அவன் மிக கூராய் இருந்தான்.
கூட்டத்தின் இரைச்சல் அந்த பிரம்மாண்டமான மைதானம் முழுதும் அலையடித்துக் கொண்டிருந்தது. அவ்வப்போது கைகளைக் கோர்த்துக் கொண்டு மெக்ஸிகன் வேவ் காலரிகள் எங்கும் பரவிக் கொண்டேயிருந்தது. வெஸ்டர்ன் ராயல்ஸ் வீரர்கள் மற்றும் சதர்ன் ஷார்க்ஸ் வீரர்கள் கால்களுக்கிடையே பென்ஸீன் ஸ்ட்ரக்ச்சரின் இடைவெளிகளில் கருப்பு - வெள்ளை வர்ணங்கள் பூசப்பட்ட பந்து உதைபட்டுக் கொண்டிருந்தது.
அவன் கவனம் இதில் இல்லை. கோலியையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனது பார்வை கோலியையே சுற்றிக் கொண்டிருந்தது. காதுகளில் பிஸினஸ் மேக்னெட் ஷா சொல்லியது நினைவில் மிதந்தது.
"லுக்..! எனக்கு ரொம்ப நேரம் இல்லை. ஒன் ஹவர்ல ஜெர்மன் ஃப்ளைட் பிடிச்சாகணும். நேரா விஷயத்துக்கே வந்திடறேன். இந்த காண்ட்ராக்ட் ஸ்டார்ட் பண்ணினப்ப இந்த கோலியை நம்பித் தான் சைன் பண்ணினேன். நான் பணம் பண்ணனும்னா திஸ் கோலி இஸ் இம்பார்ட்டண்ட். பட் இப்ப த பிஹேவியர் இஸ் நாட் குட். நிறைய நஷ்டம். வேற வழியே இல்லை. வி ஹேவ் டு ஃபைண்ட் அனதர் கோலி. இந்த கோலியை காலி பண்ணியாகணும்! அதுக்கு நீ வேணும். வாட் இஸ் யுவர் சார்ஜ்..?"
"சார்..! காலி பண்ணணும்னா எப்படி? உலகத்தை விட்டே காலி பண்ணணுமா?"
"இஸ் தேர் எனி அதர் மெதட்? சொல்லு பார்க்கலாம். விஷயம் யார் மூலமாகவோ இல்லை இந்த கோலி மூலமாகவோ வெளிய தெரிஞ்சிச்சுனா, பேர் கெட்டுப் போகும். நெக்ஸ்ட் அனதர் ட்ரைல சிக்கல் நிறைய வரும்..."
"ஓ.கே.சார். இனிஷியல் பேமெண்ட் த்ரீ சி... நெக்ஸ்ட் பார்ட், வேலையை முடிச்சப்புறம் வாங்கிக்கறேன். துபாய்க்கு டிக்கெட் புக் பண்ணிக் குடுத்திடுங்க. இங்கயே இருந்தா ரிஸ்க் அதிகம்..!"
"த்ரீ சி.. கொஞ்சம் அதிகமா இருக்கற மாதிரி இருக்கே..?"
"என்ன சார்..? விஷயம் அவ்ளோ சுலபமான ஒண்ணு இல்லையே..? அந்த கோலியை நெருங்கறது அவ்வளவு சுலபம் இல்லையே..!"
"ஓ.கே. அக்கவுண்ட் நம்பர் மாஸ்கிட்ட குடுத்திரு! பேமெண்ட் அங்க பாஸ் ஆகிடும். என்னிக்கு பண்ணப் போற..?"
"நெக்ஸ்ட் ஃப்ரைடே. அன்னிக்குத் தான் டபிள்யூ.ஆர்., எஸ்.எஸ் மேட்ச் இருக்கு..."
"அதை எல்லாம் கரெக்டா ஞாபகம் வெச்சுக்கோ..! என்ன தான் பெரிய டெரரா இருந்தாலும், ஒன்ஸ் ஃபுட்பால் கிங்கா இருந்திருக்கே இல்லையா..?"
"அதுக்காக இல்லை. எல்லார் கவனமும் மேட்ச்ல தான் இருக்கும். கோலியை கொஞ்சம் ஈஸியா நெருங்கலாம்..!"
"டன். முடிச்சு ந்யூஸ் மாஸ்க்கு வந்திருச்சுனா, டிக்கெட் வழக்கமான பொருளா வந்து சேரும்..!"
நினைத்தது போல் அவ்வளவு சுலபமாக நெருங்க முடியவில்லை. கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் போனான். ஷாவின் செல்வாக்கு லேசர் ஒளிக்கீற்று போல் திசையெங்கும் பரவி இருந்தாலும் கோலிக்கு அருகில் வருவதற்குள், வியர்த்து தான் விட்டிருந்தான்.
கூட்டத்தில் ஆரவாரம் அதிகமாகவே எழுந்தது. டபிள்யூ.ஆர். இரண்டு கோல்கள் போட்டு விட்டதில், எஸ்.எஸ். கோலி பதற்றத்தின் உச்சியில் இருந்தான். ஆஃப் டைம் நெருங்கிக் கொண்டிருந்தது.
அவனது இலக்கு இந்த கோலியின் மீது தான்!
எங்கே..? ஓர் இடத்தில் இருந்தால் தானே..? அங்குமிங்கும் நகர்தல்; குதித்தல்; தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த எல்லைகளுக்குள் சென்று சென்று வருதல்.
அவனுக்கு ஆயாசமாக இருந்தது. எப்போது இந்த ஆட்டம் நிற்கும்? தகுந்த சமயம் எப்போது வரும்? சில சமயம் அந்த கோலி இவனையே பார்ப்பதாக தோன்றியது. ச்சீ..! பிரம்மை. கோலியாவது? தன்னை போய் பார்ப்பதாவது? சுற்றி இருக்கும் ஆயிரக்கணக்கான ஜீவன்களை விட்டு என்னை மட்டும் உற்றுப் பார்ப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.
தனது பதற்றம் தான் தன்னை இப்படி எல்லாம் திங்க் பண்ண வைக்கின்றது என்று நினைத்துக் கொண்டான்.
நீண்ட விசில் அடிக்கப்பட்டது. லஞ்ச். அவன் ஓர் ஓரமாக ஒதுங்கிக் கொண்டான். சிலர் கலைந்து அவன் பக்கமும் வந்தார்கள்.
"என்ன சார்..? நீங்க கோலியை பார்க்க ஸ்பெஷல் பர்மிஷன் ஓனர் கிட்ட இருந்து வாங்கிட்டு வந்தவர் தான..?" ஓர் இளங்கிளி கேட்டாள்.
"எஸ்..! சரியா பார்க்க முடியல. அதுதான் கொஞ்ச நேரம் கழிச்சு பார்க்கணும்னு வெய்ட் பண்றேன்..!"
"நீங்க வெய்ட் பண்றதைப் பார்த்தா செகண்ட் ஆஃப் முடிஞ்சு தான் பார்க்க முடியும்னு நினைக்கிறேன்..!" சிவந்த ஈறுகள் தெரிய சொல்லிச் சிரித்தாள். "நாங்க எல்லாம் மேட்ச் பார்த்துக்கிட்டு இருப்போம். நீங்க மட்டும் கோலியைவே பார்த்துட்டு இருங்க..!" குலுங்கிச் சிரித்தாள்.
தான் செய்யப் போகும் காரியத்தை சொன்னால் இவள் என்ன நினைப்பாள்? 'சில்லி... டோண்ட் பி க்ரேஸி..' என்று சிணுங்குவாளா..?
நோ..! கண்ட்ரோல் செய். இது அதற்கான இடம் அல்ல.
மேட்ச் தொடர்ந்தது. அவள் மேட்ச் பார்க்க தனது இருக்கைக்குச் சென்றாள்.
அவன் சுறுசுறுப்பானான். தனது கோட்டில் இருந்து, லேஸர் எமிட்டரை எடுத்தான். செக் செய்தான். புல் சார்ஜ்.
அருகில் சென்றான். கோலியைக் குறி வைத்தான்.
ட்ரிக்கரைச் சுண்ட விரல்களை வைத்து அழுத்...
"ஸ்டாப்..!"
பார்த்தால், போலிஸ்.
பின்னால் அந்த இளங்கிளி.
"மிஸ்டர்..! உங்களுக்கு இந்த ஆர்டர் குடுத்த பிஸினஸ் மாக்னெட் ஷாவோட போன் கால்ஸை ட்ராக் பண்ணிட்டு இருக்கோம். அதில இந்த ப்ளானை பற்றி மாஸ்கிட்ட பேசிட்டு இருக்கறதை வெச்சு, இங்க இவங்களை வர வெச்சு, உங்களை மானிட்டர் பண்ணி.. டு யு வாண்ட் ஃபர்தர் ஸ்டோரி? கம் வித் அஸ்..!"
பெரிய இரைச்சல். காலரியின் மக்கள்.
அவள் ஈறுகள் தெரிய சிரித்தாள். அப்போதும் அழகாகவே தெரிந்தாள்.
பெண்.
***
இன்னும் கதை முடியவில்லை.
இரண்டு வகை கோலி Interpretation மக்களுக்காக கதையின் முடிவு இரண்டு கிளைகளாகப் பிரிகின்றது.
if( You_Recognize( கோலி == (தமிழ்) Goalie))
{
புட்பால் மாட்ச் பார்த்துக் கொண்டிருந்த மக்களின் கூட்டத்திற்குள் புகுந்து எப்படித் தப்பிப்பது என்று அவன் ஆழ்ந்து சிந்தித்தவாறே போலிஸுடன் நடந்தான். போவதற்கு முன் இந்த இளங்கிளியின் இரண்டு பற்களையாவது பெயர்த்தெடுப்பது என்ற துணைத் திட்டத்துடன்!
}
else if ( You_Recognize ( கோலி == (தமிழ்) Coli))
{
அவள் ரிமோட்டை எடுத்து சிகப்பு பட்டனை அழுத்தினாள். ஷா டிஸீஸ் அண்ட் ரிஸர்ச் ஃபவுண்டேஷனின் ரிஷப்ஷனில் ஃபுட்பால் லைவ் மாட்ச் காட்டிக் கொண்டிருந்த டி.வி உயிரை விட்டது.
}
To_தமிழறிஞர்கள்("யாராவது இந்த Gக்கு ஏதாவது புது ஸ்க்ரிப்ட் உருவாக்குங்களேன்!");
excite();
(தேன் சிறில் அலெக்ஸ் அறிவியல் சிறுகதை போட்டிக்காக.)
5 comments:
முடிவு எனக்கு சத்தியமாக புரியவில்லை.
thankind you for visit my blog
by
Akaramudhalvan
அன்பு யோசிப்பவர் ஐயா...
என்னங்க இப்படிச் சொல்லிட்டீங்க... ஒரு சாதாரண சம்பவம், எப்படி ரெண்டு விதமான G, c மாறுபாட்டால் வேறு வேறு சம்பவங்களாகின்றது என்பதைத் தான் கூறுகிறேன்.
மொழி வளர்ச்சி தேவை என்ற அடிப்படையில் இதுவும் அறிவியல் புனை கதை என்ற இடத்திற்கு வருகின்றது.
Goalie புரிதலில்தான் நான் படித்தேன்.. அதிலும் சுவாரசியம் கம்ம்ம்ம்மி..
Coli புரிதல் கதையின் சில இடங்களில் பொருந்துமா என தெரியவில்லை..
அன்பு புபட்டியன் சார்...
எல்லா 'கோலி' வார்த்தைகளையும் ஒரே Goalieயாகவோ, Coliயாகவோ எடுத்துக் கொள்ளக் கூடாது. அப்படி வித்தியாசம் காட்டக் கூடிய வகையில் Ga என்று வரும் ஒலிக்கு என்று தனி எழுத்தும், Ka என்று வரும் ஒலிக்கு என்று தனி எழுத்தும் தமிழில் இருந்தால், இக்கதையை இரண்டு முறை படிக்க வேண்டி இருக்காது அல்லவா?
அதற்காகத் தான் தனித்தனி எழுத்துக்கள் வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றேன்.
மிக்க நன்றி தங்கள் வருகைக்கு! கதை சோர்வாய் இருக்கும் பட்சத்தில் அதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறேன்..!
Post a Comment