Wednesday, August 15, 2007

பொங்கி வரும் காவேரி.

சென்ற வார இறுதியில் ஊருக்குச் சென்றிருந்தேன். ஆடி அமாவசையை முன்னிட்டு,கூடுதுறை கோயிலில் அதிகக் கூட்டம். 'மக்கள் கூட்டத்திற்கு நானும் இளைத்தவள் இல்லை' என்ற பெருமிதத்தோடு, காவேரி அன்னை பொங்கி வந்தாள்.

அங்கு எடுத்த காவேரிப் படங்கள் மற்றும் கூடுதுறைக் கோயிலின் சில படங்கள், இனி :

காயத்ரி லிங்கேஸ்வரர் கோயிலின் பிரகாரத்தையும், படிக்கட்டுகளையும் மூழ்கடித்து விட்டு பாய்கிறாள் காவேரி :


கோவை - சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் காவேரிப் பாலத்தின் கணுத்தூண்கள் வரை மட்டம் உயர்ந்தது, நீர் அளவு :


நுரையாடி வரும் காவேரியன்னை :






















சங்கமேஸ்வரர் கோயிலின் ஒரு தூண் :


முதன்மைப் பிரகாரத்தைச் சுற்றி வலம் வருதல் :


துர்க்கை அம்மனின் திருப் பாதங்கள் அன்பர்களின் அன்பெனும் எண்ணெயில் முழுக்காட்டிய பீடம் :


திருக்கோயிலின் பிரகாரத்தில் செழித்திருக்கும் பூங்காவனம் :


வேதநாயகி அம்மனின் திருக்கோயில் பிரகாரம் :




அற்புதக் கலை வேலைப்பாடு நிறைந்த தூண் :


வேத முனி :


வெற்றி முகம் காட்டும் வீரன் :


முன்மண்டபம் :


கஜேந்திரனைக் காக்கும் ஆதிமூலம் :


கற்பகத் தருவை அன்பால் நனைத்து மகிழ்கின்ற காமதேனு :


திருக்கோயிலின் வடக்கு கோபுரத்தின் நுழைவாயில் :




படங்கள் எடுத்து உதவிய நண்பர் திரு. பாலாஜிக்கும், நோக்கியா 3230க்கும் நன்றிகள்.

5 comments:

Anonymous said...

உங்க நோக்கிய 3230 நல்லா வேலை செய்திர்ருக்கு வசந்த்...:)

பவானிகிட்ட இருக்கும் முக்கூடல்-னு சொல்லுவாங்களே...அந்த இடமா இது??..நான் முக்கூடல் போயிருக்கேன்..ஆனா கோயில் எல்லாம் நினைவுக்கு வரமாட்டேங்குது...:)

இரா. வசந்த குமார். said...

/*
உங்க நோக்கிய 3230 நல்லா வேலை செய்திர்ருக்கு வசந்த்...:)
*/

அன்பு மல்லிகை... மிக்க நன்றிகள்... நோக்கியா வழி நான் நோக்கிய படங்களை அவ்வபோது இனிமேல் இங்குப் பதிவிடுகிறேன்...

/*
பவானிகிட்ட இருக்கும் முக்கூடல்-னு சொல்லுவாங்களே...அந்த இடமா இது??..நான் முக்கூடல் போயிருக்கேன்..ஆனா கோயில் எல்லாம் நினைவுக்கு வரமாட்டேங்குது...:)
*/

பவானி நகரே இக் கோயிலில் இருந்துதான் தொடங்குகின்றது. ஆனல், நெல்லையின் அருகில் ஒரு முக்கூடல் உள்ளது என்பார்கள். நான் அங்கு போனதில்லை. இந்தப் படங்களில் இருக்கும் முக்கூடல், எங்கள் ஊர் பவானியின் முக்கூடல் (காவிரி, பவானி, அமுத நதி(மறைந்திருந்து கலப்பதாக ஐதீகம்)) கோயில் .

Anonymous said...

நான் நெல்லைப் பக்கம் எல்லாம் போனது இல்லை..நான் போனது இதே முக்கூடல்தான்...ஆனா ரொம்ப வருஷம் ஆனதால் மறந்திருச்சு...:)

இரா. வசந்த குமார். said...

அன்பு மல்லிகை... உங்களை மறுபடி எங்க கோயிலுக்கு வரவேற்கிறேன்...

Anonymous said...

Miga arumaiyana padangal, athudan arumaiyana thamizhum kooda.

I don't have the tamil fonts,hence writing in english,it was so nice to read your comments !!

A fellow bhavani-ite , if you call it that way!!!