நான் கல்லூரியில் இருந்து, வெளிவந்த காலத்திலேயே இந்த சொகுசு பேருந்துகள் ஓடத் தொடங்கி விட்டன. அதில் 'பச்சை' பேருந்துகளை விட அதிக கட்டணம் என்று கேள்விப்பட்டதில் இருந்து, அந்த வகை பேருந்துகளைக் கண்டால், காத தூரம் ஓட முடியா விட்டாலும், ஏற மாட்டேன்.
இப்போது, இன்னும் பல வகை பேருந்துகள். டீலக்ஸ், சூப்பர் டீலக்ஸ், தாழ்தளப் பேருந்து, சொகுசுப் பேருந்து என்று சென்னைச் சாலைகளில் ஊர்ந்து கொண்டிருக்கின்றன.
ஏன், இந்த வகை பேருந்துகளில் மட்டும் அதிகக் கட்டணம் கட்ட வேண்டும்? அப்படிக் கட்டினால் மட்டும் நம்மால் சொகுசாகப் பயணிக்க முடிகின்றதா? பீக் ஹவர்ஸில் எப்படியும் தொங்கிக் கொண்டு தான் போகின்றோம். பின் எதற்கு இந்த கட்டண வேறுபாடு?
இதைப் பாருங்கள்.
ஒருநாள் வேலையின்றி, உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருக்கையில் தான் இதற்கான பதில் கிடைத்தது.
நாம் செய்கின்ற எல்லாச் செயல்களுக்குமே, நாம் எதிர்பார்க்கின்ற விளைவுகளின் 'நிகழ்தகவு' (Probability) அதிகமாக இருக்கும் என்று நம்பித் தான்.
தியேட்டருக்குப் போய் அனுமதிச்சீட்டு வாங்க முடியும் என்ற நம்பிக்கையில் தான், தியேட்டருக்குப் போகிறோம். 'இந்த இரயில் கவிழாது' என்ற நம்பிக்கையில் தான் டிக்கெட் எடுக்கிறோம். முதலாளி ஒன்றாம் தேதி சம்பளம் தந்து விடுவார் என்று நம்பித் தான் ஏழு மணிக்கும்,எட்டு மணிக்கும் வீடு திரும்புகிறோம்.
இவற்றிற்கான நிகழ்தகவு அதிகம் என்ற நம்பிக்கை தான்.
இன்று சுனாமி வருவதற்கான நிகழ்தகவு மிகக் குறைவு என்பதால் தான், ஞாயிற்றுக் கிழமையில் மெரினாவில் கூட்டம் கூடுகின்றது.
அது போல், எவ்வகைப் பேருந்தில் சென்றாலும் நமக்கு அமர்வதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் ஒவ்வொரு நிறுத்தத்திலும் பேருந்தை ஒரு பறவைப் பார்வை பார்க்கிறோம். ஓட்டுநர் தவிர வேறு யாராவது எழுந்திருந்தால், படாரென அங்கு பாய்கிறோம்.
அப்படி இருவகைப் பேருந்துகளில் பயணம் செய்கையில், நமக்கு அமரக் கிடைக்கும் நிகழ்தகவில் சொகுசுப் பேருந்தில், இன்னும் வசதியாக பயணம் செய்ய முடிகின்ற வாய்ப்பு/ நிகழ்தகவு அதிகம் இருப்பதால் தான் அங்கு அதிகக் கட்டணம் என்று நினைக்கிறேன்.,
என்ன சொல்றீங்க..?
6 comments:
என்னமா யோசிக்கிறீங்க..
:))
அச்சச்சோ!!!!
ஒரு வாரத்துக்கு முன்னாடி நல்லாத்தானே இருந்தீங்க வசந்த்!!!
எப்போதிலிருந்து தவம் புரிய ஆரம்பிச்சீங்க??
:)))))
வஸந்த்,
அடிப்படையான சொகுசுப் பிரயாணத்திற்கு நிகழ்தகவு=1 என்று இருத்தல் அவசியம்.
சாதாரண கட்டணப் பேருந்தைப்போல் பயணிகள் 40 +"ஸ்டாண்டீஸ்" 25 +2 நிர்ணயித்துவிட்டு கட்டணத்தை இரு மடங்காங்கியிருப்பது கடைந்தெடுத அயோக்கியத்தனம்!
பதறியடித்து இறங்கிய முதியவர்கள், கூடுதல் கட்டணச்சுமை தாளமாட்டாதவர்கள் , மாணவர்கள் பயணிக்க சாதாரணக்கட்டணப் பேருந்து நேரத்தில் கிடைக்கும் நிகழ்தகவை வெகுவாய்க்குறைத்து வாட்டி வதைக்கும் நிகழ்தகவு =1 என்றாக்கியிருக்கிறது இந்த மாநகர தாழ்தள சொகுசுப்பேருந்து சேவைகள்:-((
அன்பு ppattian சார்.. மிக்க நன்றிகள்...
அன்பு மல்லிகை... தவம் செஞ்சாலாவது 'மா தவன்' ஆக முடியுமானு ஒரு சின்ன எண்ணம் தான்..
அன்பு Hariharan # 03985177737685368452 சார்... நீங்கள் சொல்வது சரி போல் தான் தோன்றுகிறது..
///அன்பு மல்லிகை... தவம் செஞ்சாலாவது 'மா தவன்' ஆக முடியுமானு ஒரு சின்ன எண்ணம் தான்..///
விரைவில் "மாதவன்" ஆக வாழ்த்துக்கள்!!
:))
/*
விரைவில் "மாதவன்" ஆக வாழ்த்துக்கள்!!
*/
மாதவன் இல்லீங்க.. 'மா தவன்'....
Post a Comment