Tuesday, July 14, 2009
என் Uniqueகோட்டு நன்றிகள்.
Updated :: 15.Jul.2K9, 12:53.
அன்பு தமிழ்ப்பறவை...
மிக வருத்தமாயிருக்கின்றது. கதைகளைப் பற்றிய ஒருவரது உண்மையான கருத்தைத் தெரிந்து கொள்ளவே இந்த சர்வேயை வைத்தேன். இதிலும் கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டுள்ளது எனும் போது, இதன் அர்த்தம் முற்றிலும் இறந்து போய் விடுகின்றது. எனவே நான் மகிழ்ந்ததற்கான காரணங்கள் இப்போது இல்லை. இந்தப் பதிவை அழித்து விடலாமா என்று யோசித்தேன். ஆனால ஒரே ஒருவராவது உண்மையான ஓட்டு போட்டிருப்பார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது. அவருக்காக பதிவை நீக்காமல் என் வருத்தத்தையும் கூடவே பதிவு செய்து கொள்கிறேன்.
பொதுவாக எனக்கு பத்திரத் தன்மைகள் குறைவான/இல்லாத ஓட்டளிப்பு முறைகளில் நம்பிக்கையில்லை. அத்தகைய நம்பிக்கை எற்படுத்தும் வகைகளில் தமிழ்ப் பதிவுலகம் நடந்து கொண்டதில்லை. என் பதிவுகளில் அத்தகைய ஓட்டளிப்பு பட்டன்களும், திரட்டி dependencyகளும் வைத்துக் கொள்வதில்லை என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இதனால் இழக்கின்ற ரீடர்கள் எண்ணிக்கை மிக அதிகம் என்றாலும், நல்ல படைப்பு வாசகர்களை இழுத்து வரும் என்ற நம்பிக்கை மலையளவு இருக்கின்றது.
இனிமேலும் ஓட்டளிப்பு எதிர்பார்த்தல்களை வைத்துக் கொள்ள வேண்டாம் என்ற நம்பிக்கை அளித்த உங்கள் செயலுக்கு நன்றிகள்.
அன்புடன்,
இரா.வசந்த குமார்.
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
ஜோக் நல்லாயிருக்கு,
கதை புரியிரதுகுல்ல தாவூ தீருது!
எல்லோரும் கலைந்து போனது நல்லா இருக்கு.. ஆவியாக வந்ததும் கூட ஓக்கே.. இன்னும் கொஞ்சம் சிரமப்பட்டிருக்கலாமோ.. ரொம்பவே ஆர்டினரியா இருக்கு.. (I fish வசந்தகுமார் 1 to 100 க்கு)
வாழ்த்துகள் வசந்த்.. நல்ல முயற்சி.. உங்களுக்கு படமும் நல்லா வரைய வருது, முக்கியமா ஃபேன் படமும், விரல் படமும் அருமை.. ஆவிக்கு வரைந்திருந்தது சூப்பர்.. பாராட்டுகள்
வசந்த்... வாழ்த்துக்கள்...
ச்ர்வேயில நான் நிறைய கள்ள ஓட்டு குத்தினேன்...(தனியாக் கவனிச்சிருங்க..>)
கிறுக்கு கதை டைட்டிலைப் பார்த்தவுடனே புரிஞ்சிடுச்சி..இது எனக்கு ஏத்தமாதிரி கதைதான்னு...
நல்ல முயற்சி... சூப்பர்...
கார்ட்டூன்ஸ் கலக்கல்...
இருவரின் முகங்கள் அனைத்துப் படங்களிலும் அதே போல் வந்தது சிறப்பு... வாழ்த்துக்கள்....
அன்பு வால்பையன்...
நன்றிகள். கதை முயற்சி இப்போது தானே துவங்கியிருக்கிறோம். இன்னும் மெருகேற்ற வேண்டும்.
***
அன்பு புபட்டியன்...
கதை நேற்று அவசர அவசரமாக பட-எழுத்துக்களுக்காக யோசித்ததால், மிக நார்மலாக வந்திருக்கின்றது. மெருகேற்றுவோம்.
***
அன்பு வெண்பூ...
நன்றிகள்.
***
அன்பு தமிழ்ப்பறவை...
நன்றிகள். உங்களுக்கான இன்னும் சில பதில்கள் பதிவில் அப்டேட் செய்துள்ளேன்.
:-((((((
sorry.... :-((((
//
நல்ல படைப்பு வாசகர்களை இழுத்து வரும் என்ற நம்பிக்கை மலையளவு இருக்கின்றது.
//
என்னை இழுத்து வந்து விட்டது!
வித்தியாசமான முயற்சி. நல்லா இருக்குது வசந்த்
அன்பு தமிழ்ப்பறவை...
நன்றிகள்.
***
அன்பு மெனக்கெட்டு...
நன்றிகள். வந்து விட்ட உங்களைத் தொடர்ந்து படிக்க வைப்பதில் உள்ள சவாலை உணர்ந்து கொள்கிறேன்.
***
அன்பு கதிரவன்...
நன்றிகள். தொடர்ந்து வாருங்கள்.
திடு. வசந்தகுமார், உங்கள் பதிவு மிக அருமை. நிறைய படிக்க வேண்டும். உங்களின் slide அற்புதம். அழகன் முருகன்,குட்டி கிருஷ்ணன்,சுஜதா, தமிழ், இயற்கை, தாகூர், வள்ளுவன் ஆஹா அனைத்துமே என் மனதிலும் இனிப்பவை. பெரிய மனுசங்க பட்டியல் மிக மிக அருமை. பலரின் பதிவுகள் நான் விரும்பியவை. அவற்றை அறிமுகபடுத்தியமைக்கு மிக்க நன்றி. நான் எழுதுவதைவிட அதிகமாக மிக மிக அதிகமாக படிப்பவள்.எனக்கு படிக்க நிறைய கிடைத்துல்லது. மிக்க நன்றி.
எனக்குப் பிடித்த சுவாரஸ்ய பதிவர்கள் ஆறு பேரில் உங்களையும் குறிப்பிட்டு இருக்கிறேன் - (http://anujanya.blogspot.com/2009/07/blog-post_19.html)
நீங்களும் இதைத் தொடர்ந்தால் மகிழ்ச்சி அடைவேன்.
அனுஜன்யா
Post a Comment