங்கள். :)
***
அன்பு ஆயில்யன்...
உறுதியாக..!! வெகுவாக குறைத்து விட்டு, மறுபடியும் வருவோம். :)
***
அன்பு மெனக்கெட்டு...
:) சுவர்...சித்திரம்...! அதே தான்..!!
***
அன்பு கார்த்திக்...
மிக அவ்வப்போது வருகிறேன். எனினும் முதல் ப்ரியாரிட்டி ஜிம் தான்..!! :)
***
அன்பு all u guyz...
நான் எங்க வேணா போவேன்.. நீங்க எங்கயும் போயிடாதீங்க...! c u all after the break...!!! :)
Post a Comment