Sunday, May 24, 2009

நாஸ்டால்ஜிக் ரசிப்பு.2.


கொஸப்பேட்டை குப்ஸாமி.

ந்த தொடரில் எழுதுவதற்காக கொஸப்பேட்டையாரின் தளத்திற்குச் சென்று பார்த்தேன். ஆச்சரியம். தளமே வடிவமைப்பில் மாறியிருந்தது. நீலத்திரை பின்புலத்தில் குட்டி குட்டி எழுத்துக்கள்.

ஆனால் சென்னைச் செந்தமிழுக்கு இந்த தூக்க நிறம் சரியான மேட்ச் என்று எனக்குத் தோன்றவில்லை.

பாரீஸ் தாண்டி வடசென்னையின் தெருக்களில் சுற்றியதில்லை நான், பத்து வருடங்களாக தலைநகர் வாசம் பிடித்திருந்தாலும்! ஆனாலும் சில கதைகள் எழுத முடிந்தது. இந்த கானாவுக்கும் நெம்புகோலாய் சென்னை368 தான் இருந்திருக்கின்றது. எப்படி இந்த வார்த்தைகள் தெரிந்திருக்கும் என்று சிந்தித்துப் பார்க்கும் போது, இரண்டே இரண்டே காரணங்கள் தான் கிடைத்தன.

முதல் : மயிலை எம்.எல்.ஏ. அண்ணன் எஸ்.வி.சேகர்.

சேகரின் நாடகங்களில் முதலில் கேட்டது 1000 உதை வாங்கிய அபூர்வ சிகாமணி. இரண்டாம் பாதியில் ஆள் மாறாட்டம் செய்து எம்.எல்.ஏ.வாகி சென்னைத் தமிழில் அமர்க்களம் செய்வார். மற்றும் சில நாடகங்களிலும் இயல்பாக அவருக்கு வார்த்தைகள் வந்து விழும். வளர்பருவத்தில் சேகர் நாடகங்கள் ஊற்றியது ஒரு முக்கியமான காரணம். ஆனால் அப்போது கவிதைகள் மட்டும் கிறுக்கிக் கொண்டிருந்ததால் சென்னை வெளியே வரவில்லை.

இரண்டாவது இவர். 2006-ல் பெங்களூரில் இருந்த போது, வலைக்கு அறிமுகம் கிடைத்து படித்துக் கொண்டிருந்த போது, கொஸப்பேட்டையாரின் வலைப்பூ மீண்டும் சென்னை அணுக்களைக் கடத்திக் கொண்டு வந்திருந்தது. பெரும்பாலும் அரசியல் பதிவுகள். காரணம் கேட்டால், தினமணி மதி போல் ,'வேறு எதைப்பற்றியும் கார்ட்டூன் போடலாம் தான். ஆனால் இந்த அரசியல்வாதிகள் தான் தினமும் ஏதேனும் செய்து விடுகிறார்களே!' என்று சிரிக்கவும் கூடும்.

முழுக்க முழுக்க செ.செந்தமிழில் எழுதுவது எனக்குத் தெரிந்து இவர் ஒருவர் தான் என்று நினைக்கிறேன். படித்துப் பாருங்கள். சென்னை உங்கள் செல்களிலும் ஊறும்.

படம் நன்றி :: http://www.hindu.com/2008/06/16/images/2008061654820601.jpg

http://kosappettai.blogspot.com/2004/03/blog-post_27.html

http://kosappettai.blogspot.com/2004/04/blog-post_27.html

http://kosappettai.blogspot.com/2004/04/blog-post_21.html

http://kosappettai.blogspot.com/2004/04/blog-post_11.html

இன்னும் நிறைய இருக்கின்றன.

2 comments:

கொஸப்பேட்ட குப்ஸாமி said...

இன்னா தலீவா, நம்ம வூடு அவ்ளோ புட்ச்சிப்போச்சா இன்னா? டாங்ஸுமா.

//ஆனால் சென்னைச் செந்தமிழுக்கு இந்த தூக்க நிறம் சரியான மேட்ச் என்று எனக்குத் தோன்றவில்லை.//

நம்ம கைல சொல்லிட்டல்ல, மாத்திடலாம் வுடு...

இரா. வசந்த குமார். said...

டியர் குப்ஸாமி...

டேங்ஸுப்பா..! நெறிய எளுது மாமே! அப்பால உனிக்கே தெர்யாம என்னிய மாதிரி நெறிய ஆளுங்க படிப்பாங்க..!