Monday, July 27, 2009
எழுவிழுதல்.
நீலப்
பனித்துகள்கள்
காலத்தின் போக்கில்
உறைந்து
சிவக்கின்றன
ரத்தமாய்.
சுழன்றுச் சுழன்று
கழன்று
விழுந்த
புரவியின் வால்
கரைந்த இடத்தில்
முளைக்கின்றது
ஒரு
மரங்கொத்தி.
தீயைப் புகட்டி
வாயில்
அடக்கிக் கொண்ட
அசுரன் முகம்
பூப்பூவாய்
வெடிக்கும்
போது
ஈரமாய் வானம்
மலர்கின்றது.
சிம்னியிலிருந்து
கசியும் புகை,
மஸ்லின்
மாராப்பை
நழுவ விடும்
நாட்டியக்காரி
மார்புகளைப் போல்
பொய்யாய்க்
கரைந்து
காணாமல் போகிறது.
வெண்குழல் திரவம்
ராட்சஸ வேகத்தில்
நகர்ந்து
உள்ளிழுக்கும்
வெட்டவெளியில்
துளித்துளியாய்ச்
சேகரமாகிறது.
புதிய நிழலைத்
திணிக்கும்
ஒரு ரகஸ்ய
வெய்யில்,
மந்தாரமாய்ப்
பெருகுகையில்,
இலைகளில் தேங்கும்
இரவின் இளமைத்துளி
பஸ்பமாகிறது.
அனலாய்
அடித்துக் கொள்ளும்
வண்டின் சிறகுகள்
கூசும் வகையில்
தொடையில்
துளைத்து
தலைநுழைக்கும் போது,
விழிப்பிலிருந்து
எழுந்து
கனவுக்குள்
விழுந்தேன்.
***
படம் நன்றி :: http://th06.deviantart.com/fs9/300W/i/2006/149/0/b/Fizzy_Water_by_shadow_kat_ana.jpg
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
சிம்னியிலிருந்து
கசியும் புகை,
மஸ்லின்
மாராப்பை
நழுவ விடும்
நாட்டியக்காரி
மார்புகளைப் போல்
பொய்யாய்க்
கரைந்து
காணாமல் போகிறது.]]
என்னே வர்ணனை ... :)
புரியவில்லை என்றாலும் படிக்க பிடித்திருக்கிறது. :-)
அன்பு நட்புடன் ஜமால்...
நன்றிகள். படித்தவுடன் கற்பனை செய்து பார்த்திருப்பீர்களே..!!! :)
***
அன்பு கார்த்திக்...
நன்றிகள். தனி மின்னஞ்சல் அனுப்புகிறேன். :)
Post a Comment