Monday, March 01, 2010

Erotic ஆசிரியப்பாக்கள்.



மென்மையும் பெண்மையும் மிளிரும் தமிழ் வரிகளில் எழுதிச் செல்லும் ஆசிரியப்பாக்களில் இளமை பறக்கின்றது. வெண்பாத் தளத்தில் எழுதிய சில ::

ரோமாபேர். பதின்வயது. செவ்விளமை. கிடார்மேனி.
ரோமம் பஞ்சு.
ஆமாமாம் எனதுபதில் அழகியாவள்? எனக்கேட்டால்.
அணைத்துப் பார்க்கத்
தாம்மாவென் றாற்றளிர்ப்பூ வுடைநீக்கிப் பஞ்சணையில்
தள்ளிச் சாய்த்துத்
தேமாயென் பதாய்முடிக்கச் சொன்னாளோர் முத்தம்பின்
தேனாய் "மாமா".

மற்றோர் இலக்கணத்தின் படி ::

பார்த்துத் தடவு; பளிங்கு மேனிப்
பாவை நெருப்புக்கள்;
சேர்த்துக் கொல்; செதில் உரித்த
செம்மீன் நிலத்தில்காண்;
வேர்த்த கைகள் சொட்டும் விரலால்
வெயிலைக் குளிராக்கு;
போர்த்தும் போர்வை நழுவ வெட்கப்
பொழிலில் திளைத்துப்பார்.

கூந்தல் கலைத்துக் கண்கள் நோக்கு;
குத்தும் மார்நுனிகள்;
காந்தள் பூவை வண்டாய்க் கவ்வு;
கருமைப் புருவமிடைச்
சாந்துப் பொட்டைக் கவர்ந்துக் கம்பிச்
சன்னல் மேலொட்டி,
ஏந்தும் தளிரில் ஏஞ்சல் மலர்மேல்
எங்கும் முத்தம்தா!

இறுக்கம் தளர்த்து; இடையில் கைவை;
இதழ்மேல் வரிகளைக்கல்;
நெருக்கம் வளர்த்து ஈர முதுகில்
நகக்கோ டிழைத்துக்கொள்;
சுருக்கம் மலர்த்து; சூடாய்க் குளித்துச்
சுழலில் இறங்கிப்பெய்;
தருக்கம் தவிர்த்துக் கிறுக்காய் நடந்து
தவறைச் சரியாய்ச்செய்;

மற்றும் வேறு வகை ::

இருள்பொறிந்த தனியறைக்குள் இமைகரைத்தப் பொழுதொன்றில்
இயங்கா நின்றுள்
திருநிறைந்த வானவில்லைத் திசைகாட்டும் முள்ளொன்றின்
திணையில் பாடல்
பொருள்வயிந்த வார்த்தைகளுள் புலப்படாத மர்மத்துப்
பொருண்மை ரூபம்
உருவமைந்து வந்தாற்போல் உள்முகிழ்த்து எழுதாநின்
றுரைத்த திப்பா.

பொடக்காலி மூலயில செவப்புநிறத் தூணிருக்கு.
பாட்டி போயி
மடக்கிவெச்ச நாக்காலில மம்முதரு கணக்கா
மரிச்ச தாத்தா
கடன்வாங்கப் போனவரு காத்தாயி வர்றாருனு
கத்திச் செத்தா.
கெடந்துகனா நெனப்புலயும் நெழல்போலத் தளும்புதுசெங்
கெளவித் தூண்.

8 comments:

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

சூப்பர் ,பட்டையைக் கிளப்புறீங்க.

thamizhparavai said...
This comment has been removed by the author.
Jawahar said...

ரொம்ப நல்லா இருக்கு. ஆபாசம் எங்கேயுமே தலை தூக்கல்லை. குறுந்தொகையை விட சுவாரஸ்யமா இருக்கு.

http://kgjawarlal.wordpress.com

மெனக்கெட்டு said...

ஆசிரியப்பாவின் அடிகள் நான்கு சீர்களைக் கொண்ட அளவடியாகவோ, மூன்று சீர்கள் கொண்ட சிந்தடியாகவோ, இரண்டு சீர்களைக் கொண்ட குறளடியாகவோ அமையலாம். ஐந்து சீர்களைக் கொண்ட அடிகளும் இடம்பெறலாம்.

எனினும் முதல் அடியும் இறுதி அடியும் அளவடிகளாக இருத்தல் வேண்டும். என்று எங்கோ படித்த ஞாபகம்.


அடிமேல் அடி வெச்சு கலக்கியிருக்கீங்க. உங்களை அடிச்சுக்க முடியாதுங்க!

தலை(ளை) சூப்பருங்க!

இரா. வசந்த குமார். said...

அன்பு ஸ்ரீ...

நன்றிகள். தமிழ்ப் பேராசிரியரிடம் இருந்து வாழ்த்து பெறுவது மகிழ்ச்சி தருகின்றது.

***

அன்பு ஜவஹர்...

நன்றிகள். ஆனாலும் குறுந்தொகை அளவுக்குக் கொண்டு போய் வைத்தது, உங்களுக்கே ஓவராகத் தெரியவில்லையா..!!:)

***

அன்பு மெனக்கெட்டு...

நன்றிகள். கீழ்க்கணும் கண்ணியைக் க்ளிக்கினால் தங்கள் ஐயங்களுக்கு விளக்கம் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம் - 4

Jawahar said...

நிச்சயமாக இல்லை, காமத்தைக் கவிதையாகச் சொல்வதுதான் இலக்கியம். அதை நீங்கள் சிறப்பாகச் செய்திருக்கிறீர்கள். காமம் நவ ரசங்களில் ஒன்று. அதை முகம் சுளிக்காமல் கேட்க வைப்பது திறமை. அதில் உங்களுக்கு வெற்றி.

http://kgjawarlal.wordpress.com

வால்பையன் said...

கடைசி பேரா மட்டும் தான் புரியுது!
மற்றவை நல்ல வாசிப்பனுவத்தை கொடுத்தது, ஆனா சொல்லத்தெரியல!

இரா. வசந்த குமார். said...

அன்பு ஜவஹர்...

அப்ப கண்டின்யூ பண்ணலாம்னு சொல்றீங்க..! அப்பிடியே செஞ்சிடுவோம்..!! இந்த ஏரியால எழுதறதுக்கு எல்லாரும் ஏன் வெட்கப்படறாங்கன்னு தெரியல..! ஸோ, நாமளே குதிச்சாச்சு..! ;)

***

அன்பு வால்ஜி...

நித்யாஜியைக் கேட்டா புரியாததை பிட்டுப் பிட்டு வைப்பார்னு நினைக்கிறேன்..!:)