நாளை நடு ராத்திரி பனிரெண்டு மணிக்கு துவங்குகிறது. NaNoWriMo. தேசிய நாவல் எழுதும் மாதம். 1999ல் துவங்கி எழுதுபவர்களின் எண்ணிக்கை, எக்ஸ்பொனன்ஷியல் ரேட்டில் எகிறிக் கொண்டிருக்கின்றது. சென்ற ஆண்டே குறித்து வைத்தும் மறந்து விட்டேன். இந்த அவ்ருடம் ஞாபகமாக இருந்து பதிவு செய்து கொண்டிருக்கிறேன்.
என்ன போட்டி?
நாவல் எழுத வேண்டும். 'யம்மாடியோவ்..?' என்று வாய் பிளப்போம். நாவல்னா சும்மாவா என்ன?
நம்மைப் போன்றவர்களுக்காக, இந்த போட்டி. ஒரு மாதம் கொடுக்கிறார்கள். நவம்பர் 1 அதிகாலை முதல் நவம்பர் 30 அதி இரவு வரை. மொத்தம் 50,000 வார்த்தைகள் எழுத வேண்டும். கூட்டிக் கழித்துப் பார்த்தால், குத்து மதிப்பாக ஒரு நாளுக்கு 1667 வார்த்தைகள்.
கண்டதையும் எழுதுங்கள். எடிட் செய்யவே வேண்டாம்.
எந்தப் பரிசும் இல்லை; அவர்டுகள் இல்லை; பைசா இல்லை. பிறகு எதற்காக உழைப்பைக் கொட்ட வேண்டும் என்றால், அது கொடுக்கும் த்ரில்லுக்காக.!
இப்போதே எனக்குள் அட்ரினலின் பலூன்கள் வெடிக்கின்றன.
Come. Letz ROCK....!!!
http://www.nanowrimo.org/
6 comments:
பாஸ் எதாச்சும் கான்செப்ட் எடுத்து வைச்சுக்கிட்டு எழுதணுமா இல்ல நம்ம வாழ்க்கை பயணம் மாதிரி சம்பந்தாசம்பந்தமில்லாம இருக்கலாமா? :)
நீங்க எழுதிட்டு அதை வலையேத்துங்க அதுக்கு நாங்க வெயிட்டிங்க் ! :)
Vasanth, naan novel padika thayar ayitaen...neenga ezudha thayara ayiteenga....Kalakunga..
அன்பு ஆயியன்...
ட்விட்டரில் பதில் கொடுத்திருந்தேனே...பார்த்தீர்களா..? ரிப்பீட். நாவல் வடிவில் சம்பவங்களைக் கோர்த்துக் கொண்டே எழுதலாம்.
***
அன்பு ...
என்ன கொஞ்ச நாளாய் உங்களை ஆளையே காணோம்..? yeah, sure. first i will try to finish this competition successfully. then after i got satisfied, will publish here.. :)
வாழ்த்துக்கள். நானும் ஒரு சீட் போட்டுக்கறேன் உங்க நாவல் படிப்பதற்கு.. :)
எழுதிட்டு லிங்க் குடுங்க.. படிச்சி பாத்து சொல்றோம்.. எழுததான் போறதில்ல, குறைந்தது படிக்கவாவது முயற்சி செய்யுறோம். :))
அன்பு கார்த்திக்...
நன்றிகள்.
***
அன்பு வெண்பூ...
கண்ணியாக கொடுக்க முடியுமா என்று தெரியவில்லை..! முதலில் எழுதி முடிக்கிறேனா என்று பார்ப்போம். :)
நன்றிகள்.
Post a Comment