Friday, January 18, 2008

மெளனமே பதில்.



ரீசார்ஜபிள் பேட்டரி எப்படி சார்ஜ் ஆகின்றது தெரியுமா..?

ப்ளக்கில் கனெக்ஷன் கொடுத்தவுடன் மெயின் கரண்ட் பாய்ந்து பாட்டரியச் சார்ஜ் செய்கின்றது என்று தான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். பிற்கு யாஹூவைக் கேட்டதில் யாஹூவார் இப்படி பதில் கூறினார்.

http://ask.yahoo.com/20031030.html

அதாவது நெகட்டிவ் முனையில் இருந்து பாஸிட்டிவ் முனைக்கு சர்க்க்யூட் வழியாகச் சென்ற எலெக்ட்ரான்களை மீண்டும் எதிர் முனைக்குக் கூட்டி வருவதைத் தான் சார்ஜ் செய்வது என்கிறோம். (இதெல்லாம் கல்லூரியிலேயே படித்தது தான். என்ன செய்வது? பிடுங்கும் ஆணிக்கும் படித்த பிரியாணிக்கும் ஸ்நானப்ராப்தி (அப்படின்னா என்னாங்கோ?) கூட இல்லை.)

இக்கதை எதற்கு இப்போது?

நமது உடலிலும் ஆற்றல் உள்ளது. அதனை எழுப்பி, அவ்வப்போது தலையில் ஏற்றி விட்டால் தான் அடுத்த நாள் நம்மால் வேலை செய்ய முடியும். இல்லாவிடில் கொஞ்ச கொஞ்சமாக ஆற்றல் தீர்ந்து போய், பேட்டரி Died .

எங்கு வேண்டுமானாலும் எலெக்ட்ரான்களை எதிர்முனைக்கு கொண்டு வர முடியுமா? அதுதான் எலெக்ட்ரான்கள் மற்றும் அதனை ஏற்ற வேண்டிய எதிர்முனை இரண்டும் பேட்டரியிலேயே உள்ளன. பின் ஏன் மெய்ன் ப்ளக் தேவைப்படுகின்றது?

அது போல் தான் உடலின் கீழ் இருக்கும் ஆற்றலை மீண்டும் தலைக்கு ஏற்ற உதவும் மெய்ன் ப்ளக்குகளாக கோயில்கள் உள்ளன. (இங்கு கோயில்கள் என்பன வழிபாட்டு இடங்கள்.)

நமது ஆற்றல், மற்றும் ஏற்ற வேண்டிய நமது தலை இரண்டும் நம்மிடமே இருப்பினும், கோயில்கள் அதைத் தூண்டும் வேலை செய்ய தேவைப்படுகின்றன.

அந்த ஆற்றல் எனும் இறைநிலை நமக்குள்ளேயே இருக்கின்றது.

கவுண்டரின் காமெடி நிகழ்ச்சியைப் பார்ர்கின்றோம். வாய் விட்டு சிரிக்கின்றோம். அவர் வந்து நம்மை சிரி என்றாரா? இல்லை ஏதேனும் தொடு முறையில் சிரிக்கச் சொன்னாரா?
இல்லை இந்தச் சிரிப்பு நம்முடன் தான் இருந்தது. அதனை மூடியிருந்த திரையைத் திறக்கும் வேலையைத் தான் அவர் செய்தார்.

அது போல் தான் துக்கமும், கோபமும், இன்ன பிற உணர்ச்சிகளும், உணர்வுகளும் நம்முடன் தான் இருக்கின்றன. சுற்றி நிகழும் நிகழ்வுகளும், நாம் காணும் காட்சிகளும் தான் ஒவ்வொரு உணர்வை நம்க்குள் இருந்து வெளிக் கொணர்கின்றன.

அது போல் இறைநிலையும், இறைவனும் நமக்குள்ளேயே தான் இருக்கிறார்கள். நாம் காணும் காட்சிகள் அந்த இறைநிலையை வெளிக் கொணரும் வகையில் , காட்சிகளை நாம் காண வேண்டும்.

கண்களைத் திறந்து காணும் வெளிக் காட்சிகளால் பல உணர்வுகள் தூண்டப்பட்டாலும், இறைநிலை அதனால் மிகக் குறைந்த அளவே தூண்டப்பட வாய்ப்புகள் இருக்கின்றன.

கண்களை மூடி உள்ளே பார்ப்போம். நாம் கண்களை இமைகளால் மூடியபின் நம் கண் பார்வை இன்றி போய் விடுகின்றதா என்ன? இல்லை. வெளி உலகத்திற்கும், நம் கண்களுக்கும் இடையில் திரை விழுகின்றது. அவ்வளவு தான். மற்றுமொரு உலகம் நமக்குள் இருக்கின்றது.

ஆன்மீக நிலை பற்றி வெளியே சொல்லக் கூடாது என்பார்கள்.

ஒரே ஒரு சிந்தனையை மட்டும் கூறிக் கொண்டு இப்பதிவை முடித்து விடுகிறேன்.

நமது வாழ்வின் பொருள் என்ன? எதற்கு இங்கு வந்திருக்கிறோம்? என்பதெல்லாம் கல்பகாலமாக கேட்கப்பட்டு வந்திருக்கும் கேள்விகள்.

தற்காலத்துக்கு, பொட்டி தட்டுவது தான் என் வேலையா? இதற்கு தான் நான் பிறவி எடுத்திருக்கிறேனா? இந்த Project -ஐ வெற்றிகரமாகச் செய்து முடிப்பது தான் என் பிறவியின் நோக்கமா? எதற்கு இந்த வேலை? என் நாள் பொழுதுகள் எல்லாம் 4 போல் மடிந்து உட்கார்ந்து போக வேண்டுமா?

.. இன்னும் பல கேள்விகள் நாக்கின் நுனியில் அமர்ந்திருக்கின்றன.

2 comments:

Anonymous said...

உடலின் கீழ் உள்ள சக்தியை மேலே கொண்டு வருவதற்கு கோவிலுக்கு செல்ல வேண்டியதில்லை. அதற்குத்தான் நம் உடம்பிற்கு இயற்கை ஒன்பது மையங்களை கொடுத்துள்ளது .தவம் அல்லது தியானம் எனப்படும் அறிய சக்தியின் மூலம் தலையின் மேல் பகுதிக்கு கொண்டு செல்லலாம்

ஹரி ஓம் said...

ரமணரின் நான்யார் புத்தகம் கிடைத்தால் படித்துப் பாருங்கள்.