Tuesday, June 24, 2008

ஹைய்யா... ஜாலி...!

ரு சீன்.

மேடை. இரண்டு பேர் ஷார்ட்ஸில் நின்று கொண்டிருக்கிறார்கள். நின்று என்றால் சாதா நின்று அல்ல. உடலெங்கும் வியர்வை பொங்கிக் கொண்டிருக்கின்றது. கண்களில் ஆக்ரோஷம். உடல் அங்குமிங்கும் நகர வெறியோடு நின்று கொண்டிருக்கின்றார்கள். எஸ். குத்துச் சண்டை மேடை அது.

பல ரவுண்டுகள் மோதிக் கொண்டு இப்போது ஆளுக்கு ஒரு புறம் நின்று அடுத்த ரவுண்டுக்கு ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஆரம்பித்து விட்டதை ரெஃப்ரி தெரிவிக்க, மோதுகிறார்கள்.

படார்... படார்..

கன்னங்கள் கிழிபடுகின்றன. ரத்தம் வாயிலிருந்து தெறிக்கின்றது. வியர்வையும் கலந்து சிதறுகின்றது. அதிர்கின்ற அகெளஸ்டிக்கில் காற்றில் வெறியேறுகின்றது.

'சார்.. யார் ஜெயிப்பார்னு நினைக்கிறீங்க..?'

'இவர் தான்னு நினைக்கிறேன்...'

'எப்படி சார்... போன ரவுண்ட்ல அவர் என்னமா அடி வாங்கி இருக்கார். இன்னும் ரெண்டு ரவுண்டு தாண்டறதுள்ள தாவு தீரும்.. டவுசர் கிழியும்.. பாருங்களேன்..'

'இல்ல... அவர் ராசிப்படி, இந்த ரவுண்ட்ல தான் அவரோட ஃபுல் பவர் காட்டுவார்...'

'அவர்கிட்ட என்ன பேச்சு..? என்ன கேளுங்க... நான் பல வருஷமா இந்த ஃபீல்ட்ல இருக்கேன். ப்ளாக் ஷார்ட்ஸ் தான் இந்த கேம்ல வின். என்ன பெட்..?'

'பெட்டா..?'

'அட.. மெது வா பேசுங்க சார்... பெட் எல்லாம் பேன்ட்...ஐநூறு ரூபா..?'

'அதுக்கு ஏன்யா என் காதக் கடிக்கிறே.... அட.. அங்க பாரு... உங்காளு நெஜமாலுமே அவன் காத கடிச்சிட்டார். அவ்ளோ தான். வயலேஷன் ஆஃப் ரூல்ஸ்..தூக்கிடுவாங்க...'

எவ்வளவு காலம் தான் இந்த பாக்ஸிங்கையும், WWF-ஐயும் பார்ப்பது என்கிறீர்களா..?

ஸீன் மாறுகின்றது.

கும்பலாய் குத்த வைத்து உட்கார்ந்து இருக்கிறார்கள்.

இரண்டு சேவல்கள் சிலிர்த்துக் கொண்டு நிற்கின்றன. நகங்கள் கூர்மையாகச் சீவப்பட்டு உள்ளன. கால்களில் சின்னச் சின்ன ப்ளேடு துணுக்குகள் கட்டி வைக்கப்பட்டு உள்ளன.வட்டக் கண்களில் சிவப்பு சாராயத்தின் விளைவாக மின்னுகிறது. கொண்டை காற்றில் நெருப்பாய் பறக்கிறது.

இரண்டின் வலது கால்களிலும் சணல் கயிறு கட்டப்பட்டு இருவர் பிடித்துள்ளனர். சேவல்கள் மேல் கிள்ளியும், குத்தியும் வெறி ஏற்றிக் கொண்டு இருக்கின்றனர்.

'பங்காளிங்களா.. இப்ப விடுங்கடே...'

இருவரும் அவரவர் சேவல்களை வீசுகின்றனர். இரண்டும் ஒன்றன் மேல் ஒன்றாய் விழுகின்றன.

கண்களில் கோபத் தீ கொதிக்க.. அவை சீறுகின்றன. கொத்துகின்றன. அங்குமிங்கும் சுற்றுகின்றன. கூரிய அலகுகள் உடல்களைப் பதம் பார்க்கின்றன. நக ப்ளேடுகள் கீறுகின்றன.

'பங்காளி.. ராசப்பன் சேவ தான் ஜெயிக்கப் போகுது.. என்ன சொல்லுதாம்ல நீ..?'

'நேத்து ராவு அவந்தான் உனக்கு சரக்கு வாங்கி குடுத்தானாலே....க்காளி.. நானும் வந்ததுல இருந்து பாக்கேன். நீ அவனுக்குத் தாம்லே சப்போட்டா இருக்க...'

'..க்காளி... சரக்கு அது இதுனெல்லாம் பேசாத..அத எல்லாம் வுட்டு நாலு மாசமாகுது..'

'அப்ப... நேத்து பொளுதோட தோப்புக்கு போனியே.. எதுக்கு பூச பண்றதுக்கா... ஏம்லே, பொய் சொல்லுத...'

'மச்சான்.. அவங்கிட்ட என்ன பேச்சு...க்காளி.. அவம் பரம்பரயே சரக்கடிச்சு தெருவுக்கு வந்தது தாம்லே..'

'ஏம்லே சண்ட போட்டுக்கறீய... சேவச் சண்ட பாக்க வந்து நீங்க சண்ட போடுத... தாணாக்காரனுக்குத் தெரிஞ்சுது, அம்புட்டு பேரயும் உள்ள வெச்சு பூட்டிப்புடுவாம்ல...'

'பூட்டிடுவானா... எங்க சாதிக்காரம் மேல அவ்வளவு சுளுவா கை வெச்சிட முடியுமாலே... டேசனையே கொளுத்திட மாட்டம்..'

'எங்க மேல மட்டும் கை வெச்சிட முடியுமாலே... க்காளி, அவன் குடும்பத்தையே வெட்டி பொலி போட்ருவம்ல...'

'யப்பா.. எளந்தாரிகளா...சேவச் சண்டைய பாருங்கலே... பொசக் கெட்டதனமா இங்கிட்டு வந்தும் உங்க சாதி சண்டய ஆரம்பிச்சுக்கிட்டு..'

'யோவ் பெருசு... பொத்திகினு இரும்வே... உமக்கென்னய்யா இங்கன வேல...போய் கோயில் மண்டபத்துல குப்புற சாஞ்சு தூங்கும்வே..'

துவும் போர் அடித்து விட்டதா..?

தெருக்கோடி குழாயடிச் சண்டை, பஸ்ஸில் கண்டக்டர் - பயணி சண்டை, பாராளுமன்ற / சட்டசபைகள் ரகளைகள், ஆஃப்கன் போர், சினிமாவில் பொய்ச் சன்டைகள் என்று எல்லாம் பார்த்து மிகவும் போர் அடித்துக் கிடக்கிறீர்களா?

அனானி அண்ணாச்சிகளும், போலி காலிகளும் இல்லாமல் சண்டை பார்க்காமல் சோம்பிப் போயிருக்கிறீர்களா..?

கவலையற்க.

அனல் பறக்கும், கனல் தெறிக்கும் வினைகள், எதிர் வினைகள், எதிர் எதிர் வினைகள், பூமராங், மல்டி லெவல் பல்டி தாக்குதல், சும்மா பறந்து பறந்து அடித்தல் என்று விதம் விதமாக, வகை வகையாக, தரம் பிரித்து வார்த்தைகளால் அறிக்கை, பதிவுகளால் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள் இருவர்.

சாரு நிவேதிதா மற்றும் ஜெயமோகன்.

தமிழ் இலக்கிய உலகின் தற்போதைய நிலையை அறிய இவர்கள் இருவரின் வலைப்பதிவுகளைச் சென்று பாருங்கள்.

அட்டகாசம். ரொம்ப ரீஜண்டாக எப்படி அடித்துக் கொள்வது என்பதை கற்றுக் கொள்ளலாம்.

சாருவின் மம்மி ரிட்டர்ன்ஸ் தொடர் பதிவுகளைப் படித்து எஞ்சாய் செய்க. ஜெ.வின் இன்றைய பதிவைக் கண்டு, லிங்க் பிடித்து இன்னும் பல பதிவுகளைக் கண்டு மகிழ்க.

ப்போது அடுத்த ஸீன்.

'ஹாய் TX24#76Jf.ஹவ் ஆர் யூ..?'

'ஃபைன். என்ன பண்ணிட்டு இருக்கீங்க...hg54@!H)u?'

'உங்க கூட சாட்...'

'21-ஸ்ட் செஞ்சுரி காமெடி...'

'அவ்ளோ பழசா..?'

'எஸ். வேற என்ன பண்ணிட்டு இருக்கீங்க...?'

'சாருனு ஒரு ரைட்டர் ஒன்ஸ் இருந்தார் போல. அவரோட ராஸலீலா பார்ட்25 தமிழ் ட்ரான்ஸ்லேஷன் படிச்சிட்டு இருக்கேன்...யூ நோ திஸ் கை...?'

'எங்கயோ கேட்ட மாதிரி இருக்கு...யா.. ஐ காட் இட். நேத்து நைட் ஜெயமோகன்னு ஒரு பழைய ரைட்டரோட ஆர்டிக்கிள்ஸ் எல்லாம் சீப்பா பர்மா பஜார்ல வித்துட்டு இருந்தாங்க... ரெண்டு காப்ஸ்யூல் 25 எம்.எல். வோட்காக்கு...'

'அவ்ளோ சீப்பா... பரவால்லயே...காப்ஸ்யூல் ஃபார்ம்ல கிடைக்கறதா...சாருவோட புக்ஸ் எல்லாம் டானிக் ஃபார்ம்ல தான் இருக்குனுட்டான்.. இப்ப தான் ரெண்டு டீஸ்பூன் குடிச்சேன்..'

'முழுசா சொல்ல விடுங்க... நான் வாங்கின காப்ஸ்யூல்ல 0.425 மி,கி. எடுத்து நேத்து நைட் போட்டுக்கிட்டேன். மெடிஸினரி ப்ரிஸ்க்ரிப்ஷன்ல 'இது ஜீரணிக்க கஷ்டமானது. எனவே கூட கோபுலு ஜோக்ஸ் டாப்லெட் 0.0025 மி,கி.யும், தேவன் கதைகள் இஞ்சக்ஷன் 0.21 மி.லி.யும் சேர்த்துக்குங்க. துப்பறியும் சாம்பு கிடைத்தால் இன்னும் விசேஷம்னு போட்டிருந்தாங்க.' பட் அதெல்லாம் ரொம்ப காஸ்ட்லி. மாஸ் ப்ரொடக்ஷன் நெக்ஸ்ட் மந்த் தான் அப்டினு சொல்லிட்டான் பஜார்ல. பைரேட்டட் இருக்குனு கண்ணடிச்சான். வேணாம்னு சொல்லிட்டேன். எதிக்ஸ்னு ஒண்ணு இருக்கோ இல்லியோ..?.... வெய்ட் ஒன் நானோசெகண்ட்....ராஸலீலா... தமிழ் ட்ரான்ஸ்லேஷனா..? அதை எழுதும் போதே அவர் தமிழ்ல தான் எழுதினதா, விக்கி சொல்றான்..'

'வாங்கிட்டியா...?'

'நான் எங்க வாங்கினேன்..? கூகுள் தான் இப்ப விக்கியை வாங்கிட்டான். ஜிமெயில் அக்கவுண்ட் இருக்கறவா எல்லார்க்கும் ஒரு விர்ட்சுவல் விக்கி அசிஸ்டெண்ட் அட்டாச்மெண்டா அனுப்பிடறான். டவுன்லோட் பண்ணிட்டேன். க்யூட் கை. கான்ஃபிக்யுரேஷன் நாமளே பண்ணிக்கலாம். இல்ல, நாமே சொன்னா கூகிள்ல அஸெம்பிள் பண்ணிக் குடுத்திடறான்...'

'நீ எங்க வாங்கினே...?'

'உசிலம்பட்டிக்கு கிட்டக்க குறுக்குப்பட்டில இருக்கற கூகுள் லேப்ஸ்ல தான் ஆர்டர் குடுத்தேன். நம்ம ஏரியாவுக்கு அங்க தான் சர்வர் இருக்கு. சர்வீஸ் ஆன்லைன்லயே முடிச்சிடறான்...'

'விக்கி அசிஸ்டெண்ட் சொல்றது கரெக்ட் தான். அவர் எழுதும் போது தமிழ்ல தான் எழுதினார். பட் அது அப்புறம் மலையாளத்தில ட்ரான்ஸ்லேட் ஆச்சு. அப்புறம் அரபி. உருது. எஸ்பிஞோல். ஆங்கிலம். சைனீஸ். டாய்ஸ்ச். ப்ரெஞ்ச். நிஹோங்கோ... தென் நிறைய ட்ரைபல் லாங்வேஜஸ்ல எல்லாம் ட்ரான்ஸ்லேட் ஆகி இருக்கு. அப்புறம் மறுபடியும் எஸ்பிஞோல்ல இருந்து தமிழுக்கு ட்ரான்ஸ்லேட் பண்ணி இருக்காங்க. ஏன்னா காஸ்ட்ரோனு ஒருத்தர், உனக்கு கூட தெரியுமே, 2500+ ஏஜ்ட் கூபாவோட ப்ரெஸிடெண்ட்... அவர் தான் ஃபினான்ஸியல் ஸப்போர்ட் பண்ணி இருக்கார், ட்ரான்ஸ்லேஷனுக்கு..!'

'சரி... நான் சொல்ல வந்தத சொல்லிடறேன். இந்த ஜெயமோகன் ஆர்ட்டிகிள்ஸ்ல அவரைப் பற்றி கன்னாபின்னானு திட்டியிருக்கு... அந்த சாருவா..?'

'எக்ஸாக்ட்லி...! இந்த சாரு ஆர்ட்டிகிள்ஸ்லயும் மம்மி ரிட்டர்ன்ஸ்னு ஒரு சீரீஸ் இருக்கு. அதுல எல்லாம் இந்த ஜெயமோகன் பற்றி எக்கச்சக்கமா இருக்கு...'

'இவங்க எல்லாம் இதுக்கு வேஸ்ட் பண்ணின எனர்ஜில இன்னும் கொஞ்சம் கதை எழுதி இருக்கலாம். ரான்பாக்ஸில 0xDFD3353FF கலர்ல இன்னும் கொஞ்சம் காப்ஸ்யூல்ஸ் போட்டிருப்பான். இப்ப எழுதுற கதை எல்லாம் கவர்ன்மெண்ட் சென்ஸார் பண்ணிடுது. இந்த சாரு, ஜெயமோகன் போல ஆன்ஸியன்ட் ரைட்டர்ஸ் ஆர்டிக்கிள்ஸ் மட்டும் ஃப்ரீ ஃப்ளோல விட்டிருக்காங்க. அவங்க இந்த மாதிரி சண்டை போட்டிருந்த டைம்ல இன்னும் நிறைய கதை.. வாட்ஸ் தட் ஓல்ட் வேர்ட்..?'

'இலக்கியம்..'

'யா... தட்ஸ் ரைட். அப்படி எழுதி இருக்கலாம்.'

'நீ சொன்னப்புறம் தான், ஐ காட் தட். லாஸ்ட் நைட் கவர்ன்மெண்ட் நோட்டிஸ் வந்திச்சு. இது மாதிரி அடிச்சுக்கிற ஆர்ட்டிக்கிள்ஸ் எல்லாத்தையும் அழிச்சிடப் போறாங்களாம். ஒன்லி ஸ்டோரிஸ் அண்டு லிட்ரேச்சர்ஸ் மட்டும் தான் டேட்டா பேஸ்ல வெச்சு ப்ரொடக்ஷன்ல விடணும்னு பப்ளிஷிங் ஹவுஸ்க்கு ஆர்டர் போயிருக்காம்...'

'கரெக்ட் தான்... அவங்க அடிச்சிக்கிட்டது எதுக்கு நமக்கு...? எனக்கு கிளம்பணும். நைட் லண்டன்ல ஒரு பார்ட்டி இருக்கு. அப்புறம் சிவகாசில ஒரு மைனர் ஆப்ரேஷன் இருக்கு. என்னோட ப்ரெய்ன்ல இருக்குற லாங்குவேஜ் பட்டனை எடுத்திட்டு அங்க A.I. டைமர் வெச்சு மாஸ்க் போடப் போறாங்களாம். ஆர்டர் வந்திருக்கு.. பை.. பை..'

'ஸீ.யூ.. பை.. எனக்கும் டோக்யோல ஒரு டூயல் க்ளோனிங் ஆப்ரேஷன் இருக்கு. ஒரு பேக் அப்புக்கு க்ளோன் எடுத்திட்டு என்னை அழிச்சிடப் போறாங்களாம். தென் ந்யூ பர்த். த்ரில்லா இருக்கு நெனச்சாலே..! பை.. பை...!'

2 comments:

Anonymous said...

சுஜாதா கதையை படிப்பது போலவே இருந்தது .சும்மா சொல்ல கூடாது ,சயின்ஸ் language ல் கலக்கி இருக்கிறாய் . well done.

இரா. வசந்த குமார். said...

அருமை அனானி... மிக்க நன்றிகள்.

எப்டி எழுதினாலும் வாத்தியார் நடை வந்திடுது. என்ன செய்ய...?