Monday, July 30, 2007
அட்மிஷன்.
அன்று தான் நடராஜன் முதன்முதலாக கல்லூரியில் அட்மிஷனுக்கு வந்திருந்தான். அவனுக்குப் பெற்றோர் இப்போது இல்லாததால் அங்கே வேலை பார்க்கும் பொன்னையன் பேராசிரியர் தான் அவனை அங்கே சேர்ப்பிக்கக் கூட்டி வந்துள்ளார்.
"கொஞ்ச நேரம் இங்கேயே இரு! நான் வந்து விடுகிறேன். யூனிபார்ம் கொண்டு வந்து விட்டாயா?" என்று கேட்டு விட்டு, அவனை கரஸ்பாண்டெண்ட் அறை வாசலில் அமர்த்தி விட்டுச் சென்றார்.
ஸ்கூலில் தான் யூனிபார்ம் என்றால், இங்கேயுமா? கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் தான் போல் என்று எண்ணியவாறு நின்றான்.
வருவதும், போவதுமாய் இருந்த சீனியர் மாண்வர்களைப் பார்த்ததும் இவன் எழுந்து நின்று வணக்கம் சொன்னான். அவர்கள் இவனை சற்றும் மதிக்காமல் சென்று கொண்டே இருந்தனர். 'இருக்கட்டும்! நானும் இங்கே சேர்ந்து ஒரு வருடம் ஆகி விட்டால், நானும் சீனியர் தான்!' என்று எண்ணினான்.
சிறிது நேரத்தில் பொன்னையன் வந்தார்.
"நான் கரஸ்பாண்டெண்டிடம் பேசி விட்டேன்! அவர் இன்று முதலே உன்னைச் சேர்த்துக் கொள்ளச் சொல்லி விட்டார்! யூனிபார்மை அணிந்து கொள் !" என்றார்.
ஹூம்! பள்ளியில் இருக்கும் போது தான் யூனிபார்ம் என்று கடுப்படித்தார்கள்! கல்லூரியிலுமா? வெறுப்புடனே அவன் கொண்டு வந்திருந்த காக்கி உடுப்புகளை எடுத்துக் கொண்டான், பியூனாகச் சேர்ந்துள்ள நடராஜன்!
2003-ம் ஆண்டின் ஏதோ ஒரு நாளில் எழுதிய சிறுகதை இது! அதுவரை கவிதைகளில் மட்டுமே கால் பதித்திருந்தவன், கதைகள் பக்கமும் திரும்புவதற்கு ஆரம்பமான கதை இது..!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment