Tuesday, September 09, 2008

அத்தப்பூக்காலம்... அழகுப் பூக்கோலம்...!

ன்று (10.செப்.2008) நிறுவனத்தில் அத்தப்பூக்காலம் கண்காட்சி நடைபெற இருக்கின்றது. அதற்காக ஒரு குழுவில் சேர்ந்து விட்டதால், இரவு 1 மணி வரை (09.செப்.2008) பூக்களைப் பிய்த்து போட்டு கை, விரல்கள், முதுகு, கழுத்து என்று எல்லா ஜாயிண்ட்களிலும் பிடித்துக் கொண்டது.

பூக்களைப் பிரித்தெடுக்கும் (கு கையில் பூன்னெல்லாம் சொல்லக் கூடாது!!) சில போட்டோக்கள்.







இன்று போட்டி முடிந்ததும், செல்லில் சிறை பிடிக்கப்பட்ட பூக்கோலங்கள் இங்கே அப்டேட் செய்யப்படும். அதுவரை உங்களுக்கு ஒரு பழைய பாடல்.



சேர்க்கப்பட்டது (Updated) ::

ஒவ்வொரு கலை வடிவத்தின் பின்பும் அறிவியல் இருக்குமா? ஓவியம், கதை, கவிதை, நடனம், இசை... தெரியவில்லை. ஆனால் அத்தப்பூக்காலம் என்ப்படும் இந்த பூஓவியத்தின் அடிப்படை கணக்குகளுடன் தான் இருக்கிறது.

எளிய முறையில் (கயிற்றில் சாக்பீஸ்கள் கட்டி வட்டம் வரைதல், அரை வட்டம் வரைய ஓரளவிற்கு கோணங்கள் வரைதல், அட்டைகள் தயார் செய்து டெம்ப்ளேட் ஆக பயன்படுத்தல்) அடிப்படை வரைபடங்கள் வரைந்து கொள்ளுதல், எந்த எந்த கட்டங்களுக்கு எத்தகைய நிறங்கள் கொடுக்க வேண்டும் என்ற அழகுணர்ச்சி, அந்த நிறங்களுக்கு ஏற்றாற் போல் பூக்களையோ, காய்கறிகளையோ முடிவு செய்தல், அழகாக அடுக்குதல், சிதறுகின்ற மலர் இதழ்களை அவற்றின் எல்லைகளுக்குள் அடுக்குதல் என்று ஒவ்வொரு நுட்பமாகச் செதுக்கும் போது, கண்களைப் பறிக்கும் அழகுடன் பூக்கோலம் உருப்பெறுகின்றது.

இதோ, நாங்கள் செய்த ஒரு பூக்காலத்தின் ஸ்டெப்ஸ் ::















மற்ற அணிகளின் பூக்காலங்களையும் கண்டு இரசிப்போமா?













பறவைப் பார்வையில் ::



சரி! நீ என்ன செய்து கொண்டிருந்தாய் என்று கேட்பவர்களுக்காக, வேறென்ன... அழகை ஆராதித்தல் தான்...!

வர்களிலோ, பொக்கேகளிலோ, காகிதச் செடிகளாக, ப்ளாஸ்டிக் மலர்களாகவோ இருக்கும் செடிகளும், பூக்களும் ஜீவனற்று இருக்கும். எவ்வித உணர்ச்சிகளும் அற்று, ஒளி இருக்கும் திசையை அறியாமலும், வளர்ச்சியற்றும் இருக்கும். ஆனால், அவ்வாறு இருக்கும் ஒரு மலரையோ, செடியையோ எடுத்து உயிர் கொடுத்து, செழுமையும் உயிர்த்துடிப்பும் நிரம்பிய செம்மண்ணில் நட்டு, நன்னீர் பாய்ச்சி, மஞ்சள் சூரிய ஒளியில் நிற்க வைத்தால், எத்தனை புத்துணர்வும், பளிச்சிடலும், ஜீவக்களையும் நிரம்பியதகா அம்மலர் காணப்படும்? புத்தம் புது இரத்தம் பாய்கிறார்ப் போல் புஷ்டியடையும் அல்லவா?

பூக்களுக்கு எப்படியோ, அவற்றைக் காண்பவர்க்கு களிப்பு தானே?

தினம் தினம் ஒரே மாதிரியான சுடிதார்களில் கண்டிருந்த அழகிய மலையாள மங்கைகள், கேரளப் பாரம்பரிய மஞ்சள் பட்டுச் சரிகைப் புடவைகளிலும், அழுத்தமான பச்சை, சிவப்பு, ஆரஞ்சு, பொன் நிறங்களிலும் ஆடைகள் அணிந்து, ஈரக்கூந்தல் அலையலையாய்ப் பறக்க, மலர்கள் நிறைத்தும், முகமெல்லாம் பண்டிகை மகிழ்ச்சி படர்ந்திருக்க, சிரிப்போடு அங்கே இங்கே வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருக்கின்ற காட்சி...! உள்ளக் கிளர்ச்சியையும், உண்மையான மலர்ச்சியையும் மனதிற்கு ஏற்படுத்தியது.

பல பூக்களே
பூக்காலம்
வரைகின்றதே!!!

அந்த அரிய அழகுகளைப் படமெடுத்தலிலேயே எனது நாள் பொழுதைச் செலவிட்டேன். ஆனால் அப்படங்கள் எல்லாம் பெர்சனல்..! ;-) (இதான்யா இவன்கிட்ட பிடிக்காததே! டைம் பார்த்து நழுவிடறானே என்று கவுண்டர் பாணியில் புலம்புகிறீர்களா..? Cooooooollll!)

மதியம் உண்ட சோறும், கூட்டும், பொறியலும், இனிப்புச் சட்னிகளும், மூன்று வித தேன் பாயசங்களும், சாம்பாரும், மோரும், இனிப்பு அப்பமும்.... அடடா... என்ன சுவை! எத்தனை மணம்..! கையெல்லாம் ஒட்டிக் கொண்டே வந்தது!

பிறகு பற்பல நிகழ்ச்சிகள் நடந்தன. மிமிக்ரி, ட்ரெஷர் ஹண்ட் என்றெல்லாம்! நமக்கெதற்கு அதெல்லாம்! நாம் தான் வேறு விதமான ட்ரெஷர் ஹண்ட்களில் பிஸியாக இருக்கிறோமே!

போதும்பா..! ஒரு நாள் சாப்பிட்டதே, ஆறு மாசத்துக்கு தாங்கும் போல...!

ங்...! சொல்ல மறந்தேனே! எங்கள் பூக்காலம் இரண்டாம் பரிசு பெற்றது!

11 comments:

அகரம் அமுதா said...

இங்கு இடப்பட்டிருக்கும் நிழற்படத்திலுள்ள பூக்களை வைத்து ஓர் நிரல்படுத்து வெண்பா எழுத முயலுங்களேன்.

thamizhparavai said...

எப்படி வசந்த் உங்களுக்கு நேரம் இருக்கிறது? கதை,கவிதை,பயணக்கட்டுரை,பயண்ம், புத்தகங்கள் வாசித்தல், இசை கேட்டல், இடையில் பூப்பறிக்கும் வைபவம் வேறு...
உண்மையில் நீங்கள் ஒரு சுறுசுறுப்புச் சூறாவளிதான்...

உங்கள் ஏரியாவில் இன்றுதான் பழைய பாடல் பார்த்ததால் ப்ளே பண்ணிப்பார்த்தேன்...நல்ல மெலோடி தந்ததற்கு நன்றி...
இதெல்லாம் விட தூள் லேபிள்தான்...

புகைப்படங்களை எதிர்பார்க்கிறேன்...

இரா. வசந்த குமார். said...

அன்பு அகரம்.அமுதா...

கண்டிப்பாக முயல்கிறேன். வருகைக்கு நன்றிகள்.

அன்பு தமிழ்ப்பறவை...

சுறுசுறுப்புச் சூறாவளியா..? நீங்க வேற! நீங்க சொல்ல்லியிருக்கற லிஸ்ட்டை விட முக்கியமான ஒண்ணு இருக்குதுங்க! ஆபீஸில் வேலை பார்த்தல்! அதை விட்டுட்டீங்களே!
சுருக்கமாகச் சொல்லின், 'மனமிருந்தால் மார்க்கமுண்டு'ங்க! அவ்வளவு தான்!

மெலோடி நல்லா இருக்குல்ல? கேட்க இனிமையாகவும் இருக்கிறது.

லேபிள் எல்லாம்... அப்படியே வர்றது தான். நம்ம கையில என்ன இருக்கு!

பிக்சர்ஸ் பாருங்க! எஞ்சாய் பண்ணுங்க!

Anonymous said...

நண்பரே அது பூக்காலம் அல்ல பூக்களம்

இரா. வசந்த குமார். said...

அன்பு அனானிமஸ்...

நீங்கள் சொன்னது சரியா என்று தெரியவில்லை. மல்லு நண்பிகளிடம் இது விஷயமாக கலந்தாலோசித்து ஒரு முடிவுக்கு வருகிறேன்.

நன்றி, இப்படி பேச ஒரு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்ததற்கு...!

;-))

அகரம் அமுதா said...

என்னங்க இது? முந்தைய நாள் பார்த்தேன் இடுகை குட்டிப்பாம்பு சைஸ்ல இருந்தது இப்ப அனகோண்டா சைஸ்ல வளர்ந்திருக்கு? நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதி சேர்த்திடுவீங்களோ?

thamizhparavai said...

ஒவ்வொரு பூக்காலமும் ஒவ்வொரு அழகு.
இரண்டாம் பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்(சேச்சிகளிடம் எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கவும்)
//அந்த அரிய அழகுகளைப் படமெடுத்தலிலேயே எனது நாள் பொழுதைச் செலவிட்டேன். ஆனால் அப்படங்கள் எல்லாம் பெர்சனல்..! ;‍) //
சிரிச்சு வயித்தெரிச்சலைக் கிளப்பாதீரும் ஓய்...
அட்லீஸ்ட் ஒன்றிரண்டு படங்களாவது போட்டிருக்கலாம்.
"எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றுமறியேன் பராபரமே.." எவ்வளவு அழாகச் சொல்லிருக்காங்க.. நினைச்சுப்பாருங்க...

thamizhparavai said...

இது நடந்தது அலுவலகத்திலா, குடியிருப்பிலா..?(பெர்சனல் எனில் கேள்வியை மட்டும் தள்ளிவிடுங்கள்)

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

நீங்கள் சொல்லச் சொன்னதாக, மறக்காமல் எல்லா சேச்சிகளிடமும் சொல்லி விடுகிறேன். கவலைப்பட வேண்டா.

/*
"எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றுமறியேன் பராபரமே.." எவ்வளவு அழாகச் சொல்லிருக்காங்க.. நினைச்சுப்பாருங்க..."
*/

கரெக்ட் தான்... இந்த 'எல்லோரும்' அப்படிங்கற கேட்டகிரில சேச்சிகளும் வருவாங்க இல்லையா..? நான் பாட்டுக்கு போட்டோஸை வெளியிடப் போக, அதனால ஏதாவது வில்லங்கமா ஆகிடுச்சுனு வெச்சுக்குங்க... சேச்சிங்க மனம் வருத்தப்படும் இல்லையா... அதனால், ட்ரேட் ஆஃப் கணக்கிட்டுப் பார்த்து... போட்டோஸ் பப்ளிஷிங் கட்.

குடியிருப்போ, அலுவலகமோ இல்லீங்க. ஒரு கல்யாண மண்டபத்தை ரெண்ட்டுக்கு எடுத்து அதில் தான் போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் கண்டக்ட் பண்ணினாங்க.

நினைச்சுப் பாருங்க... பொண்ணுங்க எல்லாம் அப்படியே வெண் பட்டுச் சரிகைப் புடவை, நாங்க எல்லாம் எப்பவுமே கட்டியிராத வேஷ்டி, மஞ்சள் சட்டை போட்டு, கல்யண மண்டபத்தில சுத்திட்டு இருக்கும் போது, கல்யாண மாப்பிள்ளை பீலிங் வந்திடுச்சுங்க. என்ன செய்ய...?

ஹூம்.....!

இரா. வசந்த குமார். said...

அன்பு அகரம்.அமுதா...

போட்டிக்கு முதல் நாள் பின்னிரவும், போட்டி முடிஞ்ச நாள் இரவும் அனுபவங்களை பதிப்பிச்சிருக்கேங்க...!

அகரம் அமுதா said...

பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்.

////அந்த அரிய அழகுகளைப் படமெடுத்தலிலேயே எனது நாள் பொழுதைச் செலவிட்டேன். ஆனால் அப்படங்கள் எல்லாம் பெர்சனல்..!////

ம்ம் புரிகிறது. நீங்கள் எந்த அரிய அழகுகளைப் படமெடுத்திருப்பீர்கள் என்பது.