Friday, April 04, 2008

இப்ப என்ன செய்ய?



ன்னட வெறியர்களின் அத்து மீறிய ஆட்டம் நம்மை மீண்டும் சிந்திக்கச் செய்கின்றது.

*வீரப்பன் என்று ஒருவன் இருந்த வரை, ஒகேனக்கல் பக்கமும், எல்லைப் புறமும் தலையே காட்டாத இவர்கள் இப்போது எல்லை மீறி வந்து ஆட்டம் போடுவதற்கு அனுமதிக்கலாமா? தாவூத் பம்பாயில் இருந்த வரை, அதற்காக மாற்று எதிர்ப்பாக சோட்டா ராஜனை இந்துத்துவ தாதாவாக வளர்த்து விட்ட அரசாங்கம், இன்று வீரப்பனைப் போல் பயம் தரக் கூடிய ஒருவனைக் கொண்டு வந்தால் என்ன?

*இராஜ்குமார் வெறும் வயதாகி இறந்து போனதற்கே இல்லாத ஆர்ப்பாட்டம் எல்லாம் செய்து, அநியாயமாக இரண்டு காவல் அதிகாரிகளைக் கொன்ற இந்தக் காட்டுக் கும்பலின் மீது இன்னமும் சட்டப்படி தான் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமா?

* மும்பையில் வட இந்தியர்களைத் தாக்கிய ராஜ் தாக்கரே போன்ற ஆசாமிகளை அப்போதே வாலை ஒட்ட நறுக்கி வைத்து, ஒரு காட்டு காட்டி இருந்தால், அவர்களுக்கு எல்லாம் அப்பனான இந்த வாட்டாள் நாகராஜ் போன்றவர்களுக்கு எல்லாம் அடங்கி இருக்குமே?

* தனி அரசாங்கம் நடக்கும் போதே தேர்தலை வைத்து வழவழ கொழ கொழக்கும் அரசாங்கம், கூட்டணி யுகத்தில் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்குமா என்ன? எவனுக்கு என்ன கொடுத்தால், எவ்வளவு சீட்டு கிடைக்கும் என்ற கணக்கு போட்டுக் கொண்டு குப்புறப் படுத்திருந்தால், கோவணமும் மிஞ்சாது என்பது புரியுமா?

*காவிரிப் பிரச்னை ஆரம்பித்த போதே தெளிவான முடிவு எடுத்திருந்தால், இப்போது 'ஓசூரும் எங்களுக்கே' என்று கொஞ்ச நாளுக்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்தி இருப்பார்களா? 'ஒகேனக்கலும் எங்களுக்கே' என்று ஆட்டம் போடுவார்களா?



*வந்தவரை எல்லாம் வாழ வைக்கின்ற தமிழகத்தின் உயர்பண்பு, அந்தக் காட்டான்களுக்கு இல்லாமல் போனதற்கு என்ன காரணமாய் இருக்க முடியும்? பத்திரிக்கைகள், கேபிள் , பேருந்துகள் நிறுத்தம் அடிதடி என்று நிற்க வரப் போகின்ற தேர்தல் மட்டும் தான் காரணமா? அடிமனதில் ஊறிப் போயிருக்கின்ற தமிழ்/தமிழன் எதிர்ப்பு தானே?

*இனியும் நாமும் காலாகாலத்திற்கும் இப்படியே உண்ணாவிரதம் என்று டயட்டில் இருந்து விட்டு, ஆறு மணிக்கு மேல் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு போக வேண்டியது தானா? எட்டியூரப்பா எல்லை தாண்டி வரும் போதே எச்சரிக்கை கொடுத்திருக்க வேண்டாமா? முல்லைப் பெரியாறு அணையைச் ஆராய அதிகாரிகள் வரும் போதே பிரச்னை ஆனதே? இவர் எப்படி எல்லை தாண்டி வரலாம் என்று தடுத்திருக்கக் கூடாதா?

*உஷார்...! தென்னிந்தியாவில் மதவாதம் அவ்வளவு இறுக்கமாகப் பிடிக்கவில்லை என்பதால், இனவாத உணர்வைத் தூண்டி விட்டு அதில் தேர்தல் குளிர்காய மதவாதச் சக்திகள் கணக்கிடுகின்றன. உஷார்.

*நான்கு வருடங்கள் ஆளுநர் வேலையில் வெட்டி முறித்தாயிற்று. மீண்டும் மாநில அரசியலில் இறங்க வேண்டும். மாநிலத்தின் குழப்ப நிலையைப் பயன்படுத்தி மீண்டும் முதல்வராக அமர வேண்டும். என்ன செய்வது. கிடைத்தான்டா இளிச்சவாய்த் தமிழன்! போட்டு மிதி! எட்டியூரப்பா வேறு முந்திக் கொண்டார். விடக் கூடாது. போடுடா பேட்டியை..! 'தமிழக முதல்வர் தான் தூண்டி விடுகிறார்'. அப்பாடா! நல்ல ரீ என்ட்ரி. 'ஐ ஏம் பேக்' - கிருஷ்ணா.

*இது தான் சரியான டைம். போன தடவை நெய்வேலிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப் போனப்பவே, வராம தனியா உண்ணாவிரதம் இருக்கற மாதிரி இருந்திட்டு 'சிங்கம் சிங்கிளாத் தான் இருக்கும்' அப்படின்னு அன்னிக்கே செஞ்சு காட்டினான், இந்தாளு. நெய்வேலிக்குப் போனதுக்கு என்ன கோரிக்கைனு இன்னிக்கு எவனுக்கும் தெரியாது; அந்த கோரிக்கைக்கு என்ன பதில் கிடைச்சுது, அது என்ன கதி ஆச்சுன்னு யாரும் கேக்க மாட்டாங்க. இந்த தடவ நாமளே உண்ணாவிரதம் இருப்போம். இதுக்கு அந்தாளு வர்றானானு பாப்போம்.

வந்தான்.. மாட்டுனான்டா. இனிமேல அங்க போகாத மாதிரி பேச வெச்சு மாட்டி வுட்டிறணும். வரலைன்னா.. செமத்தியா இங்க மாட்டுனான். போட்டு தாளிச்சு எடுத்திடணும். முப்பது வருஷமா இங்க தான் இருக்கான். ரேஷன் கார்டு எல்லாம் இங்க தான் இருக்கு. வோட்டும் இங்க தான் போடறான். ஷூ.. கபர்தார். அதெல்லாம் பேசக் கூடாது. நீ ஏன் பேசற.. தப்பு. தப்பு. அவன் கன்னடன் தான். அட, அவன் ஜாதி மராட்டியமா இருந்தாலும், பெங்களூர்ல கண்டக்டரா இருந்திருக்கான். அவன் கன்னடன் தான்.

எத்தனை சம்பாதிச்சிருக்கான். நாம ஓட்டு வாங்கறதுக்கு எவ்வளவு கஷ்டப்படறோம். ஒவ்வொருத்தனையும் மொட்டையடிச்சு ஓட்டு வாங்கி பையனை எம்.பி. ஆக்கறதுக்குள்ள மூச்சு போய் மூச்சு வருது. இவன் என்னடான்னா அமெரிக்கா போனேன்; சலூன்ல தூங்கிட்டேன்; மொட்டை அடிச்சிட்டாங்கனு சொல்லி சிரிக்கிறான். சனம் பூரா வோட்டை குத்துது.

இந்த தடவை வசமா மாட்டுனான்.



* ஏற்கனவே தனிநாடு எல்லாம் கேட்டாச்சு. ஒண்ணியும் வேலைக்காகலை. இவனுங்க வேற மேல, கீழனு மாநிலத்தை வேற ரெண்டா பிரி, பிரிங்கறாங்க. ரெண்டா பிரிச்சா மட்டும் கிழிச்சுற முடியுமா? செத்துப் போன பெருச்சாளியும், நாத்தம் புடிச்ச நாற்காலியும் தூங்கற வரை எந்த அரசாங்கம் வந்தாலும் இப்படித் தான் இருக்கும். எத்தன வருஷமா அரசியலுல இருக்கேன்? தெரியாது எனக்கு?

மொதல்ல போன் பண்ணி, பெங்களூரில இருக்கற சொந்தக்காரங்க ஊட்டுக்கெல்லாம் பாதுகாப்பு போட்டாச்சானு கேட்டுக்கணும். மத்தபடி சித்தாளு வேலைக்கு போனவன், ஓட்டல் வெச்சிருக்கவன், பஸ் ஓட்டறவன், ஐ.டி. கம்பெனில இருக்கற தமிழன் எல்லாரும் எக்கேடு கெட்டா நமக்கென்ன?

நடுவுல இந்த சினிமா பயலுக வேற உண்ணாவிரதம் இருக்காங்களாம். நல்லா இருங்க. என்ன இப்போ? நீ துங்காததால், பிரச்னை சரியாயிடுமா? உனக்கு ஒருநாள் ரெஸ்ட். எடுத்துக்கோ!

பேரனுக்கு பதவி குடுக்காட்டி பிரச்னை பண்ணுவேன். கேட்ட டிபார்ட்மெண்டை குடுக்காட்டி ரகளை பண்ணுவேன். அத வுட்டுட்டு, ஒகேனக்கல்ங்கறான், ஓசூர்ங்கறான், காவிரிங்கறான். இதுக்கெல்லாம் பிரச்னை பண்ண முடியுமா? பிரதமருக்கு லெட்டர் எழுதுவேன். அது ரெண்டு நாள் கழிச்சு போகும். அதுக்குள்ள கொஞ்சம் சூடு கொறஞ்சிடும்.

அப்பால நமீதாவை குட்டப் பாவாட போட வுட்டு, ஆட வுட்டா அம்புட்டு பயலுவளும் (வாய) தொறந்து வெச்சு குஜாலாயிடுவானுங்க. அப்புறம் காவிரியாவது, கருமாதியாவது?

* இறையாண்மைங்கறான். 'வேற்றுமையில் ஒற்றுமை'ங்கறான். அட, இவனுங்க 'ஒற்றுமையிலயே ஒற்றுமை'யா இல்ல. அப்புறம் எங்கிட்டு..? இன்னமும் ஒரே நாடா தான் இருக்கணுமா? குட்ட குட்ட குனிஞ்சு குனிஞ்சு தான, தமிழ்நாடு இன்னும் தாழ்வான பிரதேசத்துல இருக்கு? எங்க போனாலும் அடி வாங்கறான் தமிழன். இலங்கையில பார். இருபத்தஞ்சு வருஷமா கொல..! மலேஷியாவுல ஆரம்பிச்சிருக்கு! அட, உள்நாட்டுலயே நிம்மதியா வாழ முடியலயே!!

காவிரி தர மாட்டேங்கறான்...! முல்லைப் பெரியாறா.. மூச்!ங்கறான். பாலாறுக்கு பெப்பேங்கறான். மழை பெஞ்சு தாங்க முடியலனா மட்டும் 'அடக்க முடியல! பெஞ்சுக்கறேன்'ங்கற மாதிரி தொறந்து விடறான். சாக்கடையா தமிழ்நாடு...?

*மறுபடியும் சமஸ்தானமா பிரிஞ்சு ஒருத்தனுக்கொருத்தன் அடிச்சிக்கிட்டு, மாறி மாறி ஆட்சி செஞ்சுக்கிட்டு அப்புறம் ஒரு வெளி ஆளு வந்து மேல ஏறி குத்த வெச்சு ஒக்காந்தப்புறம் முழிச்சிக்கிட்டு, ஒரு தலைவன் கீழ ஒண்ணா சேர்ற மாதிரி ஒண்ணு சேர்ந்துக்கிட்டு, வெளியாளு ஓடிப் போனதுக்கப்புறம் அந்த தலைவனை மொத வேலயா மேல அனுப்பிட்டு, மறுபடியும் அடிச்சிக்கிட்டு....

இப்படித் தான் ஆகப் போகுதா?

*மொதல்ல மத்த மொழி சாயல் இருக்கற பேரையெல்லாம் தமிழ்ல மாத்துங்கப்பா. ஓசூர், பங்கனபள்ளி, ஒகேனக்கல்னு எல்லாம் எல்லை மாநில மொழிகள் பேர்ல இருக்கறதால தான் அவனுங்களதுனு நெனச்சிக்கிட்டு இருக்கானுங்க. தமிழ்ப் பேர்ல மாத்துங்க மொதல்ல..!

* 'சனமெல்லாம் சண்ட போட்டுக்கிட்டா, பண்ணின தப்பை எல்லாம் மறந்துடும்'னு புரட்சித் தமிழன் சொன்னாரு. சரியாத் தாம்ல இருக்கு!

*ஏண்டா, எங்க எல்லையில இருக்கற ஊரில ஒரு திட்டம் நிறைவேத்த உன்னோட அனுமதி வேணும்னா என்னடா அர்த்தம்? நாளைக்கு எங்க ஊரில ஒரு கக்கூஸ் கட்டுவோம். 'அது கூடாது. அதுக்கும் எங்க அனுமதி வேணும், ஏன்னா கழுவுற தண்ணி எங்க ஊரிலிருந்து வருது'னு அதுக்கும் ரகளை பண்ணுவீங்களாடா? வாய் மேலயே போடணும்டா உங்களை எல்லாம்...!

*இந்த ரகளை எல்லாம் கேட்டுட்டு, ஜப்பான் காரன் வாயால சிரிக்க மாட்டேங்கறான். 'ஏண்டாப்பா! உங்களுக்கு உதவி பண்ணலாம்னு காசு குடுக்க வந்தா, உங்க நாட்டுக்காரனே தடுக்கறான்னா, அப்புறம் என்ன ஒரே நாடு, ஒரே மக்கள், வெங்காயம், வெளக்கெண்ணை...' அப்படினு கேக்கறான்.

முடியலங்க...! அந்த காட்டானுங்களையும், நம்ம சுயநல பெருக்கான்களையும் நெனச்சா இன்னும் நெறய எழுதத் தோணுது. 'சபை அடக்கம்'னு சொல்லிட்டுப் போய்ட்டாங்களே நம்ம ஆளுங்க. அதுக்காகப் பாக்க வேண்டி இருக்கு!

இது ஒரு காவிரிப் பையனின் கோபம்.

No comments: