Wednesday, June 27, 2007

கனா காணும் காலங்கள்.



மீப காலமாக தவறாது பார்த்து வரும் சீரியல் 'கனா காணும் காலங்கள்'. ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வருகின்றது.

அது மட்டுமின்றி சனிக்கிழமை கூட ஒருமுறை ஒளிபரப்புகிறார்கள்.

மிகத் தெளிவாகத் திட்டமிட்டு, இந்நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருக்கின்றது. வழக்கமாக ஒரு வகுப்பில் இருக்கின்ற பாத்திரங்கள் வைத்து எடுக்கப் படுகின்றது.

ஒரு பந்தா க்ரூப், ஒரு சராசரி க்ரூப், காமெடியாகப் பேசிக் கொண்டேயிருக்கும் 'ப்ளாக் பாண்டி', இயல்பான 'தல', துறுதுறுவென இருக்கும் 'ஜோ', கொஞ்சம் காம்ளக்ஸ் காரக்டரில் 'பச்சை' என்று ஒரு சராசரி க்ரூப்.

கொஞ்சம் கெத்தாக வருகின்ற 'வினீத்' க்ரூப்.

இவர்களுக்கு நடுவே இரு பெண் பிள்ளைகள்.

இதனால் ஏற்படுகின்ற கலாட்டாக்கள், கிண்டல்கள், சின்னச் சின்ன சண்டைகள் என்று தொய்வில்லாமல் பறக்கின்றது தொடர்.

ஸ்டார் டி.வி.யின் விளம்பரப்படுத்தும் உத்திகள் அபாரம்.

'மாயக் கண்ணாடி' வெளியான சமயத்தில், இயக்குநர் சேரனை பள்ளி விழாவுக்குக் கூட்டி வருவதாகக் காண்பித்தார்கள். 'லொள்ளு சபா' கதாநாயகனை உயிரியல் பாட ஆசிரியராகக் காண்பிக்கிறார்கள்.

முக்கிய கதாபாத்திரங்களை பொதுமக்கள் முன்னிலையில் கூட்டிச் சென்று, அவர்களை தொடரோடு ஒன்ற வைக்க முயல்கிறார்கள்.

இது போதாதென்று, இப்போது அடுத்த அதிரடி.

20:30க்கு மேல், 'எங்கள் கனா, உங்கள் வினா' என்று தினம் ஒரு காரெக்டரிடம் மக்களை கேள்வி கேட்கவைத்து, அவர்களின் பதில் வாங்குகிறார்கள். இறுதியில், ஒரு பிரபலம் வந்து, அந்தக் காரெக்டர் தான் ரொம்பப் பிடித்திருக்கிறது என்கிறார்.

ராகவியாக வரும் பெண், 'சேது'வில் சிவக்குமாரின் குட்டிப் பெண்ணாக வரும். அவ்வப்போது வாயைப் பொத்தி சிரிக்கும். காலம் தான் எவ்வளவு வேகமாக ஓடுகின்றது...!

சங்கவி, (இவங்க வேற..!) 'பரட்டை...' என்கின்ற பனாதைப் படத்தில், 'மீரா ஜாஸ்னினோடு' ஒட்டிக் கொண்டே வருகிறார்.

வித்தியாசமான படைப்புகளால், முதலிடத்திற்கு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றது, விஜய் டி.வி. என்று தான் சொல்ல வேண்டும்.

2 comments:

PPattian said...

புதிய லொல்லு சபா, ஜோடி நொ 1, சூப்பர் சிங்கர், தமிழ் KBC, அழுது வடியாத சீரியல்கள் என எப்போதோ இளைஞர்களின் நம்பர் 1 ஆகி விட்டது விஜய்...

இரா. வசந்த குமார். said...

ppattian ஸார்... நீங்கள் சொல்வது கரெக்ட் தான்.. ஃப்ரெஷ்ஷான லுக்கோடு கலக்கிக் கொண்டிருப்பது யார் என்ற கேள்விக்குப் பதில், விஜய் டி.வி. தான்...