Tuesday, January 22, 2008

இது ஒரு காதல் கதை...? - 2

"ந்தியா.. இருந்தாலும் நீ இப்படி சண்டை போடக் கூடாது. பாவம் அவன்.." என்றாள் மலர்.

"போதும் மலர். ஸ்பென்சர்ல கிளம்பினதுல இருந்து இதையே சொல்லிட்டு வர்ற. நானும் பார்த்துட்டு தான் இருக்கேன். உனக்கு என்ன அவன் மேல திடீர்னு ஒரு Soft Corner. அவன் என்னவெல்லாம் சொன்னான் தெரியுமா? என் பெப்பை பார்த்து, 'பிஸ்கட்' வண்டியாம். எருமை மாடு மாதிரி ஒரு வண்டியை வெச்சுக்கிட்டு அவன் நம்ம வண்டியைச் சொல்றான். அப்புறம், நம்ம வண்டியை உதைக்கறான்டி. அவனை அப்படியே விட்டுட்டு வரச் சொல்றியா? போலீஸ் வரைக்கும் போயிருப்பேன். நீ இருந்தியேனு பார்த்தேன்.."

"பாவம்.. அவனுக்கு என்ன பிரச்னையோ..? அவன் முகத்தை நான் தான் பார்த்துட்டே இருந்தேனே.."

தலைமுடியை அள்ளிப் பிரித்துக் கொண்டிருந்த சந்தியா தடாரென திரும்பினாள். படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்து, தலையணையை மடியில் வைத்துக் கையை ஊன்றிக் கொண்ட மலரைப் பார்த்துக் கேட்டாள்.

"இது எப்படி நடந்துச்சு..? அவன் முகத்தைப் பார்த்திட்டே இருந்தியா..? எப்ப? எங்க? நான் கவனிக்கவேயில்லை.."

"நீ தான் Boutique-ல் நுழைஞ்சவ வெளியே வரவேயில்லையே... நான் அப்பப்போ வெளியே போய்ட்டு வந்தேன். அப்பப்போ அவனை பார்த்திட்டு தான் இருந்தேன். ஐஸ்க்ரீம் ஷாப், லேண்ட்மார்க், சென்டர் ஸ்டேஜ், எலிவேட்டர்ஸ் எல்லா இடத்திலும் அவனையே தான் பார்த்திட்டு இருந்தேன். பாவம் யாரையோ தேடிட்டு இருந்தான் போல..."

"ஓ.. மேடம் வேற என்னவெல்லாம் பார்த்தீங்க..?" புன்னகையுடன் கேட்டாள் சந்தியா.

"ஆனாலும் அவனோட Colour-க்கும் Height-க்கும் Dressing சரியா இல்லை. இன்னிக்குப் போட்டிருந்த டீ-ஷர்ட் ஜீன்ஸுக்குப் பதிலா, லைட் யெல்லோ பைஜாமாவும், Casual pant-ம் போட்டு வந்திருந்தான்னா இன்னும் அட்டகாசமா இருந்திருக்கும். அப்புறம் கையில டிஜிட்டல் வாட்சுக்குப் பதிலா, ஸ்ட்ராப் வாட்ச் இருந்திச்சுனா இன்னும் Manly-ஆ இருந்திருக்கும்..."

"இந்த அளவுக்குப் போயாச்சா..? அப்ப சரி. சாரிம்மா. உங்க அவனைப் பத்தி, தப்புத் தப்பா சொல்லிட்டேன்.."

"And One more thing. இனிமேல் அவன் அப்படினு எல்லாம் சொல்லக் கூடாது. அவர்னு தான் சொல்லணும். நான் மட்டும் தான் அவன்னு சொல்லுவேன்.." சிரித்தாள் மலர்.

"எப்படி மலர் இப்படி மாறினே? ஆபிஸில இவனை.. ஓ.. ஸாரி.. இவரை விட பர்சனாலிட்டியா நிறைய பேர் ப்ரபோஸ் பண்ணினாங்க. அவங்களை கூப்பிட்டு வெச்சு, கொடுத்த அட்வைஸ்ல உனக்கு 'Queen Elizabeth'னே பேர் வெச்சிருக்காங்க. நீயா இப்படி கவுந்துட்டே.."

"அது தான் எனக்கே தெரியல சந்தியா. Its really a magic, girl. நானா இப்படினு வரும் போது தான் நெனச்சுப் பார்த்தேன். ஒரு வேளை இதுக்காகத் தான் காத்திட்டு இருந்தேன்னு நினைக்கிறேன்..."

"Are you sure? Do you love him...?"

"Yeah. Sure"

"Then, shall we play a game? இப்படி பண்ணிப் பார்க்கலாம். இன்னிக்கு ஒருத்தரைப் பார்த்திருக்கே. Good. அவன் தான் உனக்கானவன்னு நினைக்கிற. தப்பேயில்லை. இவ்ளோ பெரிய சென்னையில் அவன் ஒரு மூணு மணி நேரம் உன் கண்ணுல பட்டிருக்கான். இனிமேல் அவன் படுவானோ, மாட்டானோ தெரியாது. இரு, அடிக்காத. தலையணை பஞ்செல்லாம் பிஞ்சு வந்திடும். சொல்லி முடிச்சிடறேன். The Great Almighty அவன் தான் உனக்குனு முடிவு பண்ணியிருந்தார்னா, நீ எங்க இருந்தாலும் அவன் உன்னைத் தேடி வந்திடுவான் இல்லையா? ஓ.கே. நாமா அவனைத் தேடிப் போக வேணாம். அதாவது நாமா அவனைத் தேடற எந்த முயற்சியும் எடுக்கக் கூடாது. ஒரு Time Frame வெச்சுக்குவோம். One Month...வேணாம். One day வெச்சுக்குவோம். அதுக்குள்ள அவனா நம்மைத் தேடி வந்து, உன்னைப் பார்த்துப் பேசிட்டான்னா, கவனம், உன்னைப் பார்த்துப் பேசணும். அப்படி நடந்திச்சுனா, Believe me my friend, நானே உங்களைச் சேர்த்து வைப்பேன். என்ன சொல்ற.. Deal?"

கொஞ்ச நேரம் அமைதி நிலவியது.

"எனக்கும் இதிலே சுவாரஸ்யம் இருக்கும்னு தான் நினைக்கிறேன்.Deal."

"O.K.இப்ப போய் நிம்மதியா தூங்கு. இல்லை, உன்னைப் பார்த்தா தூங்கப் போற பொண்ணு மாதிரி தெரியல. எனக்குத் தூக்கம் வருது. நாளைக்கு சிட்டி சென்டர் போகலாம்னு இருக்கேன். ஸ்பென்சர்ல சில ஐட்டம்ஸ் கிடைக்கல. அங்க கிடைக்கும்னு ஜானு தான் சொன்னா. நீயும் வர்றியா..ம்ஹூம் உன்னைப் பார்த்தா.. அதுக்குள்ள கனவுக்குள்ள போய்ட்டியா..Good Night. Sweet Dreams..."

முந்திய இரவு அல்லது அடுத்த நாள் அதிகாலை என்று எது வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். அது இரண்டு மணி. வெளியே இருட்டாக இருந்தது.

"மாம்ஸ்.. மாம்ஸ்..." உலுக்கி எழுப்பினான் அருண்.

"என்னடா.. என்ன.." தூக்கக் கலக்கத்தில் அதிர எழுந்தான் சஞ்சய்.

"போய் ஒரு டீ சாப்பிட்டு வரலாமா..?"

"டேய், இதெல்லாம் அநியாயம். ஸ்பென்சர் போய்ட்டு வந்ததில் இருந்து எட்டு டீ குடிச்சாச்சுடா. வயிறெல்லாம் ஒரு மாதிரியாவே இருக்கு. நானே கஷ்டப்பட்டு இப்ப தான் தூக்கம் வந்து படுத்திருக்கேன். ஆமா எதுக்கு இப்படி டீ குடிச்சுக்கிட்டே இருக்கே..? தூக்கம் வரக் கூடாதுன்னா?"

"எப்படி கரெக்டா சொல்ற..?"

"எதுக்கு தூக்கம் வரக்கூடாது? விடிஞ்சவுடனே ஆர்.டீ.ஓ. ஆஃபீஸ்ல விசாரிக்கறதுக்கா..?"

"நிஜமாலுமே அறிவாளிடா நீ..!"

"நாளைக்கு.. இல்ல.. இன்னிக்கு சண்டேடா. ஆஃபீஸ் லீவா இருக்கும். இப்ப படுத்து தூங்கு. மண்டே பார்க்கலாம். ஆஃபீஸுக்கு லீவ் போட்டாவது போய் விசாரிப்போம். என்ன..?"

"எனக்கு தூக்கம் வரலை. சரி, இன்னிக்கு என்ன பண்ணப் போறோம்.? எங்க போகப் போறோம், சொல்லு..?"

"அதை எப்படிடா இப்பவே சொல்றது. விடியட்டும், பார்க்கலாம்... இப்ப தூங்க விடுடா.. ப்ளீஸ்.."

"எனக்குத் தூக்கம் வரலையே.. என்ன பண்றது..?"

"போய் டி.வி.பாரு.இல்ல வெளியே ஊரைச் சுத்த போ. ஏதாவது செய். என்னைத் தொல்லை பண்ணாதே.."

"இன்னிக்கு எங்க போறதுனு மட்டும் சொல்லு. நான் அதுக்கான preparation-ல இறங்கறேன்.."

"டேய்.. உன் தொல்லை தாங்க முடியலயே.. கடல்ல தான் போய் விழலாம்னு நினைக்கிறேன்.."

"கரெக்ட்டா.. மெரினா போகலாம்.ஏன்னா ரொமாண்டிக் மூடுக்கு வந்தா பீச் தான் பெர்ஃபெக்ட் ப்ளேஸ், இல்லை..?"

"எது நம்ம மெரினாவா.. ஆமாண்டா ரொமாண்டிக் ப்ளேஸ் தான். இப்ப என்னை ஆளை விடு. குட் நைட்.."

"இல்ல.. குட் மார்னிங்.."

போர்வையை தலையோடு இழுத்துப் போர்த்திக் கொண்டான் சஞ்சய்.

வர்களைப் பார்த்துச் சிரித்தார் ஒருவர். விதியார்.

- தொடரலாமா?

No comments: