Wednesday, June 09, 2010

நாதன் தாள் வாழ்க!



னிமுடி மீதில் பிறைமதி ஒளிர
நனிநதி பொங்கி நழுவழி சடையில்
துணியிடை அங்கித் தோலுடை மிளிரத்
தனியெனத் திகழும் தென்திசை குருவே!

ஒருவிழி முகத்தில் ஒளிதர திறந்து
இருவிழி பெருக்கும் இமைநிறை அருளே!
திருமொழி யாவும் திகட்டிட கலந்த
கரும்பிழிச் சாறில் கனிந்திடும் செவியே!

நான்மறை பொழியும் நாதனின் செவ்வாய்
தானுரை செய்தல், தேனுறை பாலில்
வான்திரை விலகி வாடிய பயிர்க்கு
ஊன்நிறை மாமழை ஊற்றினாற் போலே!

விண்ணவர் கடைந்த விடத்தினை எடுத்து
உண்டதும் இடத்து உமைகரம் தடுக்க
கண்டமேல் படர்ந்த கருநிற இடத்தை
கண்டதும் கழலும் கண்களின் பாவமே!

அணிவதும் அரவம்; அருள்வதும் அன்பே;
பணிவதுன் பாதம்; பதிப்பதும் பட்டை;
தணிவதும் தாபம்; தருநிழல் தருவே;
கனிவதும் மனமே; கரம்விடாய் இறையே;

***

Image Courtesy :: http://vamsikarra.files.wordpress.com/2008/03/shiva01.jpg

5 comments:

கதிரவன் said...

பாடல் அருமை

பக்தி பெருக்கமா இருக்குதே..என்னாச்சு வசந்த் ?

தமிழ் said...

அருமை

மெனக்கெட்டு said...

நன்றாக இருக்கிறது.



குறிப்பு : இதில் 20 வரிகள்
80 வார்த்தைகள் பயன் படுத்தி இருக்கிறீர்கள்


இஹி.. இஹி.. சும்மா 'மெனக்கெட்டு' பார்த்தேன்.

1 அங்கித்
2 அணிவதும்
3 அரவம்
4 அருள்வதும்
5 அருளே
6 அன்பே
7 இடத்து
8 இடத்தை
9 இமைநிறை
10 இருவிழி
11 இறையே
12 உண்டதும்
13 உமைகரம்
14 ஊற்றினாற்
15 ஊன்நிறை
16 எடுத்து
17 ஒருவிழி
18 ஒளிதர
19 ஒளிர
20 கடைந்த
21 கண்களின்
22 கண்டதும்
23 கண்டமேல்
24 கரம்விடாய்
25 கருநிற
26 கரும்பிழிச்
27 கலந்த
28 கழலும்
29 கனிந்திடும்
30 கனிவதும்
31 குருவே
32 சடையில்
33 சாறில்
34 செய்தல்,
35 செவ்வாய்
36 செவியே
37 தடுக்க
38 தணிவதும்
39 தருநிழல்
40 தருவே
41 தனியெனத்
42 தாபம்
43 தானுரை
44 திகட்டிட
45 திகழும்
46 திருமொழி
47 திறந்து
48 துணியிடை
49 தென்திசை
50 தேனுறை
51 தோலுடை
52 நழுவழி
53 நனிநதி
54 நாதனின்
55 நான்மறை
56 பட்டை
57 படர்ந்த
58 பணிவதுன்
59 பதிப்பதும்
60 பயிர்க்கு
61 பனிமுடி
62 பாதம்
63 பாலில்
64 பாவமே
65 பிறைமதி
66 பெருக்கும்
67 பொங்கி
68 பொழியும்
69 போலே
70 மனமே
71 மாமழை
72 மிளிரத்
73 மீதில்
74 முகத்தில்
75 யாவும்
76 வாடிய
77 வான்திரை
78 விடத்தினை
79 விண்ணவர்
80 விலகி

Unknown said...

பாடல்கள் மிக அருமை. தொடரட்டும்.

பாடல் செவிமடுத்து வந்தான் பரமன்
அடிதொழுது நின்றான் வசந்த்-கவிபாட
அட்சய பாத்திரமென வற்றாத கற்பனை
வரம் கொடுத்துச் சென்றான் அவனே

இரா. வசந்த குமார். said...

அன்பு கதிரவன்...

நன்றிகள். ச்சும்மா..! :)

***
அன்பு திகழ், மெனக்கெட்டு, பாஸ்கர்,

நன்றிகள்.