Friday, February 19, 2010

நான்கு ஆசிரியப்பாக்கள் மற்றும் சற்று ட்வீட்டர்.'வெண்பாக்களே கொஞ்சம் சுலபம் தான் போல' என்று நினைக்கும் வகையில் ஆசிரியப்பாவில் கடினமான விதிகளைச் சொல்லி ஆசிரியர் தமிழநம்பி எழுத வைக்கிறார். 'வெண்பா எழுதலாம் வாங்க' வலைத்தளத்திலேயே இப்போது ஆசிரியப்பா எழுதச் சொல்லித் தருகிறார்கள்.

கற்று தான் வைப்போமே! என்ன இப்ப..?

அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம் -1.

மெல்ல விரலைப் பிடித்திழுத்து
முத்தம் முழுதாய்ப் பதித்தெடுத்து
அல்லி இடையை அணைத்திறுக்கி
ஆறா மதுவை அகப்புகுத்தி
வெள்ளம் எனும்படி வேர்வைவர
வெப்பம் பகரும் கனிமாரைக்
கள்ளென எண்ணிக் கரம்தடவக்
காசுகள் கேட்பான் மணமகனாம்.

மற்றொரு வகை ::

நீரினை உண்ணும் கொண்டல்
நிலத்தினில் செழிக்கும் வண்டல்
வேரினில் மணக்கும் வெட்டி
வேனிலில் பெய்யும் மாரி
காரிலே காணும் திங்கள்
கனியிலே திகட்டாப் பாகல்
ஊரிலே இல்லை ஒப்பு
உள்ளது பிள்ளை எச்சில்.

வானென்ற குவளை மேலே
வந்தது பொத்தல் கோடி
காணென்று சொல்லிப் பெய்த
கடும்பனி கோடி கோடி
ஊனென்று வெள்ளை வட்டம்
உலாவரும் நிலாத் தட்டம்
வீணென்று விழுங்கி ஏப்பம்
விடும்கரும் துளையோர் மர்மம்.

ஆனையொன்று தெருவில் ஆங்கே
அசைந்தாடி நடந்தே போகும்
பானைபோன்ற வயிறு கொண்டு
பாதமெனத் தூண்கள் உண்டு
நினைத்தாலே ஊரை முட்டும்
நின்றாலே வானம் எட்டும்
தினையளவே அதற்கு மாந்தன்
தும்பிக்கை பிச்சைக் கேட்கும்.

சற்று ட்வீட்டர் சொற்கள் ::

Wanna know y Guitar is used prominently in Romantic songs? Check its structure. Damn, it's Perfectly Woman. Tune it nTouch strings. DANN!!!

Once there was a snail, It had a large tail, Using its sharp nail, Wrote an exam but got fail. - Who said writing poem is hard?

The green comments in my programs make me to remember this world, where greenary trees are getting treated as simply comments.

Wanna know the reason the mighty Greek Empire got extinct in time? Just check greek male sculptors. Gotcha...!!!

I want to believe the screensaver fishes to live behind all my opened windows.

"We never touched condoms, until AIDS was identified. Now see, how they use. Those were the golden days...!" a retired pornstar sighed.

5 comments:

PPattian : புபட்டியன் said...

Great Twwets.. especially the condom one :)

திகழ் said...

/நீரினை உண்ணும் கொண்டல்
நிலத்தினில் செழிக்கும் வண்டல்
வேரினில் மணக்கும் வெட்டி
வேனிலில் பெய்யும் மாரி
காரிலே காணும் திங்கள்
கனியிலே திகட்டாப் பாகல்
ஊரிலே இல்லை ஒப்பு
உள்ளது பிள்ளை எச்சில்.

வானென்ற குவளை மேலே
வந்தது பொத்தல் கோடி
காணென்று சொல்லிப் பெய்த
கடும்பனி கோடி கோடி
ஊனென்று வெள்ளை வட்டம்
உலாவரும் நிலாத் தட்டம்
வீணென்று விழுங்கி ஏப்பம்
விடும்கரும் துளையோர் மர்மம்.

ஆனையொன்று தெருவில் ஆங்கே
அசைந்தாடி நடந்தே போகும்
பானைபோன்ற வயிறு கொண்டு
பாதமெனத் தூண்கள் உண்டு
நினைத்தாலே ஊரை முட்டும்
நின்றாலே வானம் எட்டும்
தினையளவே அதற்கு மாந்தன்
தும்பிக்கை பிச்சைக் கேட்கும்.
/

பாக்க‌ளைச் சுவைத் "தேன் "

இரா. வசந்த குமார். said...

அன்பு புபட்டியன்...

நன்றிகள்..!

***

அன்பு திகழ்...

தங்கள் சுவைத்ததற்கு நன்றித்'தேன்'.

தமிழ்ப்பறவை said...

2வது, 3வது பாக்கள் பிடித்திருந்தது வசந்த்...
2வது டிவீட்டுக்குப் புன்னகைத்தும்,5வது டிவீட்டுக்கு மனதார வாழ்த்தியும், க்டைசி ட்வீட்டுக்கு தலையையும் சொரிந்து நின்றேன்...

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in