Sunday, June 14, 2009
புதிய எழுத்தாளர்களுக்கு 11 யோசனைகள்.
1. தப்பான பத்திரிக்கைக்கு அனுப்பாதீர்கள். 'துருவனும் குகனும்' என்று ஞான பூமிக்கு அனுப்ப வேண்டியதை, 'போலீஸ் செய்தி'க்கு அனுப்பாதீர்கள்.
2. தெரியாத இடம், தெரியாத பொருளைப் பற்றி எழுதாதீர்கள். 'பம்பாய் ரங்காச்சாரி வீதி, இரவு ஏழு மணி இருள்' என்றால், பம்பாயில் ரங்காச்சாரி வீதி கிடையாது, இரவு ஏழு மணிக்கு இருட்டாது என்று ஒரு கோஷ்டி ஆசிரியருக்குக் கடிதம் எழுதக் காத்திருக்கும்.
3. அந்தரத்தில் எழுதாதீர்கள். அதாவது, உங்கள் கதை கருந்தட்டான்குடியிலோ, மதராஸ் 78லோ எங்காவது ஓர் இடத்தில் நிகழட்டும். அதற்குக் கால்கள் வேண்டும். ஜியாக்ரபி வேண்டும். மிகச் சுலபம் உங்கள் சொந்த ஊர், சொந்த வீதி...
4. சொந்தக் கதையை எழுதாதீர்கள். மற்றவர் கதையை எழுத முயற்சி செய்யுங்கள். இரண்டு மூன்று பேர் சொன்ன கதைகளையும் சம்பவங்களையும் இணைத்து எழுதிப் பாருங்கள். கேஸ் போட்டால் தப்பிக்கலாம்.
5. பெரிய பெரிய வாக்கியங்கள், வார்த்தைகள் வேண்டாம். 'உமிழ் நீரைத் தொண்டைக் குழியிலிருந்து உருட்டித் திரட்டி உதடுகளின் அருகே கொணர்ந்து நாக்கின் முன் பகுதியால் வெளியேற்றினான்.' என்று சொல்வதை விட 'துப்பினான்' என்பது மேல்.
6. ஒரு வார்த்தையை ஒரு கதையில் ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தாதீர்கள். அவன், இவன், கை, கால் போன்ற அன்றாட வார்த்தைகள் தவிர; உதாரணமாக, பரிணாமம். 'அவன் மனத்தின் எண்ணங்கள் பரிணாமம் பெற்று அந்த பரிணமிப்பில்... இத்தியாத்திக்குப் பதிலாக, 'அவன் மனத்தில் எண்ணங்கள் மாறுதலடைந்து அந்தப் பரிணமிப்பில் பெட்டர். அதைவிட பரிணாமம் போன்ற வார்த்தைகளைத் தவிர்ப்பது மேல்.
7. தெரிந்தவர்களின், உறவுக்காரர்களின் பெயர்களைக் கதைமாந்தர்களுக்குச் சூட்டாதீர்கள். டெலிபோன் டைரக்டரியையோ செய்தித்தாளையோ திறந்தால் எத்தனையோ பெயர்கள். என் நண்பர் ஓர் எழுத்தாளர்; கும்பகோணத்தில் ஒரு வக்கீல் பெண்ணைப் பெயர், அட்ரஸ் சகிதம் கதையில் உண்மையாகக் குறிப்பிட்டு, அந்தப் பெண்ணின் அப்பா பத்திரிக்கை மேல் கேஸ் போட்டு விட்டார். ரியலிஸம் என்பது பேர் வைப்பது அல்ல.
8. நிறைய எழுதாதீர்கள். முதல் ட்ராப்ட்டைப் பாதியாகக் குறைத்து, அதே கதையைச் சொல்ல முடியுமா பாருங்கள். அவன் அங்கே போனான் என்பதைவிட 'போனான்' என்பதில் அவனும் அங்கேயும் இருக்கின்றது. அதற்காக 'னான்' என்று அற்பமாகச் சுருக்க வேண்டாம். அதெல்லாம் என் போன்ற கோணங்கி எழுத்தாளர்களுக்கு.
9. இரண்டு பக்கமும் நெருக்கமாக எழுதாதீர்கள். நிறைய இடம் விட்டுப் பளிச்சென்று நல்ல பேப்பரில் எழுதுங்கள். முதல் பக்கத்தை மட்டும் மூன்று நான்கு பிரதிகள் வைத்துக் கொள்ளுங்கள். திரும்பி வந்தால் உடனே மற்றப் பத்திரிக்கைக்கு அனுப்ப செளகரியம்.
10. பத்திரிக்கை ஆபீசுக்கு நேராகப் போய்க் கதை கொடுக்காதீர்கள். அங்கே கிடக்கும் கதைக் குப்பைகளைப் பார்த்தால் ரொம்பச் சோர்வாக இருக்கும்.
11. கடைசியாக, எழுதுவதை நிறுத்தாதீர்கள். சளைக்காதீர்கள். என்றாவது. எல்லாரிடமும்- ஆம், எல்லாரிடமும் ஒரு கதை- நல்ல கதை இருக்கிறது. தமிழ் சினிமா வெற்றிப்பட டைரக்டர்கள் போல இரண்டாவது கதையில்தான் பெரும்பாலும் மாட்டிக் கொள்வீர்கள். அதற்கு முதல் தேவை நிறையப் பார்க்க வேண்டும், நிறையப் படிக்க வேண்டும். குட்லக்.
***
பக்கங்கள் 118 - 119. தோரணத்து மாவிலைகள். சுஜாதா. விசா பப்ளிகேஷன்ஸ், தி.நகர். 044 - 24342899, 24327696.
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
எழுத்தாளர்கள் என்று பொதுவா சொல்லு தலைவா,,,,,
பழைய எழுத்தாளர்களும் நிறைய புரிந்து கொள்ள வேண்டி இருக்கு ( ஒரு சிலர், நான் உட்பட)
நன்றிங்கோ
நான்காவது ஐடியா தான் கொஞ்சம் விளங்கவில்லை எனக்கு?
நன்றி பாஸ் :)
பெரிய பசங்க மேட்டர். சூப்பர்ப்!! :)
சூப்பருங்க... பகிர்ந்ததுக்கு மிக்க நன்றி...
//'உமிழ் நீரைத் தொண்டைக் குழியிலிருந்து உருட்டித் திரட்டி உதடுகளின் அருகே கொணர்ந்து நாக்கின் முன் பகுதியால் வெளியேற்றினான்.' என்று சொல்வதை விட 'துப்பினான்' என்பது மேல்.
//
:-)))
சுஜாதாவின் எழுத்துக்கள் தான் பலருக்கும் ரோல் மாடல்.
ஒரு பெரிய லிஸ்ட் போட்டு வைத்திருக்கிறேன். சுஜாதாவின் புத்தகங்கள் பட்டியல். அவற்றுள் பல இன்னும் படிக்க இயலவில்லை.
http://tamilpadhivu.blogspot.com/2009/03/2.html
அவருடைய பல புத்தகங்கள் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும்.
எழுதுவதைப் பற்றிய இந்த யோசனைகளைப் பகிர்ந்ததற்கு நன்றி.
அன்பு மயாதி...
நன்றிகள். 'நமது கதை என்றால் நாம் சம்பந்தப்பட்ட சம்பவம் என்று கொள்ளலாம். அப்போது கண்டிப்பாக நமது நண்பர்களும், நமது உறவினர்களும் அச்சம்பவத்தில் வந்து விடுவார்கள். அவற்றை அப்படியே எழுதுவது நமக்கும் அவர்களுக்கும் இடையேயான உறவை பாதிக்கலாம் அல்லவா..? அதற்காகத் தான் சொந்தக் கதையை எழுத வேண்டாம் என்று சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன். மற்றபடி நாம் கலந்து கொள்ளாத, நாம் பார்த்த சம்பவத்தைக் கொண்டு எழுதலாம். அது நம் சொந்தக் கதை ஆகாது என்று வாத்தியார் சொல்ல வருகிறார் என்று தோன்றுகின்றது'
***
அன்பு வெட்டிஜி...
நன்றிகள். நன்றிகள். முதல் நன்றிகள் வாத்தியாருக்கு. இரண்டாவது வெட்டிஜிக்கு..!
***
அன்பு கார்த்திக்...
Tnx. Waiting for ur story. :)
***
அன்பு சரவணகுமரன்...
நன்றிகள்.
***
அன்பு மெனக்கெட்டு...
நன்றிகள். உங்க லிஸ்டைப் பார்த்தால், தலை சுற்றுகிறது. சார் இத்தனை எழுதியிருக்கார். இதுல ஒரு 10% கூட இன்னும் படிக்கலை. இத தவிர இன்னும் சிறுகதைகள் லிஸ்ட் இருக்கு. Oops...!! எப்ப படிக்கப் போறோமோ...?
யோசனையெல்லாம் நல்லாத்தான் இருக்கு.. எழுத மேட்டருதான் கிடைக்க மாட்டேங்குது! :-)))
//Tnx. Waiting for ur story. :)
thanks.
let me see. seems i will finish at the last min. just like my assignments. :)
படிக்கும் போது நல்லா இருக்கு.
எழுதும் போது தான் !!!!!!!!!!
//படிக்கும் போது நல்லா இருக்கு.
எழுதும் போது தான் !!!!!!!!!!//
வார்த்தை வார்த்தைதான் முட்டுது...
Good work dude.. :-)
சுஜாதா சுஜாதா தான் :)
நல்ல பதிவைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!
-ப்ரியமுடன்
சேரல்
Dear Veera...
Matters are all around us. We have to look. thats all.
:)
***
Dear Karthik...
Your story is nice.
***
அன்பு பாஸ்கர்...
எழுதும் போது என்ன..? பெர்பெக்ஷன் படுத்த வேண்டியது தான். யாருடையதும் முழுமையானது அல்ல.
***
அன்பு தமிழ்ப்பறவை...
முட்டினால், திருப்பி முட்டுங்கள். உங்கள் கதை நல்லா இருந்தது.
***
Dear Tweety...
Thanks.
***
அன்பு சேரல்...
நன்றிகள்.
Post a Comment