Tuesday, December 07, 2010
மணற்கேணி - 2010 - அழைப்பு.
தமிழ் வலைப்பதிவுகளில் பலதரப்பான தளங்களில் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றைப் பற்றியும் அவற்றின் மேலான தங்கள் எண்ணங்களையும் அப்பதிவுகளைப் பார்வையிடுவோர் தங்கள் பின்னூட்டங்களில் பதிலிடுகின்றனர். எளிதாகக் கண்ணுக்குப் படும்வகையில் அமைவன திரைப்படம், திரை நிகழ்வுகள் மற்றும் அவற்றை ஒட்டி வாழும் துணை உறுப்புக்களான விமர்சனங்கள், ஒப்புமை கண்டறிதல்கள் போன்றன. அவற்றைத் தவிர்த்துப் பார்க்கையில் அரிதாகவே வேறு பல துறைகளைப் பேசும் பதிவுகள் கிடைக்கின்றன.
அச்சிறுபான்மைப் பதிவுகளை இன்னும் கொஞ்சம் வலுப்பெறச் செய்ய எடுக்கப்படுகின்ற ஒரு முயற்சி 'மணற்கேணி'.
சிங்கப்பூர் வாழ்த் தமிழ்ப்பதிவர்கள் தமக்குள் அமைத்துள்ள ஒரு குழுமம், இத்தலைப்பில் நம்மைச் சிந்தையால் துழாவச் செய்யும் சில கருதுகோள்களைக் கொடுத்துக் கட்டுரைகளைக் கேட்கின்றது. எளிதில்லாத ஒரு பணி என்பதால் இவ்வாண்டு இறுதிநாள் வரை நேரம் கொடுத்துக் காத்திருக்கிறார்கள்.
நடுவர்களைக் கொண்டு தேர்வு செய்யப்படும் கட்டுரையின் ஆசிரியர்களை சிங்கைக்கே அழைத்து ஒரு வாரம் முழுதும் உபசரித்துப் பற்பல நிகழ்வுகளில் பங்கேற்கச் செய்து, அவர்கள் தம் வாழ்நாளில் மறந்திட இயலாவண்ணம் அன்பால் தழுவி அனுப்பி வைக்கிறார்கள்.
மேலதிக விவரங்களுக்கு ::
மணற்கேணி- 2010
சென்ற ஆண்டில் கலந்து கொண்டு எழுதிய அறிவியல் கட்டுரை : ஒலிதச் சமிக்ஞைப் பகுப்பாய்தல்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment