Tuesday, January 22, 2008

இது ஒரு காதல் கதை...? - 3

ஞாயிறு காலை 9 மணி.

"சந்தியா.. உன்னோட ஏண்டா deal வெச்சுக்கிட்டோம்னு இருக்கு.."

"என்ன, பயமா இருக்கா..?"

"இல்ல., இப்பவே 9 மணி ஆகிடுச்சு. இன்னும் அவர் வரலையே.."

"இங்க பாருடா.. என்னமோ அவர் டைம் சொல்லிட்டு போன மாதிரி பேசற. இன்னும் 15 மணி நேரம் இருக்குல்ல, வெய்ட் பண்ணு.."

"நீ என்ன பண்ணப் போற...?"

"எனக்கு வாஷ் பண்ற வேலை இருக்கும்மா. உனக்கென்ன, உன்னோட கஸின் வீடு திருவான்மியூர்ல இருக்கு. அங்க போய் வாஷிங் மெஷின்ல குடுத்து வாஷ் பண்ணிக்குவே..."

"உன்னோட துணியையும் குடுன்னு சொன்னா நீ கேட்டா தானே..?"

"இல்ல, நாம பார்க்கற ஆஃபீஸ் ஒர்க்குக்கு ஒடம்பு அசையறதே இல்லை. அட்லீஸ்ட் துணி துவைச்சாவது கொஞ்சம் வேர்வை வர வைப்போம்.. நீ என்ன பண்ணப் போறே?"

"அது தான், கஸின் வீட்டுக்குப் போறேன்.."

"ஆனா, மறந்திடாதே. அங்க போய் அவனைத் தேடற வேலையெல்லாம் வெச்சிக்கக் கூடாது..."

"என்னனு சொல்லித் தேடறது.? தளபதி மாதிரி 'என்னோட இவனே, நீ எங்க இருக்கே'னு மொட்டை மாடில போய் கத்தினா தான் உண்டு."

"சரி. நான் சிட்டி சென்டர் சாயந்திரம் மூணு மணிக்குப் போறேன். அப்ப உன்னை வந்து கூட்டிட்டுப் போறேன்.."

சேனல் மாற்றி மாற்றிப் பார்த்தும் நேரம் நகர்வதாய் இல்லை, அருணுக்கு. பல் விளக்கிக் கொண்டிருந்த சஞ்சயிடம் கூறினான்.

"என்னடா புரோக்ராம் எல்லாம் போடறாங்க. எல்லாமே செம கடியா இருக்கு. டைம் பாஸ் பண்ணலாம்னு பார்த்தா, எல்லாரும் கையில ரம்பத்தோட இருக்காங்க.."

"தம்பி, இந்த டைம்ல எல்லாம் அப்படித் தான் இருக்கும்.."

"ஆமாண்டா.. இந்த சண்டேனாலே ரெண்டு தான் போல். ரெட்டைத் தலைவலி.."

"நான் அதை சொல்லல. உனக்கு காதல் வந்திடுச்சு. அந்த டைமைச் சொன்னேன்.."

"சும்மா அதையே சொல்லிட்டு இருக்காதே. நீ என்ன பண்ணப் போறேன்னு சொல்லு.."

"கவலைப்படாதே.. நல்லா ரெஸ்ட் எடு. மதியத்துக்கு மெலே மெரினா போய்ட்டு வரலாம். மதியம் சத்யம் போகலாமா? ஸ்டுடியோ - 5ல 'பம்பாய் டு பாங்காக்'னு ஒரு படம். பேரே நல்லா இருக்குல்ல?"

"நான் படத்துக்கெல்லாம் வரலை. நல்லாத் தூங்கப் போறேன். நீ மெரினா போகும் போது, எழுப்பி விடு. எத்தனை மணிக்கு..?"

"வாங்க மூணுக்குப் போகலாம்.."

காலிங்பெல் அடித்தது. சந்தியா நிமிர்ந்து மணி பார்த்தாள். 10:30.

"மலர். நான் துணியெல்லாம் ஊற வெச்சுக்கிட்டு இருக்கேன். போய் யாருன்னு பாரு.."

பதிலே வராமல் போகவே, கைகளைக் கழுவி விட்டு, ஹாலை எட்டிப் பார்க்க, முகத்தில் சோகத்துடன் மலர், நிகில்.

நிகில் மலரின் மாமா மகன். அவளை விட பத்து வயது குறைவு.

"என்ன சந்தியாக்கா.. இன்னிக்கு என்ன அக்கா ரொம்ப கவலையா இருக்காங்க.."

குறும்புச் சிரிப்புடன் "இருக்காதா பின்ன.. வேற யாரையோ எதிர்பார்த்து நான் சொல்றதுக்கு முன்னாடியே அவசரமா ஓடிப் போய்க் கதவைத் திறந்து பார்த்தா, குரங்குக் குட்டி மாதிரி நீ ஜங்குனு வந்து குதிச்சிருப்ப.. அது தான்.. இல்ல மலர்..?" என்று கேட்டாள்.

"அப்படியா.. யாரைக்கா அப்படி எதிர்பார்த்துட்டு இருக்கீங்க..?" என்று மலரைக் கேட்டான்.

"டேய்.. நீ வாடா. வீட்டுக்குப் போகலாம். நானே உன்னை வரச் சொல்லிட்டு.. வா வீட்டுக்குப் போகலாம் வா. இந்த பேகை நீ எடுத்துக்கோ. சந்தியா , நான் வர்றேன். சென்டர் போகும் போது வீட்டுக்கு வா.."

"நிகில், அக்காவைப் பத்திரமா பார்த்துக்கோ. யாராவது பூச்சாண்டி வந்து தூக்கிட்டு போயிடப் போறான்.. மலர் Deal மறந்திடாதே.."

"சந்தியாக்கா, இன்னிக்கு ஒரே பூடகமாவே பேசிட்டு இருக்கீங்க.. இருக்கட்டும், கண்டுபிடிக்கறேன்.." என்றபடி மலரின் பேகை எடுத்துக் கொண்டான்.

"இரு, காபி போட்டு எடுத்திட்டு வர்றேன். அப்புறம் அக்கா வீட்டுக்குப் போனேன். பச்சைத் தண்ணி கூட தரலைனு சொல்லுவ. சுடு தண்ணியே குடிச்சிட்டு போ.." என்றபடி சந்தியா சமையலறைக்குச் சென்றாள்.

நிகில் மலரைப் பார்க்க, மலர் சந்தியாவைக் காண்பித்து, நெற்றியில் வட்டமாக்ச் சுற்றிக் காண்பித்தாள்.

அவர்கள் இருவரும் கிளம்பும் போது, மணி 11:00.

செல்போன் கிணுகிணுத்தது.

தூக்கத்தில் இருந்த அருண், எடுத்துப் பார்த்தான். அப்பா.

"சொல்லுங்க டாட்.."

"என்னடா தூக்கமா? பகல்ல தூங்கினா நல்லதில்ல தெரியும்ல..?"

"அப்ப ஆஃபீஸ்ல தூங்கறதெல்லாம் கணக்கில் வராதா டாட்..?"

"உன்கிட்ட பேசி முடியாது. அடுத்த வாரம் உனக்குப் பொண்ணு பார்க்கப் போகலாம்னு இருக்கோம். என்ன.. தூக்கம் கலைஞ்சிடுச்சா..?"

"டாட்.. என்ன இது குண்டைத் தூக்கிப் போடறீங்க.."

"இல்லடா.. ரொம்பவும் உங்கம்மாவை சமாளிக்க முடியல. எனக்கும் பாவமா இருக்கு. அவ சொல்றது தான் சரினு படுது..."

"டாட்.. வெய்ட்..உங்ககிட்ட ஒரு கதை சொல்லணும்..."

"என்ன சொல்லு.."

"நேத்து ஸ்பென்சர் போயிருந்தேன்.."

......

"ஸ்டோரி நல்லாத் தான் இருக்கு. பட் இன்னும் ஹீரோ ஹீரோயின் லவ்வே ஸ்டார்ட் ஆகலையே.."

"ஜஸ்ட் ஒரு வாரம் டைம் கொடுங்க. எப்படியாவது அவளைக் கண்டு பிடிச்சு, உங்க முன்னாடி நிறுத்தறேன்.."

"ஓ.கே. ஜஸ்ட் one week. அவ்ளோ தான். அப்புறம் இன்னொரு விஷயம். நம்ம ரிலேஷன் ஒருத்தர் இன்னிக்கு 5 மணிக்கு அங்க வர்றார். அவரைக் கோயம்பேட்டில கரெக்டா போய்க் கூட்டிட்டி வீட்டுக்கு கூட்டிட்டு போ..அடையாளம் எல்லாம் எஸ்.எம்.எஸ். பண்றேன்.Bye."

திரும்பி டைம் பார்த்தான். 1:30.

- தொடரலாமா?

3 comments:

PPattian said...

ம்..ம்.. ஜோரா தொடரலாம்.

PPattian said...

//நிகில் மலரைப் பார்க்க, மலர் சந்தியாவைக் காண்பித்து, நெற்றியில் வட்டமாக்ச் சுற்றிக் காண்பித்தாள். //

இது என்ன புரியல்லயே.. "லூஸ்"னு சொல்றாங்களோ?

இரா. வசந்த குமார். said...

ஆமாங்கோவ்....