சென்ற பகுதியில் லிமெரிக் பற்றி எழுதும் போது, ஒன்று சொல்ல மறந்து விட்டேன். இன்று இரவு தமிழ்ப்பறவையிடம் பேசும் போது தான் நினைவுக்கு வந்தது.
மயிலை அண்ணன் எஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ அவர்களின் 'காதுல பூ' நாடகத்தில் ஒரு வசனம். மேலோகத்திற்கு சினிமாப் பாடலாசிரியரை இழுத்துச் சென்று விடுவார்கள். அங்கே அவர் எமனிடம் ஒரு பாடல் பாடுவார். பாருங்களேன்.
ரத்தத்தின் நிறமோ சிகப்பு.
பாலின் நிறமோ வெளுப்பு.
கடல் நீர் என்றும் கரிக்கும்.
சர்க்கரையோ என்றென்றும் இனிக்கும்.
இதுதான் ஆண்டவனின் படைப்பு.
கொஞ்சமாய்ச் சாயம் போன லிமெரிக் சாயல் தெரியவில்லை..?
தங்க வரி (Golden Line)
இன்று லத்தீன் இலக்கியத்தின் ஒரு வகையான 'தங்க வரி' முறையைக் காண்போம். இதற்கு அடிப்பொடிகளாக வெள்ளி வரி, வெண்கல வரி என்றெல்லாம் வைத்திருக்கிறார்கள். நாம் மாதிரிக்கு இந்த குடும்பத்தில் தங்க வரியை மட்டும் பார்த்து விட்டு ஜூட் சொல்லிடுவோம்.
ஒரு வரி. மொத்தம் ஐந்து வார்த்தைகள். 1, 2 வார்த்தைகள் பண்புகளாகவும் (adjectives), 4,5 பண்புகளுக்கு உரிய பொருட்களாகவும் (nouns), 3 வினைசொல்லாகவும் (verb) வர வேண்டும். 1வது வார்த்தைப் பண்பு 4வது பொருளுக்கு உரியதாகவும், 2வது வார்த்தைப் பண்பு 5வது பொருளுக்குரியதாகவும் வர வேண்டும். முக்கியமான கொக்கி ஒன்று இருக்கிறது. 1,3 வார்த்தைகள் ஒரு ரிதத்திலும், 2, 5 வார்த்தைகள் ஒரு ரிதத்திலும் இருக்க வேண்டுமாம்.
அவ்வளவு தான் சார்.
இந்த வரையறை 1652-ல் லத்தீன் இலக்கணத்தில் சொல்லப்பட்டுள்ளது. இது ரொம்ப பழைய ஒன்று. ஆங்கிலக் குழந்தைகள் லத்தீன் படிக்கும் போது, அவர்களுக்கு பள்ளியில் எப்படி சொல்லித் தரப்படுகிறதோ அப்படியே எழுதுகிறார்கள் என்கிறார்கள். காரணம் ஒரு தெளிவான வரையறை இல்லாமல், பண்புகள் மட்டும் அல்ல, வேறு சில இலக்கணத்தனங்களையும் உபயோகப்படுத்திச் செய்கிறார்கள்.
Lurida terribiles miscent aconita novercae. (Ovid, Metamorphoses 1.147)
Pendula flaventem pingebat bractea crinem.
இதில்,
Pendula bractea
flaventem crinem
என்று ஓர் ஒத்திசைவாய் ஒலிப்பதைக் கேளுங்கள்.
aurea purpuream subnectit fibula vestem,
இதை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்த்தால், 'golden purple bound clasp cloak' என்று வருகிறது. புரிகின்ற மொழிபெயர்ப்பு, 'a golden clasp bound her purple cloak'.
சரி, அப்படியே 1652 இத்தாலியில் இருந்து ஒரு மெகா ஜம்ப் அடித்து, 15வது நாடாளுமன்றத் தேர்தல் நடக்கின்ற நாட்டிற்குள் குதிப்போம்.
இந்த வரையறையை வைத்துக் கொண்டு தமிழில் முயற்சித்தால்...?
சிக்கல் என்ன?
நம் வாக்கிய அமைப்பில் பெரும்பாலும் வினைச்சொல் வாக்கியத்தின் நடுவில் வராது. ஆனால் நாம் அட்ஜஸ்ட் செய்து கொள்வோம். புதுக்கவிதைகள் மாதிரி.
ஓர் உதாரணம் பார்ப்போம்.
ஏழுநிறங்களின் நீலநிறத்தில் விழுந்தன வானவில்லின் துளிகள்!
இதற்குத் தலைப்பு என்ன வைக்கலாம்..? வேறு என்ன..? கவிஞர்களின் நிரந்தர இரண்டாம் காதலியான மழை தான். (முதல் நிலா!)
ஏழுநிறங்களின் வானவில்லின் - முடிவில் ஒத்திசைவு
நீலநிறத்தில் துளிகள் - முடிவில் ஒத்திசைவு
நமக்கு தான் எதுகை மோனை என்றெல்லாம் வசதிகள் இருக்கின்றனவே! அவற்றையும் உபயோகப்படுத்தி ரிதமிக்கை இன்னும் எளிமையாக அழகாக கொண்டு வர முடியும் என்று படுகின்றது. தமிழுக்கு ஏற்றவாறு கொண்டு வரும் போது கொஞ்சம் வேட்டியை லூஸ் செய்து கொள்வதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்.
மற்றொன்று,
பழுப்பான கசப்பாக ஊற்றினேன் மதுபானத்தின் ரசம்.
பழுப்பான மதுபான - முடிவில் ஒத்திசைவு
கசப்பாக ரசம் - எதுகை
இன்னும் கொஞ்சம் யோசித்து எழுதினால் ஏறக்குறைய குறள் வெண்பாவுக்கு பக்கத்தில் கொண்டு போய் விடலாம்.
நீங்களும் முயற்சி செய்யுங்களேன்.
நன்றி :
http://en.wikipedia.org/wiki/Golden_line
***
இத்தாலி என்றதும் காலத்தால் கரையாத ஒரு படத்தின் நினைவு வந்தது. அதன் தீம் இசை.
6 comments:
கவிதைல எத்தனை வகைதாங்க இருக்கு? ரொம்ப நல்ல பதிவு. இன்டெரெஸ்டிங்காவும் இருக்கு. :)
வாங்க ஐயா....
//1,3 வார்த்தைகள் ஒரு ரிதத்திலும்//
1,4 வார்த்தைகள் என்றிருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
//
பழுப்பான கசப்பாக ஊற்றினேன் மதுபானத்தின் ரசம்//
பழுப்பான கசப்பாக ஊற்றினேன் மதுபான ரசம் என்பது இன்னும் சரியாக அமையும் என்பது அடியேன் எண்ணம்.
இதென்னமோ தமிழுக்குச் சரிப்பட்டுவராது என எண்ணுகிறேன்..
வேஸ்டியைக் கொஞ்சம் லூஸ் பண்ணிக்கலாம்... ஆனா முழுநீளத்துக்கு சிப் வச்ச மாதிரி நல்லாவே இல்லை...
அன்பு கார்த்திக்...
இன்னும் நிறைய இருக்கு. பார்ப்போம்.
...
அன்பு தமிழ்ப்பறவை...
நான் இன்னும் ஒரு கட்டுப்பாடு சேர்த்துக் கொண்டேன். 1,3,2,4,5. இந்த வரிசையில் படித்தால் தமிழின் வாக்கியம் வர வேண்டும் என்று. அப்படிப் பார்த்தால் மதுபானத்தின் தான் சரி.
கவலைப்படாதீர்கள். வேட்டியும் ஒரு நாள் ஜிப் கொள்ளும். :)
!!!????... ஒன்னும் புரியலைங்க ... வந்தாச்சு, ஒரு comment போடுவமே..
INSERT
Post a Comment