மூர்ஸ் விதியை மீறி மூர்க்கமாக தமிழ்ப் பதிவர்களின் எண்ணிக்கை எகிறிக் கொண்டிருக்கின்றது. இன்று எழுதும் பதிவுகள் அறுபது நொடிகளுக்குள் கவனத்தில் இருந்து, காணாமல் போய் விடுகின்றன. நடப்பு நிகழ்ச்சிகளை ஒட்டி எழுதப்படும் பதிவுகள் சம்பவச் சூடு அடங்கும் போது தாமும் அமுங்கி கரைந்து விடுகின்றன. தினச் செயல்பாடுகளைப் பதித்து வைப்பதற்காக எழுதினாலும், ஒரு நிரந்தரத் தன்மையை அதற்கு அளிப்பதன் மூலம் பதிவு தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் என்று நினைக்கிறேன்.
எழுத வந்த புதிதில் என்னை ஈர்த்த சில பதிவுகள் இன்னும் நெஞ்சுக்குள் ஒட்டிக் கொண்டிருப்பது, படித்தவர்களை விட, அவற்றின் கருத்து நினைவில் இருப்பது, எழுதியவருக்கு மகிழ்ச்சியைத் தரும்.
புதிதாக எழுத வந்துள்ளவர்களுக்கு என்னைக் கவர்ந்த சில அந்த நிலாக்காலப் பதிவுகளைச் சுட்டிக் காட்டுவது, இன்னும் செழுமையாக எழுத வைக்கும் என்பது தீரா நம்பிக்கை. இது முழுக்க முழுக்க என் கவனங்களுக்கு வந்தவையும், என் ரசனைக்குப் பிடித்தவையும் மட்டுமே!
சிலர் இப்போது, பதிவுலகில் முன்பிருந்த ஏக்டிவ்வில் இல்லை என்பது எனக்கு அவ்வப்போது திகிலூட்டுகின்றது. இந்த வரிசையைச் சாக்கிட்டு பழைய பதிவுகளைப் படிக்கும் இன்பம் பெற விழைகிறேன். இணையத்தின் சாஸ்வதத் தன்மையை ஷார்ட் டெர்மில் உணர முடிகின்றது.
மீனாக்ஸ்.
மீனாக்ஸ் பொறியியல் மற்றும் மேலாண்மை படித்தவர். 2007-ல் சென்னைப் பல்கலைக்கழக மண்டபத்தில் நடந்த 'The Grand Tamil Bloggers Meet'-ல் இவரைச் சந்தித்தேன். 'இப்போதெல்லாம் ஏன் எழுதுவதில்லை?' என்று கேட்டேன். 'எழுத வேண்டும்' என்று சிம்பிளாகச் சொல்லிச் சென்றார். இவர் பதிவுகளில் எனக்குப் பிடித்தன :
http://thavam.blogspot.com/2005_02_01_archive.html
http://thavam.blogspot.com/2006/08/anecdote.html
http://thavam.blogspot.com/2006/11/blog-post_21.html
உச்சமான அருமை :: வருங்கால மனைவியை சந்திக்கப் போதல் - சில குறிப்புகள்
http://thavam.blogspot.com/2006/04/blog-post_21.html
http://thavam.blogspot.com/2005_06_01_archive.html
http://thavam.blogspot.com/2006/04/cognitive-seduction.html
6 comments:
முன்பு ஏதோவொரு சந்தர்ப்பத்தில் படித்திருக்கிறேன் சில பதிவுகளை !
பகிர்தலுக்கு நன்றி!
இப்பவும் எழுத வரணும் அவங்கலெல்லாம் ! :)
//புதிதாக எழுத வந்துள்ளவர்களுக்கு என்னைக் கவர்ந்த சில அந்த நிலாக்காலப் பதிவுகளைச் சுட்டிக் காட்டுவது, இன்னும் செழுமையாக எழுத வைக்கும் என்பது தீரா நம்பிக்கை//
இப்பவும் அதே பதிவர்கள் எழுதும்போது இன்னும் கூட நிறைய விசயங்கள் அறிய முடியும் ம்ம் அவுங்களுக்கு நேரம் வாய்க்கவில்லையோ என்னவோ...! :(
மீனாக்ஸ் நாம் ரசிக்கும் பதிவர் & குழும நண்பர். இவரை போலவே நான் ரசித்த பல பதிவர்கள் இப்பொழுது எழுதுவது இல்லை (சொல்ற நான் மட்டும் என்னமோ எழுதி கிழிச்சிடுற மாதிரி)
அன்பு ஆயில்யன்...
நன்றிகள். நேரங்கள் கிடைத்து அவர்களும் வந்தால் இன்னும் நல்ல அனுபவப் பதிவுகள் நமக்குப் படிக்க கிடைக்கும். வந்தால் நல்லது தான். அவரவர்க்கு எத்தனை பணிகளோ..? எதிர்பார்ப்போம்.
***.
அன்பு ராஜா | KVR...
நன்றிகள். நிறைய பழையவர்கள் இப்போது எழுதுவதில்லை. பரவாயில்லை. தடங்கள் இருக்கின்றன அல்லவா..?
நன்றி வசந்த குமார். உங்கள் பதிவினைப் படித்த போது மீண்டும் எழுத ஊக்கம் பெற்றேன். தொடர்ந்து எழுதுவேன்.
http://meenaks.wordpress.com
Post a Comment