ரஜினி மன்னிப்பு கேட்டுள்ளார். எதற்கு? தன் படத் தயாரிப்பாளர்கள் தன்னால், தன் பேச்சால் கஷ்டப்பட்டு விடக் கூடாது; தன் படம் வாங்கிய வினியோகஸ்தர்கள் தன் பேச்சால் நஷ்டப்பட்டு விடக்கூடாது என்பதற்காக.
ஒகேனக்கல் திட்டத்தை எதிர்த்து குரல் கொடுத்த கன்னட அமைப்புகளையும், அரசியல் கட்சிகளையும் தான் அவர் குற்றம் சாட்டினார். பொது மக்களுக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை.
'உதைக்க வேண்டாமா?' என்று கேட்டது எல்லை மீறி வந்து பிரச்னை செய்தவர்களையும், திட்டத்தை எதிர்த்தவர்களையுமே! பொது மக்களை அல்ல!
அவர் மன்னிப்பு கேட்டவுடனே இங்கே சில பேருக்கு பொத்துக் கொண்டு விட்டது.
* ஒருவருக்கு பெரிய தலைவர் படத்தில் நடித்தவுடனே, தானே அதே போல் பெரிய தலைவர் ஆகி விட்ட நினைப்பு! தனக்கு இது போல் ஒரு நிலை வந்தால் சம்பளத்தை குறைத்துக் கொள்வாராம்.
பாபா படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை, விநியோகஸ்தர்கள் நஷ்டப்பட்டு இருக்கிறார்கள் என்ற நிலை வந்தவுடன் அவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுத்தார் ரஜினி.
இவர் இப்போது சம்பளம் குறைப்பேன் என்று சவுண்டு விடுகிறாரே...? எத்தனை படங்களுக்கு இந்த மாதிரி செய்திருக்கிறார்? அது போல் செய்தால் திவாலாக வேண்டியது தான் இவரெல்லாம்!
* சங்கத் தலைவர் அறிக்கை விடுகிறார். பாவம். அவருக்கு கட்சியை எப்படியாவது பிரபலப்படுத்த வேண்டுமே என்ற கவலை!
* மீடியாக்களுக்கு ஒரு பரபரப்பு செய்தி! அஞ்சு நிமிஷத்துக்கு மேல் பார்க்க அவகாசம் இல்லாமல் தகவல்கள் கொட்டி நம் நேரத்தை களவாடிச் செல்லும் யுகத்தில் தங்கள் சேனலையும், பத்திரிக்கையையும் தொடர்ந்து பரபரப்பாக்கியே வைத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் Reading between lines போதாமல், Reading between Void Spaces எல்லாம் செய்து தாங்களாகவே அர்த்தம் செய்து கொண்டு விற்று பார்க்கிறார்கள்.
* இன்ஃபர்மேஷன் தியரியில் , தகவல் என்றால் என்ன? என்று க்ளாஸ் எடுத்தார் கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் எபிநேசர் சார்! அன்று செப்டம்பர் 10, 2001.
அடுத்த நாள் வகுப்பில் சொன்னார்.
'இது தான் இன்ஃப்ர்மேஷன். அமெரிக்காவின் மீதே யாராவது தாக்குதல் நடத்துவார்களா? என்று நம்பிக் கொண்டிருந்தோம். அது நடந்து விட்டது. நடக்கவே நடக்க வாய்ப்பே இல்லாத, நிகழ்தகவு ஸீரோவாக உள்ள நிகழ்ச்சி நடந்தால் அது தான் இன்ஃப்ர்மேஷன். இன்று சூரியன் கிழக்குத் திசையில் உதித்தது என்று ஒருநாளும் தினத்தந்தியில் முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் வராது.' என்றார்.
நாளாக நாளாக தாக்குதல் நிகழ்ச்சி இரண்டாம் பக்கம், மூன்றாம் பக்கம் என்று தள்ளப்பட்டு காணாமல் போகும்.
அது போல்,
இங்கே கொஞ்சம் பேர் இருக்கிறார்கள். எப்படியாவது தாங்களும் கொஞ்ச நிமிஷங்களுக்கு பிரபலமாகி இருக்க வேண்டும் என்ற ஆவல். எதிர்க்கருத்து சொன்னால் நானும் புரட்சிக்காரன் தான் என்று பிறர் ஏற்றுக் கொள்வார்கள் என்ற கணிப்பில்!
ரஜினி ஏதோ சொல்லி இருக்கிறாராமே? எழுது! நன்றாக கலாய்த்து எழுது! உன்னைத் தேடி ஆட்டோவோ, 'ஆபீஸ் ரூமுக்கு' கூட்டிப் போகவோ ரஜினி ஆள் அனுப்பப் போவதில்லை! எனவே எழுது!
'ஊருக்கு இளைத்தவன் அவன் தானே'! நன்றாக காய்ச்சி எழுது!
பரபரப்பாகும்! நாற்பது பேர் வரை ஜால்ரா அடிப்பார்கள். கொஞ்சம் தெரிந்த ஆள் ஆகலாம்.
'ஹப்பாடா சந்தோஷம்!' Group Power.
நேற்று *** பேர் வந்து பார்த்தார்களா? திருப்தி!
அடுத்து என்ன..? கமல் மர்மயோகி எடுக்கிறாரா? கதை ஏழாம் நூற்றாண்டாமே!
ஹை..! தலைப்பு ரெடி! 'கரும' யோகி!
டிராஃப்டில் போட்டு வைத்துக் கொள்ளலாம். கமல் என்ன செய்தாலும் இந்த தலைப்பை போட்டு கொஞ்சம் கன்னா பின்னா என்று எழுதி சூடான இடத்திற்கு வந்து விடலாம்.
* ஒகேனக்கல் பிரச்னையில் அத்தனை பேரும் கோபமாய் பதிவுகள் போட்டோம் (நானும்!). ரஜினி சொன்னதை விட காரமாகவும், கோரமாகவும் சில பேர் சாரமாகவும் எழுதினோம்.
அடுத்த நாளே அந்த நெருப்பின் மேல் வராத காவேரி நீரை ஊற்றி தமிழக அரசு அணைத்ததா இல்லையா?
உண்ணாவிரதம் இருந்த அத்தனை பேர் முகத்திலும் அண்டா அண்டாவாக கரியை அள்ளி பூசியதா இல்லையா?
புது ஆட்சி வரட்டும். பேசிப் பார்ப்போம் என்று சொன்னது மாநில அரசு!
வந்து எவ்வளவு நாள் ஆகின்றது? ஏதாவது ஸ்டெப் எடுத்தீர்களா என்று ஒரு பதிவு கூட நான் பார்க்கவில்லையே? எங்கே ஐயா போயிற்று உங்கள் வீரமெல்லாம்?
நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா அன்று பேசியதெல்லாம் தவறு தான் என்று?
அவர் ஒத்துக் கொண்டார். அரசின் மேல் நம்பிக்கை வைத்து ஸ்டெப் எடுக்கும் என்று நம்பி உணர்ச்சி வசப்பட்டு பேசியதற்கெல்லாம் அரசின் கைவிடுப்பு தான் பதில் என்று புரிந்ததால் அவர் கேட்டார் மன்னிப்பு கர்நாடக மக்களிடம்! Goondasகளிடம் இல்லை! இந்த அரசியல் கட்சிகளை நம்பி ஏதும் சொல்லக் கூடாது என்பதை லேட்டாக புரிந்து கொண்டதற்கு கேட்டார் மன்னிப்பு!
உங்களுக்கு அது இருக்கின்றதா?
பேச வந்து விட்டார்கள்!
முகம் காட்டா வெளியில் புதைந்து கொண்டு எதுவும் சொல்லலாம், கேட்க ஆளில்லை என்று நினைத்துக் கொண்டு கைக்கு வந்தபடியெல்லாம் எழுதக் கூடாது. அது சரி அல்ல.
http://www.rajinifans.com/detailview.php?title=695
http://www.rajinifans.com/detailview.php?title=696
மகாபாரதத்தில் கர்ணணை நேருக்கு நேர் நின்று வெற்றி கொள்ள முடியாத அவருடைய எதிரிகள் அவரை இழிவு படுத்துவதாக எண்ணி ஒவ்வொரு முறையும் கர்ணணை தேரோட்டி மகன் என்று சொல்லியும், அவருடைய ஜாதியை சொல்லியும் அவருடைய மனதை புண் படுத்தி வெற்றி கொள்ள நினைத்தனர் ஆனால் ஒன்றும் நடக்கவில்லை கடைசியில் கர்ணன் விட்டு கொடுத்ததால் மட்டுமே அவர் தோற்றார்.. இங்கே ரஜினி ஒரு கர்நாடகன் என்ற செய்தி ஒவ்வொரு முறை வரும்போதும் இது கர்ணனை வெற்றிகொள்ள அவருடைய எதிரிகள் செய்த சூழ்ச்சியை போலவே உள்ளது... இன்று மிகச்சரியாக ரஜினி அவர்கள் தெளிவு படுத்தி விட்டார் "ஒக்கேனக்கல் திட்டத்தை நிறைவேற்றாமல் தடுக்க முயலும் புல்லுறுவிகளை உதைக்க வேண்டாமா என்றுதான் சொன்னேன்.." என்று.. இதை அவர் சொல்லாவிட்டாலும் ஆறறிவு கொண்ட அனைவருக்கும் புரியும்.. கமல் அவர்களும் இப்படியெல்லாம் பின் நாளில் ஏதாவது பிரச்சினை வரும் என்றுதான் அன்றே அதே மேடையில் "இங்கிருந்து செய்திகளை சேகரிக்க வந்திருக்கும் உளவாளிகள் தயவு அங்கே சென்று செய்திகளை திரித்து சொல்லாதீர்கள்" என்று கேட்டுக்கொண்டார்.. ஆனாலும் புல்லுறுவிகள் செய்திகளை திரித்து சொல்வதே வேலையாக கொண்டிருக்கிறார்கள்.. 17 பிரிண்ட்டுகள் ஓட வேண்டும் என்பதற்க்காக மன்னிப்பு கேட்க ரஜினி என்ன முட்டாளா..? வீரத்திற்க்கு ஏது ஜாதி..? கலைக்கு ஏது மொழி..? சிந்திப்பீர்..
நன்றி :: ரஜினி ரசிகர்கள் தளம்.
13 comments:
நன்றாக சொன்னீர்கள். ஒரு நாலைந்து நாளாக தேன்கூடும், தமிழ்மணமும் நாறிக்கொண்டு இருக்கின்றது. எத்தணை பதிவுகள் ரஜினியை தாக்கி...
இங்கே ஒன்றை தெளிவு படுத்த விரும்புகிறேன். ரஜினியின் ரசிகர்கள் அவருடைய படங்களோடு மட்டும் தான் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். அந்த படம் வருவது வருடத்திற்கு ஒரு முறை. அந்த சமயத்தில் மட்டுமே இந்த ஆர்ப்பாட்டம், மகிழ்ச்சி எல்லாம். மற்றபடி, அவர்களுடைய வாழ்க்கையில், அன்றாட வேலையில், குடும்பத்தில் ரஜினி தலையிடுவது இல்லை. இது மற்ற நடிகர்களின் ரசிகர்களுக்கும் பொருந்தும். இருந்தும், மற்ற ஜாதி, சங்கங்கள் இருப்பது போன்று ரஜினி ரசிகர்களையும் ஒரு பிரிவினை மாதிரி வகைப்படுத்துவது அறிவாளர்கள் செய்யும் செயலல்ல. அப்படி ரஜினி ரசிகர்கள் ஒரு பிரிவினை என்றால் இப்போது Rajini Haters என்று ஒரு பிரிவினை உண்டாகியிருக்கிறது.
சமூக அக்கறை கொண்டவர்களுக்கு...
நாம் தற்போது தமிழ்நாட்டில் பார்க்கும் மிகப்பெரிய அவலம் தூய்மையின்மை. சென்னை முதல் கன்யாகுமரி வரை பொது இடங்களில் தமிழன் காறி உமிழ்ந்து கொண்டு இருக்கிறான். அழுக்கு லுங்கி கட்டிக்கொண்டு திரிகிறான். குப்பைகளை எங்கு வேண்டுமானாலும் போடுகிறான். தூய்மையை பற்றி நம்மை சுற்றியுள்ளவர்களுக்கு எடுத்துரைக்கலாமே. இதற்காக தமிழர் தங்கள் பதிவுகளை பயன்படுத்தலாமே. இதை விட்டு விட்டு ஆ..ஊன்னா ரஜினியை மட்டுமே தாக்கி எழுதும் இவர்களை எப்படி திருத்துவது?? உங்களுக்கெல்லாம் தமிழர் மீது உண்மையான அக்கறை இருக்குமென்றால், ஒக்கேனக்கல் project பற்றி விரிவாக அலசி அதில் நமக்கு இருக்கும் உரிமை பற்றி எழுதுங்கள்.
அன்பு அமுதன்...
சரியாகச் சொன்னீர்கள்.
100% correct.
வசந்த்.. கண்டிப்பாக நான் உங்கள் கருத்தில் இருந்து வேறுபடுகிறேன் என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரியும். ரஜினியைத் தாக்கி எழுதினால் உடனே எல்லோரும் கவனிப்பார்கள் என்பதால் நான் உட்பட பெரும்பாலோர் அதைச் செய்யவில்லை. உங்களுக்கு என் பதில்கள்:
1. ஒகேனக்கல் பிரச்சினை கிடப்பில் இருப்பது குறித்து எத்தனையோ முறை நானே பின்னூட்டமிட்டுள்ளேன். அது குறித்த எல்லா தகவல்களையும் பெற முடியாததால் என்னால் அதுகுறித்து பதிவிட முடியவில்லை. அது அரசியல்வாதிகளால்தான் கிடப்பில் இடப்பட்டுள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
2. ஊருக்கு இளைத்தவன் என்பதால் அவர் மீது மட்டும் சேறு வாரி இறைப்பதாக சொல்வதில் சிறிதும் உண்மையில்லை. அரசியல்வாதிகள் அத்தனை பேருமே அவரவர் சுயநலங்களால் பதிவர்களால் சாடப்படுவது கண்கூடு.
3. உங்கள் தலைவர் உத்தமராகவே இருக்கட்டும். வேண்டாம் என்று சொல்லவில்லை. அவர் வருத்தம் தெரிவித்தது அரசியல்வாதிகளாலேயே என்று இருக்கட்டும். அவர் வருத்தம் தெரிவித்ததற்கு 17 பிரிண்ட் ஓடவேண்டும் என்பது காரணம் இல்லை என்பது உண்மையாகவே இருக்கட்டும். ஆனால் இத்தனை நாள் கழித்து மிக மிகச் சரியாக அந்த 17 பிரிண்ட்கள் ரிலீஸ் ஆவதற்கு 1 நாள் முன்னால் எதற்கு சாமி மன்னிப்பு கேட்க வேண்டும்? அதற்கு பின்னால் அவர்க்கு பிஸினஸ் மைண்ட் இல்லை என்று நீங்கள் நம்பலாம். எல்லோரும் அதையே செய்வார்கள் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்?
அவரைப் பொறுத்தவரை அவரால் தான் சொன்னதைக் காப்பாற்றமுடியவில்லை என்றால் படத்தில் மட்டும் நடிக்கட்டும். அதுதான் அவரது எல்லா படங்களையும் ரசிக்கும் என் போன்றோர் எதிர்பார்ப்பது. நானும் ரஜினி ரசிகன் தான். வெறியன் இல்லை.
கலக்குறீங்க !
தங்கள் கருத்தோடு பெரும்பாலும் உடன்படுகிறேன், வசந்த குமார்.
//ரஜினி ஏதோ சொல்லி இருக்கிறாராமே? எழுது! நன்றாக கலாய்த்து எழுது! உன்னைத் தேடி ஆட்டோவோ, 'ஆபீஸ் ரூமுக்கு' கூட்டிப் போகவோ ரஜினி ஆள் அனுப்பப் போவதில்லை! எனவே எழுது!
'ஊருக்கு இளைத்தவன் அவன் தானே'! நன்றாக காய்ச்சி எழுது!
பரபரப்பாகும்! நாற்பது பேர் வரை ஜால்ரா அடிப்பார்கள். கொஞ்சம் தெரிந்த ஆள் ஆகலாம்.
'ஹப்பாடா சந்தோஷம்!' Group Power.
நேற்று *** பேர் வந்து பார்த்தார்களா? திருப்தி!\\
நெத்தியடி!
//ஒகேனக்கல் பிரச்னையில் அத்தனை பேரும் கோபமாய் பதிவுகள் போட்டோம் (நானும்!). ரஜினி சொன்னதை விட காரமாகவும், கோரமாகவும் சில பேர் சாரமாகவும் எழுதினோம்.
அடுத்த நாளே அந்த நெருப்பின் மேல் வராத காவேரி நீரை ஊற்றி தமிழக அரசு அணைத்ததா இல்லையா?
உண்ணாவிரதம் இருந்த அத்தனை பேர் முகத்திலும் அண்டா அண்டாவாக கரியை அள்ளி பூசியதா இல்லையா?//
நியாயமான கேள்வி!
ஆனால் எத்தனை பேரு இதையெல்லாம் யோசிக்கிறாங்க.
இது தான் என்னோட ஆதங்கமே.
Venbu Sir,
I don't know how many of you know that Rajini has given an interview in Udaya TV .. the next day after he spoke in the Hoganekal Protest'.
He mentioned the same thing what he said on the interview in Hyd the day b4 Kuselan release.
On interview on Udaya TV he said " Having people (gunda's.. who are creating problem / disturbing the peace between TN and karnataka) i said 'Udhaika vendam' not to all karnatika's ... I will not ask apology fo this... (pls look for this video in you tube.. the interview is in kanana .. but still you will be able to make it... (This time all the magazine said as follows " Rajini said he wil not apolozise at any cost" )
On interview in Hyd last week.. He said the exact same thing... I didn't mean 'Udhaika vandam" to all karnataka ppl.. only those who are creating problem.... and I have requested for smooth release of movie.. no aploloy.. no aplology... pls watch the video in the india glitz.. he says in english... (This time media said.. Rajini apologised...)
I didn't see any change in his stand... only media heading changed...
ok.. now coming to the point... lesson learned... "This was lesson learned for 'Rajinikanth.. how his words are interpretted.... and he said he will be more cautious and clear...'
Thats all...
See things from neutral side (without any pre-judgement..) .. just see the videos yourself and understand...
//புது ஆட்சி வரட்டும். பேசிப் பார்ப்போம் என்று சொன்னது மாநில அரசு!
வந்து எவ்வளவு நாள் ஆகின்றது? ஏதாவது ஸ்டெப் எடுத்தீர்களா என்று ஒரு பதிவு கூட நான் பார்க்கவில்லையே? எங்கே ஐயா போயிற்று உங்கள் வீரமெல்லாம்?
நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா அன்று பேசியதெல்லாம் தவறு தான் என்று?
அவர் ஒத்துக் கொண்டார். அரசின் மேல் நம்பிக்கை வைத்து ஸ்டெப் எடுக்கும் என்று நம்பி உணர்ச்சி வசப்பட்டு பேசியதற்கெல்லாம் அரசின் கைவிடுப்பு தான் பதில் என்று புரிந்ததால் அவர் கேட்டார் மன்னிப்பு கர்நாடக மக்களிடம்! Goondasகளிடம் இல்லை! இந்த அரசியல் கட்சிகளை நம்பி ஏதும் சொல்லக் கூடாது என்பதை லேட்டாக புரிந்து கொண்டதற்கு கேட்டார் மன்னிப்பு!
உங்களுக்கு அது இருக்கின்றதா?
//
”நச்”சென்ற கருத்து
அருமை வசந்த் அண்ணா!
அன்பு ஆயில்யன்...
மிக்க நன்றி தங்கள் Comingகுக்கும், கருத்துக்கும்..!
ஆமா, அதென்ன புதுசா அண்ணா போடறீங்க...?
'அண்ணன் வர்றார்ல' அப்டினு போர்டு வெச்சிருவோமா...?
Dear Rajkumar,
Thanks for your visit and flood of details.
Let the ppl understand correctly.
Dear Naren,
Thanks for your visit ans wishes.
அன்பு கரிகாலன்...
மிக்க நன்றிகள் தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும்!
Post a Comment