Tuesday, June 19, 2007

ஒரே ராகம்.. மூன்று பாடல்கள்.

மேஸ்ட்ரோ இளையராஜாவின் மூன்று பாடல்கள்... இல்லை..இல்லை ஒரே பாடல் தான்...

மூன்று வெவ்வேறு மொழிகளில் உள்ள பாடல்கள். ஆனால் மூன்றும் தேன் பாடல்கள்.


1. Jotheyali, Jothe Jotheyali... - கன்னடம் - கீதா - எஸ்.பி.பி. - எஸ்.ஜானகி.

ங்கர் நாக் அவர்களின் இயக்கத்தில் அவரே நடித்து வெளிவந்த திரைப்படம். இப்பாடல், நான் பெங்களூரில் இருந்த போது அடிக்கடி இரவு நேரங்களில், எஃப்.எம். அலைவரிசைகளில் ஒலிபரப்பப்பட்ட பாடல். படம் வந்து பல ஆண்டுகள் ஆன பின்னும், இன்னும் இதயங்களைக் கொள்ளை கொள்ளும், இனிய மெலோடிப் பாடல்.




2. விழியிலே.. மணி விழியிலே... - தமிழ் - நூறாவது நாள் - மீண்டும், எஸ்.பி.பி. - எஸ்.ஜானகி. .

ணிவண்ணன் அவர்களின் இயக்கத்தில், மோகன், நளினி, சத்யராஜ், விஜயகாந்த் மற்றும் பலர் நடித்திருக்கும் படம். த்ரில்லர் நடையில், விரைவாக ஓடும் திரைக்கதையில் வெற்றி கண்ட படம்.

அப்போது மைக் பிடித்து தலையாட்டிப் பாடியே, கேட்பவர்களின் தலையையும் சேர்த்துக் கிறுகிறுக்கச் செய்த மோகன் இப்படத்தில் வில்லனாய் நடித்திருப்பார். இதைப்பற்றி அவரிடம் நிருபர்கள் கேட்ட போது, ' படத்தின் இறுதியில் மட்டும் தானே வில்லனாக வருகிறேன். படம் முழுதும் நான் ஹீரோ தானே' என்று புன்முறுவலுடன் கூறினாராம்.

இப்பாடல், பலரது All Time Favorite.




3. Jaane- Do- Na ... - இந்தி - Cheeni Kum - ஸ்ரேயா கோஷல்..

பாலகிருஷ்ணன் அவர்களின் இயக்கத்தில், அமிதாப், தபு நடிப்பில் வெளிவந்திருக்கும் படம். இப்பதிவை இடுவதற்குக் காரணமாய் அமைந்த பாடல் இது. கேட்டவுடனே 'எங்கேயோ கேட்ட பாடலாய்' இருக்கிறதே என்று தோன்றியது. தமிழ்ப் பாடல், உடனே நினைவுக்கு வந்து விட்டது. கன்னடப் பாடல் தான் சற்று தேட வேண்டியதாகி விட்டது.

இப்பாடலுக்கான ஒளிவடிவம் கிடைக்காததால், ஒலி வடிவம் மட்டும், இப்போதைக்கு. ஒளி வடிவம் கிடைத்தவுடன், இப்பதிவு புதுப்பிக்கப்படும்.


Get Your Own Music Player at Music Plugin

*****

வேறு வேறு மொழிகள்.. வேறு வேறு பங்கேற்பாளர்கள்.. ஆனால் பொங்கி வரும் உணர்வுகள் மட்டும் ஒன்று. மூன்று பாடல்களையும் ஒப்பிட்டுப் பார்ப்பதில், சுவாரஸ்யங்கள் கிடைக்கும்.

காலப்போக்கில் ஒலியமைப்புகளில் ஏற்பட்ட மாற்றங்கள், ஒரே பாடலை, வெவ்வேறு இயக்குநர்கள் கையாண்டிருக்கும் விதங்கள், பங்கேற்பாளர்களின் முகங்களில் வெளிப்படும் உணர்வுகள்..., ஒப்பிடுகையில், உகப்பாகத் தான் இருக்கும் என்பது நிச்சயம்.



பகவான் இராமகிருஷ்ணரிடம் ஒருமுறை கடவுளின் வெவ்வேறு உருவங்கள், அவற்றின் வழிபாடு பற்றிக் கேள்வி கேடகப்பட்டது. பரமஹம்ஸர் ' தண்ணீரை 'பானி' என்றோ, 'வாட்டர்' என்றோ, 'தண்ணீர்' என்றோ, எந்தப் பெயர் சொல்லிக் குடித்தாலும் தாகம் நீங்குகின்றது. அதுபோல், பகவானை எப்பெயர் சொல்லி வழிபட்டாலும், அவன் அருள் நிச்சயமாகக் கிடைக்கும் ' என்றார்.

இசையெனும் பேரருவியும் அது போல் தானே..!

6 comments:

Anonymous said...

நல்ல பாட்டு வசந்த்...

hindi paadalin varighal thamizhai vida azhaga iruku..:)

இரா. வசந்த குமார். said...

அன்பு மல்லிகை... வருகைக்கு நன்றிகள்..... எனக்கும் ஷ்ரேயா கோஷல் குரல் தான் பிடிச்சிருக்கு.. ;-)

PPattian said...

நல்ல observation. எது முதலில் வந்த பாடல்? கன்னடம் or தமிழ்?

//பகவான் இராமகிருஷ்ணரிடம் ஒருமுறை கடவுளின் வெவ்வேறு உருவங்கள், அவற்றின் வழிபாடு பற்றிக் கேள்வி கேடகப்பட்டது. பரமஹம்ஸர் ' தண்ணீரை 'பானி' என்றோ, 'வாட்டர்' என்றோ, 'தண்ணீர்' என்றோ, எந்தப் பெயர் சொல்லிக் குடித்தாலும் தாகம் நீங்குகின்றது. அதுபோல், பகவானை எப்பெயர் சொல்லி வழிபட்டாலும், அவன் அருள் நிச்சயமாகக் கிடைக்கும் ' என்றார்.

இசையெனும் பேரருவியும் அது போல் தானே..!//

Great.

இரா. வசந்த குமார். said...

அன்பு ppattian சார்.... தங்கள் வருகைக்கு நன்றிகள்.

//
எது முதலில் வந்த பாடல்? கன்னடம் or தமிழ்?
//

நான் அறிந்த வரையில், கன்னடப் பாடல் தான் முதலில் வந்ததாக அறிந்தேன்...

//
Great.
//

வாழ்க பரமஹம்ஸர் புகழ்.

புகழன் said...

பதிவை ஓப்பன் செய்தவுடனேயே பாடலும் கேட்கும் விதத்தில் பதிவை அமைத்திருப்பது நன்றாக உள்ளது.
வாழ்த்துக்கள்.
உங்கள் இசைத் தேடலைத் தொடரவும்.

இரா. வசந்த குமார். said...

அன்பு மனதோடு மனதாக ஐயா.. மிக்க நன்றிகள் தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்...!